எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 26, 2013

ஆசைக்கு அளவில்லை!

பொதுவா மொக்கைக்கே ஜாஸ்தி பின்னூட்டங்கள் வரும். அதிகப் பார்வையாளர்கள் இருப்பாங்க.  ஆனால் இன்னம்பூரார், சுபாஷிணி, நா. கண்ணன் குறித்த பதிவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக அதிகப் பார்வையாளர்கள் இருந்திருக்கின்றனர்.  எனக்கே  இது ஆச்சரியம் தான்.  ஆனால் நேற்றுப் போட்ட விவேகாநந்தரை யாரும் அதிகம் லக்ஷியம் செய்யவில்லை. :( போகட்டும்.  இன்னம்பூராருடன் ஆன சந்திப்புப் பதிவு தொடர்கிறது.  அது முடிஞ்சதும் தான் கோயில்கள் பத்தி எல்லாம் எழுதணும்.
*********************************************************************************

ஞாயிற்றுக் கிழமை அதிகாலையிலேயே கிளம்பும்படி வண்டியை வரச் சொல்லி இருந்தோம்.  ஆனால் கிளம்பும்முன்னர் திடீரென என் கணவருக்கு வயிற்றுக்கோளாறு வந்து பேதி ஆக ஆரம்பித்துவிட்டது.  அரை மணி நேரத்துக்குள்ளாக மூன்று முறை போயாச்சு.  என்ன செய்யறதுனு புரியலை.  பயணத்தை நிறுத்திடலாமானு எனக்குள் யோசனை.  ஆனால் அவரோ போயிடலாம், பார்த்துப்போம் என்கிறார்.  இதற்காகவென வாங்கி வைத்திருக்கும் மாத்திரையைத் தேடோ தேடுனு தேடினால் அவசரத்துக்கு அது கிடைக்கவில்லை.  மற்ற மாத்திரைகள் எல்லாம் ராத்திரியே எடுத்து வைச்சாச்சு. இது தேவைப்படும்னு யாருக்குத் தெரியும்! கையில் எடுத்துப் போக இட்லியும், தயிர்சாதமும் செய்ய நினைச்சிருந்தேன்.  இந்தக் களேபரத்தில் இட்லி மட்டும் ஒரு மாதிரியாகச் செய்து முடிச்சேன்.  சாதம் வைக்க நேரம் இருந்தாலும் புத்தி அதில் செல்லவில்லை. வண்டி கீழே வந்து காத்திருப்பதாக டிரைவர் தொலைபேசிச் சொல்லிவிட்டார்.

தைரியமாகப் போகலாம்னு கிளம்பிட்டார். சரினு அரை மனசாக நானும் கிளம்பினேன்.  இதுவே எனக்கு வந்திருந்தால் கிளம்பி இருக்க முடியுமா சந்தேகமே! வண்டியில் ஏறியும் உட்கார்ந்தாச்சு.  வயிற்றில் வலியும், கடபுடவென்ற களேபரமும் தவிர வேறெதுவும் இல்லைனு உறுதிமொழி கொடுத்தார். கொஞ்சம் மனம் சமாதானம் ஆனாலும் பூராவாக ஆகவில்லை.  கொண்டு போன இட்லியைச் சாப்பிடவும் மனம் இல்லை. ஒருவழியாகத் திருமயம் கோயிலுக்குப் போனோம்.  அங்கே அந்தக் கோயில் கோட்டைக்குக் கீழே மலை அடிவாரத்தில் இருக்கிறது. கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்து கொண்டு அருகில் உள்ள சிவன் கோயிலுக்கும் சென்றுவிட்டுத் திரும்ப வண்டிக்கு வந்தோம். கோயில் பற்றிய விபரங்கள் தனிப்பதிவாக வரும். வண்டியில் ஏறி உட்கார்ந்து அடுத்துத் திருக்கோஷ்டியூர் என டிரைவர் சொல்ல, நாங்களும் கிளம்பினோம்.  இதுவரை ஒன்றும் இல்லை;  பிழைத்தேன்.  ஆனால் சாப்பாடு சாப்பிட அவருக்கு பயம்.  ஆகவே இட்லி அப்படியே இருந்தது.

திருக்கோஷ்டியூரை முடித்துக் கொண்டு மேலே ராமாநுஜர் நாராயண நாமத்தை உலகுக்கு அறிவித்த இடம் செல்ல வேண்டுமென்றால் மேலே ஏறணும். அதுக்கு பயம்.  இன்னொரு சமயம் பார்த்துக்கலாம்னு வந்துட்டோம். ரங்க்ஸுக்குப் பசி ஜாஸ்தியாகவே அங்கே பிரசாதக் கடையில் லட்டு ஒன்று வாங்கிக் கொண்டோம்.  உடலில் சர்க்கரை குறைஞ்சிருக்கும்.  ஆகவே இது கொடுக்கலாம் என்று தைரியமாகவே வாங்கிக் கொண்டு அவருக்குப் பாதி கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டேன்.  அடுத்துத்  திருப்பத்தூர். அங்கே யோக பைரவர் தரிசனம் முடிச்சுத் திரும்புகையில் பசி வரதாகச் சொல்ல, இட்லிப் பொட்டலத்தை எடுத்துச் சென்று இருவரும் சாப்பிட்டோம்.  மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு சற்று நேரம் அங்கே உட்கார்ந்து பார்த்தோம். ஒண்ணும் பிரச்னை இல்லை.  மேலே தைரியமாகப் போகலாம்னு கிளம்பினோம். அடுத்து வைரவன் பட்டியும், பிள்ளையார்பட்டியும்.  அதன் பின்னர் காரைக்குடி தான்.  அங்கே பனிரண்டு மணிக்குள்ளாகப் போய்விடலாம்.  போய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டு இரண்டு கோயில்களையும் முடித்துக் கொண்டோம்.  வைரவன் பட்டியில் திருவிழாக் கூட்டம். ரேக்ளா பந்தயம் முடிஞ்சு மாடுகளும், சொந்தக்காரங்களும் பரிசுகள் வாங்கிக் கொண்டிருந்தாங்க.  மாடுகளைப் பார்க்கச் செல்க, பேசும் பொற்சித்தரமே பதிவுக்கு. :)

அப்புறமாப் பிள்ளையார் பட்டிக்குப் போய்ப் பிள்ளையாரைப் பார்த்து என்னனு கேட்டுட்டு அங்கிருந்து காரைக்குடி கிளம்பினோம்.  திரு காளை ராஜன் தெரிவித்த வழியில் சென்று பல்கலைக்கழக விருந்தினர் விடுதியை அடைந்தோம்.  அங்கே திரு காளை ராஜன் எங்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்று ஒரு அறையில் தங்க வைத்தார்.  சாப்பாடு சாப்பிடவும் அழைத்தார்.  நாங்கள் உள்ள நிலைமையைச் சொல்லி தயிர் சாதம் போதும்னு சொல்லிட்டோம்.  அதன்படி அவரும் மேலே நல்லவேளையாக வற்புறுத்தவில்லை.  தயிர்சாதம் சாப்பிட்டுவிட்டுப் படுத்திருந்தோம்.  திரு இன்னம்புரார் ஒன்றரை மணிக்கெல்லாம் வந்துவிட்டார்.  அவருடன் அவர் மகன், பேத்தி, மகள், மாப்பிள்ளை ஆகியோர் வந்திருந்தனர்.  அனைவரும் உணவு அருந்தச் சென்றனர்.  திரும்பி வந்ததும் இன்னம்பூராரைச் சந்தித்து ஆசிகள் வாங்கிக் கொண்டு, (அவருக்குச் சதாபிஷேஹம் என்பதால்) சற்று நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் பின்னர் நாங்கள் கிளம்பி வந்துவிட்டோம். வரும் வழியில் வயிறு தொந்திரவு இல்லை என்பதாலோ என்னமோ ரங்க்ஸுக்குக் கோகர்ணம் போகணும்னு ஆசை வர, டிரைவரும் வழி விசாரித்துக் கொண்டு கோகர்ணம் கோயிலுக்குக் கொண்டு விட்டார். அங்கேயும் போய்ப் பார்த்துவிட்டு மேலே எல்லாம் ஏறவே முடியலை.  ரொம்பக் களைச்சிருந்தோம். ஒருபக்க மாடி பார்த்துட்டு மறுபக்க மாடியின் பைரவர், துர்கை ஆகியோருக்கு இங்கிருந்தே ஹெலோ சொல்லிட்டுக் கீழே இறங்கினோம்.  இத்தனைக்கும் பெரிய மலையெல்லாம் ஒண்ணும் இல்லை. மலையைக் குடைந்து கட்டிய கோயில். அதிலேயே பாறையின் மேலே ஏற வேண்டி இருக்கு. :) காலை திருமயத்திலும் இப்படித் தான் கோட்டைக்கு மேலே போக நினைச்சால் நல்ல வெயில் வந்துவிட்டதோடு இப்போ இங்கே ஏறினால் பின்னர் மற்றக் கோயில்கள் பார்க்கையில் சரியாப் பார்க்க முடியாது  களைப்பாக இருக்கும் என்று தோன்றியது.  மேலும் ரங்க்ஸின் உடல்நிலையையும், உ.பி.கோயில் மலை ஏற்றம்  அனுபவத்தையும் யோசித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் மலை ஏறுவதைத் தவிர்த்தோம்.

விருந்தினர் யாரானும் வரச்சே கட்டாயமாய் இந்தக் கோயிலுக்கு மட்டும் ஒருநாள்  ஒதுக்கிப்போய்ப் பார்க்கணும்.  இப்படி எத்தனையோ ஆசைகள்!  நிறைவேறுதா, தெரியலை! :)))

23 comments:

  1. ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  2. இன்னொருதடவை உங்களை வரவழைக்கவே இந்த முறை இப்படி ஆகியிருக்கிறது. கூடிய விரைவில் எந்தத் தடங்கலும் இல்லாமல் சென்று வர வாழ்த்துக்கள்.
    (எங்களுக்கு நிறைய பதிவு கிடைக்கணுமே - அதற்குத்தான் இந்த வாழ்த்துகள்!)

    ReplyDelete
  3. //இப்படி எத்தனையோ ஆசைகள்! நிறைவேறுதா, தெரியலை! :)))//

    அது நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் அது சம்பந்தகமாக, அல்லது வேறு எது சம்பந்தமாவது ப்திவுகள் வரப்போவது நிச்சயம். ;)))))

    வாழ்க!

    ReplyDelete
  4. எண்ணங்கள் சீக்கிரம் நிறைவேறட்டும். அதற்கு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் துணை புரியட்டும்.

    இப்படி ஒரு உபாதையுடன் சென்று வந்தது ஒரு சாதனை.

    ReplyDelete

  5. உங்கள் பதிவில் வரும் சில கோயில்களின் பெயர்கள் நாங்கள் நகரத்தார் கோயில்கள் என்று அழைக்கப் படும் ஒன்பது கோயில்களுக்குச் சென்று வந்ததை நினைவூட்டுகிறது. இளையாத்தன்குடி,மாத்தூர், வைரவன்,இரண்ணியூர், பிள்ளையார்பட்டி, நெஹமம், இலுப்புக்குடி, சூரக்குடி, மற்றும் வேளாங்குடி ஆகியவை ஆகும் கோகர்ணம் எனும் இடம் மங்களூரில் இருந்து புனே செல்லும் பாதையில் முர்டேஷ்வருக்கு அடுத்து வரும் ஒரு ஊர், போயிருக்கிறோம். இந்த கோகர்ணம் தெரியாது. இன்னும் எப்போதாவது அம்மாதிரி பயணங்களில் ஈடுபட முடியுமா தெரியவில்லை.

    ReplyDelete
  6. 'IBS'- ஆக இருந்திருக்கலாம். இதற்கு சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உண்டு. மருத்துவ ஆலோசனை பெறுதல் நலம்.

    ReplyDelete
  7. பயத்துடன் ஒரு பயணம்..!

    ReplyDelete
  8. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் அம்மா. மாத்திரையைக் கண்டுபிடிக்காமலேயே இறையருளால்தான் போய் வந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
    நாங்களும் நீங்கள் சொன்ன கோவில்கள் எல்லாம் உறவினர்களுடன் சேர்ந்து சென்று வந்தோம்.

    ReplyDelete
  10. இதற்காக்வே ''இமோடியம் 15 ஆவது வைத்திருப்பேன். அதுவும் வெளியூர் பயணம் என்றால் படு ஜாக்கிரதை வேணும்.
    எமர்ஜென்சி மெடிசின் கிட்:)
    உடல் உபாதையைத் தீர்த்துக் கோவிலுக்கு அழைத்த இறைவனுக்கு நன்றி. பார்த்துக் கொள்ளுங்கள் கீதா.

    ReplyDelete
  11. வாங்க டிடி, நன்றி.

    ReplyDelete
  12. வாங்க ரஞ்சனி, நீங்க சொன்னது தான் சரி. வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  13. வாங்க வைகோ சார், பதிவுகளுக்கு என்ன குறைச்சல்? நிறையப் போடலாம். அவ்வளவு விஷயம் இருக்கு! :)

    ReplyDelete
  14. வாங்க ஶ்ரீராம், இதுவே எனக்கு வந்திருந்தால் நகர்ந்திருக்கக் கூட முடியாது! :)))

    ReplyDelete
  15. வாங்க ஜிஎம்பி சார், நெகமம் கோவை பக்கத்திலே இருக்குனு நினைக்கிறேன். நெகமம் புடைவை கட்டிக் கொண்டிருக்கேன். :))) இப்போல்லாம் அந்த மாதிரிக் கைத்தறி நெசவில் கிடைக்கிறதில்லை. :)))

    இது புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம்--சிலர் கோவர்ணம் என்கிறார்கள்.

    ReplyDelete
  16. வாங்க ஜீவி சார், irritable bowels எனக்குத் தான்! :))))) எல்லா மருத்துவமும் பார்த்துக் கொண்டிருக்கேன். ஹிஹிஹி சரியாகலை. :))))

    அவரை மருத்துவரிடம் காட்டி மருந்து வாங்கிச் சாப்பிட்டதில் சரியாகிவிட்டது. :))))முந்தைய நாள் சாப்பாட்டில் ஏதோ அலர்ஜியாகி இருக்கு. :))

    ReplyDelete
  17. வாங்க ராஜராஜேஸ்வரி, பயம் எனக்குத் தான். :))) அவர் சாதாரணமாகத் தான் இருந்தார். :))))

    ReplyDelete
  18. வாங்க கவிநயா, ஆதரவான வார்த்தைகளுக்கும், ஆலோசனைக்கும் நன்றிம்மா. நிச்சயமா இது இறையருள் தான்! (எங்கே அப்பாதுரை) இப்போத்தான் அவரைப் பத்திப் பேசிட்டிருந்தோம். கடவுளை நம்பச் சொல்லு அவரைனு நம்ம ரங்க்ஸ் என் கிட்டே சொல்லிட்டிருந்தார்! :))))))

    ReplyDelete
  19. வாங்க கோமதி அரசு, மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வாங்க வல்லி, சாதாரணமா முதல் இரண்டு நாட்களில் இருந்தே கவனமாக இருப்போம். இம்முறை ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை. நாளைக்கு வெளியூர் போறதானால் முந்தாநாளிலிருந்தே சாப்பாடில் கவனம் செலுத்துவோம். :))))

    ReplyDelete

  21. அது நேமம் ( ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் கோயில்) என்றிருக்கவேண்டும் தவறுதலாக நெகமம் என்று எழுதிவிட்டேன். நான் சொல்ல வந்தது GOKARNAM கடற்கரையோரம் இருக்கிறது.

    ReplyDelete
  22. பல தலங்கள் தொடர்சியாக சென்றுவந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. ஆசைகள் விரைவில் நிறைவேறட்டும்...

    எங்களுக்கு சுவையான பதிவுகள் கிடைக்குமே...

    ReplyDelete