सुधाधारासारै-श्रणयुगलान्त -विर्गालितै:
प्र्प्नचं सिञ्चन्ति पुनरपि रसाम्नाय -महस:
अवाप्य स्वां भूमिं भुजगनिभ् -मध्युष्ट -वलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि ஸ்லோகம் 10
ஸுதா₄தா₄ராஸாரை-ஶ்ரணயுக₃லாந்த₁ -விர்கா₃லிதை₁:
ப்₁ர்ப்₁னச₁ம்ʼ ஸிஞ்ச₁ந்தி₁ பு₁னரபி₁ ரஸாம்னாய -மஹஸ:
அவாப்₁ய ஸ்வாம்ʼ பூ₄மிம்ʼ பு₄ஜ₁க₃னிப்₄ -மத்₄யுஷ்ட₁ -வலயம்ʼ
ஸ்வமாத்₁மானம்ʼ க்₁ருʼத்₁வா ஸ்வபி₁ஷி கு₁லகு₁ண்டே₃ கு₁ஹரிணி
கவிராயரின் தமிழாக்கம்
தாளிணைக் கமலம் ஊறித்
தரும் அமிழ்து உடல் மூழ்க
மீள அப் பதங்கள் யாவும்
விட்டு முன் பழைய மூலம்
வாளரவு என்ன ஆகம்
வளைத்து உயர் பணத்தினோடு
நாள் உமைக் கயற்கண் துஞ்சு
ஞான ஆனந்தம் மின்னே!
நம் உடலின் மூலாதாரம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம் அல்லவா? அந்த மூலாதாரத்தில் இருந்தே சக்தி பிறக்கிறது. நம் உடலுக்கு ஆதாரமும் அதுவே. அந்த மூலாதாரம் இல்லை எனில் நம் தேகம் கீழே விழுந்து விடும்; அல்லது உடல் மேலே செல்லும் என்று ஆன்றோர் கூறுகின்றனர். ஆகவே நம்மைத்தாங்கிப் பிடிப்பதே அந்த மூலாதாரம் தான். இவ்வுலகிலும் எல்லாவற்றிற்கு ஆதாரமாக பூமியே உள்ளதே. ஆகவே பூமி தத்துவத்தைச் சுட்டிக்காட்டும் நம் உடலின் அந்த மூலாதாரத்தில் அம்பிகை ஒரு சின்ன குண்டலம் போல் சுருட்டிக் கொண்டு காணப்படுகிறாள்.
நம் அனைவரின் உடலிலும் இந்த சக்தி இருக்கிறது. இதுவே பரப்ரம்ம சக்தி என்றும் கூறுவார்கள். இதை எழுப்பவெனச் செய்யும் வழிபாடுகளையே சாக்தத்திலும், யோக முறையிலும் சொல்லப்படும் வழிபாடுகள். இந்த சக்தியை யோக சாதனை மூலம் எழுப்ப வேண்டும். அதற்கெனத் தனியான மந்திரம் உள்ளது. முதலில் மனம் பக்குவம் அடைய வேண்டும். மனச் சஞ்சலம் கூடாது. பின்னர் தக்க குரு மூலம் உபதேசம் பெற்று மந்திர ஜபம் செய்து யோக சாதனை செய்தோமானால் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு அடைந்து மேலுள்ள சக்கரங்களையெல்லாம் ஊடுருவிக்கொண்டு மெல்ல மெல்ல மேலே சென்று ஆக்ஞா சக்கரத்தில் பராசக்தியாகக் காட்சி கொடுத்து சஹஸ்ராரத்தில் பரப்ரும்மம் எனப்படும் சதாசிவத்தோடு ஐக்கியம் ஆகிப் பின்னர் மீண்டும் தனது இருப்பிடமான மூலாதாரத்திற்கே வந்தடைந்து மறுபடியும் ஒரு பாம்பைப் போல் குண்டல வடிவில் சுருட்டிக்கொண்டு மூலாதாரத்தில் அம்பிகை உறங்குகிறாள்.
மேலுள்ள ஸ்லோகத்தின் பொதுவான பொருள் இதுவே. ஆனால் இந்த சாதனை சாதாரணமாகச் செய்யக் கூடியது இல்லை. எங்கேயோ லக்ஷத்தில் ஒருத்தர் செய்தால் பெரிய விஷயம். என்றாலும் சில விஷயங்களை ஸ்லோகங்களிலும், சித்தர் பாடல்களிலும், மற்ற அம்பிகை பாடல்களிலும் சொல்லி இருப்பது இம்மாதிரியான மனிதர்கள் இருந்து அனுபவித்துச் சொல்லி இருப்பதை நாம தெரிந்து கொள்ளத்தான்.
அம்பிகையின் திருவடிகளிலிருந்து அமிருத தாரை பெருகுகிறதாம். அந்த அமிருததாரையால் பக்தனின் ஐம்பூதங்களால் ஆன உடலிலுள்ள அனைத்து நாடிகளையும் நனைத்துக்கொண்டு மேலே சென்று பக்தனுக்குத் தன் பூர்ண சந்திரப் பிரவாகமான அமிர்தத்தைக் காட்டி அங்கிருந்து கீழிறங்கி வந்து மீண்டும் மூலாதாரத்துக்கு வந்து தன் உறக்கத்தைத் தொடங்குகிறாள். யோகம் என்பது இப்படி பரிபூரணமாக இருத்தல் வேண்டும். இப்படி மேலே போய்விட்டு ஏன் கீழே இறங்க வேண்டும்? யோகியானவன் தன் யோகசாதனையைப் பூர்த்தி செய்ய மட்டுமல்ல. இப்படியான யோகிகளையும் நினைத்தால் அம்பிகை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம் அல்லவா? அதற்காகவே எவ்வளவு உயரம் போனாலும் கடைசியில் கீழே இறங்கித்தான் ஆகவேண்டும்; நீயே கதி தாயே எனச் சரணாகதி அடைகின்றன.ர்.
அம்பாளின் திருவடித்தாமரைகளைப் பற்றிக் கூறுகையில் பட்டரும் இவ்வாறு கூறுகின்றார்.
சென்னியதுன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னிய துன் திருமந்திரம் சிந்தூர வண்ணப்பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியதென்றும் உன்றன் பரமாகம பத்ததியே.
சிந்தூரம் போல் செந்நிறம் வாய்ந்த தேவியின் திருவடித்தாமரை என் சிரத்தின் மேல் முடி போல் திகழ்கின்றது. அழகு வாய்ந்த தாமரை மலரால் செய்யப்பட்ட
திருமுடியைப் போல் காண்கின்றன அம்பிகையின் திருவடித்தாமரைகள். என் நெஞ்சிலோ நிலையாது என்றும் இருப்பது அம்பிகையின் திருமந்திரமாகும். அந்த மந்திரங்களைச் சொல்லி நான் அவளையே தியானிக்கிறேன். என் மனம், சொல்/வாக்கு, காயம்/உடல் ஆகிய அனைத்தாலும் நான் அவளைத்தவிர வேறு எவரையும் நினைப்பதில்லை. இவை அனைத்தையும் கொண்டு நான் பரம ஆகமங்களிலும் சொல்லப்பட்ட பத்ததிகளால் அம்பிகையை வழிபட்டு வருகின்றேன்.
அபிராமி அந்தாதி ஓரளவுக்குத் தான் பொருந்தி வருகிறது. கூடியவரை பொதுவான பொருள் இருக்கும் செய்யுளையே தேர்ந்தெடுக்கிறேன்.
இதிலே விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஒண்ணுமே எழுதாதப்போ பின்னூட்டம் கொடுத்தவங்க எல்லாம் இதுக்கும் வரணும்! ஆமாம்! சொல்லிட்டேன்! :))))
யோகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் அருமை.
ReplyDelete//எவ்வளவு உயரம் போனாலும் கடைசியில் கீழே இறங்கித்தான் ஆகவேண்டும்; நீயே கதி தாயே எனச் சரணாகதி அடைகின்றன.ர்.//
அருமை.
நன்றி மாமி பகிர்வுக்கு.
நல்ல பகிர்வு. நன்றி
ReplyDeleteதிருமந்திரத்துக்கு இன்னொரு பொருளுண்டு என்றும் நினைக்கிறேன். ஸ்ரீசக்ரம் = திருமந்திரம்.
ReplyDeleteஸ்ரீசக்ர சூட்சுமம் பற்றி சௌந்தர்யலஹரியை விட சுவையாக எழுதியிருக்கிறார் பட்டர் என்று நினைக்கிறேன் (தமிழ் புரிவதால் :)
முடிந்த போது அபிராமி அந்தாதி சென்று பாருங்களேன்?
வாங்க ராம்வி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteநன்றி லக்ஷ்மி.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, இந்தச் சுட்டிக்கு பதிலைப் போன பதிவிலே நினைவில்லாமல் கொடுத்துட்டேன். அபிராமி அந்தாதியை நான் குமரன் எழுதும்போதும் படிச்சேன். இவங்களோடதும் படிச்ச நினைவு இருக்கு. நான் ஆழமாப் படிச்சது கி.வா.ஜகந்நாதனின் உரை.அது தான் கைவசமும் இருக்கு. திருமணப்பரிசாகக் கிடைத்த புத்தகம்.
ReplyDeleteYour current account (sivamgss@gmail.com) does not have access to view this page.
ReplyDeleteClick here to logout and change accounts.
இரண்டு, மூன்று முறை முயன்றேன். முடியலை அப்பாதுரை. ஒருவேளை குறிப்பிட்ட நண்பர்களுக்கான பதிவுப்பக்கமோ?
http://kadavur.blogspot.com/ தானே ட்ரை பண்ணீங்க? எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் எந்த restrictionம் கிடையாது. என்னவாயிருக்கும்னு தெரியலையே?
ReplyDeleteகிவாஜ உரையா? சொல்லும் போதே நல்லா இருக்கு.
ReplyDeleteஎண்ணங்களில் - ஆனமிக விஷயங்களை
ReplyDeleteகொண்டுவந்து விட்டீர்களே.உங்கள்
புண்ணியத்தில் சௌந்தர்ய லகரி(அழகுக்கு ஆராதனையா)படிக்கத்
தொடங்குகிறேன். மிக்க நன்றி சகோதரி
வாங்க அப்பாதுரை. மறுபடியும் இந்தச் சுட்டியில் இருந்து போய்ப் பார்க்கிறேன். திறக்கும் பக்கம் மட்டும் படிக்க முடியுது. ஆனால் பழைய பதிவுகளுக்குச் செல்ல முடியலை. பின்னூட்டம் கொடுக்க முடியலை. இன்று மீண்டும் முயல்கிறேன். நேற்று என்னவோ கணினியிலேயே உட்கார முடியலை. :(
ReplyDeleteவாங்க ராதாகிருஷ்ணன் சார், வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. மறு வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete"எண்ணங்கள்" பக்கம் எல்லாம் கலந்து கட்டி வரும். நடு நடுவே மொக்கைப் பதிவுகளும் வரும். ஒண்ணும் நிச்சயமாச் சொல்ல முடியாது. :)))))
தாராளமா கீதாம்மா என்றே கூப்பிடலாம். கோபமெல்லாம் எதுவும் இல்லை. நீங்க பெரியவரேனு சொன்னேன்; உங்கள் வசதிப்படியே அழைக்கலாம். உங்கள் சுப்ரதீபத்தையும் வந்து தரிசனம் செய்கிறேன்.
ராதாகிருஷ்ணன் சார், இந்த வலைப்பக்கம் உங்களுக்குப் பதிவிடுவதில் கொஞ்சம் தெளிவைத் தரலாம். முயற்சி செய்யவும். நன்றி.
ReplyDeletehttp://techforelders.blogspot.com/