"எச்சில்" "பத்து" என்ற
சொற்களைப் பற்றியும்
அவற்றின் குறிப்பு முறை
பற்றியும் தெரிந்துகொள்ள
ஆவல்.
முன்னுரை
-------------
நான் பிறந்து வளர்ந்த
சூழல் மிகவும் "ஆசாரமானது."
அதாவது ... ஏதாவது ஒரு
காரணத்துக்காக நான் என்
நாக்கைத் தொட்டுவிட்டு
அதே வீச்சில் இன்னொரு
பொருளைத் தொட
அனுமதியில்லை. அதோடு,
"பத்து" என்பது "பழையது"
என்று நினைக்கிறேன்.
ஆனாலும் தெளிவில்லை.
படிப்புரை
------------
"எச்சம்" என்ற சொல் ஆதிகால
தமிழ் இலக்கியத்தில்
இருப்பது எனக்குத்
தெரியும். எனவே அதையே
திரும்பவும் இங்கே இந்த
இழையில் சொல்லத்
தேவையில்லை.
வேண்டுகோள்
------------------
நான் வேண்டிய
கேள்விகளுக்கு உதவும்
வகையில் மட்டுமே உங்கள்
குறிப்பைக் கொடுங்கள்.
என் கேள்விகள்:
1. "எச்சில்" என்றால் என்ன?
2. "பத்து" என்றால் என்ன?
3. யார் யார் எங்கே எங்கே
இந்த எச்சில்/பத்து
சமாச்சாரத்தைச்
சரியாகப் புரிந்துகொண்டு
கடைப்பிடிக்கிறார்கள்?
4. நீங்கள் இந்த எச்சில்/
பத்து சமாச்சாரத்தைக்
கடைப்பிடிக்கிறீர்களா?
மேலே கேட்ட
கேள்விகளுக்கு விடை
சொல்லும் முறையில்
மட்டும் பதில்
சொல்லுங்கள், பயனடைவேன்.
அன்புடன்,
ராஜம்
சொற்களைப் பற்றியும்
அவற்றின் குறிப்பு முறை
பற்றியும் தெரிந்துகொள்ள
ஆவல்.
முன்னுரை
-------------
நான் பிறந்து வளர்ந்த
சூழல் மிகவும் "ஆசாரமானது."
அதாவது ... ஏதாவது ஒரு
காரணத்துக்காக நான் என்
நாக்கைத் தொட்டுவிட்டு
அதே வீச்சில் இன்னொரு
பொருளைத் தொட
அனுமதியில்லை. அதோடு,
"பத்து" என்பது "பழையது"
என்று நினைக்கிறேன்.
ஆனாலும் தெளிவில்லை.
படிப்புரை
------------
"எச்சம்" என்ற சொல் ஆதிகால
தமிழ் இலக்கியத்தில்
இருப்பது எனக்குத்
தெரியும். எனவே அதையே
திரும்பவும் இங்கே இந்த
இழையில் சொல்லத்
தேவையில்லை.
வேண்டுகோள்
------------------
நான் வேண்டிய
கேள்விகளுக்கு உதவும்
வகையில் மட்டுமே உங்கள்
குறிப்பைக் கொடுங்கள்.
என் கேள்விகள்:
1. "எச்சில்" என்றால் என்ன?
2. "பத்து" என்றால் என்ன?
3. யார் யார் எங்கே எங்கே
இந்த எச்சில்/பத்து
சமாச்சாரத்தைச்
சரியாகப் புரிந்துகொண்டு
கடைப்பிடிக்கிறார்கள்?
4. நீங்கள் இந்த எச்சில்/
பத்து சமாச்சாரத்தைக்
கடைப்பிடிக்கிறீர்களா?
மேலே கேட்ட
கேள்விகளுக்கு விடை
சொல்லும் முறையில்
மட்டும் பதில்
சொல்லுங்கள், பயனடைவேன்.
அன்புடன்,
ராஜம்
மின் தமிழ்க் குழுமத்தில் ராஜம் அம்மா ((தமிழறிஞர்) இத்தகைய கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கு எங்களில் சிலர் பதில் எழுதி இருந்தோம். அவை வரும் நாட்களில். அதற்குள்ளாக இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்க நினைப்பவர்கள் அளிக்கலாம். பா.ராகவன் எழுதியது குறித்தும் கருத்தளிக்கலாம்.
பதில்களுக்காக நானும் காத்திருக்கிறேன்.
ReplyDelete:)))))))))
நீங்க சொல்லுங்க!
Deleteரொம்ப நேரம் யோசிச்சேன்... எச்சில் என்பது உமிழ்நீர்தான். அதன் நன்மைகள் பல. ஆனால் நம் எச்சில் அடுத்தவர்மீது படும்போது அது நோய்களை உண்டாக்க காரணமாகிறது. எனவே எச்சில்பட்ட பொருள்களை தொட அனுமதிப்பதில்லை. மேலும் காறி உமிழ்வதுகூட எச்சில்தான். அடுத்தவரை அவமானப்படுத்துவதற்காக அப்படி செய்கிறார்கள். இதற்குமேலும் நீங்கள் பதில் போடும்போது நானும் தெரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.
ReplyDeleteவிச்சு, நான் சொல்லும் எச்சில் கலப்பு என்பதே வேறே!
Deleteஇதை நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ( பிராமணப் பள்ளிக்கூடம் ) கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. யாராவது விளக்கம் அளித்தால் தெரிந்து கொள்வேன்.
ReplyDeleteவாங்க தேனம்மை, முதல் வரவு?? வரவுக்கு நன்றி.
Deleteகாத்திருக்கிறேன்...
ReplyDeleteவாங்க டிடி, நன்றி.
Deleteஎன் மாமியார் நம்ம சாப்பிட்ட தட்டிலிருந்து அடுத்தவர் தட்டுக்கு ஏதாவது உணவை பரிமாறி கொள்வதை எச்சில் என்பார், சாப்பாட்டு கையால் எதையும் தொடக்கூடாது. என்பார்கள்.காப்பி, பால், தண்ணீர் எல்லாம் அண்ணாந்து குடிக்க வேண்டும் எச்சில் செய்து குடிக்க கூடாது. என்பார்கள்.
ReplyDeleteபள்ளியில் நாங்கள் எல்லாம் (தோழிகள்) வட்டமாய் அமர்ந்து மதிய வேளையில் உணவுகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொள்வோம். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ஆசிரியர் எங்கள் பக்கம் வந்தால் என்ன கொண்டு வந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டு அவர்களுக்கு பிடித்த உணவு யாரிடமாவது இருந்தால் எடுத்து சாப்பிடுவார். எச்சில் என்று எல்லாம் சொன்னது இல்லை.
’காக்கா கடி கடித்து கொடுத்த கமர்கட்டு மிட்டாய்’ என்று சொல்லும் முறை ஒரு துணியில் வைத்துக் கொண்டு கடித்து பகிர்ந்து உண்டு இருக்கிறோம் பள்ளியில்..
விரதம் என்றால் பழையதை தொடமாட்டார்கள் அது பத்து என்பார்கள்.
சாதம் தொட்ட கையால் நெய், உப்பை தொடக்கூடாது. என்பார்கள் பத்து பட்டு விட்டால் இறைவனுக்கு உணவு செய்யும் போது அதை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
என் அப்பாவீட்டில் சமையல்க்காரர் (தவசுபிள்ளை) தோசை சுட்டு எடுத்து வரும் போது அண்ணன் , தமிகள் எல்லாம் சுட சுட ஒருத்தருக்கு ஒருவர் பாதி பாதியாக எடுத்துக் கொள்வார்கள் சாப்பாட்டு வேளையில் மகிழ்ச்சியாய் ஆனந்தமாய் பகிர்ந்து சாப்பிடுவார்களாம். எச்சில், பத்து எல்லாம் நடக்கதாம் அப்பா சொல்வார்கள்.
சுத்தம், சுகாதாரத்திற்கு என்று கடைபிடிக்க சொல்லப்பட்டது. இவைகள்.
காக்காய்க் கடி நாங்களும் கடிச்சுப் பகிர்ந்திருக்கோம். மற்றபடி நீங்க சொல்லி இருப்பது எல்லாம் சரியே. எங்க வீட்டில் (அப்பா வீட்டில்) சமைச்சு நிவேதனம் பண்ணினாலும் கூட வாயில் போட்டுப் பார்க்க முடியாது. உப்பு சரியா இருக்கானு கூடப் பார்க்கக் கூடாது. :))) அப்படி ஒரு விதி! அந்த வழக்கம் இப்போவும் தொடருதா! எங்க ரெண்டு பேருக்கும் உப்புப் போடாமல் என்னிக்காவது மறந்து போனால் அன்னிக்கு ஒரு குருக்ஷேத்திர யுத்தமே நடைபெறும்.
Deleteஎன் கணவர் பள்ளி, கல்லூரியில் தன் டிபன்பாக்ஸ் உணவை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்களாம். அப்படி பகிர்ந்து கொள்ள நேர்ந்தால் சாப்பிடுவதற்குமுன் எடுத்துக் கொள்ள சொல்வார்களாம். அவர்கள் அம்மாவின் சொல்படி நடந்து கொண்டு இருந்து இருக்கிறார்கள்.
ReplyDeleteநாங்களும் அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை. பகிர்ந்தாலும் சாப்பிடும் முன்னர் தான் எடுத்துக் கொள்ளச் சொல்லுவோம்.
Deleteஇதை இப்போதுதான் படிக்கிறேன். நான் 9வது படிக்கும்வரை வளர்ந்த சூழ்'நிலையை அப்படியே இந்தக் கேள்விகள் எனக்குக் கண்முன் கொண்டுவந்தன.
ReplyDeleteஎச்சில் - நம்மிடம் இருக்கும் உணவுப்பொருள் ஒரு பகுதியாவது நம் வாயில் போட்டுக்கொண்டுவிட்டோமானால் அது எச்சில். என் தட்டில் (இலையில் என்பதுதான் சரி. இது வாழை இலை-விசேஷ நாட்களில், அது கழிந்த நாட்களில் மிச்சம் இருக்கும் சருகு, இல்லை என்றால் தையல் இலை. சிறு குழந்தைகளுக்கு வாதா மர இலையோ அல்லது வாழைப்பூ சருகோ) உள்ள மாம்பழம் நான் கையை வைத்துவிட்டால், எச்சிலாகிவிடும். அடுத்தவர் இலையில் (அது சுத்திகரிப்பு நடக்காத போதிலும்..புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்) உள்ள எதுவும் எச்சில்தான்.
பத்து - அன்று செய்த உணவு, அதை ஹேண்டில் செய்பவர் மடியாக இருக்கும்வரை (அதாவது குளித்து உடுத்த துணிமீது பழைய துணியோ, மடியாக இல்லாதவர் படாதவரை) சுத்த உணவு. சுத்தமில்லாமல் தொட்டுவிட்டால் அது பத்து. தளிகை பண்ணுபவர், பரிமாறுபவர் (இவர்கள் மடியாக இருப்பார்கள்) தவிர வேறு யாரும் உணவைத் தொடமாட்டார்கள். (குழந்தைகளும் கூட). குழந்தைகளும் உடையுடன் இருந்தால் (அவர்கள் மடியைக் கடைபிடிக்க மாட்டார்கள் என்பதால்) அவர்களும் மடியுடன் இருப்பவர்களைத் தொடக்கூடாது. நாங்கள்லாம், குளித்துவிட்டு வந்தால், கொடியில் காயப்போட்டுள்ள வஸ்திரங்களைத்தான் உடுத்திக்கொள்வோம். முன்பெல்லாம், matக்குப் பதிலாக சிறிய சாக்குகளை அறைவாசலில் வைத்திருப்பார்கள். அதன்மீதும் படக்கூடாது. பெண்கள், மடியோடு, உளுந்து இதெல்லாம் அரைத்து, அப்பளாம் இடுவார்கள். அப்புறம் காய்ந்த பிறகு, மடியோடு ஒரு பாத்திரத்தில் (தூக்கில்) வைத்துவிடுவார்கள். மடியோடு இருக்கும்போதுதான் இந்தப் பாத்திரத்தைத் திறந்து அப்பளாம் அன்றைய உபயோகத்துக்கு எடுத்துக்கொள்வார்கள். தவறுதலாக (இது நடக்காது. நடந்தால் வீட்டுப்பெண்களுக்குத்தான் கஷ்டம்) இந்தப் பாத்திரத்திலோ அல்லது அப்பளாத்தையோ மடி இல்லாதவர்கள் தொட நேர்ந்தால், அன்றிலிருந்து அதை வீட்டு உபயோகத்துக்கு (அதாவது காலையில் செய்யும் உணவுக்கு.. அதை ஆராதனைக்கு உபயோகப்படுத்துவார்கள்) அப்பளாத்தை உபயோகிக்க முடியாது. அதாவது வீட்டுப் பெரியவர்கள் அதை உண்ணமுடியாது. வீட்டிலும் கட் பண்ணிய காய்கறிகளை வாங்கமாட்டார்கள். எதுவுமே முழுதாகத்தான் வாங்குவார்கள். (பூசணி, பலா போன்றவை). ஆங்கிலக் கறிகாய் உபயோகத்தில் கிடையாது (உருளை, கேரட், கோஸ், தக்காளி... + வெங். பூண்டு). எனக்குச் சிறு வயதில் சொல்லிக்கொடுத்த பாடம்.. உயிருக்கு ஊறு நேருமாயின், அல்லது பசியினால் தளர்ந்துபோகும் சமயம், யாரிடமும் உப்பு சேர்க்காத அன்னமும், தயிரும், தண்ணீரும், பாலும் வாங்கிக்கொள்ளலாம். (எங்களுக்கு அப்போது பாலும், தயிரும் மற்றவர்கள்தான் கொண்டுவந்து கொடுப்பார்கள். அதற்கு முந்தைய காலகட்டங்களில், அதாவது அம்மா வழி தாத்தா வீட்டில், பசுக்களை வீட்டிலேயே வளர்ப்பார்கள்)
இன்னும் நிறைய எழுதலாம். இப்படி ஒரு life ஒருகாலத்தில் வாழ்ந்தேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
எச்சிலுக்கும் பத்துக்கும் நான் கொடுத்த விளக்கம் சரியா?
இதைக் குறித்து எழுத ஆரம்பித்துப் பின்னர் பாதியிலே விட்டுப் போயிடுது. ஆனால் இந்த எச்சிலால் வியாதி பரவுதுங்கற காரணத்தை எல்லோரும் ஒத்துக்கணும்னு என்னுடைய எண்ணம். அதுக்காகத் தான் எழுத ஆரம்பித்தேன். மடி, ஆசாரம் என்பதெல்லாம் தனி! எச்சல் முக்கியமாகக் கலக்கக் கூடாது. எனக்கு வெளியே போகையில் தேநீர்க்கடைகளில் கொடுக்கும் கண்ணாடி தம்பளரிலோ அல்லது பேப்பர் கப்பிலோ, ப்ளாஸ்டிக் கப்பிலோ தேநீரோ காஃபியோ வாங்கிக் குடிச்சால் உடனடியாக (ஆச்சரியமா இருந்தாலும் இதான் உண்மை) வாயில் புண்ணாகிவிடும். ஆகவே இப்போதெல்லாம் ஒரு தம்பளரும் டபராவும் (வட்டை, தம்பளர்) எடுத்துப் போய்விடுகிறேன். அதிலே வாங்கிக் குடிப்பேன்.
Deleteஎன் அண்ணா வீட்டிலும் எங்க வீட்டிலும் கூடியவரை இந்த எச்சில் கலக்காமல் பார்த்துக் கொள்கிறோம். வடமாநிலங்களில் ஆங்காங்கே குடிநீர்ப் பானை வைத்திருப்பார்கள். அந்தப் பானையிலிருந்து தம்பளரால் மொண்டு குடித்துவிட்டுப் பின்னர் அதையே மீண்டும் பானையில் போடக் கூடாது. அநேகமாய்த் தண்ணீரை ஒரு நீண்ட பிடியுள்ள தம்பளரால் எடுத்து நம் கையிலோ அல்லது பாத்திரத்திலோ விட ஓர் ஆள் நியமித்திருப்பார்கள். அப்படி நாம் குடித்த தம்பளரைப் போட்டுவிட்டால் உடனே அந்தத் தண்ணீரைக் கீழே ஊற்றி விடுவார்கள். மற்றவர் குடிக்கக் கொடுக்க மாட்டார்கள்.
Delete