எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 02, 2013

பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!(கல்யாணப் பதிவுகள்)


இது சத்திரத்தில் வாசிக்கையில் எடுத்த படம்.  அட்ஜஸ்ட் செய்துக்குங்க. :)))))


நாதஸ்வரக் காரர்கள் நன்கு அனுபவித்துப் பாடிக் கொண்டு வந்தனர். கூடவே ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்தது.  இதைத் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஜானவாசம் என்று சொல்வார்கள். வட மாநிலங்களிலோ பிள்ளை வீட்டில் இருந்து மணமகள் வீட்டுக்கு வருவதே இம்மாதிரியான அலங்கரித்த வண்டிகளில் தான்.  இதை "பராத்" என்று சொல்வார்கள்.  இந்த பராத்தோடு வரும் பிள்ளை வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பெண் வீட்டினர் தகுந்த சன்மானங்கள் செய்வது வழக்கம். எத்தனை நபர்கள் வருகின்றனரோ அத்தனை நபர்களுக்கும் பரிசுகள் கொடுத்தே ஆகவேண்டும். அது புடைவை போன்ற துணிகளாகவோ, வெள்ளிக்காசு, தங்கக்காசு போன்றவையாகவோ இருக்கும்.  ஆச்சு, நம்ம ஊர்வலம் சத்திரத்தை நெருங்கி விட்டது.  அதோ யாரோ வேகமாப் போறாங்களே யார் அது?  அட பெண்ணின் சித்தியா?  எதுக்கு இவ்வளவு வேகமாப் போறாங்க!

சத்திரத்துக்குள்ளே வேகமாய்ப் போன பெண்ணின் சித்தி மணப்பெண் தங்கி இருக்கும் அறைக்குப் போய் அவள் வருங்காலக் கணவனை மணமகனின் ஆங்கில முறைப்படியான உடையில் காணவேண்டி அழைக்கிறாள்.  முன்னெல்லாம் இம்மாதிரிப் பெண்கள் வெளிவந்து பார்க்க இயலாது.  ஆகவே மாடியில் எங்காவது தோழிகள் சிலரோடு நின்று கொண்டு பார்ப்பார்கள்.  சில சமயம் தெரியும்.  பல சமயங்களிலும் பந்தல் மறைக்கும். :))) ஆனால் இப்போதெல்லாம் பெண்ணை இன்னொரு காரில் சற்றுத் தூரம் அழைத்துச் சென்று ஊர்வலம் நடக்கும் பாதையில் சென்று அங்கேயே பெண்ணையும் சேர்த்து உட்கார்ந்து வரச் சொல்லி சத்திரம் வரை அழைத்து வருகின்றனர். இது ஜானவாசம் நடக்கும் கல்யாணங்களில் மட்டுமே.  பெரும்பாலான கல்யாணங்களில் ஜானவாசமே நடப்பதில்லை.  ஜானவாசத்தின் மூலம் கல்யாணப்பிள்ளை பலருக்கும் அறிமுகம் ஆகின்றான்.  ஒரு வேளை பிள்ளையின் நடத்தைகள் சரியில்லாமல் இருந்தாலோ, அல்லது ஏற்கெனவே திருமணம் ஆகி அதை மறைத்திருந்தாலோ இம்மாதிரி ஜானவாசத்தின் மூலம் வெளிப்படுவது உண்டு.  வெளிப்பட்டும் இருக்கிறது.  அதன் பின்னரும் முஹூர்த்தத்தை நிறுத்தாமல் சொந்தக்காரப் பிள்ளைகளில் ஒருவரை மணமகனாக அழைத்துத் திருமணத்தை நடத்துவது உண்டு. நம்ம கல்யாண ஊர்வலம் சத்திரத்து வாசலுக்கு வந்தாச்சு.  பெண்ணும் சத்திரத்து வாசலுக்கு வந்துவிட்டாள்.  கூடவே வந்த ஆனையும் அவளுக்கும் மாலையிடுகிறது.  கொஞ்சம் பயந்து கொண்டே மாலையை ஏற்ற மணப்பெண் பின் மணமகன் அருகே சென்று அமர்கிறாள்.  இருவரையும் சேர்த்து வைத்துப் படங்கள் பிடிக்கப்படுகின்றன. பின்னர் இருவரும் இறங்கி சத்திரத்தின் உள்ளே செல்கின்றனர்.

பின்னர் பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.  பெண்ணை அமர வைத்துப் பெண்ணின் அப்பா, அம்மா பிள்ளையார் பூஜை செய்து வழிபட்டுப் பின்னர் மந்திரோக்தமாக பிள்ளையின் தாய், தகப்பனோடு நிச்சயம் செய்து கொள்கின்றனர். இந்தப் பையருக்குத் தன் பெண்ணை நாளை கன்யாதானம் செய்து கொடுக்கப் போவதாய் அறிவிப்பார். பின்னர் பெண்ணுக்குப் பிள்ளை வீட்டார் புடைவை வைத்துக் கொடுக்கின்றனர்.  அதைக் கட்டிக்கொள்ள நாத்தனார் துணையோடு பெண் செல்வாள்.  கட்டிக் கொண்டு வந்ததும், "தலைப்பை நீளமாய் விட்டுக்கோ" என்று சொல்லியே அனுப்பி இருப்பார்கள்.  அதன் படியே நீளத் தலைப்போடு புடைவை கட்டிக்கொண்ட பெண் வந்ததும். முன்னெல்லாம் முழுசா மட்டைத் தேங்காய் வைப்பார்கள்.  இப்போல்லாம் தேங்காய்க் கீத்தை வைக்கிறாங்களானு தெரியலை.  சின்னதாக ஒரு எலுமிச்சை அளவுக்கு முடிச்சைக் கொடுக்கிறாங்க.  குடும்ப பாரத்தைச் சுமக்கறாளா இல்லையானு தெரிஞ்சுக்கவோ? இது விஷயம் முந்தாநாள் எங்க வீட்டுக்கு சாஸ்திரிகள் வந்தப்போ கேட்டு வைச்சுக்க நினைச்சு மறந்துடுச்சு.  மீண்டும் கேட்டுச் சொல்றேன். அந்தப் புடைவையின் முந்தானையில் நடுவே அந்தப் பெரிய முடிச்சை வைச்சுக் கட்டி,  இடுப்பில் சொருகிக் கொள்ளச் சொல்வார்கள்.  பெண் அந்த முடிச்சைக் கட்டிக் கொண்ட வண்ணமே குனிந்து நமஸ்கரிக்க வேண்டும்.  இப்போல்லாம் காலத்துக்கு ஏற்றாற்போல் இதெல்லாம் குறைந்துவிட்டது.  பெண்ணின் நிச்சயம் முடிந்ததும் இப்போதெல்லாம் ஃபோட்டோ செஷன் ஆரம்பிக்கிறது.

என்ன தான் மறுநாள் ரிசப்ஷன் இருந்தாலும், அதுக்கு இப்போல்லாம் வட இந்திய பாணி உடை என்பதால் இந்த உடையோடு பெண், பிள்ளை இருவரும் அவரவர் சொந்தங்களோடும், தனியாகவும் படம் எடுத்துப்பாங்க..  நமக்கு இந்த ஃபோட்டோ வெளிச்சமே அலர்ஜி.  உடம்புக்கு ஆகாது.  ஆகவே சாப்பிடப் போகலாம் வாங்க, காலம்பர சீக்கிரமா எழுந்து தயாராகணும் இல்லையா!

நாளைய காலை டிபன் மெனு

கோதுமை அல்வா,



பைனாப்பிள் கேசரி,

உளுந்து வடை,,

இட்லி, சாம்பார், சட்னி,

பொங்கல்

உ.கி. மசால் தோசை, தக்காளிச் சட்னி, கொத்துமல்லிச் சட்னி.


படங்கள் உதவி: கூகிளார்.

26 comments:

  1. டிபன் எல்லாமே பார்க்க படுஜோராக இருக்கிறது. பசியைக்கிளப்புது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //அந்தப் புடைவையின் முந்தானையில் நடுவே அந்தப் பெரிய முடிச்சை வைச்சுக் கட்டி, இடுப்பில் சொருகிக் கொள்ளச் சொல்வார்கள். பெண் அந்த முடிச்சைக் கட்டிக் கொண்ட வண்ணமே குனிந்து நமஸ்கரிக்க வேண்டும். //

    ரொம்பக்கஷ்டம் தான்.

    பின்னாளில், பணம் காசை புடவைத்தலைப்பில் கெட்டியா முடிஞ்சு வெச்சுக்க டிரைனிங்கா இருக்குமோ.;)

    ReplyDelete
  3. ”தலைப்பை நீளமாய் வச்சுக்கோ” ஒரு வேளை கணவனை முந்தானையில் முடிய ஏதுவாக இருக்கவோ என்னவோ.......!!!!

    ReplyDelete
  4. யே நீளத் தலைப்போடு புடைவை கட்டிக்கொண்ட பெண் வந்ததும். முன்னெல்லாம் முழுசா மட்டைத் தேங்காய் வைப்பார்கள். //

    இப்போது தலைப்பை ஏந்தி பிடிக்க சொல்லி அதில் மஞ்சள் தேங்காய் வைத்து விட்டு பின் வாங்கி விடுகிறார்கள். ஒரு ரூபாய் நாணயம் மட்டும் வைத்துமுந்தியில் முடிந்து கொள்ளச்சொல்லி நாத்தனார் மணப்பெண்ணுக்கு புடவை கட்டி மணமேடைக்கு அழைத்து வருவாள்.

    //பின்னாளில், பணம் காசை புடவைத்தலைப்பில் கெட்டியா முடிஞ்சு வெச்சுக்க டிரைனிங்கா இருக்குமோ.;)//
    சேர்த்த பணத்தை சிக்கனமாய் செலவு செய்ய பக்குவமாய் சொல்லிக் கொடுக்கும் கலை வை.கோ. சார்.
    டிபன்

    ReplyDelete
  5. ஜானவாசக் காரணங்கள் சொல்லியிருப்பது சரிதான். திருமணம் செய்வதே இந்தக் காரணத்துக்குத்தானே! கோதுமை அல்வா இழுக்கிறது!

    ReplyDelete
  6. படங்களைப் பார்த்து ஸ்ஸ்ஸ்... முடியலே... ஹிஹி...

    ReplyDelete
  7. பைனாப்பிள் கேசரி ஒரு கார்ட்டூன் பொம்மை மாதிரி இருக்கிறது....

    ReplyDelete
  8. //அதைக் கட்டிக்கொள்ள நாத்தனார் துணையோடு பெண் செல்வாள்... //

    நாத்தனார் ஒவ்வாமை இந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது, போலும்..

    ReplyDelete
  9. நல்ல விளக்கங்கள்....

    பைனாப்பிள் கேசரி பசியைத் தூண்டிவிட்டது....

    வெண்டைக்காய் சாம்பார் - உருளைக்கிழங்கு கறி யோட சாதம் சாப்பிட்டு அப்புறம் வரேன்!

    ReplyDelete
  10. வாங்க வைகோ சார், டிபன் நாளைக்குத் தான், நாளைக்குக் கல்யாணத்தன்னிக்குக் காலம்பர மெனு. :))))))

    ReplyDelete
  11. ஹாஹா, அதெல்லாம் இல்லை வைகோ சார், குடும்பபாரத்தைத் தாங்கனோ என்னமோ சொல்வாங்க. ஆனால் நுகத்தடி தான் அதுக்கு வைக்கிறது. இது மறந்துட்டேன். சீக்கிரமாக் கேட்டுடறேன். :))))

    ReplyDelete
  12. வாங்க ஜிஎம்பி சார், எல்லாப் பெண்களுமா முந்தானையில் முடிய முடியுது! ஹிஹிஹி, அதெல்லாம் இல்லை.

    ReplyDelete
  13. வாங்க கோமதி அரசு, எனக்கெல்லாம் ஒரு பெரிய மூட்டையே கட்டினாங்க. போன வருஷம் என் அண்ணா பையர் கல்யாணத்திலே ஒரு ஐம்பது கிராம் கடுகுப் பொட்டலம் அளவுக்கு! :)))))

    ReplyDelete
  14. இன்னும் எங்க வீடுகளிலே ஒரு ரூபாய் மட்டும் வைச்சு முடியும் வழக்கம் வரலை. அதுவும் வந்துடும். :))))

    ReplyDelete
  15. வாங்க ஶ்ரீராம், கோதுமை அல்வாக்கு இன்னும் பொறுக்கணும். இப்போத் தான் கிளறிக் கொட்டி இருக்கு. சூடு ஆறலை! :))))) பிச்சைக்காரனுக்குத் தான்! :))))

    ReplyDelete
  16. வாங்க டிடி, சாப்பிடக் காத்துட்டு இருக்கணுமே! :)))) இருங்க இருங்க நாளைக்குப் பிச்சைக்காரனுக்குச் சாப்பிடலாம். :))))

    ReplyDelete
  17. ஹாஹா, ஸ்கூல் பையர், முதல் வரவா? நீங்க ஸ்கூல் பையரா இருக்கிறதாலே கார்ட்டூனாத் தெரியுது! :))))))

    ReplyDelete
  18. வாங்க ஜீவி சார், இதிலே எல்லாம் ஒவ்வாமை வரதில்லை. புக்ககம் செல்லும் பெண்ணும் சரி, அங்கே பிறந்த பெண்ணும் சரி அவரவர் உரிமையைச் சரிவரப் புரிஞ்சுண்டாலே போதும்.

    எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண் அவங்க அண்ணாவுக்குக் கல்யாணமாகி 40 வருஷத்துக்கும் மேல் ஆனபின்னும் அண்ணாவுக்கு இப்படித்தான் சாப்பாடு போடணும்னு சொல்லிட்டு இருப்பார். 40 வருஷம் வாழ்ந்தவங்களுக்குத் தெரியாதா? அவரவர் சுதந்திரத்தில் குறுக்கிடாமல் இருந்தாலே போதும். அதோடு எல்லாப் பெண்களுமே நாம நம்ம கணவன் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிறோமோ அவ்வாறு தானே நம்ம வீட்டுக்கு வரவங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்ங்கறதையும் புரிஞ்சுக்கணும். அது இல்லாமல் தான் பிரச்னையே. இதெல்லாம் தீர்க்கக் கூடியதே! :)))))

    ReplyDelete
  19. வாங்க வெங்கட், இன்னும் சாப்பிடலையா? சீக்கிரம் சாப்பிடுங்க. நாளைக்குக் கல்யாணத்துக்குச் சீக்கிரமா எழுந்துக்கணுமே!

    ReplyDelete
  20. ஆகா! டிபன் சாப்பிட வருகின்றோம்.:))

    ReplyDelete
  21. நல்ல வேளை, வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் சொல்ல விட்டுப்போனதும் இது.

    கல்யாணங்களின் பொழுது ஒன்றைப் பார்க்கலாம் நீங்கள். இந்தந்த நெருங்கிய சொந்தங்கள் இவர்கள் என்று புதுமணமக்களுக்கு பலபேர் முன்னிலையில் தெரியப்படுத்துகிற மாதிரியும், அவையில் இருப்போரும் அதைத் தெரிந்து கொள்கிற மாதிரியும் கல்யாண சடங்குகள் சில இருக்கும்.

    மணமகனுக்கு மோதிரம் இடுவது மணப்பெண்ணின் சகோதரனாய் இருப்பான். காசி யாத்திரை பாதியில் முடிந்ததும் கண்ணூஞ்சலின் பொழுது மணமகனுக்கு மணப்பெண்ணின் தாயார் கால் அலம்புவார். தோளில் தூக்கி மாலை மாற்றும்பொழுது மாலை எடுத்துக் கொடுத்து ஆரம்பித்து வைப்பது மணமக்களின் மாமாக்களின் உரிமை.இந்த மாதிரி ஒன்று--

    புடவை ஓதிக் கொடுத்தம்,அதைக் கட்டிக் கொள்ள நாத்தனார் துணையுடன் மணப்பெண் செல்வாள்.

    இந்த இடம் தான் மணப்பெண்ணுக்கு நெருங்கி நாத்தனார் சபை அறிய முதல் அறிமுகம் ஆகும் இடம்.
    பொதுவாக நாத்தனார் vs மருமகள் என்பதை சிரித்துக்கொண்டே சமூகம் அங்கீகரித்திருப்பதால் நகைச்சுவையாக அதைச் சொன்னேன்.

    நீங்கள் என்னவென்றால் சுதந்திரம்,
    எதிர்பார்ப்பு என்று என்னன்னவோ சொல்லி... தீர்க்கக்கூடியதே என்று தீர்ப்பும் வழங்கி விட்டீர்கள்!

    ReplyDelete
  22. வாங்க மாதேவி, ரொம்ப லேட்!:)))))

    ReplyDelete
  23. மன்னிச்சுக்குங்க ஜீவி சார், ஒவ்வாமைனு சொன்னதும் நான் கண்டது, கேட்டது எல்லாம் நினைவில் வந்தது!:))) இப்போத்தான் எங்க ரெண்டு பேருக்கும் இப்படிச் சில விஷயங்கள் குறித்த வாக்குவாதம். யானை மாதிரி ஞாபகசக்தினு சொல்லிட்டு இருக்கார். ஹிஹிஹி! தப்பு என்னோடது தான். நீங்க சொல்லி இருக்கும் விஷயங்கள் எல்லாம் அந்த அந்தச் சமயத்துக்குக் கரெக்டா வரும். மறு வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  24. இந்த மூட்டை எனக்கும் வெச்சு கட்டியிருக்காங்க....:))இதோடயே ரொம்ப நேரம் இருந்தேன்...:)) மட்டை தேங்காய் தான்...குடும்ப பாரத்தை தாங்கவா? அப்போ மாட்டுக் கொம்பு வேறு வைப்பார்களே? அது எதற்கு?

    கோதுமை அல்வா....நாவில் நீர் சுரக்க வைத்து விட்டீர்கள் மாமி... காலை வரை தாங்குமா...:))

    ReplyDelete
  25. வாங்க கோவை2தில்லி, எங்க கல்யாணத்திலே எல்லாம் பெரிய மூட்டை தான்!:))))

    கோதுமை அல்வா கிளறிட்டு இருக்காங்க. காலம்பரத் தான் கிடைக்கும். :)))

    ReplyDelete
  26. ரொம்ப லேட்டா வந்திட்டேன்.

    டிபன் சூப்பர். கல்யாணத்துக்கு ரெடியாகி கரெக்டா வந்திடறேன்.

    ReplyDelete