எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 09, 2014

உறவுகள் தொடர்கதை!! 2

எங்கே ஆரம்பிக்க?  புரியலை! ஆனால் முன்னெல்லாம் கூட்டுக்குடும்பம் என்றால் தூரத்து சொந்தங்கள் கூட இருப்பார்கள் என என் அப்பா சொல்லி இருக்கிறார். தாங்கிப் பிடிக்க யாரும் இல்லாத உறவினர்கள் கொஞ்சம் செல்வாக்காக இருக்கும் உறவினர் குடும்பத்தில் வந்து தங்கி அவர்களுக்கு வேண்டிய வீட்டு வேலைகள், எடுபிடி வேலைகள் எல்லாம்செய்து வயிற்றைக் கழுவி இருக்கிறார்கள்.  அதுவே எங்கள் தலைமுறையில் கிடையாது.  தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை(கல்யாணம் ஆகலைனால் தான் அத்தை தாய் வீட்டில் இருப்பார்; இல்லைனா அத்தை வந்து போகும் விருந்தாளிதான்) என இருப்பார்கள்.  இன்னொரு பக்கம் தாய் வழியில் தாத்தா, பாட்டி, பெரியம்மாக்கள், சித்திகள், மாமாக்கள் இருப்பார்கள்.  பெரியம்மாக்கள், சித்திகள் கல்யாணம் ஆகிவிட்டால் அந்த வீட்டிற்கு விருந்தாளிகள் தான்.  மாமாக்கள், மாமிகள் சேர்ந்து இருப்பார்கள். இது பிறந்த வீட்டு உறவு.

குடும்பத் தலைவியான பாட்டி அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும்.  ஏன் இங்கே பாட்டி என்றால் எந்தப் பிரச்னையும் பெண்களிடமே ஆரம்பிக்கும்.  பெண்களுக்குள் ஒற்றுமை இல்லை எனில் குடும்பத்தில் பிரச்னை தான்.  ஆகவே கத்தி மேல் நடப்பது போல் கவனமாகக் குடும்பத் தலைவி இருக்க வேண்டும்.  இதில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது, ஒருவர் செய்வது பிடிக்காமல் இருப்பது.  வேலைகளில் பங்கு பிரிப்பதில் போட்டி என வீட்டுக்கு வந்த மாட்டுப் பெண்களிடையே காணப்படும் சிறு சிறு சச்சரவுகளைக் கண்டும் காணாமல் போக முடியாது. எல்லோரையும் வேலை வாங்க வேண்டும்.  எல்லோரும் தனித்தனியாகவோ அல்லது நேரிடையாகவோ சொல்லும் புகார்களைக் கேட்டுக் கொண்டு தக்க தீர்வு எடுக்க வேண்டும்.  இதில் யார் மனமும் புண்படக் கூடாது. ஒரு மருமகள் உயர்த்தி, இன்னொருத்தி தாழ்வு என்னும் மனப்பான்மை வரக் கூடாது.  வேலையைப்  பங்கு பிரிப்பதை மாமியாரே செய்து விடலாம்.  இன்னும் சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்தாலும் தான், தன் கணவன், குழந்தைகள் எனத் தன்னலத்தோடு தங்கள் பாட்டை மட்டும் பார்த்துக் கொண்டு செல்லுவார்கள். அப்படிப் பட்டவர்களையும் சமாளிக்க வேண்டும்.

ஆகக் குடும்பத் தலைவி என்னும் பொறுப்பு சாமான்யமானது அல்ல என்பது புரிந்திருக்கும்.  இதில் நான் சொல்லாமல் விட்டது வீட்டிற்கு வேண்டிய மளிகைப் பொருட்களில் இருந்து, வீட்டில் வேலைக்கு உதவி ஆள் வைக்கிறதா வேண்டாமானு முடிவு செய்வது, தினசரிகள், வாராந்தரிகள் வாங்குவது, வீடு சொந்தம் எனில் அதைப் பராமரிப்பது, வாடகை எனில் வாடகை, மின்சாரக் கட்டணம், குடிநீர்க்கட்டணம் ஆகியவற்றைச் சரியான நேரம் செலுத்துவது, பேரன், பேத்திகளுக்கு வேண்டியதைச் செய்வது, தனக்கே கல்யாணம் ஆகாமல் பெண் இருந்தால் அவளைத் திருப்தி செய்வது எல்லாமும் அடங்கும்.  கணவனையும் மருமகள்கள் இருக்காங்களேனு கவனிக்காமல் விட முடியாது.  எல்லோரையும் விட வளர்ந்த சின்னக் குழந்தை கணவர் தான்.  ஆகவே அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்.

படிக்கலை, வேலைக்குப் போகலை என்றெல்லாம் குறைப்பட்டுக்கொள்ள இடமே இல்லாமல் அடுத்தடுத்து இத்தனை வேலைகள் ஒரு குடும்பத் தலைவிக்கு சுமார் 40, 50 வருடங்கள் முன்னர் வரை கூட இருந்தன.  நானே நேரில் பார்த்ததோடு, என் வாழ்க்கையிலும் அனுபவித்திருக்கிறேன் சில மாறுதல்களோடு.  அவற்றை இங்கே சொல்லப் போவதில்லை.  இங்கே உறவுகள் பற்றி மட்டுமே பேச்சு.  ஆக இத்தனையும் செய்து எல்லா உறவையும் கட்டிக் காப்பது குடும்பத் தலைவியின் கையில் தான் இருந்திருக்கிறது.  அவள் கொஞ்சம் பிசகினாலும் உறவு அறுந்து போக வாய்ப்புகள் உண்டு.  கழைக்கூத்தாடி இரு பக்கமும் சமம் செய்து கொண்டு கயிற்றில் நடப்பதைப் போல் அவள் எல்லாப்பக்கங்களிலும் சமம் செய்து கொண்டு குடும்பத்தை நடத்தி வந்ததாலேயே உறவுகள் சுமார் 40 வருடங்கள் முன் வரை பேணிப் பாதுகாக்கப்பட்டன.  பின் அவற்றிற்கு வீழ்ச்சியை யார் ஏற்படுத்தியது?

இதில் தந்தை வழி, தாய் வழி உறவு பற்றி திரு ஜிஎம்பி குறிப்பிட்டிருக்கிறார்.  பொதுவாகக் குழந்தைகள் தாய்வழி உறவுக்கே பழக்கம் ஆவதாக அவர் சொல்கிறார்.  இருக்கலாம். ஆனாலும் சில குடும்பங்களில் இருபக்கமும் ஒட்டாமல் இருப்பதையும் பார்க்கலாம்.  தந்தை வழி மட்டுமே ஒட்டுபவர்களையும் பார்க்கலாம். எந்த உறவையும் நாம் எப்படிப் பேணுகிறோம் என்பதைப் பொறுத்தே  அந்த உறவின் பலம் அமையும்.  குழந்தையில் இருந்து தாயின் பிறந்த வீட்டிலேயே வளர்பவர்களுக்கு அந்த உறவு முதன்மையாக இருக்கும்.

ஒரு சிலர் தங்கள் வசதிக்காக அல்லது வேலை காரணமாகப் பிறந்த வீட்டில் குழந்தைகளைப் படிக்க விடுவது உண்டு.  அப்படி இருந்தாலோ, தாய் புகுந்த வீட்டு மனிதர்களை ஒதுக்கினாலோ தந்தை வழி உறவு முதன்மையாக இருக்காது. இது அவரவர் குடும்பச் சூழலைப் பொறுத்தது என்பது என் கருத்து. நானும், என் அண்ணாவும் என் தம்பி பிறக்கும் வரை மாறி மாறி அப்பாவின் அண்ணா (பெரியப்பா) வீட்டிலும், என் தாயின் பிறந்த வீட்டிலும் மாறி மாறி இருந்து வந்திருக்கிறோம். என் அப்பாவையே நாங்கள் இருவரும், "மாமா" என அழைத்து வந்திருக்கிறோம்.  தம்பி பிறந்த பின்னர் தான் எங்கள் சிறிய குடும்பம் நிரந்தரமாக ஒன்றாக இருக்க ஆரம்பித்தது.  அதன் பின்னரே நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவை, "அப்பா" என அழைக்கச் சொல்லிக் கொடுக்கப் பட்டோம்.  என்றாலும் எங்களுக்கு இரு பக்கத்து உறவுகளோடும் நெருங்கிய பழக்கம் தொடர்ந்தது.  இன்னமும் தொடர்கிறது.  கோபம், தாபம், பிரிவு, பேச்சு, வார்த்தை எல்லாம் இருந்தாலும் உறவை விட்டதில்லை.

21 comments:

  1. எந்த உறவையும் நாம் எப்படிப் பேணுகிறோம் என்பதைப் பொறுத்தே அந்த உறவின் பலம் அமையும். //

    உண்மை நீங்கள் சொல்வது.

    ReplyDelete
  2. அவரவர் அனுபவத்தின் பேரிலேயே கருத்துக்கள் வெளியிடப் படுகின்றன. எந்த உறவு எப்படி பேணப் படுகிறது என்பதே கேள்வி.APART FROM ATTRIBUTING REASONS TO THE GENERATION GAP AND PRESENT CIRCUMSTANCES இதைச் சீர்செய்வது எப்படி சீரழிவுக்கு வேறு என்ன காரணம் இருக்கலாம் என்று எழுதி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. உறவுகள் இன்னொரு கோணத்தில் ஆராயப் பட்டதும் தெரிகிறது. நன்றி மேடம்

    ReplyDelete
  3. //எல்லோரையும் விட வளர்ந்த சின்னக் குழந்தை கணவர் தான். ஆகவே அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்.//

    :)))))))

    உண்மை. இது பேலன்ஸ் பண்ணக் கொஞ்சம் கஷ்டமான விஷயம்!


    //பின் அவற்றிற்கு வீழ்ச்சியை யார் ஏற்படுத்தியது?//

    பெண் விடுதலை என்கிற கோஷம்?
    தந்தை வழி ஒட்டுதல் என்பது ரொம்பக் கம்மிதான்.

    இந்த நாட்டின் சக்தி பெண்கள்தான். பொறுமையான, அன்பான பெண்களால் கூட்டுக் குடும்பம் சாத்தியப்பட்டது ஒரு காலம். அவர்கள் அப்போது நிறையவே 'சஹித்துக்' கொண்டு வாழப் பழகி இருந்தார்கள். எல்லாவற்றையும் விட உறவு முக்கியம் என்று நினைவு அடிநாதமாக இருந்த காலம்.

    ReplyDelete
  4. உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம். உங்கள் பதிவில் என்னை உங்கள் பின்னூட்டப்பெட்டி மூன்றிலக்க எண் டைப் பண்ணச் சொல்லித் தொல்லை கொடுத்தது! (எப்பவும் நீங்கள்தானே மற்றவர்கள் பதிவுகளுக்குச் சொல்வீர்கள்? இப்போ நான்!)

    ReplyDelete
  5. கூட்டுக் குடும்பத்தின் அத்தனை சாதக பாதகங்களையும் குறிப்பிட்டு விட்டீர்கள். இந்தக் கூட்டுக் குடும்பத்தில் வளரும் குழந்தை உறவுகளைப் பேணிக் காக்கும் என்பது உண்மை.

    Comment Moderation நீக்கினால் நல்லது.

    ReplyDelete
  6. மன்னியுங்கள் கீதா மேடம். Word Verification என்பதற்குப் பதிலாக Comment Moderation என்று டைப்பி விட்டேன்

    ReplyDelete
  7. கூட்டுக் குடும்பம் தொல்லை என்றே தோணுது.

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ஜிஎம்பி சார், சீரழிவுக்குக் காரணம் இனி தான் சொல்லணும். சரி செய்வது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. :))))

    ReplyDelete
  10. ஶ்ரீராம், வீழ்ச்சியை ஏற்படுத்தியது நாமே தான். தந்தை வழி ஒட்டுதல் கம்மினு ஒரு சில வீடுகளில் இருக்கலாம். ஆனால் ஒரு போட்டி மனப்பான்மை அதாவது பங்காளி மனப்பான்மை கட்டாயமா இருக்கு. :)))) அதே மனப்பான்மை தாய் வழி உறவுகளில் இருப்பது இல்லைனு சொல்ல முடியாது. அங்கேயும் வேறே மாதிரி!

    ReplyDelete
  11. ஹிஹிஹி, ஶ்ரீராம், உங்களுக்கும் ஒரு சந்தோஷமான விஷயம், என்னோட பதிவிலே உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவே என்னை வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்டுட்டு இருக்கு விடாப்பிடியாக. நானும் விடேன், தொடேன் என்று கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கேன். :)))

    ReplyDelete
  12. ராஜலக்ஷ்மி, வேர்ட் வெரிஃபிகேஷன் நான் வைக்கவில்லை. பல பதிவுகளிலும் நான் ஏற்கெனவே கண்டிருக்கிறேன். கூகிளின் சதிவேலை இது. :)))

    ReplyDelete
  13. அப்பாதுரை, கூட்டுக்குடும்பம் அநுசரணையாக இருந்தால் தொல்லை எல்லாம் இல்லை. எங்கானும் கொஞ்சம் சறுக்கினாலும் தொல்லை தான். :)))) என்னைப் பொறுத்தவரை இரண்டையும் பார்த்திருக்கேன்.

    ReplyDelete
  14. உங்களைப் போல் அனைவரும் இருந்து விட்டால் எவ்வித பிரச்சனையும் இருக்காது அம்மா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. /// கூகிளின் சதிவேலை ///

    உங்களுக்கும் உதவலாம் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html

    ReplyDelete
  16. கூட்டுக் குடும்பத்தின் சாதகங்களை அழகாக கூறியிருக்கிறீர்கள். இன்று அதெல்லாம் சாத்தியமா? எல்லோருமே அவரவர் சுதந்திரமாக இருக்கத்தான் விரும்புகிறார்கள்.

    ReplyDelete
  17. கூட்டுக் குடும்பங்களில் உள்ள நன்மை தீமைகளின் அலசல் பிரமாதம். இன்று எல்லோருமே தனித் த்னித் தீவுகளாகத்தான் வாழ்கின்றோம். ஆனால் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த னமது தலை முறைக்கும், இப்போது தனிக் குடும்பத்தில் அதுவும் ஒற்றைக் குழந்தையாக வாழும் குழந்தைகளுக்கும் உள்ள வேறு பாடு தெரிகின்றது என்றாலும், பெற்றோர் வளர்ப்பிலும் இருக்கின்றது. பெற்றோர் எவ்வழி அவ்வழி அடுத்த தலைமுறையும்....

    ReplyDelete
  18. வாங்க டிடி, நன்றிப்பா.

    ReplyDelete
  19. ராதா பாலு, நல்வரவு, சுதந்திரம் என்பதன் எல்லை என்ன? அல்லது ஆரம்பம் என்ன? முடிவு என்ன?

    ReplyDelete
  20. வாங்க துளசிதரன் தில்லையகத்து, ஒற்றைக் குழந்தைகளாக இருந்தாலும் தாத்தா, பாட்டியால் வளர்க்கப்பட்டால் குடும்ப உறவினர்களோடு பரிச்சயம் இருக்கும். இல்லை எனில் கஷ்டம் தான். :(

    ReplyDelete
  21. ஹூம் என்னையே வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்டுட்டு இருக்கு. டிடி, உங்க சுட்டிக்கு நன்றி.

    ReplyDelete