எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 16, 2013

வளைந்து, நெளிந்து ஓடும் காவிரி!



எங்க குடியிருப்பின் பின் பக்கம் புஷ்பக் நகர் என்னும் பகுதி.  ஒரு வேலையாக அங்கே போயிருந்தோம். மூன்றாவது குறுக்குத் தெருவின் கடைசியில் காவிரிக்கரை 25 அடி உயரத்துக்குப் போட்டிருக்காங்க.  ஏறப் படிகள் இருந்தன.  சரினு அதிலே ஏறி மேலே இருந்து காவிரியைப் படம் எடுத்தேன்.  இதிலே இரண்டு படம் நான் எடுத்தது.  ஒண்ணு ரங்க்ஸ் எடுத்தார்.




முன்னாடி போட்ட படங்கள் எதுவும் தெரியலைனும் க்ளாரிடி இல்லைனும் வா.தி. மற்றும் சுபாஷிணி சொல்றாங்க.  மேலும் வா.தி.  இந்தப் படங்கள் எல்லாம் ஸ்டாம்ப் சைஸுக்கு இருக்கிறதாவும் சொல்றார்.  உங்களுக்கு எல்லாம் எப்படித் தெரியுது? எனக்கு ஸ்டாம்ப் சைஸுக்கு முன்னாடி போட்டவையும் தெரியலை.  இப்போவும் தெரியலை.  பகல் நல்ல வெளிச்சத்தில் படம் எடுத்ததால் லைட்டிங் கொஞ்சம் சுமாராக வந்திருக்கலாம். போட்டோ ஷாப் வேலையெல்லாம் பண்ணவில்லை. 



இங்கிருந்து உ.பி.கோ. தூரக்க இருக்கிறதாலே மலை சரியாத் தெரியலைனு நினைக்கிறேன்.  இந்த இடத்தில் வடமேற்கில் இருந்து தென் கிழக்காகக் காவிரி வளைகிறாள். அந்தக் கோணம் வரணும்னு நினைச்சேன்.  ஆனால் அதுக்கு முடியாம அப்போ ஒரு இரு சக்கர வாகனம் வந்து சறுக்கிக் கொண்டு அத்தனை உயரத்திலிருந்து பள்ளத்தில் விழ இருக்கவே, எங்களுக்கும் பயம் வந்துவிட்டது.  மேலும் அந்தத் தெருவில் வீட்டுக் கட்டுமான வேலைகளுக்கு மணல் எடுக்க ஆட்கள் அந்தப் படிகளின் வழியாக வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருந்தனர்.  ஆகவே முடியலை. தண்ணீர்க் குழாய் தெரியும் இடத்துக்கு அப்பால் காவிரி மேலும் வளைந்து சரியான கிழக்குத் திசையில் திரும்புகிறாள்.  அந்த இடத்துக்குப்போக முடியாது.  ஒருநாள் பாலத்தில் இருந்து எடுக்க முடியுமானு பார்க்கணும்.  காவல் துறை அங்கே நிற்க அனுமதிக்கணும். :))))))












1

15 comments:

  1. clarity konjam kammi; aadiperukkunrathaala aadinde edutheengala? aanaa kaavirila thanni odurathu paakka sugamaa irukku.

    ReplyDelete
  2. படங்கள் எல்லாமே ஜோர் ஜோர் அதுபோல தகவல்களும்.

    காவிரியின் இக்கரையில் நானும் அக்கரையில் நீங்களும் இருந்து கொண்டு, இன்னும் ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பே கிட்டவில்லை.

    நீச்சலடித்துத்தான் அவ்விடம் இனி வந்து நான் உங்களைச் சந்திக்க முடியும் போலிருக்கு. ;)

    பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  3. காவிரில தண்ணீர் இருக்கும்போதே வந்துடனும், ஸ்ரீரங்கத்திற்கு, எப்போது என்று தெரியவில்லையே!

    ReplyDelete
  4. காவிரி வளைந்து, நெளிந்து அழகாய் செல்லட்டும்,நேரில்பார்க்கும் நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.



    ReplyDelete
  5. வளைந்து, நெளிந்து ஓடும் காவிரி!"
    மிக அழகு..!

    ReplyDelete
  6. உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் காவிரியின் 'நீர் நிறைத் தோற்றம்' படத்தில் சரியாகத் தெரியவில்லைதான். :)))

    ReplyDelete
  7. அப்பாதுரை, அதான் ஏன்னு புரியலை. தெரிஞ்சா சொல்லுங்க! :)))

    ReplyDelete
  8. வைகோ சார், எப்படியும் கொஞ்ச நாட்களில் வர முயற்சிக்கிறேன். மே பதினேழாம் தேதி உங்க வீட்டுக்கு வர முயன்றேன். அன்னிக்கு அந்தத் தெருவுக்கும் வந்திருந்தோம். உங்க குடியிருப்பையும் பார்த்தோம். நீங்க இருப்பீங்களா இல்லையானு தெரியலை! :))) ஒரு நாள் தொலைபேசிச் சொல்லிட்டு வரோம்.

    ReplyDelete
  9. வாங்க ரஞ்சனி, ஆவலுடன்ன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, மாயவரத்தையும் எட்டி விட்டது. :)))

    ReplyDelete
  11. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

    ReplyDelete
  12. வாங்க ஶ்ரீராம், என்னனு கண்டு பிடிக்கிறேன். அவ்வளவு தொழில் நுட்பம் தெரியாததாலே கொஞ்சம் பிரச்னை. பார்க்கலாம். :))))

    ReplyDelete
  13. காவிரில தண்ணீர் இருக்கும்போதே வந்துடனும், ஸ்ரீரங்கத்திற்கு, எப்போது என்று தெரியவில்லையே!//
    ரஞ்சனி நானும் வாய்ச்சொல் வீரியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
    அன்னை காவிரியும் அப்பன் ரங்கனும் அழைக்கட்டும்.
    படங்கள் அழகாத்தான் இருக்கு கீதா. மேகமூட்டம். அதற்கு நாம என்ன செய்ய முடியும்!

    ReplyDelete
  14. வாங்க வல்லி, மேட்டூரிலே தண்ணி குறைஞ்சிட்டு வருது. சீக்கிரமா வாங்க. :)))))

    ஹிஹிஹி, மேக மூட்டமும் இருந்தது தான். ஆனாலும்............. என்னனு புரியலை. பார்க்கிறேன். எங்கே திரும்பக் காமிராவைக் கையிலே எடுக்கிறச்சே தான் நினைவுக்கு வரும். :))))

    ReplyDelete
  15. காவிரி அழகாக இருக்கின்றது.

    ReplyDelete