பாரதத்தின் உலகச் செய்தியை வளரும் சமுதாயம் உணர்வதற்கும், மனித வாழ்க்கையின் மகத்துவம் ஆத்ம ஞானம் அடைவதில் இருக்கிறது என்பதை உணர்வதற்கும், மேற்கு உலகம் தரும் நன்மைகளையும், கிழக்கு உலகம் தரும் நன்மைகளையும் மனிதர் தன்னம்பிக்கையுடனும், கம்பீரத்துடனும் தம் வாழ்வில் ஒருங்கிணைத்து மலரச் செய்வது எப்படி என்பதை இளைய சமுதாயம் கற்று ஊக்கம் கொள்வதற்கும் சுவாமி விவேகாநந்தரின் கருத்துகள் மகத்தான உதவியாகும். அவருடைய கருத்துகள் அடங்கிய சிறுநூல் ஒன்று நெடுநாளாக அச்சில் இருந்துகொண்டிருப்பது, இப்பொழுது மிக மிகக் குறைந்த விலையில் அத்வைத ஆஸ்ரமம் கொண்டு வந்திருக்கிறது.
விலை ரூ 4 மட்டுமே.
அஆமே
நூல் - Vivekananda His Call To The Nation
இந்த நூல் அவரது கருத்துகளை பல்வேறு தலைப்புகளில் தொகுத்தது. பாக்கட் சைஸில் 112 பக்கங்கள். ஆனால் அருமையான தொகுப்பு.
இதை அதிகமான அன்பர்கள் நூற்றுக் கணக்கில் வாங்கி இளைஞர்களுக்கு அன்பளிப்பாகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன்று பார்த்தவுடன் ரூ 100 க்கு 25 பிரதிகள் வாங்கி வந்தேன்.
இன்னும் குறைந்த விலையில் தர வேண்டியோ அல்லது இன்னும் அதிகப் பிரதிகள் இந்த விலையிலேயே தொடர்ந்து அச்சடிக்க வேண்டியோ அல்லது இந்த மாதிரி விலையில் இன்னும் அவருடைய வேறு ஏதாவது நூல்களைக் குறைந்த விலையில் தர இயலுமாறோ யாரேனும் நன்கொடை தந்தும் வருங்காலத்திற்கு நன்மை பயக்கலாம்.
முக்கியமாக அவருடைய Lectures from Colombo to Almora, ஆங்கில நூல், கொலம்புவிலிருந்து அல்மோராவரை, தமிழ் நூல் இரண்டையும் ரூ 5 வீதம் விற்பனைக்குக் கொண்டுவர பணநலம் மிக்க அன்பர்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு பண்ணினால் இளைய பாரதம் என்றும் வாழ்த்தும்.
ஆனால் இந்த நூல் 100 ரூபாய்க்கு 25 பிரதிகள் என்று குறைந்த பட்சம் எல்லோரும் வாங்கிக் குழந்தைகளுக்கு அளித்தால் எத்தனையோ நன்மை உண்டு.
நிச்சயம் நற்பணிக்கு நீங்கள் முந்துவீர்கள்.
வாழ்க பாரதம்!
மேற்கண்ட செய்தியைத் திரு ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் அவர்கள் மின் தமிழில் பகிர்ந்திருக்கிறார். அன்பர்கள் மேற்கண்ட புத்தகத்தைக் கூடிய மட்டிலும் வாங்கிச் சிறு குழந்தைகளுக்கு அளிக்கவும்.
விவேகாநந்தர் எத்தகைய தீர்க்கதரிசி என்பது கீழ்க்கண்ட அவரது இறுதி வார்த்தைகள் தெளிவாக்குகிறது!
"இந்தியா அமரத்தன்மை வாய்ந்தது. கடவுளைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றென்றும் வாழும். ஆனால் அரசியலையும், சமூகச் சச்சரவுகளையும் பின் தொடர்ந்தால் இந்தியா அழிந்துவிடும்! "
மேற்கண்ட சிவப்பு வண்ணச் செய்திக்கு நன்றி தினமலர்
மேற்கண்ட சிவப்பு வண்ணச் செய்திக்கு நன்றி தினமலர்
அஆமே
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநல்லது... நன்றி...
ReplyDeleteநல்ல தகவல்களுக்கு ந்ன்றி.
ReplyDelete//"இந்தியா அமரத்தன்மை வாய்ந்தது. கடவுளைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றென்றும் வாழும். ஆனால் அரசியலையும், சமூகச் சச்சரவுகளையும் பின் தொடர்ந்தால் இந்தியா அழிந்துவிடும்! "// ;)))))
நல்ல தகவல்.
ReplyDeleteநான் எப்போதுமே குழந்தைகளுக்கு புத்தகம் தான் பரிசாய் தருவேன்.
சுவாமி விவேகாநந்தரின் புத்தகம் வாங்கி பரிசளிக்கலாம்.
நன்றி.
நல்ல தகவல். நிச்சயம் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறேன்.
ReplyDeleteதகவலுக்கு மிகவும் நன்றி. கீதா.
ReplyDeleteபின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteநல்ல தகவல்.
ReplyDelete