படத்துக்கு நன்றி கூகிளார்.
அண்ணன்மார்களே, தம்பிமார்களே, எல்லோருக்காகவும் காக்காய்ப்பிடி, கனுப்பிடி வைச்சாச்சு. வஸ்த்ரகலா கொடுப்பவங்க வஸ்த்ரகலாவும், பரம்பரா கொடுக்கப் போறவங்க பரம்பராவும், சாமுத்ரிகா கொடுக்கப் போறவங்க சாமுத்ரிகாவும், இல்லை, பிரைடல் செவன் தான் கொடுப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்க அதுவும், ரெயின்போ கலர்ஸ்னு சொன்னால் அதுவும் எதுவானாலும் ஓகேப்பா. நேத்திக்கு நிறையப் பேர் வந்து பொங்கல் சாப்பிட்டிருப்பதும் தெரிஞ்சது. இப்படி எல்லாம் மொக்கைப் பதிவு போட்டால் தான் மக்கள் வருவாங்க போல! :P
கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே,
சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு "
சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க. சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு. என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு! அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான். அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்; இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும் என்பதற்கு வாழ்த்துவதே,
"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது. அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.
தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.
டிஸ்கி: கூடவே கனுவைப் பத்தியும் அதில் மஞ்சள் கீறும்போது சொல்லும் ஒரு வாக்கியம் குறித்தும் ஒரு சின்ன விளக்கம். மீள் பதிவு. :)
டிஸ்கி: கூடவே கனுவைப் பத்தியும் அதில் மஞ்சள் கீறும்போது சொல்லும் ஒரு வாக்கியம் குறித்தும் ஒரு சின்ன விளக்கம். மீள் பதிவு. :)
என்னவோ மந்திர, தந்திர வேலையெல்லாம் கூகிள் செய்யுது. பதிவை அப்டேட் செய்யும்போது படங்களே தெரிவதில்லை. அல்லது வெளியிடும்போது சேர்க்கும் படங்களில் பாதி தான் வருது! உள்ளே போய் அப்டேட் செய்கையில் எந்தப் படமும் பார்க்க முடியலை! என்ன காரணம்? இது போல் பலமுறை நடந்திருக்கு! :))))
ReplyDeleteஇம்புட்டு அண்னன் தம்பிகளை பெற்றிருக்கும் மகராசி வாழ்க வாழ்க. ஒரு தம்பியின் கூக்குரல். இதுக்காகவே ஒரு சா ப கொடுக்கனும்..
ReplyDeleteஅனுப்புங்க, அனுப்புங்க விக்னேஷ்ஜி, விலாசம் தெரியுமில்ல? :)
Deleteநல்லவங்களூக்கு அப்படி எல்லாம் ஆகாதே? :P
ReplyDeleteவா.தி. புராண, இதிஹாசங்களில் எல்லாம் பாருங்க. நல்லவங்களுக்குத் தான் சோதனையே வருமாக்கும்! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? :P :P :P :P :P
Deleteகநுப்பொங்கல் வாழ்த்துகள் கீதாமா. எங்க மதுரைப் பாட்டியும் சொல்லும்போது எனக்கும் வெட்கமாக இருக்கும். உங்கள் விளக்கம் மிக அருமை. ஆஜிப்பாட்டி வாழ்த்துகையில் இரும்புதாளியாக் கட்டிண்டு நன்றாக இரு என்று முகம் பூராவும் மஞ்சள் தேய்ப்பார்கள். கனா போல இருக்கிறது. இங்கு காக்காவோ புறாவொ வரக் காத்திருக்கிறேன். கனுப்பொங்கல் வாழ்த்துகள் ஆஜி சொல்படி நீண்ட நல வாழ்வு வாழவேண்டும்
ReplyDeleteவாங்க வல்லி, வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. இது முன்னால் எப்போவோ எழுதியது. மீள் பதிவாகப் போட்டேன். :)
Deleteநல்ல விளக்கம். :))))
ReplyDeleteவாங்க வெங்கட், நன்றி.
Delete
ReplyDeleteவிளக்கம் அற்புதம். நல்ல அர்த்தம் கொடுக்கக் கூடிய எத்தனை சமாச்சாரங்களை அனர்த்தமாக அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரிந்தது.
பொங்கல் குறித்த சென்ற பதிவின் போதே சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லாமல் விட்டது.
கனுப்பிடி, கனுப்பொடி என்று தட்டச்சில் மாறி வந்திருக்கிறது, பாருங்கள்.
'நாளை கனுப்பொடிக்கு வேண்டும்'
ஜீவி சார், எங்கே மாறி வந்திருக்குனு புரியலை! தேடிப் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. அல்லது நான் கவனிக்கவில்லை. :)
Deleteசென்ற 15-ம் தேதியிட்ட பதிவில்.
Deleteபுரிந்துகொண்டேன். தெரிந்து கொண்டேன். வஸ்த்ரகலா சித்ரகலா எது வேணுமோ வாங்கிக்குங்க...... ஹிஹிஹி.... மறக்காம காசு எடுத்துட்டுப் போங்க!
ReplyDelete:))))))))))))))))
@ஶ்ரீராம், ரொம்ப மோசம்! இப்படியா நழுவறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எல்லாரும் ரொம்பவே உஷாரா இருக்காங்கப்பா! இதிலே விக்னேஷ் மட்டும் தான் சாமுத்ரிகா தரதாச் சொல்லி இருக்கார். மத்த அண்ணன், தம்பி எல்லாம் கஞ்சூஸ்! :)))))
Deleteவிளக்கம் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்!
Deleteஉங்களால் தான் இப்படி விளக்க முடியும்...
ReplyDeleteஹிஹிஹி, டிடி, இது உண்மையான விளக்கம் தான்! என் அப்பாவின் சித்தியும் சொல்லி இருக்கிறார். என் பாட்டியும் சொல்லி இருக்கிறார். என் பாட்டி(அம்மாவின் அம்மா) ஐந்து வயதில் கல்யாணம் ஆனவர்! :)
Deleteபதிவும், பாட்டு விளக்கமும் அருமை.
ReplyDeleteநன்றி கோமதி அரசு!
Delete