எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 21, 2013

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்!

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்


இந்தக் காசியாத்திரை என்னும் பரதேசிக் கோலம் பெரும்பாலான சமூகங்களிலும் பின்பற்றப் படுகிறது. ஆனால் சில சமூகங்களில் பெண்ணின் தந்தைக்குப் பதிலாக சகோதரர் சென்று மாப்பிள்ளையை அழைத்து வருகிறார்.  ஆயிற்று.  இப்போ நாம் நடத்தும் கல்யாணத்திலே காசியாத்திரை முடிஞ்சு மாப்பிள்ளைக்குப் பெண்ணைத் தரேன்னு பெண்ணின் அப்பா உறுதி மொழி கொடுத்துட்டார்.  அடுத்தது இப்போப் பெண் வரணும். அடுத்து மாலை மாற்றல் நடக்கும்.  தாய்மாமன்கள் மாலை எடுத்துக் கொடுக்கப் பிள்ளையும், பெண்ணும் மாலை மாற்றிக் கொள்வார்கள். அதன் பின்னர் பெண்ணின் கையைப் பிள்ளையின் கையில் கொடுத்துப் பிடிக்கச் சொல்வார்கள்.  இதிலே சிலருக்கு அபிப்பிராய பேதங்கள் இருக்கின்றன.  இப்போத் தான் பெண்ணும், மாப்பிள்ளையும் முதல் முதல் ஒருவர் கையை  ஒருத்தர் பிடிக்கணும். 


 ஆனால் மிகவும் சாஸ்திரங்களை ஆராய்ந்து பார்க்கும் சிலர் விவாஹங்களில் காசி யாத்திரை எனப்படும் பரதேசிக் கோலமும், மாலை மாற்றுதலும், பெண்ணும், பிள்ளையும் பாணிக்ரஹணத்துக்கு முன்னர் ஒருவர் கையை மற்றவர் பிடிப்பதும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர். அவர்கள் கருத்து முதன் முதல் பெண்ணும், பிள்ளையும் கையைப் பிடிக்கையில் லக்னம் நன்றாக இருக்க வேண்டும் என்றும், பாணிக்ரஹணம் நடைபெறும் சுப முஹூர்த்த லக்னத்திலேயே கையைப் பிடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர்.  மேலும் மாலை  மாற்றுதலும், ஊஞ்சலும்  கூடத் திருமணம் முடிந்த பின்னரே நடக்க வேண்டும் என்பதும் அவர்கள் கருத்து.  ஏனெனில் இதற்குப் பின்னரும் திருமாங்கல்ய தாரணம் ஆனாலும் திருமணங்கள் நின்றிருக்கின்றன என்பதால் முதலிலேயே இதை எல்லாம் செய்யக் கூடாது. பின்னர் பெண்ணின் வாழ்வும், பிள்ளையின் வாழ்வும் பாதிப்புக்கு ஆளாகலாம் என்பது அவர்கள் கூற்று.


ஏனெனில் திருமாங்கல்யதாரணம் என்பது ஒரு சடங்கே தவிர அதற்கு வேத பூர்வமான மந்திரங்கள் கிடையாது.  வெறும் ஸ்லோகம் தான் என்கின்றனர்.  வேத பூர்வமான மந்திரங்களைச் சொல்லி நடக்கும் சப்தபதி ஆனாலே திருமணம் ஆனதாக அர்த்தம்.  அதற்கு முன்னர் திருமணம் நடந்துவிட்டதாகச் சட்டத்திலேயே இல்லை. மேலும் திருமாங்கல்ய தாரணம் ஆனதும் மொத்த விருந்தினரும் கலைந்தும் சென்றுவிடுகின்றனர்.  உண்மையான விவாகச் சடங்குகள் பின்னரே நடப்பதால் அவற்றுக்கு சாட்சிகள் இல்லை.  நல்ல வைதீகமான பெரியோர்கள் இந்தச் சடங்குகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  ஆகவே முஹூர்த்த காலம் கழியும் முன்னரே சப்தபதி உட்பட எல்லா முக்கியச் சடங்குகளையும் செய்வதே உண்மையில் விவாஹம்.


  நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கத் தான் போகிறோம்.  அப்போது அவற்றின் முக்கியத்துவம் நமக்கும் புரியும். மேலும் முன்னெல்லாம் மாயவரத்துக்கு அருகிலுள்ள கொறநாடு என்னும் கூறைநாட்டில் சிவப்பில் கட்டம் போட்ட நூல் புடைவைகளையே திருமணத்திற்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கைத்தறி நெசவில் நெய்யப்பட்ட அந்தப் புடைவை தான் திருமணத்தின் போது பெண்ணுக்குக் கட்டிக் கொள்ளப் பிள்ளை வீட்டாரால் கொடுக்கப்படும்.  இப்போது போல் பட்டெல்லாம் இல்லை.  கூறை நாட்டுப் புடைவை என்பதால் கூறைப்புடைவை என்று சொல்ல ஆரம்பித்தது இன்று அதன் பெயரே கூறைப்புடைவை என்றே ஆகிவிட்டது.  கொற நாட்டுக் கூறைப்புடைவை என்பதை அனைவருமே மறந்தாச்சு. 

சரி, இப்போ மேலே உள்ளவை எல்லாம் நமக்கு  அறியாத விஷயங்கள் என்பதால் அறியத் தந்தாச்சு.  ஆனால் நாம் எடுத்துச் செய்யும் கல்யாணத்தில் பெண் வீட்டுக்காரங்களும், பிள்ளை வீட்டுக்காரங்களும், முதலில் பெண்ணும், பிள்ளையும் கையைப் பிடிக்கும் முன்னர் மாலை மாற்றிக் கொள்ள அழைத்துச் சென்றுவிட்டனர்.  அதோ, பெண்ணின் தாய் மாமனும், பிள்ளையுடைய தாய் மாமாவும் தயாராக வந்து விட்டனர்.  முன்னெல்லாம் சின்னக் குழந்தைகளாக இருந்ததாலும், மாலைகள் சில சமயங்களில், பல சமயங்களிலும் குழந்தைகளை விடப் பெரியதாக இருந்ததாலும் தாய் மாமாக்கள் குழந்தைகளைத் தோளில் சுமந்து கொண்டு மாலை மாற்ற வைப்பார்கள்.. ஆனால் சில வீடுகளில் இன்றும் அதை ஒரு கட்டாயமாகக் கடைப்பிடிப்பது பார்க்கவே சரியாய் இல்லை. 


 நாம்  நடத்தற கல்யாணத்திலே மாமாக்கள் மாலையை எடுத்துக் கொடுக்கிறாங்க.  அவங்க மாலை மாத்தறாங்க.  ஆஹா, இது என்ன, பெண் மாலை போடப் போடுகையில் மாப்பிள்ளையின் தோழர்கள் பிள்ளையை இழுத்துக் கொண்டு பின்னே, பின்னே, செல்கின்றனரே!  ஆம், இது ஒரு விளையாட்டு.  கல்யாணத்தின் நாணம், சங்கோஜம் ஆகியவை இருவருக்கும் இல்லாமல் சகஜ பாவம் வரவழைக்க வேண்டி நடத்தப்படும் சடங்கு எனலாம்.  பெண்ணின் தோழிகள் பெண்ணை முன்னே அழைத்துச் சென்று வம்படியாக மாப்பிள்ளையைக் குனிய வைத்துப் பெண்ணை மாலையைப் போட வைப்பார்கள். அடுத்துப் பெண்ணின் முறை.  பெண் இப்போது பின்னே செல்ல, மாப்பிள்ளை மாலையைப் பெண்ணின் கழுத்தில் தூக்கி எறிய, பெண்ணின் தோழிகள் ஒத்துக்கொள்ளாமல் வாதம் செய்யப் பின்னர் பிள்ளை மீண்டும் பெண்ணை அருகே வரச் சொல்லி மாலையைப் போடுகிறார்.  கூப்பிட்டதும் போகிறாயானு தோழிகள் கத்தப் பெண்ணோ சிரிக்கிறாள்.



மாலை மாற்றி ஆச்சு;  நாதஸ்வரத்தில் நையாண்டிப் பாடல்! மாலை மாற்றினாள், கோதை மாலை மாற்றினாள்.  என்று பாடுகிறார்கள் நாதஸ்வரக் காரர்கள். இங்கே ஒருத்தர் அதைப் பாட அதை நையாண்டி செய்கிறார் மேளக்காரர். அதற்குள்ளாகப் புரோகிதர்கள் முஹூர்த்த நேரம் நெருங்குவதாக எச்சரிக்கை கொடுக்கப் பிள்ளையின் கையில் பெண்ணின் கையை ஒப்படைத்து ஊஞ்சலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.  வலக்கால் முன்னே வைத்துப் பெண்ணும், பிள்ளையும் ஊஞ்சலுக்குச் செல்கின்றனர்.  மாலை மாற்றுதல் என்பது சாஸ்திரம் அல்ல என்றாலும் சாஸ்திரத்தைச் சேர்ந்ததொரு சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. 


 மேலும் ஆண்டாள் தினம் ஒரு மாலை கட்டி அரங்கனுக்குச் சாற்றியதையும், பார்வதி மாலை கட்டி பரமேஸ்வரனுக்குக் காத்திருந்ததையும் அறிந்திருக்கிறோம்.  ஆகவே மாலை மாற்றுதல் முக்கியத்துவம் பெறுகிறது.  பெரும்பாலான தஞ்சை ஜில்லாக் கல்யாணங்களில் இந்த மாற்று மாலை என்பது பச்சையும், வெள்ளை நிறப் பூக்களையும் வைத்துக் கட்டப்பட்டதாக இருக்கும். பொதுவாக முல்லை, மல்லிகை போன்ற பூக்களால் ஆன மாலையையும் மாற்று மாலைகளாகப் பயன்படுத்துவார்கள்.  அடுத்து ஊஞ்சல்.



12 comments:

  1. எவ்வளவு தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  2. //அடுத்தது இப்போப் பெண் வரணும். அடுத்து மாலை மாற்றல் நடக்கும். தாய்மாமன்கள் மாலை எடுத்துக் கொடுக்கப் பிள்ளையும், பெண்ணும் மாலை மாற்றிக் கொள்வார்கள். அதன் பின்னர் பெண்ணின் கையைப் பிள்ளையின் கையில் கொடுத்துப் பிடிக்கச் சொல்வார்கள். //

    நினைத்துப்பார்த்தாலே மனதுக்கு மிகவும் ஜில்லாகும் கட்டம் இதுதான்.

    முதன்முதலாக ஒருவரை ஒருவர் தொடக்கூடிய நேரம் ... ஆஹா நினைத்தாலே இனிக்குதே ! ;)))))

    [முதன் முதலாக என்ற வார்த்தைதான் இதில் மிகவும் முக்கியமானது]

    ReplyDelete
  3. படிப்படியாகச் சொல்லி வருகிறீர்கள்.

    எழுத்துகளுக்கு நிறம்....அட்டகாசம்!

    கொஞ்சம் பத்தி பிரித்து கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். (மன்னிக்கவும்)

    ReplyDelete
  4. மாயவரத்துக்கு அருகிலுள்ள கொறநாடு என்னும் கூறைநாட்டில் சிவப்பில் கட்டம் போட்ட நூல் புடைவைகளையே திருமணத்திற்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். //

    இன்னும் சில குடும்பங்கள் இதை கடைபிடிக்கிறார்கள்.
    சில குடும்பங்களில், தாலி கட்டும் போது மணமகனும், மணமகளும் மஞ்சள் நனைத்த கைத்தறி ஆடைகளை அணிந்து வருகிறார்கள்.

    எங்கள் குடுமபத்தில் மண மேடையில் எதிர் எதிர் அமரவைத்து அப்போது தான் பார்த்துக் கொள்வார்கள், பின் மாலை மாற்றி ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிய் பின் தான் திருமணம். மோதிரம் போட கையை பிடிப்பது தான் முதன் முதல்.

    மாலை சாற்றினாள் கோதை மாலை சாற்றினாள் பாட்டு போட்டு இருக்கலாம்.

    விரிவான, அழகான கல்யாண வைபவம் அருமை.

    ReplyDelete
  5. @ஸ்ரீராம், எனக்குப் பத்தி, பத்தியாகத் தானே தெரியுது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! கண்ணாடி போட்டுக்க்கலையா? :)))) ம்ம்ம்ம்ம்ம்???? ஏதோ பிரச்னைனு நினைக்கிறேன். என்னனு பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. சின்னச் சின்னப் பத்திகளாகப் பிரிச்சிருக்கேன். சரியா இருக்கானு பார்த்துச் சொல்லுங்க. :)))) லிங்க் வேறே போகிறதே இல்லை. :))))

    ReplyDelete
  7. மத்த பதில் அப்புறமா.

    ReplyDelete
  8. நன்றாக இருக்கிறது. பிரச்னை ஏதும் இல்லை. ஆனால் க்ரோம் எனக்கு திடீர் என்று சண்டி செய்தது!

    ReplyDelete
  9. முறைகள் நன்றாக இருக்கின்றது.

    "மாலைமாற்றினால்......." இந்தப் பாடல்கள் பாடுவது நமதுவழக்கில் இல்லை.
    பாடுவது நன்றாக இருக்கும்.:)

    ReplyDelete
  10. ஶ்ரீராம், பலருக்கும் க்ரோம் செட் ஆகலை. ஆனால் எனக்கு க்ரோம் தான் சரியா இருக்கு. கணினியில் என்றால் நெருப்பு நரி, மடிக்கணினியில் க்ரோம். :))))) எக்ஸ்ப்ளோரர் பக்கமே தலை வைச்சுப் படுக்கிறதில்லை. :)))

    ReplyDelete
  11. மாதேவி, நன்றிங்க.

    ReplyDelete
  12. கூறைப்புடவையின் பெயர் விளக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி மாமி.

    மாலை மாற்றல் ஆச்சு. மாமாக்கள் தூக்கிக் கொண்டு மாலை மாற்றல் ஜோர் தான். அடுத்து ஊஞ்சலுக்கு வந்து விடுகிறேன்.

    ReplyDelete