கார்த்திகைத் திருநாள் விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில். ஒவ்வொரு வருஷமும் விளக்குகள் எண்ணிக்கை குறைஞ்சுட்டே வருது. :))) எல்லா விளக்குகளையும் ஏத்தறதுன்னா 2பேர் வேணும். வெண்கல விளக்குகளை அதிகமாகவும், மண் விளக்குகளைக் குறைவாயும் ஏத்தி இருக்கேன்.
சாமி அலமாரி, அந்த வீட்டில் கொஞ்சம் பெரிசு, இங்கே சாமிங்களுக்கெல்லாம் இட நெருக்கடி. பூ வைக்கிறச்சே ஒரே உஸ்ஸு புஸ்ஸுனு அலுப்பு! இன்னும் எந்த சாமிக்கு எந்த இடம்னு முடிவு பண்ணலை. ராமர் மட்டும் அவர் இடத்திலே ஜம்முனு உட்கார்ந்துட்டார். கீழே பாருங்க.
ஶ்ரீராமர் யதாஸ்தானம் ப்ரதிஷ்டை ஆயிடுச்சு
ஏற்றின விளக்குகளில் இரண்டும், வெற்றிலை பாக்கு, பழம், பொரியோடு நிவேதனம் செய்தாச்சு.
வீட்டு வாசல் கோலத்தில் விளக்குகள் வரிசை.
அண்ணன்மார்களே, தம்பிமார்களே, எல்லோருக்காகவும் வேண்டிண்டு விளக்கு எத்தி இருக்கேன். இனிமே வரிசையா வந்து சீ(று)ருங்கப்பா. அதெல்லாம் கிடையாதுனு சொல்லக் கூடாது தெரியுமா! கார்த்திகைச் சீர் ரொம்ப முக்கியமாக்கும். சீக்கிரமா வாங்க. பொன் கொடுப்போர் பொன்னே கொடுக்கவும். ப.பு. கொடுப்போர் ப.புவே கொடுக்கவும். நவமணிகள் கொடுப்போர் நவமணிகளாகவே கொடுக்கவும். அவங்க அவங்க வசதிப்படி கொடுங்கப்பா. பொங்கல் சீர் தனி. அது அப்புறமா. இப்போ முதல்லே கார்த்திகைச் சீர்! ம்ம்ம்ம்ம்ம், சீக்கிரம் எடுங்க!
புது வீட்டில் திருக்கார்த்திகை தீபம்.
ReplyDeleteவாழ்த்துகள்.
கோலம் ஜோர்.
கார்த்திகை தீப நல் வாழ்த்துகள்..
ReplyDeleteசரி சரி எடுத்துக்குங்க! பொலம்பாதீங்க! :-)))
ReplyDeletehttp://www.9gems.in/blog/wp-content/uploads/2012/11/navratna-set.jpg
அழகாய் புதுவீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றி விட்டீர்கள்.
ReplyDeleteகார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்னிக்கும் பழம்பொரிதானா? என்னாஆஆஆ வில்லத்தனம்!
ReplyDeleteகார்த்திகைக் கொண்டாட்டம் படு ஜோர் !
ReplyDeleteஅல்வா கொடுப்போர் அல்வாவே குடுக்கவும்...
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், முதல்லே வந்து பொரி எடுத்துண்டாச்சு. சீ(ற)ரலையா? :)))))
ReplyDeleteவாங்க ரிஷபன் நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteவா.தி. ஹையா, தம்பின்னா தம்பிதான். :)
ReplyDeleteவாங்க கோமதி அரசு, நன்றி.
ReplyDeleteதமிழ் இளங்கோ ஐயா, நன்றி.
ReplyDeleteஇ.கொத்து, "பழம்" பொரிதான். :)))) வடை, பாயசம் எல்லாம் காலம்பரேயே பண்ணிச் சாப்பிட்டாச்சு. :)
ReplyDeleteநன்றி, ராஜலக்ஷ்மி மேடம்.
ReplyDeleteஅம்பி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))
ReplyDeleteஆகா...!
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...
கார்த்திகைப் பதிவுடன் உறவுகள் பதிவுமில்லையா எதிர்பார்த்தேன். சீராக என்ன வேண்டும். எதுவும் வேண்டாம் என்று நிச்சயமாகச் சொல்வீர்கள். தெரியுமே.
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்....
ReplyDeleteஇனிய கார்த்திகை தீப
ReplyDeleteநல் வாழ்த்துகள்..
சிறுகக் கட்டிக் கொண்டுவிட்டார் ஸ்வாமி சந்நிதி. பெருக வாழ்வார். அத்தனையும் அழகு கீதாம். இங்க தமிழ்க்கடையில் பொரியே வரவில்லை.இல்ல தீர்ந்து போயிடுத்தோ. எல்லாவற்றுக்கும் இந்தப் பொண்ணுதான் அல்லாட வேண்டி இருக்கு. குளிரில் போவதும் வருவதும் சிரமம். அதனால் வடையும் அப்பமும் தான் பெருமாளுக்கு. குழந்தை புதுசு போட்டுண்ட்டது.எல்லோரும் நன்றாக இருக்கணும். வாழ்த்துகள். அக்காவோட சீர் அன்பு தான்.
ReplyDeleteவாங்க டிடி, வரவுக்கு நன்றிப்பா.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், சீரெல்லாம் வேண்டாம்னு சொல்ல மாட்டேனே! எது கொடுத்தாலும் வாங்கிப்பேனே! இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? :)))))
ReplyDeleteசீக்கிரத்தில் உறவுகள் பதிவைப் போடுகிறேன் ஐயா.
ReplyDeleteநன்றி வெங்கட்.
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துகள் ராஜராஜேஸ்வரி.
ReplyDeleteவாங்க வல்லி, அன்பே போதுமே. இங்கே பொரி பண்ணிட்டு யாரும் உனக்கு வேண்டாம், எனக்கு வேண்டாம்னு சொல்றாங்க. :)))
ReplyDelete