தலையிலே பார்த்தீங்களா? அதுக்குப் பாண்டியன் கொண்டைனு பெயர். இதை சுந்தரபாண்டியன் கொடுத்ததாக வரலாறு. ஆனால் இப்போ இருக்கும் கொண்டைக்கு வேறு கதையும் சொல்றாங்க. அது ஆன்மீகப் பயணம் வலைப்பக்கத்திலே வரும். :)))) இன்னிக்குக் காவிரிக்குச் சீர் கொடுப்பார் ரங்க நாதர். அதுக்காக ஆண்டாளம்மா ஏற்கெனவே காவிரிக்கரைக்குப் போயாச்சு. பட்டுப் புடைவை, வளையல்கள் மஞ்சள் குங்குமம், கருகமணி, பிச்சோலை, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் போன்ற மங்கலப் பொருட்கள் ஒரு பட்டுத்துணியில் மூட்டையாகக் கட்டப்பட்டு யானையின் மேல் ஏற்றி சகல மரியாதையோடும் ஓடும் காவிரி வெள்ளத்தில் சமர்ப்பிக்கப்படும். அதைப் பார்க்கலாம்னா முடியாது போல. இந்த வருஷம் எக்கச்சக்கக் கூட்டம். :(
இதான் அம்மா மண்டபம். உள்ளே நுழையும் வழியைக் காவல்துறை பூட்டி வைச்சிருக்கு. ஏனெனில் பெருமாள் நுழைகையில் கூட்டமும் சேர்ந்து உள்ளே கட்டுக்கடங்காமல் போயிடும். காவிரிக்குப் போகப் பக்கத்துப் படித்துறை வழியாப் போனோம். அங்கே மக்கள் வெள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளம், காவிரி வெள்ள்ளத்தோடு போட்டி! இன்னும் இரண்டு நாட்களில் கூடுதல் நீரும் காவிரிக்கு வரும். அப்போ நிதானமாய்ப் போய்ப் படம் கிட்ட இருந்து எடுக்கணும். இப்போ சற்றே தள்ளி இருந்த உயரமான படியின் மேலே இருந்து எடுத்த படங்கள் கீழே காணலாம்.
இன்னொண்ணு
இப்போ வீதியில் போட்டிருந்த சில கடைகளைக் காணலாம்.
படங்கள் இன்னமும் இருக்கு. ஆனால் போடலை. :)))))) அப்புறமாப் போடறேன். இல்லைனா பேசும் பொற்சித்திரமே பக்கத்திலே பகிர்ந்துக்கறேன். அதுக்கும் படம் வேணும் இல்ல! மறந்துட்டேனே, நம்பெருமாளைப் பல்லக்கின் ஆழத்திலே வைச்சிருந்தாங்க! அதோட குறுக்குக் கட்டைகள் வேறே. அப்புறமா நம்ம ரங்க்ஸ் தான் எதிரே இருந்த அறநிலையத் துறை அலுவலகத்துக்கு நம்பெருமாள் போயிருந்தப்போ அங்கே போய்க் கிட்டே இருந்து எடுத்துட்டு வந்தார்.
எல்லா இடத்திலேயும் நிவேதனம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதங்கள்னு. நம்பெருமாளுக்கு இந்தத் தெருவிலேயே பல மண்டகப்படிகள். எல்லா இடத்திலும் நிவேதனம் நடக்கையில் ஒரு நீண்ட வெள்ளைத்துணியால் திரைபோடறாங்க. உள்ளே பட்டாசாரியார் நம்பெருமாளுக்கு நிவேதனம் செய்விக்கிறார். திரை நீக்கியதும் பார்த்தால் நிஜம்மாவே சாப்பிட்டிருப்பார் போலனு தோணும். அப்படி ஒரு சிரிப்பு முகத்திலே. ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு இன்னிக்குப் பெருமாள் என்னமோ சோகமா இருக்கிறதாப் பட்டதாம். திருஷ்டிப் பொட்டு வைக்கலைனோ என்னமோ தெரியலை.
ஆனால் பாருங்க இத்தனை இடத்தில் சாப்பிட்டும் அவர் நித்ய உபவாசி தான்; அதே போல் இத்தனை பெண்களை மணந்தும் அவர் நித்ய ப்ரமசாரிதான். அதோட அர்த்தமே இன்னிக்குத் தான் நல்லாப் புரிஞ்சது. குரு பூர்ணிமா அன்று நடந்த சத்சங்கத்திலே இதைக் குறித்து விளக்கம் சொல்லப் பட்டது. ஆனாலும் உணர்வு பூர்வமாகப் புரிஞ்சதுனு சொல்லலாம். ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். :)))))))
பகிர்வின் மூலம் நாங்களும் கலந்து கொண்டோம்... நன்றி அம்மா...
ReplyDeleteதிருவிழா ! காவிரியில் இன்னும் கரைதொட்டு ஓடும் தண்ணீரைப் பார்க்க ஆவல். இந்த வருடம் 18ம் பெருக்கு காவிரி புண்ணியத்தில் விசேஷம்தான்.
ReplyDeleteநல்ல தரிஸனம் தங்கள் பதிவின் மூலம். நன்றிகள்.
ReplyDeleteபெருமாள் தர்சனம் பெற்றுக் கொண்டோம்.
ReplyDeleteகாவேரியில் நீர் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
சற்சங்கத்தில் கேட்டதையும் பகிருங்கள் படிக்க ஆவலாக இருக்கின்றோம்.
பிச்சோலைனா?
ReplyDeleteகடைசியில திடீர்னு ஆழமாப் போயிட்டீங்களே? என்ன புரிஞ்சுகிட்டீங்கன்னு சொல்லலாமே?
காவிரில தண்ணி ஓடுதா நிக்குதா?
ReplyDeleteகரை புரண்டோடும் காவிரியின் புகைப்படம் கண்டு மகிழ்ச்சி.... சீக்கிரமா வந்து காவிரியைப் பார்க்கத் தோன்றுகிறது..... பார்க்கலாம்!
ReplyDeleteவாங்க டிடி, நல்ல தரிசனம் இன்று. :)))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இன்னும் ஒரு வாரம் போகட்டும். :))))))
ReplyDeleteவாங்க வைகோ சார், நல்ல கூட்டம் இங்கே! :))))
ReplyDeleteவாங்க மாதேவி, காவிரியில் நிறையவே தண்ணீர்! சத்சங்கத்தில் கேட்டதை எப்படி விளக்குவது எனப் புரியலை, ஆனால் புரிஞ்சுட்டு இருக்கேன். :))) முடிஞ்சால் சொல்லப் பார்க்கிறேன். குருநாதர் சொன்னாப்போல் எளிமையாயும் புரியறாப்போலயும் என்னாலே சொல்ல முடியுமானும் தெரியலை!
ReplyDeleteவாங்க அப்பாதுரை, திடீர் திடீர்னு காணாமப் போறீங்க? :))) பிச்சோலை படம் கிடைக்குதானு கூகிளிட்டுப் பார்த்தேன். கிடைக்கலை. வரலக்ஷ்மி விரதம் இருக்கிறவங்களுக்குக் கட்டாயமாத் தெரியும். ஓலையில் வளையல் மாதிரிச் செய்திருப்பாங்க. :))) இங்கே கிடைச்சால் வாங்கிட்டு வந்து படம் எடுத்துப் போடறேன். :))))
ReplyDeleteஆழமால்லாம் போகலை, மூழ்கிட்டேன்னால் வெளியே வரத் தெரியணுமே! அதெல்லாம் ரொம்பப் பெரியவங்களுக்குத் தான் ஆழமாப் போறதெல்லாம்! :))))))))
ReplyDeleteகாவிரியில் தண்ணி ஓடிட்டே இருக்கு! இன்னும் மாடியிலே போய்ப் பார்க்கலை. நாளைக்காவது போகணும். :))))
வாங்க வெங்கட், இன்னும் ஒரு வாரத்தில் தண்ணீர் இன்னும் கூடுதலாகப்போகும்.
ReplyDeletePls give details paravakkarai (karuvizhi) Sivan kovil. Bus route from Trichy.My Name Anbu (Teacher).
ReplyDeletePls Give details Paravakkarai Sivan Kovil Bus route from Trichy.
ReplyDeleteRegd. Navakkari Chakkaram.
தயவுசெய்து பரவாக்கரை சிவன் கோவிலுக்கு செல்ல பஸ்ரூட் திருச்சியிலிருந்து செல்ல கூரவும்.நவாக்கரிசக்கரம் சார்பாக.
ReplyDelete//அப்படி ஒரு சிரிப்பு முகத்திலே. ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு இன்னிக்குப் பெருமாள் என்னமோ சோகமா இருக்கிறதாப் பட்டதாம்... //
ReplyDeleteகரெக்ட்! மனக்கண்ணாடி என்னைக்குமே மாயக் கண்ணாடி தான்!
வாங்க அன்புத்துரை, உங்களுக்கு வேண்டிய தகவலை இன்றைய பதிவில் பார்க்கலாம். வரவுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ஜீவி சார், மனம் ஒரு மாயக்கண்ணாடி தான். இன்னிக்குப் பெருமாளே நடராஜர் மாதிரித் தெரிஞ்சார். :))))
ReplyDeleteநம்பெருமாள் தரிசனம் செய்து வைத்தமைக்கு நன்றி. ஊரிலிருந்து காதோலை, கருவளையலும் வாங்கி வந்து, நேற்று ஆடிபெருக்கு கொண்டாடி விட்டேன்.
ReplyDeleteஅன்புத் தம்பி, உங்க பெயரை அன்புத் துரைனு தப்பா எழுதிட்டேன். மன்னிக்கவும். :(
ReplyDeleteவாங்க கோமதி அரசு, நியூ ஜெர்சியிலும் பதினெட்டாம் பெருக்கு சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துகள். :)
ReplyDelete//பெருமாளே நடராஜர் மாதிரித் தெரிஞ்சார். :)))) //
ReplyDeleteஉணர்வின் முன்னே உண்மை எப்படி ஓடி வந்து நர்த்தனமிடுகிறது, பாருங்கள். ஒருமையே பொருண்மையுடன் ஒளிர்விடும் பொழுது, வெளித்தோற்றங்களின் மங்கலில் உள்ளொளி பளிச்சிட்டு
இரட்டை மயக்கம் ஒழித்த-- எல்லாமுமே, எல்லோருமே 'நம் பெருமான்' தாம்!
வாங்க ஜீவி சார், பொருள் தந்தமைக்கு நன்றி. :)))
ReplyDeleteசுந்தர பாண்டியன் பெருமாளின் திருமஞ்சன தீர்த்தத்தை பிடிக்க ஒரு முறை தன் கிரீடத்தை கொடுத்ததாக படித்த ஞாபகம்...
ReplyDeleteகாவிரியை பார்க்க இந்த வாரம் வர வேண்டும்..
பிச்சோலை காதோல கருகமணி தானே மாமி..
வாங்க கோவை2தில்லி, ஆமாம், நானும் படிச்சிருக்கேன். பிச்சோலைக்கு இங்கே காதோலைனு பெயர் போல! மதுரைப்பக்கம் பிச்சோலைனு சொல்வோம். :)))
ReplyDeleteஆடிபெருக்குக்கு வந்த நம்பெருமாளை உங்கள் தயவில் சேவித்தாயிற்று.
ReplyDeleteநீங்கள் புரிந்துகொண்டதை கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்.