எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 17, 2014

என்ன சொல்லப் போறீங்களோ! :)

பா.ராகவன்

எத்தனை பேர் இந்தப்பதிவைப் படிச்சீங்கனு தெரியலை.  படிக்காதவங்க ஒரு தரம் படிங்க. இதைப் படிச்சுக் கருத்துச் சொன்னப்புறமா இந்த எச்சில், பத்து பற்றிய என்னோட கருத்துக்களைப் பகிரணும்னு நினைக்கிறேன்.  இது ரொம்பவே உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு விஷயம்.  இதைக் குறித்த என் கருத்துகள் பலருக்கும் மாறுதலாகத் தெரியலாம்.  ஏனெனில் இந்தக்கால இளைஞர்கள் பலரின் கருத்துகளோடு எனக்கு ஒப்புதல் இல்லை. இது என்னைப் பொறுத்தவரை சுகாதாரம் சம்பந்தப்பட்டது. நோய்த் தொற்று ஏற்படும் வகையைச் சேர்ந்தது.


ஏற்கெனவே இது குறித்து மின் தமிழ்க் குழுமத்தில் ஓர் இழை சில ஆண்டுகள் முன்னால் ஓடியது.  அப்போது அங்கே பெரும்பாலானோர் என் கருத்தை ஆதரித்தே எழுதி இருந்தனர்.  அந்தக் குழுமத்தில் பகிர்ந்ததைத் தான் இங்கேயும் சொல்லப் போகிறேன்.  ஆசாரம் என எதுவும் இதில் இல்லை.  முழுக்க முழுக்க சுத்தம், சுகாதாரம் குறித்ததே!  இதை நம்மவர்கள் ஆசாரத்தோடு சம்பந்தப் படுத்திவிட்டதால் இளைய தலைமுறையினர் பலரும் இன்றைய நாகரிகமான போக்கு என்னும் பெயரில் எச்சிலையும், பத்தையும் ஒன்றாக்குகின்றனர்.    தாங்கள் பெருந்தன்மையாக நடப்பதாகவும் அவர்கள் எண்ணம். இப்போதைக்கு இங்கேயே நிறுத்திக்கறேன்.


எதுக்கும் அஞ்சமாட்டோமுல்ல! 

18 comments:

  1. சுத்தம், சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதில் எனக்கும் உடன்பாடு.

    ஆச்சாரம் சம்ப்ரதாயம் என்று சொன்னாலாவது ஃபாலோ செய்து சுத்தமாக இருப்பார்கள் என்ற நம்பிப்கையில் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

    :)))))

    ReplyDelete
    Replies
    1. இது ரொம்ப வருஷமாச் சொல்ல நினைச்ச ஒரு விஷயம். பார்ப்போம். அவ்வளவா வரவேற்பில்லைனே நினைக்கிறேன். ஆனாலும் கூவ ஆரம்பிச்சுட்டோம். கூவிடுவோம். :)

      Delete
  2. எச்சில் , பத்து எல்லாம் ஆசாரத்தோடு சம்பந்தப் படுத்தியது அப்போது தான் கடைபிடிப்பார்கள் என்று தான்..
    சாணம் கொண்டு பத்தை ஒத்தி எடுப்பார்கள். அது கிருமிநாசினி என்பதால்.அடுப்பை சாணம் கொண்டு மெழுகுவது, வாசலில் சாணம் தெளிப்பது எல்லாம் சுகாதாரம் சம்பந்த பட்டவிஷயம தான். இப்போது சிமெண்ட் பூசி விட்டோம் வாசல் தெளிக்கும் இடத்தை. அதற்கு கூட இப்போது கொஞ்சம் மஞ்சல் கலந்து தெளித்தால் கிருமிநாசினி என்று தெளிக்கிறார்கள்.
    வாசல் நிலையில் மஞ்சள் பட்டை அடிப்பதும் அதற்குதான். கார்த்திகை மாதம் குளிரில் எறும்புகளுக்கு அவ்வளவாக குளிரில் உணவு கிடைக்காது என்று கார்த்திகை தீபத்திருநாள் அன்று பச்சரிசி மாவில் நிலைவாசலில் பட்டையும், கதவில் கை அடிப்பதும் செய்வார்கள். அது எறும்பு மற்றும் பூச்சிகளுக்கு உணவு. இப்படி ஒவ்வொன்றும் காரணகாரியத்துடன் செய்யப்படும் செயல்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி அரசு, காரண, காரியங்களோடு கற்பித்திருக்கலாம். இப்போப் பல விஷயங்களையும் மூட நம்பிக்கை என்னும் பெயரில் தள்ளிவிடுகின்றனர். :(

      Delete
  3. இதில் எனக்கு நம்பிக்கை உண்டு! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ். தொடருவேன்.

      Delete
  4. ஆஹா.. பா.ராகவன் தான் வரிக்கு வரி எவ்வளவு அழகா எழுதியிருக்கார்?..
    ஏ கிளாஸ் ரகம்.
    எழுதின அழகை ரசிக்காமல் கருத்துக்குத் தாவுவது அநியாயம். அது எதைப் படித்தாலும் பொருமுவதற்கு வழிவகுக்கும்.
    நீங்களும் எதைச் சொல்ல நினைத்தாலும் அந்த மாதிரி சொல்ல அட்லீஸ்ட் முயற்சித்தானும் பாருங்கள்.
    அப்பொழுது தான் எதைச் சொன்னாலும் சொல்வதின் மெருகு கூடும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், உங்க கருத்துக்கு நன்றி.

      Delete
  5. எது எப்படியோ ஒரு லவ்வர்ஸ் ரொமான்ஸ் பண்ணி சாப்பிடுவதை அழகாகவே வர்ணித்துள்ளார். அவர்களுக்கு அங்கு சாப்பாடு என்பது இரண்டாம் பட்சம்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. விச்சு, சகிக்கலை!

      Delete
  6. ஹப்பா!... ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்மா!..நிஜமாக எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது!... இது விஷயமாக முட்ட்டிக் கொண்டும், புரிந்து கொள்ளாது வாதம் புரிபவர்கள் தான் ஜாஸ்தி!.. நான் உங்கள் கருத்தோடு முழுக்க்க ஒத்துப் போகிறேன்!.. ஆனா ஒண்ணு... நாம் சொன்னா ஆயிரம் வாதம் பண்ணுவாங்க.. அப்புறம் கொஞ்ச காலம் கழிச்சு, யாராவது ஆராய்ச்சிக்காரங்க கண்டுபுடிச்சதுன்னு சொல்லி, அதையே பின்பற்றுவாங்க.. உதாரணமா, கைகழுவிட்டு சாப்பிடணுன்னு லிக்விட் சோப்காரங்க சொன்னா கேக்கறா மாதிரி..:))!!!.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, என் கட்சிக்கு உங்களைப் போன்ற இளைய தலைமுறையினரின் ஆதரவு தேவை. மிக்க நன்றி.

      Delete
  7. Replies
    1. வாங்க டிடி, நன்றி.

      Delete
  8. சுத்தம் சுகாதாரத்தோடு தொடர்புடையவை தான் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதை ஆசாரத்தோடு சம்பந்தப்படுத்தியதால் பெரும்பாலோர் பின்பற்றுவதில்லை. முகம் சுளிக்கின்றனர்! :)

      Delete
  9. தைரியமாகச் சொன்னதற்கு மிக நன்றி கீதா. சகிக்க முடியாத காட்சிகளொடு இதையும் சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான்.

    ReplyDelete
  10. நீங்க வேறே வல்லி. அந்தக் காட்சியைக் கற்பனையிலே கூட என்னால் பார்க்க முடியலை. அவன் மூக்கில் எத்தனை அழுக்கோ! அதோடு அவன் போட்ட சோப்பு, க்ரீம்கள், லோஷன்கள்னு எத்தனை போட்டிருப்பான்! எல்லாத்துக்கும் மேலே வெயிலில் வந்த வியர்வை வேறே! என்னதான் அளவு கடந்த காதல்னாலும் இப்படி எல்லாமா நடந்துக்கச் சொல்லும்! :(((

    ReplyDelete