பாடல் 11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
உதயனின் கோலப் பக்கம் திறக்கவில்லை. திறந்தப்போ கோலங்களைக் காப்பி, பேஸ்ட் பண்ணி இருந்திருக்கணும். தோணலை! :)
பசுக்களைக் குறித்துச் சொல்லி இருப்பதால் காமதேனுக் கோலம் போடலாம். கொடிக் கோலமும் போடலாம். கொடிக்கோலம் கிடைக்கலை. மயில் கோலமும் போடலாம்.
மிக முயற்சி செய்து தன் தோழியை எழுப்புகிறாள் ஆண்டாள். ஏன் அவள் மட்டும் இருக்கிறவங்களோட போகக் கூடாதா? இல்லை; மனசு வரலை. சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்று கொண்டு தோழியின் முற்றத்தில் கூடி நின்று முகில்வண்ணனாகிய பெருமானின் புகழைப் பாடுகிறார்கள். அப்படி எல்லாம் நடந்தும் இன்னமும் மாயையாகிய உறக்கத்திலேயே ஆழ்ந்து கிடக்கிறாளே! இவ்வுலகத்து நித்திரை மட்டுமின்றி மாயை என்னும் உறக்கத்திலிருந்தும் தோழியை எழுப்பி பெருமான் பால் அவள் மனதைத் திருப்புகிறாள் ஆண்டாள்.

பாடலும் அழகு. கோலமும் அழகு.
ReplyDeleteகோலம் புள்ளி விவரங்களுடன் உள்ளது!
மயில் கோலம் அழகு...
ReplyDeleteபாடல் விவரமும் கோலமும் நன்றாக இருக்கிறது கீதா. காமதேனு கோலம் இதுவரை பார்த்ததில்லை.
ReplyDeleteபாடல் விளக்கம் கோலம் அருமை.
ReplyDelete