எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 31, 2013

மரபு விக்கியில் இருந்து பதிவர் குமரன் அளித்த ஊஞ்சல் பாடல்

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட

அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

கீழே உள்ள ஊஞ்சல் பாட்டு மரபு விக்கியில் இருந்து எடுக்கப்பட்டது.




சித்திரமான நலுங்கைசிறப்பாக யானுரைக்கப்
பத்தியும் மிகத்தருவாய் பாலதொந்திக் கணபதியே.

தங்கமே இந்தநிலமே சாமி
சுந்தராபுரி செல்வமே

மதுராபுரி வீதியிலே சாமி
மதிச்சால் ஓடிவாரும்

உரியில் வெண்ணைதிருடி சாமி
மத்தாலடி பட்டீர்

மதுராபுரி வீதியிலே சாமி
மதிச்சால் ஓடிவாரும்

உரியில்வெண்ணை சிந்திற்றோ சாமி
உன்கமலமுகம் வாடிற்றோ
சித்திராபுரி வீதியிலே சாமி
சிரித்தால் ஓடிவாரும்
கட்டகய ரில்லையே சாமி
உனையடிக்க மனமில்லையே
துஷ்டத்தனம் வெறுத்து சாமி
துரையே ஓடிவாரும்
நெற்றிசுற்றி யசைய சாமி
முகம்வேர்க்க பெண்கள் நகைக்க
மங்களஞ்சேர் கிருஷ்ணா சாமி
மாயவரே ஓடிவாரும்

தங்கமே இந்தநலமே சாமி
சுந்தராபுரி செல்வமே
அஷ்டாக்ஷரப் பொருளே சாமி
அடியேன் ஓடிவாரேன்

வேறு.
நலுங்கிடராம்மா மதுரைமீனாக்ஷிக்கு
நலுங்கிடராம்மா

ஆதிறட்நாலுபொய்கை அபரஞ்சிபீண்டிலா
கோதைநாச்சியாரம்மா கொலுண்டாக்கா நலுங்கிட
மல்லிகைமுல்லையுடன் மணமுள்ளயிருவாட்சி
செண்பகமலருடன் சிவசுந்தரர்க்கு நலுங்கிட

வேறு.

நலுங்கிடவாரும் பிராணநாதா நாழியாச்சுதே
அம்மிமிதித்து அருந்ததிப்பார்த்து நலுங்கிட

அழுந்தத்தாலி கட்டினீரே
பன்னீருஞ்சந்தனமும் பரிமளமிகப்பூசி நலுங்கிட
பூச்சக்ரவர்த்தி புண்ணியபுருஷா
உனக்குநான் செய்குவேன் நலுங்கிட

வேறு.

ஸ்ரீராம ஜெய ஜெய சீதாமனோகர
காருண்யசாகர கருணா ஜெய ஜெய ஸ்ரீராம
சீதையாரும் ரகுபதியும் சிங்காசன மேலிருத்தி
நலுங்கிட வேணுமென்று நாகரீகமாத ரெல்லாம் ஸ்ரீ
புண்யமான பாத்திரத்தில் புட்பமதை தானெடுத்து
கன்னிமார்கள் கொண்டுவந்து காணவந்தாரகுபதியை ஸ்ரீ
மந்தாரைமுல்லைசரம் மருக்கொழுந்துபிச்சிச்சரம்
முல்லைமலரல்லிச்சரம் முடித்தார்களிருபேரும் ஸ்ரீ

(Missing one page here)

பஞ்சபூதப்பலகை கப்பலாய் சேர்த்து, பாங்கான வோங்கார பாய்மரமும்கட்டு, அஞ்செழுத்தைக் கட்டிசரக்காக வைத்து, செந்தக்கால்சரக்கை சீனியாய் வைத்து செம்மாந்திகளும் ஆனந்தவெள்ளம் கண்டமாய்ப்போகுதே அலங்காரக் கப்பல்.

பண்டுளமாலையணி பலராஜருடன் கப்பலுக்கு, அந்தமுள்ள தீவுகளில் இருக்கும் அதிசயமாய் சரக்குகளைகொண்டு மிகத்தானேத்தி கோலவழிகப்பல் நடந்திடவே

முடுகு

சந்தணஞ் செஞ்சந்தணஞ் சூதாலிங்கம் தவறாதகருநாவிவெண்ணாவிவீரம் பண்ணானசாரம் பவவீரகுதிரை பாஷாண வெள்ளைபாஷாண எரியன்பாஷாண குக்கில்நேராணகெந்தகம் நெல்லிக்காய் கெந்தகம் ரோதகட்டாழை கிழவீரங்கி கிழமூக்கு தேவதாரக்கட்டையீய ஊசிக் கரந்தமிலவங்க வங்கங் கருவங்கத் தங்கந்துய்யமாய் பூலங்கெட்டம் பூலாங்கிழங்கும் கொம்பரக்கு மெழுகுங்கோறோசனை நல்ல குங்குமப்பூவு,

வெட்டுடாவெட்டு மரமும்முத்துக்கள் நட்டு ஈட்டம் பாத்து வெங்கலப்பானையை வண்டிமேலேத்து அஞ்சங்கி பீரங்கிடண்டடித்து, வனபேரி கனபேரிகை வாங்கிகோடு, மாணாம்புச்சாவடிக் கோபுரங்கட்டி, மலையேரிப் பார்க்கலாம் வைகுண்ட கப்பல்.

சம்மந்தி ஏசல்

அடிப்பட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே, வடக்குத் தெருவிலே வாழைக்காய்திருடி வாழைமட்டையால் பூசைபட்டாளே, அடிப்பட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே தெற்குத்தெருவிலே தேங்காய் திருடி தென்ன மட்டையால் பூசைகள் பட்டாளே, அடிபட்டாளே சம்மந்தி உதைப்பட்டாளே மேலத்தெருவிலே மிளகாய்திருடி பனைமட்டையால்

(missing one page here)

இராகம் பைரவி.

வச்சிரவைடூரியத்தால் பலகைசேர்த்து
மரகதத்தினாலிழைத்த கால்கள் நாட்டி
உச்சிதரத்தினம்பதிக்க கொடுங்கைபூட்டி
உகந்துசாரங்கராச றாடீரூஞ்சல்
மகண்டமகரகண்டி பதக்கமின்ன
காதுதோடுகம்மல்சரம் பளபளென்ன
சங்குசக்கரங்கை சாரங்கம்தரித்தநாதன்
மங்கைகோமளவல்லியுடன் மனமகிழ்ந்து
பங்கஜாட்சருக்கும்பிதா ஆடீரூஞ்சல்
பார்புகழுங்குடந்தைவாச றாடீரூஞ்சல்

வேறு

செண்டாடினாள் ரங்கநாயகி ஸ்ரீநிவாசருடன்
மண்டலமெல்லாம் புகழும் மங்கைநாயகருடன்
குண்டுமல்லிகை குமுகுமெனவே குளிரபந்து களவரெடுக்கவே
மண்டலமெலாம் புகழும் ரங்கநாயகருடன்
தங்கவொட்டியாணம் தளதளென சரிகைப்புடைவை பளபளெனவே
நெத்தியிலிட்டகஸ்தூரிபொட்டு நிலைகட்டிகளையசையவே

கதவுதிறக்கிற பாட்டு

1. செந்திருவதனம்பெண் மங்கயரேவுந்தன்
செம்பொன்கதவைத் திறமானேயடி
இன்பக்குயிலன்னமே இப்போதே

2. கதவைத்திறவென்று யிதமாகக்கூறினீர்
கட்டழகாவுந்தன் ஊரென்னசுவாமி
உமக்கிட்டதிரு நாமத்தின்பேரென்ன

3. பேரென்னவெனக்கேட்பார் மகளேயெந்தன்
காரணிவைகுந்தத் தானடிவளர்
சோரநாதக் கள்வநானடி


http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-11-28-19-55-14/2008-11-28-19-55-57/2009-10-13-14-53-28/2009-10-13-14-53-58


நன்றி மரபு விக்கி.

8 comments:

  1. மிகவும் அழகான பாடலை அற்புதமாக விளக்கிச்சொல்லியுள்ளதை பதிவாக மாற்றி அசத்தி விட்டீர்கள். ;)))))

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. எப்பொழுதோ கேட்ட பாடல்....!

    ReplyDelete
  3. ஊஞ்சல் பாட்டு பகிர்வு வெகு அருமை.
    நன்றி.

    ReplyDelete
  4. தங்கமே சாமி பிரமாதம்.
    முடுகு என்றால் என்ன?

    ReplyDelete
  5. வாங்க வைகோ சார், நன்றி.

    ReplyDelete
  6. ஶ்ரீராம், உங்க கல்யாணத்திலே கேட்டதோ? :)))

    ReplyDelete
  7. நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  8. வாங்க அப்பாதுரை, அடிக்கடி காணாமல் போறீங்க! :))) காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பிலே சொல்லலாமோனு தோணிச்சு! :))

    முடுகு என்றால் இந்த இடத்தில் அரக்கினால் செய்யப்பட்ட கங்கணம் அல்லது தங்க ப்ரேஸ்லெட் எதுவானாலும் வைச்சுக்கலாம். ஆனாலும் அரக்குக் கங்கணம் தான் பொருந்தும்னு நினைக்கிறேன். ஆனால் இங்கே பாடலைக் குறிப்பிடுவதால்,

    இதே முடுகை செந்தமிழ் இலக்கணத்திலே சொல்லப் போனால் அர்த்தம் மாறும்.


    //முடுகு வண்ணம் என்பது நாற்சீரின் மிக்கு வரும் அடி கொண்ட பாடலில் உருட்டு-வண்ணத்தில் வருவது போலவே அராகம் தொடுத்து வருவது.
    இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
    எடுத்துக்காட்டு
    நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ//


    ஹாஹாஹா, தலையைப் பிச்சுக்குங்க! செந்தமிழ் இலக்கணப் பகிர்வுக்கு நன்றி விக்கி பீடியா!

    பி.கு. இங்கே அரக்குக் கங்கணம் தான் என்றே நினைச்சேன். :)))))

    ReplyDelete