பாடல் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
இது உதயனின் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இது கூகிளார் கொடுத்தது.
துளசிமாடம் கோலத்தில் போடலாம். மேலே காட்டி இருக்கும் இரண்டுமே துளசி மாடக் கோலத்தின் இருவகைகள் தான். இதைத் தவிரவும் இன்னொரு முறையும் உள்ளது.
நான்கு பெண்கள் வலைப்பக்கத்திலிருந்து மேற்கண்ட கோலம் எடுக்கப் பட்டது.
முன்பிறவியில் நூற்ற நோன்பின் பயனை இப்பிறவியில் அனுபவிக்கிறாளாம் இந்தப் பெண்! போன ஜென்மத்துப் பலனை இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டு இருந்தால் போதுமா! இப்போதும் நாராயணன் நாமாவைப் பாட வேண்டாமா? கும்பகர்ணனை விட மோசமாகத் தூங்காதே பெண்ணே! வா எழுந்து வந்து கதவைத் திற என அழைக்கிறாள் ஆண்டாள். நம் வாழ்நாளை வீணே கழிக்காமல் பலனுள்ளதாக மாற்ற வேண்டிச் சொல்கிறாள் ஆண்டாள்.
திருமாலின் பத்து அவதாரங்களில் முன் சொல்லப்பட்ட கண்ணன் அவதாரம், வாமன அவதாரம், தவிர ஓங்கி உலகளந்த திரிவிக்கிரமனையும் குறித்துச் சொல்லி இருக்கிறாள் ஆண்டாள். இங்கேயோ பண்டொருநாள் போற்றப் பறைதரும் புண்ணியனால் கும்பகர்ணன் அழிந்ததைச் சொல்வதால் இங்கே ஶ்ரீராமாவதாரத்தைச் சொல்கிறாள் என்பதும் புரிகிறது.

வணக்கம்
ReplyDeleteவிளக்கமும் படங்களும் நன்று
இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன், உங்களுக்கும் பண்டிகை தின வாழ்த்துகள்.
Deleteஇன்னொரு முறை - அழகாக உள்ளது...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteம்.... இன்னின்ன நாளுக்கு இன்னின்ன கோலம் என்று வரையறை இருக்கிறதா என்ன?
ReplyDeleteஶ்ரீராம், ஒவ்வொரு திருப்பாவையின் உட்பொருளுக்கு ஏற்பக் கோலங்கள் போடச் சொல்லி 2011 ஆம் வருடம் உதயனிடம் சொன்ன நினைவு. அதைத் தான் தேடினேன். குழுமத்தில் கிடைக்கவில்லை. ஆகவே அதில் வரும் ஒரு சில வரிகள், வர்ணனைகளுக்கு ஏற்றாற்போல் தேடிப் போடுகிறேன். :)))) இதிலே துளசியைப் பற்றி வருவதால் துளசிமாடம்.
Deleteஓஹோ.... நம் கற்பனைதான் இல்லையா? அப்படி முறை ஒன்றும் ஏற்படுத்தி வைக்கவில்லை இல்லையா? ஓகே, ஓகே.
Deleteஅழகான பாவை விளக்கம், அழகான கோலம்.
ReplyDeleteசுவர்க்கம் போக நோன்பு இருக்கிறாள் அந்தப் பெண் போலும். தூக்கத்திலேயே கண்ணனை அனுபவிக்கிறாள்.அத்தனை அவதாரங்களையும் சொல்லி அவளையும் எழுப்பிவி ட்டாள் ஆண்டாள் நாச்சியார். இனி வரப் போகும் பாசுரங்களுக்கான கோலங்களைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது. நன்றி கீதா.
ReplyDeleteசிறப்பான பகிர்வு! தொடர்ந்துவர இயலவில்லை! வருந்துகிறேன்!
ReplyDelete