இப்போ இருக்கும் வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள லிஃப்ட் பக்கத்து ஜன்னலில் இருந்து தெரியும் காவிரி. எங்க குடியிருப்புச் சுவர்களும் காவிரிக் கரையை ஒட்டிய பிற வீடுகளும் கொஞ்சம் மறைத்தாலும் கொஞ்சூண்டுக்குத் தெரியும். மேற்கே இருந்து வரும் காவேரி (இ.கொ. ஸ்பெஷல்) இந்தப் பக்கமாய் வளைந்து கொஞ்சம் தெற்கே திரும்பிப் பின்னர் கிழக்கு நோக்கி வளைகிறாள். ரா.ல. அன்னிக்கே கேட்டாங்க, இங்கேயும் காவிரி தெரிவாளானு. வீட்டுக்குள்ளே ஒரு அறை ஜன்னலில் இருந்து கோபுரமே தெரியும். அதைப் பார்த்த வண்ணம் தான் காலை ஆகாரம். :)
ஆகா:)! தன்யையானேன். காவேரியை எனக்காக அழைத்து வந்து காட்டி விட்டீர்கள்! நன்றி நன்றி.
ReplyDeleteவாங்க ரா.ல. கிட்டத்தட்ட 3 மாசம் கழிச்சு இன்னிக்குத் தான் கொஞ்சம் நேரம் கிடைச்சது. வழக்கமான வேலை நேரங்கள் மெதுவாகத் திரும்புது. :))) அதான் இன்னிக்குப் படம் எடுக்க முடிஞ்சது. :))))
Deleteகோபுரம் படம் எங்கே?
ReplyDelete:)))))
முயற்சி செய்யறேன் ஶ்ரீராம், தென்னைமரங்கள் அந்தப் பக்கம் அதிகம். கோபுரம் தெரிவது வீட்டினுள் வடக்குப் பக்க ஜன்னலில். தென்னை மரங்கள் காற்றில் அசைவதில் கோபுரம் மறைந்து மறைந்து தெரியும். அதிலும் இப்போ வாடைக்காற்று அதிகம். :)
Deleteகொஞ்சமாக தெரிந்தாலும் காவிரி காவிரி தானே! கோபுரத்தையும் படம் எடுத்துப் போட்டிருக்கலாமே!
ReplyDeleteகோபுரத்தை எடுக்க முயற்சித்தேன் ரஞ்சனி. இங்கிருந்து சரியாத் தெரியலை. காமிராக் கோணத்துக்குள்ளே மாட்டிக்கலை. மாடியிலே போய் எடுக்கலாம். அதை ஏற்கெனவே நிறையத் தரம் போட்டிருக்கேன். :)
Deleteகாவிரி முதலில் வந்தாள். பின் அரங்கன் வருவான் இல்லையா கீதா.
ReplyDeleteஆமாம், ரேவதி! அரங்கனைப் பார்த்து 3 மாதங்கள் ஆகின்றன. முக்கியமாய் ஆண்டாளம்மாவைப் பார்த்து நன்றி சொல்லணும். அன்னிக்குப் போக இருந்தோம். வேலை நடந்து கொண்டிருந்ததால் போகலை. இப்போவும் வேலை மும்முரமாய் நடப்பதாய்ச் சொல்கிறார்கள். அதான் யோசனையா இருக்கு!
Deleteபடம் அழகு! காவேரிக் கரை பல கதைகளை எழுத்துலகிற்கு கொடுத்தது போல் தங்கள் எழுத்துகளுக்கும் அந்தக் காவேரியும் ஸ்ரீ ரங்கனும் அருள் பாலிக்கட்டும்!!!
ReplyDeleteவாங்க துளசிதரன் தில்லையகத்து, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. அப்படி ஒண்ணும் பெரிசாக் கிழிக்கலை; இனியும் கிழிக்கப் போறதில்லை. :)))) என்றாலும் ஊக்கம் கொடுக்கிறீர்கள். அதற்கு என் நன்றி.
Deleteஓடும் நதியை ரசித்தபடி காலை உணவு அருமையாக இருக்கும்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநதி இல்லை சுரேஷ். கோபுரம். நதியைப் பார்க்க வீட்டை விட்டு வெளியே வரணும். கோபுரத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே பார்க்கலாம். :)
Deleteரா.ல..கொஞ்சம் குழம்பிட்டேன். கருத்துரையில் தெளிவு பெற்றுக்கொண்டேன். அவர்களுக்காக காண்பித்தாலும் நாங்களும் ரசித்தோம்.
ReplyDeleteஹிஹிஹி, ரா.ல.வை அப்படி அழைத்தே பழகி விட்டது! :))))
Deleteகாவிரியை தினம் பார்க்கிறீர்களே ! கொடுத்து வைத்தவர் !
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஆமாம், காலை நடைப்பயிற்சியின் போதும் பார்ப்பேன். :)
Deleteநதி லிப்டில் வரும் போது, வீட்டில் இருந்து கோபுர தரிசனம் அருமை.
ReplyDeleteலிஃப்ட் அருகில் இருக்கும் ஜன்னல். வீட்டில் சாப்பாடு மேஜையில் நான் உட்காரும் இடத்திலிருந்து நேரே வடக்குப் பக்கத்து ஜன்னல்! அங்கே கோபுரம் தன் பச்சைச் சட்டையோடு காட்சி அளிக்கும். :)
Delete