எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 31, 2014

திருப்பாவைக் கோலங்கள்


பாடல் 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்

கொடியைக் குறித்துச் சொல்லி இருப்பதால் கொடிக்கோலமோ அல்லது தோரணக் கோலமோ போடலாம். மண்டபம், மாவிலைக் கொத்து என்றும் போடலாம்.


       


கண்ணன் வரச் சொன்னதாகவும், அவன் கைகளால் பறையை வாங்கிக் கொள்ள வந்திருப்பதாகவும்,  அவன் நாமத்தையே தாங்கள் அனைவரும் பாடி அவனைத் துயிலில் இருந்து எழுப்பப் போவதாகவும்  வாயில் காப்போனிடம் ஆண்டாள் சொல்கிறாள். இங்கே பறை என்பது கொட்டுக் கொட்டும் பறையை மட்டும் குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.  துயிலில் இருந்து கண்ணனை எழுப்புவது என்பதும் மறைபொருளாக யோக நித்திரையில் மூழ்கி இருக்கும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி உருகி உருகிப் பாடி அவனோடு ஒன்றாய் ஐக்கியம் ஆவதற்கான ஏற்பாடுகள் செய்வதைக் குறிக்கும்.

 கண்ணனின்  இருப்பிடமோ வைகுந்தம்.  அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.  வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன்.  நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள்.  குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான்.  ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்

பாடல் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.


பொங்கல் பானை கோலம் போடலாம்.  ஏனெனில் இங்கே தண்ணீரும், சோறும் கொடுத்து அறம் செய்யும் நந்தகோபன் என அழைப்பதிலிருந்து அன்னதானத்தின் முக்கியத்துவம் புரியவருகிறது.  அந்தக் காலத்திலேயே நந்தகோபன் அனைவரும் திருப்தி என்னும் அளவுக்கு உணவளித்து தர்மம் செய்திருக்கிறான்.  அவன் மனைவியான யசோதையைக் குல விளக்கு என அழைக்கிறாள்.  குத்துவிளக்குக் கோலமும் போடலாம்.

   

ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன அவதாரத்தைப் பாடிய ஆண்டாள் மீண்டும் இங்கு வாமனனாய் வந்து திரிவிக்கிரமனாய் மாறி உலகளந்த பெருமானைக் குறித்துப் பாடி இருக்கிறாள்.  மஹாபலி தான் நல்லாட்சி புரிவதால் கர்வம் கொண்டு மூவுலகையும் அடக்கி ஆள முற்படவே அவனை கர்வபங்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.பக்தி இருந்தால் மட்டும் போதாது. கர்வம் கொள்ளக் கூடாது.  இங்கே கண்ணனின் மூத்தவன் ஆன  பலதேவனையும் அழைத்துக் கண்ணனோடு நீயும் எழுந்திரு என்கிறாள்.



17 comments:

  1. முதல் கோலம் வாய்ப்பாடு புத்தகத்தில் காணப்படும் படம் போல இருக்கு!

    மூன்றாவதும் நான்காவதும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை! :))))

      Delete
  2. அருமையான விளக்கம் அம்மா...

    ReplyDelete
  3. நாயகனாய் பாசுரம் நமக்கு இறைவனைக் காட்டித் தரும் ஆச்சார்யனைத் தான் குறிக்கிறது. நீங்கள் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
    கோலங்களுக்கும் பாராட்டுக்கள். நாளைய பாசுரமும் இன்றே வந்துவிட்டதே! ஊரில் இருக்க மாட்டீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ரஞ்சனி. யூகத்துக்கு உங்களுக்குப் பாராட்டுகள் நேற்று மாலை தான் வந்தோம். :)

      Delete
  4. பாவை விளக்கமும் கோலமும் அருமை! நன்றி!

    ReplyDelete
  5. வணக்கம்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    HAPPY NEW YEAR 2015 ! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வைகோ சார், வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  6. பாடல்களின் விளக்கமும் கோலங்களும் அழகு.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இந்தப்பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சு! வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  7. பாட்டுக்கு ஏற்றதாய்க் கோலம். ரசித்தேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா. ரொம்பநாட்களாய்க் காணோமேனு நினைச்சேன் புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  8. அன்பான கீதாம்மாவிற்கும், குடும்பத்தினருக்கும், மனமார்ந்த, இனிய புது வருட வாழ்த்துகள்!
    கோலப் பதிவுகளைக் கண்டேன். மிகவும் நன்றி அம்மா.

    ReplyDelete
    Replies
    1. திடீர் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி கவிநயா. :))))

      Delete
  9. திருப்பாவைக் கோலங்கள் பற்றிய விளக்கங்கள் அனைத்துமே மிக அருமை. நான் இப்போதுதான் இதனைப் பொறுமையாக முழுவதுமாக ரஸித்துப்படித்தேன். ‘பறை’ பற்றிய விளக்கம் ஜோர் ஜோர் ! திருப்பாவையில் வரும் வரிகளுக்கு ஏற்றவாறு போடப்பட்டுள்ள கோலங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete