எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 23, 2014

திருப்பாவைக் கோலங்கள்

பாடல் 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.



புள்ளி வைத்த  விளக்குக் கோலம் எதானாலும் போடலாம். இந்தக்கோலம் நன்றி உதயன். 2,3 வருடங்கள் முன்னர் மின் தமிழ்க் குழுமத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலம் உதயன் வரையப் பாட்டின் பொருள் கொண்டு  துணை செய்திருக்கிறேன். அப்போது போடப் பட்ட கோலங்கள் தாம் இவை. உதயன்  இந்தச் சுட்டியில் உதயனின் கோலங்களைக் காணலாம்.



இந்த ஆனைச்சாத்தன் தாமதமாய் எழுந்திருக்கும் பறவையோனு ஒரு சந்தேகம் இருந்து வந்தது.  அது இல்லைனு புரிஞ்சது.  கரிக்குருவியைத் தான் ஆனைச்சாத்தன் என்கிறார்கள். இந்தக் கரிக்குருவி முதல்லேயே எழுந்திருக்கும்.  இதை நான் ராஜஸ்தானில் இருக்கிறச்சே அநேகமா தினம் பார்த்திருக்கேன். அங்கே வீட்டுக்கூரையில் கூடு கட்டித் தங்கி இருந்தது.  காலையில் குயிலுக்கும் முன்னால் இது எழுந்திருக்கும். அந்த ஆனைச் சாத்தன் பேச்சைப் பற்றிக் குறிப்பிடும் ஆண்டாள் அடுத்து காசும், பிறப்பும் என்கிறாள்.

யார் கிட்டே எல்லாம் காசும், அதற்கேற்றாற்போன்ற பிறப்பும் இருக்குமோ அங்கெல்லாம் பேச்சும் ஜாஸ்தியாத் தான் இருக்கும் என்பது நாம் அறிந்ததே!  இங்கே குறிப்பிடுவது அது அல்ல. ஆயர்பாடிப் பெண்கள் இரு வகையான தாலியை அணிந்திருந்தார்களாம்.  ஒன்று பொற்காசுகளால் செய்த அச்சுத் தாலியும் இன்னொன்று முளைகளாக அமைத்துச் செய்த ஆமைத் தாலியும்


அணிந்திருந்தார்களாம்.  அந்தத் தாலிகள் அவர்கள் தயிர் கடையும்போது ஒன்றோடொன்று உராய்ந்து ஏற்படுத்திய சப்தத்தையே ஆண்டாள் இங்கே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து என்கிறாள்.  ஆனால் இதையே தத்துவரீதியாகப் பார்த்தால் திவ்யப் ப்ரபந்தங்களையும், பெருமானைக் குறித்த ஸ்லோகங்களையும் அவன் திருக்கோயிலில் அடியார்கள் ஒன்று சேர்ந்து சொல்லும் சப்தத்தையும் குறிக்கிறது என்பார்கள்.  அந்த நாராயண மூர்த்தி கேசவனின் திருநாமத்தை ஒரு தரம் சொன்னாலும் போதுமே.  அதைக் கேட்டபின்னருமா நீ உறங்குகிறாய்? எனத் தன் தோழியைக் கேட்கிறாள் ஆண்டாள்.


கோலம் படம் தவிர மற்றவை நன்றி: கூகிளார்

11 comments:

  1. பேச்சு ஜாஸ்தியாக இருக்கும் காரணம் இது தானோ...?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் டிடி, மைனாவும், ஆனைச்சாத்தனும் "சளசள'னு பேசும். :)))))

      Delete
  2. எத்தனை புள்ளிக் கோலம் அது?

    இந்த ஆனைச்சாத்தன் கரிக்குருவி நம்மூரில் கிடையாதோ?

    ReplyDelete
    Replies
    1. இது கோலத்தின் வடிவத்துக்கு ஏற்றாற்போல் கணக்குப் பண்ணிப் போடணும் ஶ்ரீராம். மூணு, புள்ளி,மூணு வரிசை, தலையிலே ஒற்றைப்புள்ளி, அப்புறமா ஏழு புள்ளி ஒரு வரிசை, நடுப்புள்ளி விட்டுவிட்டு ஆறு புள்ளி, ஆறு வரிசை, அப்புறமாப் பதினோரு புள்ளி, இரண்டு ஓரங்களிலும் தலைப்புள்ளி, திரும்ப ஓரங்களிலே மூணு புள்ளி, மூணு வரிசை, அப்புறமா நடுப்புள்ளி விட்டுட்டு பத்துப் புள்ளி, இப்போ இரண்டு ஓரத்திலும் இரண்டு புள்ளியை விட்டுட்டு மூணு புள்ளி, மூணு வரிசை, வடிவம் வரதுக்காக இரண்டு ஓரத்திலேயும் ஒரு புள்ளி, கடைசியா நடுப்புள்ளியை விட்டுட்டுப் பத்துப் புள்ளி, பத்து வரிசை. :)))) கணக்குப் பிசகினால் கோலமும் பிசகு! :)

      Delete
    2. ஆனைச்சாத்தன் கரிக்குருவி இங்கே திருச்சியிலேயே தினமும் காலை நடைப்பயிற்சிக்கு மாடிக்குப் போறச்சே பார்ப்பேன். கும்பகோணம் பக்கம் நிறையப் பார்க்கலாம். அம்பத்தூரிலேயும் இருந்தது. நீங்க இருக்கிற பக்கம் எப்படினு தெரியலை. செடிகள், மரங்கள் நிறைய இருந்தால் கட்டாயமாய் இருக்கும்.

      Delete
  3. எங்கள் ஊரில் கரிக்குருவி உண்டு. கோலம், பாடல் விளக்கம் எல்லாம் அருமை.

    ReplyDelete

  4. "திருப் பாவை" பாசுரத்தை படிக்கும்போதும், பாடும்போதும்
    உண்டாகும் இன்பம் உலகத்தில் இல்லை என்பதை போன்றதொரு
    விளக்கத்துடன், கோலமகள், நம்மை வரவேற்க! வழங்கிய தங்களை
    நினைந்து நினைந்து உள்ளம் உருகுதம்மா!
    நன்றியை நவில நாதழு தழுக்குதம்மா!
    அருமை!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

  5. வணக்கம்!

    "உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை" - இது பழமொழி
    "உணவிட்ட விவசாயிகளுக்கு, வாழ்த்தும், நன்றியும் சொல்வதற்கு
    "குழலின்னிசை"- வலைப் பூ பக்காமாய் வாருங்களேன்!

    "இன்று விவசாயிகள் தினம்" (23/12/2014)

    நன்றி!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  6. ஆனைச்சாத்தன்(கரிக்குருவி),மற்றும் காசும் பிறப்பும் பற்றி இடு வரை கேள்வி படாத விஷயங்களை கூறியதற்கு நன்றி!

    Banu venky
    www.thambattam.blogspot.com

    ReplyDelete
  7. கீசு கீசு என்ற வார்த்தைகளுக்கு இன்று அனந்தபத்மநாபாச்சாரியார் விளக்கம் கொடுத்தார். ஆஹா அருமை. கேசவ கேசவ எனும் நாமத்தை குருவிகள் தங்களுக்கேயுரிய பாஷையில், ஒலியில் கீசு (கேசவ) கீசு (கேசவ) என்றதாம். குருவிகள் கூவிய கேசவ நாமத்தைக் கேட்கவில்லையா என்று அமைகின்றது முதல் வரி.

    ReplyDelete
  8. "திருப் பாவை" பாசுரம் மனதில் பரவசம் தரும் வகையில் தந்தருளி உள்ளீர்கள்.
    வணங்கி வழி படுகிறேன்.
    நன்றி!
    திருமாங்கல்யம் விளக்கம் அறிந்தேன்! சிறப்பு!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete