எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 02, 2014

பதிவுலகில் ஒரு பிரம்மோற்சவம்!

கோயில்களில் தான் பிரம்மோற்சவம் நடக்கணுமா என்ன?  இணையக் கோயிலிலும், அதுவும் தமிழறிந்த எண்ணற்ற இணையப் பதிவர்களின் ஆக்கபூர்வமான எழுத்துகளை ஊக்குவிப்பதன் மூலம் மிகப் பெரியதொரு பிரம்மோற்சவத்தையே நடத்தி வருகிறார் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்

ஜனவரி 2014 துவங்கி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று அவரே எழுதிய அவருடைய சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதுவதன் மூலம் போட்டியில் கலந்து கொள்ளலாம்.  இது வரை  33 சிறுகதைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன.  போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளும் பெற்றிருக்கின்றனர்.  இதிலே போனஸ் தொகையும் உண்டு.  ஒரு சில குறிப்பிட்ட கதைகளுக்கு விமரிசனம் எழுதிப் பரிசு பெற்றவர்களுக்கும், விமரிசனம் எழுதியும் பரிசு பெறாதவர்களுக்கும் போனஸ் பரிசு கட்டாயம் உண்டு.

மேலும் இந்தப் போட்டியின் நடுவர் பெயரை இன்று வரை ரகசியமாக வைத்திருக்கிறார் வைகோ அவர்கள்.  நடுவர் அவர்கள் தன் கருத்துகளை அவ்வப்போது வைகோ அவர்களின் பதிவுகள் மூலம் கலந்து உரையாடி வருகிறார்.  இந்த நடுவரைக் கண்டுபிடிக்கவும் ஒரு போட்டி வைக்கப்பட்டுள்ளது.  வைகோ அவர்கள் வெளியிடும் சிறுகதைகளில் 31, 32, 33, 34 ஏதேனும் ஒன்றுக்கு எழுதும் விமரிசனத்தின் கடைசியில் நடுவர் யார் என்னும் யூகத்தைக் குறிப்பிட வேண்டும்.

நடுவர் யார்

இது தான் இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், தெப்பம் எல்லாமும்  இது தான்.  இதற்கான விடையை வைகோ அவர்கள் பகிரப் போகும்  36 ஆவது சிறுகதைப் போட்டியின் முடிவுகளின் போது அல்லது செப்டெம்பர் 11 இல் இருந்து 13 தேதிக்குள் வெளியிடப் படும்.  அதன் பின்னரும் நடுவர் நம்முடன் கலந்து உரையாடுவார். இந்த நடுவர் யார் என்னும் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு விஜிகே 33 ஆம் எண் கதையும் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப் படும் விஜிகே 34 ஆம் எண் கதையும் மிச்சம் இருக்கிறது.  ஆகவே  இதுவரை இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ளாதவர்கள் இப்போது கலந்து கொண்டு நடுவர் யார் என்னும் உங்கள் ஊகத்தையும் விமரிசனத்தின் கடைசியில் எழுதி திரு வைகோ கொடுத்திருக்கும் மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கவும்.

இத்தனை நாட்களாகப் போட்டியில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் இது பற்றி எதுவும் தெரியாதவர்கள் இனிமேல் கலந்து கொள்ளவும், இது ஒரு அரிய வாய்ப்பு.  மேலும் 33 ஆம் கதையிலிருந்து இன்னும் ஏழு கதைகள் வெளியிடுகையில் அவற்றிலாவது கலந்து கொண்டு பரிசுகளைப் பெறவும் ஒரு வாய்ப்பு.   போட்டியின் கடைசிநாள் தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். :)

முந்துங்கள்!  முந்துங்கள்!  முந்துங்கள்! வெற்றி உங்கள் கைகளில்! :)

36 comments:

  1. //கடைசிநாள் தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும் //

    அது வேற உண்டா என்ன? :))))

    ReplyDelete
  2. வைகோ ஸார் இதுவரை யாரும் செய்யாத ஒரு முயற்சியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு எங்கள் பாராட்டுகளும். பொருத்தமான நடுவர் அமைந்திருப்பதும் இதில் சிறப்பு என்று தெரிகிறது, அவ்வபோது அவருடைய டிப்ஸ் மற்றும் ஆ'தங்கங்களை'யும் ப் படிக்கும்போது.

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், கடைசிநாள் எப்போவும் தீர்த்தவாரி தானே!:))))

    ReplyDelete
  4. ம்ம்ம்ம் நடுவர் யார்னு நீங்க ஊகிச்சுட்டீங்களா ஶ்ரீராம்? ஊகிச்சிருந்தால் தனிமடலில் சொல்லுங்க. :))))

    ReplyDelete
  5. தெரிஞ்சு போச்... எனக்குத் தெரிஞ்சு போச்...! அந்த நடுவர் நீங்கதானே,,,? (வம்புக்கிழுப்பதைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே - நாங்களும்தேங். ஹி... ஹி... ஹி...)

    போட்டியில கலந்துக்கிட்டு பரிசு பெறாதவங்களுக்கு தனியாப் பரிசு உண்டுன்னு சொல்லிருக்கீங்கோ... போட்டில எதுலயும் கலந்துக்காததுக்கு எனக்கு தனியாப் பரிசு எதுவும் இருக்குமோன்னு மைலடா ஒரு டவுட்டு... சொல்லுங்க யுவர் ஆனர்...!!!

    ReplyDelete
  6. வாங்க பாலகணேஷ், நீங்கல்லாம் போட்டியிலே கலந்து கொண்டால் அப்புறம் எங்களுக்கெல்லாம் எப்படிப் பரிசு கிடைக்கும்?

    நீங்க பார்க்கலையா? நானும் அப்படி இப்படி ஏதோ சில பரிசுகளைத் தேத்தி இருக்கேன். :)))

    ReplyDelete
  7. ஆகவே நான் நடுவர் அல்ல, அல்லவே அல்ல. :))

    ReplyDelete
  8. திரு கோபு சாரின் இந்த பணி மகத்தானது.இதுவரை விமர்சனத்தில் கலந்து கொள்ளவில்லை! விமர்சனங்களையும் கதைகளையும் படித்து வருகிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. வாங்க சுரேஷ், நீங்களும் போடியில் கலந்துக்குங்க! :)

    ReplyDelete
  10. //ஸ்ரீராம். said...

    //கடைசிநாள் தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும் //

    அது வேற உண்டா என்ன? :))))//

    அன்புள்ள

    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் !

    வணக்கம்.

    பரிசினை வென்றவர்கள் பார்த்து தீர்த்தவாரி ஏதேனும் ஏற்பாடு செய்தால் நானும் நீங்களும் அவசியம் போய் ஒரு ஸ்பூனாவது பிரசாதமாக வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்து விட்டு வருவோம்.

    களவும் கற்று மற ! என்றல்லவா சொல்லப்பட்டுள்ளது.:)))))

    அன்புடன் கோபு

    ReplyDelete
  11. இதுபோல தாங்கள் ஒரு பதிவு வெளியிட்டுள்ளதே என் கவனத்திற்கு வரவில்லை.

    தாங்களும் எனக்குச் சொல்லவில்லை.

    மெயில் மூலம் ஒரு லிங்க் ஆவது அனுப்பியிருக்கலாம்.

    என் டேஷ் போர்டில் எதுவுமே தெரிவதும் இல்லை. என் பதிவுகள் வெளியீடுகள் உள்பட என் டேஷ் போர்டில் தெரிவது இல்லை.

    நல்லவேளையாக அகஸ்மாத்தாக இதை என்னால் கவனிக்க முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  12. சுவாமி விக்ரஹத்தைத் தானே தீர்த்தவாரியில் முழுக்காட்டுவாங்க! அது போலப் பரிசு மழையில் ஹாட் ட்ரிக் அடிச்சவங்களை நனைப்பதைத் தான் தீர்த்தவாரினு குறிப்பிட்டேன். கீத மஞ்சரி தான் இதிலே முதலிடம்னு நினைக்கிறேன். :))))

    ReplyDelete
  13. பரவாயில்லை சார், நீங்க எப்படியோ வந்ததே எனக்கு மகிழ்ச்சி. :))))

    ReplyDelete
  14. //இது தான் இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், தெப்பம் எல்லாமும் இது தான். இதற்கான விடையை வைகோ அவர்கள் பகிரப் போகும் 36 ஆவது சிறுகதைப் போட்டியின் முடிவுகளின் போது அல்லது செப்டெம்பர் 11 இல் இருந்து 13 தேதிக்குள் வெளியிடப் படும்.//

    இதில் ஒரு சில அட்வான்ஸ்மெண்ட்கள் செய்துள்ளேன். அவை
    http://gopu1949.blogspot.in/2014/09/blog-post.html
    இந்தப்பதிவின் பின்னூட்டங்களுக்கான என் பதில்களில் உள்ளன

    அதன்படி நடுவர் பற்றிய பல செய்திகள் அவரின் புகைப்படத்துடன் 11.09.2014 இரவு 8.15 மணி சுமாருக்கு வெளியிடப்பட உள்ளது.

    12.09.2014 க்கும் 13.09.2014 க்கும் இடைப்பட்ட நள்ளிரவு அவரின் பெயரும் அவரின் வலைத்தள முகவரியும் அறிவிக்கப்பட உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  15. அதாவது VGK-35 கதை வெளியீட்டுக்கு முன்பு முதல் நாள் இரவே நடுவர் அவர்களைப்பற்றிய 99% தகவல்கள் வெளியாக உள்ளன.

    அதாவது நடுவர் யார் யூகியுங்கள் போட்டிக்கான காலக்கெடுவான வியாழன் இரவு 8 மணிக்குப்பிறகு இது உடனடியாக வெளியிடப்பட உள்ளது.

    13.09.2014 சனிக்கிழமை விடியற்காலம் VGK-33 கதைக்கு பரிசுக்குத்தேர்வானவர்கள் பற்றிய அறிவிப்பினில் ஜட்ஜ் ஆண்/பெண் கார்டூன் படங்களுக்கு பதிலாக நடுவர் படமே காட்சியளிக்கும்.

    அவர் பெயரும் வலைத்தள முகவரியும் அதில் இருக்கும்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  16. "பதிவுலகில் ஒரு பிரம்மோற்சவம்” என்ற தலைப்பில் தாங்கள் இதுபோல ஓர் பதிவு எழுதி என்னை கெளரவப்படுத்தி பாராட்டி எழுதியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    அடியேன் நடத்திடும் போட்டிகளுக்கு ஓர் விளம்பரம் போலவும் இது அமைந்துள்ளது.

    வேறு யாருக்குமே தோன்றாத இதுபோன்ற தங்களின் ஆத்மார்த்தமான நல்ல அபூர்வ குணத்திற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் கோபு

    ReplyDelete
  17. பிரம்மோற்சவத்தை அற்புதமாக பகிர்ந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. //வாங்க சுரேஷ், நீங்களும் போடியில் கலந்துக்குங்க! :)//

    ஹப்.......பாடி.... காத்திருந்தது வீண் போகவில்லை! இம்போசிஷன்....இம்போசிஷன்....


    :)))))))))))))))))

    ReplyDelete
  19. யார் நடுவர் என்கிற சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை.....

    ReplyDelete
  20. நடுவர் யாருனு நினைக்கறீங்க?
    உயிருள்ளவர் தான்னு சொல்றேன்.

    ReplyDelete
  21. தீர்த்தவாரினா என்னானு யாருனா சொல்லுங்கப்பா முதல்ல..

    ReplyDelete
  22. "சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதுவதன் மூலம் போட்டியில் கலந்து கொள்ளலாம்." என்ற பகிர்வுக்கு நன்றி.
    பங்கெடுக்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  23. நிச்சயம் இது பிரம்மோத்ஸவம் தான்.

    வை.கோ. அவர்களின் அயராத உழைப்பு பிரமிக்க வைகிறது.

    கலந்து கொள்ளூம் அனைவருக்கும் வாழ்த்துகள்......

    ReplyDelete
  24. பொருத்தமான தலைப்பு, பதிவு.

    ReplyDelete
  25. /வாங்க சுரேஷ், நீங்களும் போடியில் கலந்துக்குங்க! :)//

    ஹெஹெஹெ ஶ்ரீராம், அவசரம்! :)))))

    ReplyDelete
  26. ஆனைக்கும் அடி சறுக்கும்! :))))))

    ReplyDelete
  27. //அடியேன் நடத்திடும் போட்டிகளுக்கு ஓர் விளம்பரம் போலவும் இது அமைந்துள்ளது.

    வேறு யாருக்குமே தோன்றாத இதுபோன்ற தங்களின் ஆத்மார்த்தமான நல்ல அபூர்வ குணத்திற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். //

    வைகோ சார், ரொம்ப நாளா இது குறித்ஹ்டுப் பகிரணும்னு இருந்தது. சமயம் இப்போத் தான் வாய்த்தது. அதுவும் நடுவர் குறித்து வேறே போட்டி இருப்பதால் இது வரை கலந்துக்காதவங்கல்லாம் கலந்துக்கலாமேனு தோணித்து! :)

    ReplyDelete
  28. நன்றி ராஜலக்ஷ்மி, யூகம் செய்து எழுதிட்டீங்க தானே?

    ReplyDelete
  29. அப்பாதுரை, திருவிழாக்கள் முடிந்ததும் சுவாமியின் திருவுருவத்தை நதியில் முழுக்காட்டுவது! உற்சவர் நதிக்கரையிலேயே இருப்பார். அவர் சார்பில் அவரின் சிறிய வடிவை நதியில் முழுக்காட்டுவார்கள். திருமலையில் சுதர்சனரை முழுக்காட்டும் காட்சி பார்த்திருப்பீங்க தானே?

    ஒவ்வொரு கோயிலிலும் தீர்த்தவரிக்கெனத் தனி விக்ரஹம் இருக்கும்.

    ReplyDelete
  30. காசிராஜலிங்கம், விமரிசனம் எழுதிப் பரிசுகளைப் பெற முன்கூட்டிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. வாங்க வெங்கட், நீங்களும் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம். :)

    ReplyDelete
  32. அப்பாதுரை, நன்றி. நடுவர் யார்னு யூகம் செய்து சொல்லிட்டீங்களா?

    ReplyDelete
  33. நடுவர் உயிருள்ளவர்.

    ReplyDelete
  34. வாழ்பவர்னும் சொல்லலாம். ஆனா கொஞ்சம் பளிச். சரியா?

    ReplyDelete
  35. அழகய்யாவாக இருக்கலாமோனு ஒரு சந்தேகமும் உண்டு.

    ReplyDelete
  36. வம்பாதுரை, பெரிய ப்ளாஸ்டரா எடுத்துண்டு வந்து உங்க வாயிலே, சேச்சே, கையிலே போட்டு ரெண்டு கையையும் சேர்த்துக் கட்டிடறேன். :))))))

    ReplyDelete