எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 23, 2013

படம் என்னனு சொல்லுங்க!

கொஞ்ச நாட்களாகப் பாதிப் பாதி சினிமா பார்த்துட்டு இருக்கேன்.  ஹிஹிஹி, எப்போ முழுசாப் பார்த்தேனு கேட்கறீங்களா?  அது என்னமோ உண்மை தான்.  தியேட்டர்களிலே படம் பார்க்கிறச்சே முழுசாத் தான் பார்த்திருக்கேன்.  தொலைக்காட்சியிலே முன்னெல்லாம் சென்னைத் தொலைக்காட்சி ஞாயிற்றுக் கிழமைகளில் படம் போடுவாங்க பாருங்க.  அப்போ  படம் ஆரம்பிக்கிறச்சேயே பிள்ளையாருக்குக் காசு வைச்சு, தேங்காயெல்லாம் உடைச்சு (ஹிஹிஹி, மின்சாரம் இருக்கணும்ங்கறதுக்கும், தொலைக்காட்சிப் பெட்டியில் பிரச்னை வராமல் இருக்கிறதுக்கும், எல்லாத்தையும் விட முக்கியமா அன்னிக்குனு பார்த்து அறுவை விருந்தாளிங்க வராமல் இருக்கணும்னும் தான். தொலைக்காட்சிப் பெட்டியில் பிரச்னைனா உடனே பார்க்க முடியாதே!) அன்னிக்கு டிஃபன் சுண்டல்னு சிம்பிளா முடிச்சுடுவேன். ஹிஹிஹி, இட்லி, தோசை எல்லாம் வைச்சுக்கறதில்லை. இட்லியானும் பரவாயில்லை.  தோசை ரெண்டு பக்கம் ரெண்டு கல்லுப் போட்டு வார்க்கணும்.  சரிப்பட்டு வராது. சுண்டல்னா குக்கரில் வேகப் போட்டோமா, உப்புக் காரம் போட்டுக் கலந்து தேங்காய் சேர்த்துக் கொடுத்தோமானு ஆகும்.

அதோட படம் பார்த்துண்டே கொரிக்கலாம்.  தியேட்டர் எஃபக்டும் வரும்.  இல்லையா? வரவங்களுக்கும் சுண்டல் விநியோகம் உண்டு.  அக்கம்பக்கம் தொலைக்காட்சிப் பெட்டி வாங்காதவங்க அப்போ நிறைய.  எல்லாரும் முக்கியமா ஜிவாஜி, எம்ஜிஆர் படம்னால் எங்க வீட்டுக்கு வருவாங்க.  இல்லாட்டியும் படம் பார்க்கக் குறைந்தது அக்கம்பக்கத்தில் இருந்து நாலைந்து பேராவது இருக்கும். கீழே உட்கார முடியாதவங்க கட்டில், பெஞ்ச், நாற்காலினு உட்காருவாங்க.  நாங்கல்லாம் தரை டிக்கெட் தான்.  இடைவேளையின் போது அப்போல்லாம் நிர்மா விளம்பரம் தான் வரும்.  இப்போ மாதிரி விளம்பரம் மூன்று மணி நேரமும் சினிமா அரை மணி நேரமும் இருக்காது. 

அது சரி, நான் பார்த்த படங்கள் குறித்துச் சொல்ல ஆரம்பிச்சு எங்கேயோ போகுது பாருங்க.  நேருக்கு நேர் படம் பாதியில் ஆரம்பிச்சு முடிவு வரை பார்த்தேன். அப்புறமா அரண்மனைக்காரன்னு ஒரு படம், மலையாளம் டப்பிங், ஜெயராமன், அப்புறமா யாரோ ஸ்ருதியாம்.  ஜெயராமனைத் தவிர மத்தவங்க யாரும் தெரியலை. காஞ்சனா ஞாயிறன்று (?) வந்தது.  அதையும் பாதியிலே இருந்து தான் பார்த்தேன்.  முடிவு வரை.  அதுக்கு முதல் நாள் சபாஷ் மீனா, படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரத்தில் இருந்து ஜிவாஜி "சித்திரம் பேசுதடி" பாடல் பாடி முடிச்சுத் தன் காதலைத் தெரிவிச்சுக் கொஞ்ச நேரம் பார்த்தேன். அப்புறமா போரடிச்சுது.  போய்ப் படுத்துட்டேன்.  

இப்போ மண்டை உடைக்கிற பிரச்னை என்னன்னா, முந்தாநாள்  லோகல் கேபிளில் ஒரு படம் பார்த்தேன்.  அஜித்-த்ரிஷா! சரண்யா அஜித் அம்மாவா வராங்க.  மத்தவங்கள்ளே விவேக், விவேக் மனைவியாக நடிக்கும் மீனா குமாரி, ஹேமா பாஸ்கர், மனோபாலா, சந்தானம் ஆகியோரைத் தான் தெரியுது.  மத்தவங்க எல்லாம் யார்னு தெரியலை.  இயக்குநர் விஜய் னு ஒருத்தர்.  இவரையும் கேட்டதில்லை.  ஹிஹிஹி, திரைப்படத் தகவல்களில் ரொம்பப் பின் தங்கி இருக்கேனோ? அஜீத்தின் அப்பாவாக நடிப்பவரை எங்கேயோ பார்த்திருக்கேன். நல்ல நடிகர்.  ஆனால் யாருனு தெரியலை! ஒரு காலத்தில் ஹீரோவாக நடிச்சிருக்கார்.  போலீஸாக விரும்பும் அஜித் சூழ்நிலையால் வில்லன் கைகளில் மாட்டிக் கொள்ளும் ஆன்டி ஹீரோ கதை தான். என்ன படம்னு சொல்லுங்கப்பா! சொல்றவங்க கிட்டே கணக்கெல்லாம் கேட்க மாட்டேன்.

இந்தப் படத்திலே விவேக் தாதாவா வரார்.  அவர் அஜித்தோட வீட்டிலேயே கூடவே வசிக்கிறார். ஆனாக் கடைசி வரைக்கும் அவரோட மாமனாரா நடிக்கும் அஜித்தின் அப்பாவுக்கு இவரோட இந்தத் தந்திரம் தெரியவே இல்லை.  அது எப்படி??? லாஜிக்கா எல்லாம் யோசிக்கக் கூடாதோ? :))))

30 comments:

  1. இது எல்லோருக்கும் தெரியும் ( என்று நினைக்கிறேன்...!)

    ReplyDelete
  2. இது நக்கல் பதிவா?? தெரிஞ்சு கேட்கறீங்களா?? இல்ல நெசமாவெ தெர்லயா??

    ReplyDelete
  3. படம் என்னனு சொல்லுங்க!

    தெரியலே !

    இப்போதெல்லாம் அதிகமாக படமெல்லாம் பார்ப்பது இல்லை.

    அதனால் இது என்ன படம் என்று தெரிந்து என்ன இலாபம் அல்லது தெரியாமல் தான் என்ன நஷ்டம்?

    என்னை விட்டுடுங்கோ.

    நான் எஸ்கேப்.

    ReplyDelete
  4. 'ஜி' என்று நினைக்கிறேன். அதில்தான் அஜித் த்ரிஷா ஜோடி. வேறு படங்களில் இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்களா தெரியாது.

    இதிலும் நமக்கு ஒற்றுமை தான் கீதா!

    அந்தக் காலத்தில் டிடியில் படம் பார்க்க எங்க வீட்டிற்கும் அக்கம் பக்கத்திலிருந்து நிறைய பேர் வருவார்கள்.

    சீக்கிரமா உங்கள நேர்ல பார்க்கணுமே!

    ReplyDelete
  5. டிடி, எது எல்லாருக்கும் தெரியும்?? நான் என்ன படம்னு கேட்டதா? எப்போவும் பாதிப்பாதிப் படம் பார்க்கிறதா? சினிமா அறிவே இல்லாத ஞானசூன்யமா இருக்கிறதா? எதுங்க? :)))))

    ReplyDelete
  6. யோசிப்பவரே, நக்கல் எல்லாம் இல்லை. மத்தப் படம் பேரெல்லாம் ஒழுங்காப் போட்டிருக்கேனா இல்லையா? இது நிஜம்ம்ம்மாவே தெரியலை. நாங்க பார்க்க ஆரம்பிச்சது, அஜித்தும், த்ரிஷாவும் தண்ணீர்த் தொட்டியில் உட்கார்ந்து பேசிட்டு இருக்கிறதிலே இருந்து! :)))) ஜி+இல் உங்க கமென்டிலே இருந்து "கிரீடம்" படம்னு தெரிஞ்சுண்டேன். அப்படியெல்லாம் படம் வந்திருக்குனு யாருக்குத் தெரியும்? அஜித் நடிக்கிறதை விட்டுட்டு, சைகிள் ரேஸில் பிசினு நினைச்சேன். :)))))))

    ReplyDelete
  7. வைகோ, சார், தலையாய பிரச்னை தீர்ந்தது. :)))) கவலை வேண்டாம்.

    ReplyDelete
  8. வாங்க ரஞ்சனி, நீங்க சொன்னது இல்லை! :))) கிரீடம்னு படம் பெயராம் ஜி+இல் யோசிப்பவர் சொல்லி இருப்பதை கூகிளிட்டும் பார்த்துட்டேன். :))))))

    ReplyDelete
  9. பொது அரிவை, சீச்சீ, அறிவை வளர்த்துக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கு! :))))

    ReplyDelete
  10. ஒரு படமாவது தெரிஞ்சிருக்குமானு பார்த்தா.. ஊஹூம்.. இதுக்கெல்லாம் டக்குனு பதில் சொல்லக்கூடிய மீப்பெயர் கொண்டவர் ஆளையே காணோம்.

    அது சரி.. பாதிப்படம் கூட எப்படிப் பாக்க முடியுது உங்களாலே? இந்த அஜித்துன்றவரோட படம் சிடிசன்னு ஒரு படம் ப்ளேன்ல ரெண்டு நிமிசம் பாத்துட்டு நான் பட்ட அவஸ்தை எனக்குத் தான் தெரியும். அய்யய்யோ.. சாமி நம்பிக்கையே வந்துடுச்சு எனக்கு. கடவுள் இருந்தாத்தான் இந்த மாதிரி அக்கிரமமெல்லாம் நடக்கும் :)

    ReplyDelete
  11. சென்னை எக்ஸ்பிரஸ்னு ஒரு படம் - சுமாரா இருக்கு. சில இடங்கள்ள பிரமாதம். காஷ்மீரு கன்னியாகுமரினு ஒரு பாட்டு அருமையா எடுத்திருக்காங்க. படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்து படோசன் ஒரு தடவை பாத்ததும் ஆறுதலா இருந்துது.

    ReplyDelete
  12. வாங்க அப்பாதுரை, யாரு அந்த மீப்பெயர் கொண்டவர்?? தெரியலையே எனக்கு????? அதுசரி, படத்தை முழுசும் யாரு பார்க்கிறாங்க? எப்போவுமே அந்த வழக்கம் இல்லை. அரைக்கண் தொ.க.பார்க்கும். மிச்சம் அரைக்கண் கணினியில் பார்க்கும். :))))

    இன்னும் நாலு படம் பாருங்க, கோயிலுக்கெல்லாம் போக ஆரம்பிச்சுடுவீங்க! ப்ரதக்ஷிணம் பண்ணுவீங்க! :))))

    ReplyDelete
  13. சென்னை எக்ஸ்ப்ரஸ்??? அப்படினு ஒரு படமா? மெட்ராஸ் கஃபே தான் செய்திகளில் அடிபட்டுட்டு இருக்கு! அது ஹிந்திப்படம். சென்னை எக்ஸ்ப்ரஸ் தமிழா, ஹிந்தியா? யார் நடிச்சது? :))))

    ReplyDelete
  14. மீப்பெயர் கொண்டவர் மீனாக்ஷி:)
    கீதா தல விஷயம் தலையைக் குழப்பிட்டது.

    ReplyDelete

  15. திரைப் படங்கள் முழுவதும் பார்க்கும் பொறுமை இல்லை. வீட்டில் அங்கும் இங்கும் போகும்போது டீவியில் ( அது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்)சில காட்சிகள் பார்ப்பதுண்டு.கடைசியாக தியேட்டரில் காந்தஹார் எனும் படப் ப்ரிவியூ க்கு அழைப்பு வந்து பார்த்ததுதான்.இரண்டு வருடமிருக்கும்.

    ReplyDelete
  16. சென்னைத் தொலைக்காட்சியில் ஞாயிறன்று படத்துக்குக் காத்திருந்த நாட்கள், கும்பலுடன் படம்பார்த்த நினைவுகள் எனக்கும் வந்தன. ஞாயிறு படத்துக்கு இணையான புகழ் கொண்டது வெள்ளி ஒளியும் ஒலியும். டெல்லித் தொலைக் காட்சியில் ரீஜனல் படம் தென் இந்திய மொழிகளில் வருகிறதா என்று பார்ப்பதுண்டு. அதில் அருமையான மலையாளப் படம் ஒன்று பார்த்த ஞாபகம் வருகிறது. மம்மூட்டி, மோகன்லால், ஷோபனா நடித்தது. படம் பெயர் தெரியும். சொல்ல மாட்டேனே...

    ReplyDelete
  17. அப்புறம் என்ன கேட்டீங்க... அஜீத் நடிச்ச படமா.... தெரியாதுங்களே...!

    ReplyDelete
  18. கிரீடம் படமா ??

    அஜீத்தின் அப்பாவா நடித்தவர்
    ராஜ் கிரண்????

    ReplyDelete
  19. @வல்லி,

    ஓஹோ, மீனாக்ஷியா? அவங்க தான் இப்போல்லாம் வரதே இல்லையே! :(
    ஹாஹா, தல விஷயமே அப்படித்தான். :)

    ReplyDelete
  20. காந்தஹர்னு படம் வந்திருக்கா? தமிழா, ஹிந்தியா? தெரியாது ஜிஎம்பி சார். :))))

    ReplyDelete
  21. . மம்மூட்டி, மோகன்லால், ஷோபனா நடித்தது. படம் பெயர் தெரியும். சொல்ல மாட்டேனே..//

    ஹாஹாஹா, எனக்கும் தெரியுமே! அதான் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிச்சு வந்ததே!. :))))

    ReplyDelete
  22. தல படம் அதான் ராஜராஜேஸ்வரி சொல்லிட்டாங்களே! அந்தப் படம் தான் செக் பண்ணியும் பார்த்துட்டேன். :))))

    ReplyDelete
  23. சாரி, யோசிப்பவர் தான் முதல்லே சொல்லி இருக்கார். ராஜராஜேஸ்வரி, அஜீத்தின் அப்பாவாக நடிப்பவர் பெயரைத் தான் சொல்லி இருக்காங்க.

    ஆமாம் ராஜராஜேஸ்வரி, ராஜ்கிரண் என்பதற்கு நான் கரண், வருண் அப்படினு என்னவெல்லாமோ யோசிச்சேன். :))))

    ReplyDelete
  24. அந்த மலையாளம் படம் பேரு சொல்லுங்களேன், ப்ளீஸ்!

    ReplyDelete
  25. மணிச்சித்திர தாழு, ரஞ்சனி. :))) நான் மலையாளத்திலே பார்த்ததால் தமிழில் வந்தப்போப் படமே பிடிக்கலை. அதே போல் தான் காக்கை, குயில் என்ற ஒரு படமும். மலையாளத்தில் அருமை. தமிழில் வேறே ஏதோ பேரில் வந்தது,. கொஞ்ச நேரம் தான் பார்க்க முடிஞ்சது. செம அறுவை! :(

    ReplyDelete
  26. மணிச்சித்திரத்தாழ் அப்போ வெளியாகவே இல்லை! கிட்டத்தட்ட மோகன்லாலில் முதல் படம். அப்புறமும் தெரியலைன்னா அடுத்த பின்னூட்டத்தில் சொல்றேன்.

    :))))))))))))))))))

    ReplyDelete
  27. ஹிஹிஹி, நான் அவ்வளவு ஞானம் உள்ளவள் இல்லைனாலும் கூகிளிட்டுப் பார்த்ததில் திறனோட்டம், மஞ்ஞில் விரிந்த பூக்கள் ரெண்டு கிடைச்சது. இதுவும் இல்லைனா, நீங்களே சொல்லிடுங்க. :)))))

    ReplyDelete
  28. மணிச்சித்திர தாழில் மம்முட்டி இல்லையே. நானும் இந்தப் படத்தைப் முதலில் மலையாளத்தில்தான் பார்த்தேன். பிறகு இங்கு விஷ்ணுவர்த்தன் நடித்து 'ஆப்த மித்ர' என்ற பெயரில் கன்னட மொழியில் பார்த்தேன். பிறகு தமிழ் 'லகலகலக..'

    ஸ்ரீராம் தான் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  29. காற்றத்த கிளிக்கூடு.

    ReplyDelete
  30. ஶ்ரீராம் சொன்னாப்போல எல்லாம் மலையாள சினிமா வந்திருக்குனு தெரியாது!:)))

    ReplyDelete