முதல் முதல் தனுஷ்கோடிபோகையிலே அந்த வண்டி மணல், நீர், சாலை எல்லாத்துக்கும் பழகினதாலே மணலில் போகறச்சேயோ, தண்ணீரில் போகும்போதோ ஒண்ணும் கஷ்டமா இல்லை. ஆனால் இதுவோ! ஆட்டம்னா ஆட்டம் ஒரே ஆட்டம். வண்டி தான் ஆடுதுன்னா உள்ளே நாமும் மேலும் கீழும் பக்கவாட்டிலும் குதிக்க வேண்டி இருக்கே! அதோட இல்லாமல் திடீர்னு ஒரு பக்கமாச் சாய்ந்துட்டு ஒரே சக்கரத்தில் வண்டி ஓடுது! ஆங்காங்கே இருந்த சேற்று மணலில்(புதை மணல்?) வண்டிச் சக்கரம் புதைந்து போய்விடுமோனு பயம். மிஞ்சி மிஞ்சிப் போனால் அரைமணிப் பயணம். ஆறு மணிப் பயணமாகத் தெரிந்தது. வழியில் இரண்டு வண்டிகள் மணலில் புதைந்து சக்கரத்தை எடுக்கப் போராடிக் கொண்டிருக்க எங்கள் ஓட்டுநர் எங்க கைலை யாத்திரைக்கு வண்டி ஓட்டியவருக்குத் தம்பி போல! உடனே எங்கள் வண்டியை நிறுத்திட்டு அங்கே போய் உதவிவிட்டே வந்தார். இம்மாதிரி நான்கு, ஐந்து பேருக்கு உதவி செய்தார்.
ரொம்பக் கஷ்டத்தோடு தான் அங்கே போய்ச் சேர்ந்தோம். அங்கே தான் போன பதிவில் பார்த்த கோயில்களைப் பார்த்தேன். போதாததுக்குக் கடைகள் வேறே. குடி தண்ணீர் , டீ, காஃபி, ஒரு சில குறிப்பிட்ட நொறுக்ஸ் என விற்பனைக் கடைகள். நசநசவென்று கூட்டம்! :( டிரைவர் எல்லோரையும் இறங்கிப் போய்ப் பார்த்துவிட்டு அரை மணி நேரத்துக்குள் திரும்பி வரும்படி சொன்னார். அதுக்கு மேல் அங்கே பார்க்கவும் எதுவும் இல்லை. அங்கே எதையும் வாங்கிச் சாப்பிடவும் மனம் இல்லை. சுகாதாரமான நீராக இருக்குமா என்ற சந்தேகம்! ஒரு கோடியில் புதைந்த தண்டவாளங்கள், பழைய சர்ச், போஸ்ட் ஆஃபீஸ், ரயில்வே ஸ்டேஷனுக்குத் தண்ணீர் நிரப்பும் பெரிய தொட்டி போன்றவை தான் புயலின் மிச்சங்கள். ஆகவே நான் பார்க்கப் போகவில்லை.
மேலும் முதல் நாள் இரவு முழுதும் தூங்காததாலும் ஶ்ரீரங்கத்திலிருந்து காரில் வரும்போதும் தூங்காமல் காவல் காத்து வந்ததாலும் எனக்கு அலுப்பு மேலிட்டது. பொதுவாகவே எனக்குப் பயணங்களில் நல்ல தூக்கம் இருக்காது. அதுவும் காரில் சென்றால் கட்டாயமாய்த் தூங்க மாட்டேன். ஓட்டுநருக்குக் காவல் போல நான் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டே வருவேன். ஆகவே பையரையும் மருமகளையும் போய்ப் பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் வண்டியிலேயே தங்கினோம். சில நிமிடங்களில் மருமகளும் அங்கே பார்க்கும்படி எதுவும் இல்லைனு வந்துவிட, நாங்கள் மூவர் மட்டும் வண்டியில் அமர்ந்திருந்தோம்.
பையர் சர்ச் பக்கமாய்ப் போய்ப் படமெல்லாம் எடுத்து வந்தார். அவரை அனுப்பச் சொல்றேன் அந்தப் படங்களை மட்டும். மற்றவை நான் எடுத்தவை கீழே.
ரொம்பக் கஷ்டத்தோடு தான் அங்கே போய்ச் சேர்ந்தோம். அங்கே தான் போன பதிவில் பார்த்த கோயில்களைப் பார்த்தேன். போதாததுக்குக் கடைகள் வேறே. குடி தண்ணீர் , டீ, காஃபி, ஒரு சில குறிப்பிட்ட நொறுக்ஸ் என விற்பனைக் கடைகள். நசநசவென்று கூட்டம்! :( டிரைவர் எல்லோரையும் இறங்கிப் போய்ப் பார்த்துவிட்டு அரை மணி நேரத்துக்குள் திரும்பி வரும்படி சொன்னார். அதுக்கு மேல் அங்கே பார்க்கவும் எதுவும் இல்லை. அங்கே எதையும் வாங்கிச் சாப்பிடவும் மனம் இல்லை. சுகாதாரமான நீராக இருக்குமா என்ற சந்தேகம்! ஒரு கோடியில் புதைந்த தண்டவாளங்கள், பழைய சர்ச், போஸ்ட் ஆஃபீஸ், ரயில்வே ஸ்டேஷனுக்குத் தண்ணீர் நிரப்பும் பெரிய தொட்டி போன்றவை தான் புயலின் மிச்சங்கள். ஆகவே நான் பார்க்கப் போகவில்லை.
மேலும் முதல் நாள் இரவு முழுதும் தூங்காததாலும் ஶ்ரீரங்கத்திலிருந்து காரில் வரும்போதும் தூங்காமல் காவல் காத்து வந்ததாலும் எனக்கு அலுப்பு மேலிட்டது. பொதுவாகவே எனக்குப் பயணங்களில் நல்ல தூக்கம் இருக்காது. அதுவும் காரில் சென்றால் கட்டாயமாய்த் தூங்க மாட்டேன். ஓட்டுநருக்குக் காவல் போல நான் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டே வருவேன். ஆகவே பையரையும் மருமகளையும் போய்ப் பார்க்கச் சொல்லிவிட்டு நாங்கள் வண்டியிலேயே தங்கினோம். சில நிமிடங்களில் மருமகளும் அங்கே பார்க்கும்படி எதுவும் இல்லைனு வந்துவிட, நாங்கள் மூவர் மட்டும் வண்டியில் அமர்ந்திருந்தோம்.
பையர் சர்ச் பக்கமாய்ப் போய்ப் படமெல்லாம் எடுத்து வந்தார். அவரை அனுப்பச் சொல்றேன் அந்தப் படங்களை மட்டும். மற்றவை நான் எடுத்தவை கீழே.
வில்லைப் போல் வளைந்திருப்பதால் தனுஷ்கோடி என்னும் பெயர் பெற்ற தனுஷ்கோடி கடலின் மூன்றுவிதக் கோணங்கள். இங்கேயும் பித்ருக்களுக்குக் கர்மா செய்வார்கள். நாங்கள் முதல்முறை காசியாத்திரை பூர்த்தி அடைய வேண்டி சென்றபோது இங்கே தான் செய்தோம். இப்போதும் ஒரு சிலர் செய்து கொண்டிருந்தனர்.
மாதிரிக்கு ஒரு கடை. இம்மாதிரிக் கடைகள் கடற்கரை ஓரங்களில் சர்வ சகஜமாகக் காணக் கிடைக்கும். மற்ற தின்பண்டக் கடைகளை எல்லாம் படம் எடுக்கவில்லை
நாங்கள் வண்டியில் உட்கார்ந்திருந்தபோதே ஒவ்வொருத்தராக வரத் தொடங்கினார்கள். அப்போதே மணி பகல் ஒன்றரைக்கு மேல் ஆகிவிட்டது. சர்க்கரையை உடம்பில் வைத்திருக்கும் நம்ம ரங்க்ஸுக்குப் பசி. நல்லவேளையாக பிஸ்கட், பழம் கொண்டு போயிருந்தோம். என்றாலும் அவை எல்லாம் யானைப் பசிக்குச் சோளப் பொரி போல்! எப்போடா ராமேஸ்வரம் போவோம்! அறை எடுத்துக் கொண்டு சாப்பிடப் போவோம்னு காத்திருந்தார். அநேகமாக அனைவரும் வந்துவிட்டனர். அப்போது ஓர் இளம் ஜோடி வண்டி வரை வந்துவிட்டு என்னமோ மறந்ததை எடுக்கப் போகிறவர்கள் போல மீண்டும் கடற்கரைக்குப் போனார்கள். சரி, வந்துவிடுவார்கள் என நினைத்தால் மணி இரண்டும் ஆகிவிட்டது. அவர்கள் வரவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போல் ஆகியும் அவர்கள் வரவில்லை என்றதும் அனைவருக்கும் கொஞ்சம் கிலியுடன் கூடிய கவலையும் கோபமும் வந்தது. வண்டியின் ஓட்டுநர் அவர்களைத் தேடிக் கொண்டு சென்றார்.
அவர் போயும் அரை மணி நேரம் ஆகவே அனைவரும் தவித்துக் கொண்டிருந்தோம். எல்லோருக்கும் பசி. சிறு குழந்தைகளும் நாலைந்து குழந்தைகள். அழத் தொடங்கிவிட்டன. கடைசியில் ஏதோ புதரில் அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டிருந்தார்களாம். அவர்கள் இருவரையும் ஓட்டுநர் அழைத்து வந்ததும் அனைவரும் அவர்கள் மேல் பாய்ந்தார்கள். ஆனால் இருவரும் எவரையும் லக்ஷியம் செய்யவில்லை. வண்டியில் அமர்ந்து விட்டதைத் தொடர்ந்தனர். வண்டியும் கிளம்பியது. வந்த போது இருந்ததை விட இப்போது கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது. அல்லது எங்களுக்கு ஆட்டம் பழகிவிட்டது. இருபதே நிமிடங்களில் வந்துவிட்டோம். வந்து இறங்கி எங்கள் காரைக் கண்டுபிடித்து ராமேஸ்வரம் நோக்கி விரைந்தோம்.
.
தனுஷ்கோடியில் அப்பா வேலை பார்த்த போது எனக்கு ஒரு வயது அல்லது இரண்டு வயது இருக்கும் அப்போது பார்த்து இருப்பேன் நினைவு இல்லை..!979 ல் காசிக்கு போய் விட்டு ராமேஸ்வரம் போன போது தனுஷ்கோடியை பார்க்கவில்லை. ஒரு முறை சென்று பார்க்க வேண்டும்.
ReplyDeleteவாங்க கோமதி. போய்ப் பாருங்க. அங்கே ஒண்ணும் இல்லை. :( கடல்திடீர்னு ஆவேசம் வந்தாப்போல் உள்ளே வரும். அதுவும் மத்தியானத்துக்கு அப்புறமா.
Deleteஅங்க பார்க்க ஒண்ணுமில்லை. தனுஷ்கோடி போவது சங்கல்ப ஸ்நானம் செய்வதற்கு. செய்யலையா?
ReplyDeleteவாங்க வா.தி. நாங்க விசாரிச்சதில் நாங்க போன விஷயத்துக்கான சங்கல்ப ஸ்நானம் சேதுவில் தான் என்று சொன்னார்கள். ஆகவே சேதுவில் தான் சங்கல்ப ஸ்நானம் நடந்தது. :)
Deleteமாமல்ல புரத்தில்தான் சில்மிஷ சோடிகள் அதிகம் என்று நினைத்தேன்! தனுஷ்கோடியையும் விடவில்லையா?
ReplyDeleteஅதை ஏன் கேட்கறீங்க! இப்போல்லாம் எங்கேயும் பார்க்க முடியுது! :(
Deleteபடித்தேன் ரசித்தேன். கடலின் புகைப்படம் அழகுதான், ஆனால் பயமானதும் கூட! எனக்கு ஒரு கனவு வந்தது முன்னர். கண்ணுக்கெட்டியவரை நீர்... கடல்தான் என்றுதான் நினைவில் பதிந்தது. அதிலிருந்து எப்படி வெளிவரப் போகிறோம் என்ற பயமே கனவு. இதற்கு கனவுப்பலனாய் ஏதேதோ சொல்லலாம். எனக்கு அந்த சமயம் எந்த பயமோ, கவலையோ இல்லை (அந்த சமயம்) அனால் கனவு மட்டும் நினைவில் தங்கி விட்டது!
ReplyDelete//ஆனால் இருவரும் எவரையும் லக்ஷியம் செய்யவில்லை. வண்டியில் அமர்ந்து விட்டதைத் தொடர்ந்தனர்.//
ஹா...ஹா...ஹா....
இளமை, இனிமை!!
ம்ம்ம்ம்ம்ம், கனவு பலன் புத்தகம் எங்கே இருக்குனு தேடணும்! :))))
Deleteஅது சரி, அவங்களுக்கு இளமை இனிமையா இருக்கலாம். எத்தனை பேர் தவிச்சோம்! :(
பல வருடங்களுக்கு முன்னர், அங்கே சென்ற நினைவு. சமீபத்தில் செல்ல வில்லை. செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
ReplyDeleteதொடர்கிறேன்.
போய்ப் பாருங்க வெங்கட்.
Delete1964 டிசம்பரில் புயல். தனுஷ்கோடி புயல் என்றே அது அழைக்கப்பட்டது. தனுஷ்கோடி வெள்ளத்தில் கிட்டத்தட்ட மூழ்கியே விட்டது. பாம்பன் பாலத்தில் நிறுத்தப்பட்ட நிலையிலேயே ரயில் ஒன்று கவிழ்ந்தது. சோழர்கள் காலத்து கலங்கரை விளக்கம் சிதைந்தே போய் விட்டது. ஆயிரத்துக்கும் மேலான உயிர்ச்சேதம். நான் அப்பொழுது புதுவையில் இருந்தேன். அங்கேயும் புயலின் பாதிப்பு எக்கச்சக்கம். கடற்கரைப் பக்கம் யாரும் சென்று விடாமலிருக்க
ReplyDeleteபாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
தனுஷ்கோடி புயலை நினைத்தால் ஜெமினி கணேசன் நினைவு வரும். ஜெமினியும் சாவித்திரியும் அந்தப் புயலில் சிக்கி அதிசயமாய் தப்பித்தவர்கள். புயலில் சிக்கிய நேரத்தில் எளிய மக்களுக்கு ஜெமினி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வாங்க ஜீவி சார், ஆமாம், சாவித்திரிக்கு அதுக்கப்புறமாத் தான் பையர் பிறந்தார் என்றும் நினைக்கிறேன்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
நானும் சென்று வந்த ஒரு உணர்வு.. எழுதிய விதம் நன்று..பகிர்வுக்கு நன்றி..
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன், உங்கள் பதிவையும் மத்தியானமா படிக்கிறேன்.
Delete'விவேக்' சொன்னது போல் புதர் ஒழிப்பு வாரம் என்பதை செய்ய வேண்டும் போல... ஹா... ஹா...
ReplyDeleteபுதரை எங்கே ஒழிக்கிறது! அப்படியே ஒழிச்சாலும் வேறே ஏதானும் கண்டு பிடிப்பாங்க! :(
Deleteதனுஷ்கோடி ஒரு அமானுஷ்யமாய் இருக்கும். இப்போ மாறிவிட்டது போல. பித்ரு தர்ப்பணத்துக்கும் தனுஷ்கோடிக்குச் செல்வார்கள் என்று அங்கிருந்த கோவில் அர்ச்சகர் சொன்னார். நாங்களும் சேதுவில் தான் சங்கல்ப ஸ்நாநம் செய்தோம். பிறகுதான் திருமணங்கள் நிச்சயமாயின.
ReplyDeleteஆமாம் வல்லி, நாங்க 99 ஆம் வருடம் போனப்போ அமாநுஷ்யமாகத் தான் இருந்தது. இப்போப் பார்த்தால் ஜன நெரிசல் தாங்கலை. ஒரு பள்ளிக் கூடமும் புதிதாய் ஒரு சர்ச்சும் வந்திருக்கு.
Deletewhere in sethu? the original agni theertam is in danushkoti. after it was destroyed they started doing it in rameswaram itself!
ReplyDeleteம்ம்ம்ம் அப்படியா வா.தி! தெரியலை. ஆனால் நாங்க பலரிடமும் விசாரிச்சதிலே சேதுவிலே தான் சங்கல்ப ஸ்நானம் என உறுதி செய்தார்கள். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்திலும் ஸ்நானம் நடந்தது.
Deleteஇந்தப் பதிவைப் படிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கு உங்களின் கைலாச யாத்திரை அனுபவம்தான் நினைவுக்கு வந்தது! நீங்களும் அதையே எழுதி இருக்கிறீர்கள். நல்ல த்ரில்லிங் அனுபவம். கூடவே ரொமான்ஸும்! தனுஷ்கோடிக்கு இன்னும் போகவில்லை. போகவேண்டிய லிஸ்டில் இருக்கிறது.
ReplyDeleteவாங்க ரஞ்சனி, உங்களோட இந்தப்பின்னூட்டத்தை இப்போத் தான் பார்க்கிறேன்.
Delete