எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 18, 2013

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??




ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும். ஆனால் சென்ற  வருடம் ஆவணி மாதம் இரண்டு அமாவாசை வருவதால் மல மாதம் என்றும், அப்போது சுப காரியங்களைச் செய்யக் கூடாது என்றும், புரட்டாசி மாதமும் ஸங்க்ரமண தோஷ மாசமாகி விட்டதால், இந்துக்களின் காலண்டர்படி(பஞ்சாங்கப்படி) இப்போது சிரவண மாதம் என்பதால் (தமிழ் ஆடியாக இருந்தாலும்)  நர்மதைக்குத் தெற்கே உள்ள சாம வேதிகளுக்கு இந்த மாதம் உபாகர்மா  ஆடி மாதம் அமாவாசை கழிந்த ஹஸ்த நக்ஷத்திரம், பஞ்சமி திதியில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  சென்ற வருடத்து ஆவணி அவிட்டம் செவ்வாய்க்கிழமையன்று ஜூலை 24-ஆம் தேதி  ஸாமவேதிகளின் உபாகர்மா வந்தது.  இந்த வருடம் செப்டம்பர் ஏழாம் தேதி சாமவேதிகளுக்கான உபாகர்மா!

தகவல்களுக்கு நன்றி:தெய்வத்தின் குரல்! 

டிஸ்கி: பலரின் வேண்டுகோளை அடுத்து  நான்காம்  முறையாக இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது பதிவின் ஆரம்பத்தில் சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன். ருக் மற்றும் யஜுர் வேதிகளுக்கு ஆகஸ்ட் இருபதாம் தேதியும், சாமவேதிகளுக்கு செப்டம்பர் ஏழாம் தேதியும் இந்த வருடம் ஆவணி அவிட்டம் வருகிறது.  பொதுவாக மீள் பதிவு போடுவதில்லை;  என்றாலும் இது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் கடந்த சில வருடங்களாகப் போட்டு வருகிறேன்.  ஏற்கெனவே படித்தவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.  நன்றி. பொறுத்தருள்க! :)))))


டிஸ்கிக்கு டிஸ்கி: வா.தி. வி.எ. ஊத்திக் கொண்டு கண்டு பிடிச்ச தப்பைச் சரி பண்ணிட்டேன். :)))))))

19 comments:

  1. // நாளை செவ்வாய்க்கிழமையன்று ஜூலை 24-ஆம் தேதி ஸாமவேதிகளின் உபாகர்மா.//
    இதை படிச்சு திகைச்சு போயிட்டேன். டிஸ்கியை முதல்ல போட்டு இருக்ககூடாதா? :-௦)))

    ReplyDelete
  2. //சாமவேதிகளுக்கு செப்டம்பர் ஏழாம் தேதியும் இந்த வருடம் ஆவணி அவிட்டம் வருகிறது.//

    ஆமாம், அப்போத்தான்.

    ReplyDelete
  3. மீள் பதிவு பகிர்விற்கு நன்றி...

    ReplyDelete
  4. ஹிஹிஹி, வா.தி. வி.எ. ரொம்பவே ஊத்திண்டு படிக்கிறீங்க. கொஞ்சம் கம்மியா ஊத்திக்குங்க! :)))) தப்பைச் சரி பண்ணிட்டேன். பாருங்க
    :))))

    ReplyDelete
  5. ஆமாம், ஜீவிசார், பதிவிலே போன வருடத்துத் தேதியைச் சரியாக் குறிப்பிடவில்லை. இப்போச் சரி பண்ணிட்டேன். :))))

    ReplyDelete
  6. வாங்க டிடி, ரொம்ப நாள் கழிச்சு வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி. :))))

    ReplyDelete

  7. மீள்பதிவுதானே என்று கேட்கத்தான் வந்தேன். டிஸ்கி பார்த்தது விட்டேன்! எனவே நான் இப்போ சொல்ல வேண்டியது : சிறந்த பதிவு'

    :)))

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  9. அப்போ நிறைய சாமவேதிகள் இங்கே இருக்கிறார்களோ:)
    தகவல்களுக்கு மிகவும் நன்றி கீதா.
    கோவில்கள் பதிவு இங்கே போடுவது பற்றி அறிவிக்கவும்.

    ReplyDelete
  10. வாங்க டிடி, மீண்டும் உங்களைச் சந்திப்பதில் நன்றி. :)

    ReplyDelete
  11. வாங்க ஶ்ரீராம், சிலர் திரும்பக் கேட்கிறாங்க. அதான் பகிர வேண்டியதாயிற்று. :)

    ReplyDelete
  12. வைகோ சார், நன்றி

    ReplyDelete
  13. வாங்க வல்லி, தெரியலை, நாங்க சாமவேதிகள். அதனால் நான் அதை முக்கியமாப் பார்த்துப்பேன். அம்புடுதேன் தெரியும். :)))) கோவில் பதிவுகள் இப்போத் தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன். கல்யாணத்தைத் தள்ளிப் போட வேண்டாம்னு பார்த்தா எல்லாரும் ஏக மனதா இங்கே தான் போடணும்னு சொல்லிட்டீங்க! :)))) கல்யாணம் பதிவும் அதுவும் மாறி மாறி வரும். :)))

    ReplyDelete
  14. ஒண்ணுமே புரியலே எண்ணங்களிலே..

    ReplyDelete
  15. ரெண்டு அமாவாசை ஒரு மாதத்தில் வந்தால் மல மாதமா? அமாவாசை நல்ல நாள்னு தானே சொல்வாங்க?

    ReplyDelete
  16. அப்பாதுரை! :)))))))

    ReplyDelete
  17. //ரெண்டு அமாவாசை ஒரு மாதத்தில் வந்தால் மல மாதமா? அமாவாசை நல்ல நாள்னு தானே சொல்வாங்க?//

    அப்பாதுரை, தேய்பிறை முழுவதுமாக ஆன அமாவாசையை நல்ல நாள் என தஞ்சை ஜில்லாப் பக்கம் மட்டுமே சொல்லிக் கேட்டிருக்கிறேன்; இப்போவும் அங்கே தான் சொல்றாங்க. அமாவாசைக்குப் பின்னர் வரும் மூன்றாம் நாள்(அமாவாசையையும் சேர்த்து) தான் பொதுவாக நல்ல நாளாக அமையும். யோகம், நக்ஷத்திரம் எல்லாமும் அமைய வேண்டும். :)))) அமாவாசைக்கு மறுநாள் கூட நல்ல நாள் இல்லை. அதே பெளர்ணமிக்குப் பின்னர் வரும் பிரதமை நல்ல நாளாக எடுத்துப்பாங்க. இது பொதுவானது. ஆனால் தஞ்சாவூர்ப் பக்கம் மட்டும் இப்போவும் அமாவாசையை நல்ல நாள் என்றே சொல்றாங்க. ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸும் தான்! :)))))

    ReplyDelete
  18. மீள் பதிவேனு நினைச்சா, ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு நேத்திக்கு! இத்தனைக்கும் ஞாயிற்றுக்கிழமை நேயர்கள் எல்லாம் தொலைக்காட்சியே கதினு இருக்கிற நாள்! :)))))))))

    ReplyDelete