நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இன்னும் ஒரு வாரத்துக்குக் கொஞ்சம் வேலை மும்முரம் இருக்கும். அதுக்கு அப்புறமாப் பழைய குருடி, கதவைத் திறடி தான். :) இங்கே உம்மாச்சிங்க அனைவரும் ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்காங்க. எல்லோரையும் போய் ஒரே நாளில் நாலைந்து பேர் எனப் பார்த்ததில் என்ன அருளணும், எப்படி அருளணும்னு அவங்களுக்குப் புரியலை! மேலிடத்துக்குக் கேட்டிருக்காங்க போல.
கைலையிலிருந்தும், வைகுண்டத்திலிருந்தும், சத்யலோகத்திலிருந்தும் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் எட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, இங்கே உள்ள அவங்களோட அம்சங்களான உம்மாச்சிங்களும், நவகிரஹங்களும் திருதிரு! ஒருத்தருக்கொருத்தர் அவசர ஆலோசனை. கொளஞ்சியப்பனோ உருவமில்லாமல் மறைந்திருந்து குரல் மட்டும் கொடுக்க, பூவராஹரோ, பூமாதேவியை தூக்கிக்கொண்டு மேலே வந்து பார்க்கிறார்.
இத்தனைக்கும் நடுவில் நடராஜர் எந்தக் கவலையுமில்லாமல் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். திருவெண்காட்டு நங்கை எங்க ஊருக்கும் வாங்க என அழைக்க, அங்கிருந்து ஒருவழியாக் குடந்தை ஜோசியரைப் பார்க்கலாம்னு போனால், முடியலை! அலுப்பு. நேரே நம்ம ஊருக்கே போயிடலாம்னு வைகுண்ட ஏகாதசியும் அதுவுமாப் பெருமாளைப் பார்க்க, அவரும் ரொம்பநாள் கழிச்சு பார்த்த சந்தோஷத்தில் கேசரி, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்னு கொடுத்து உபசரித்தார். அங்கிருந்து அவரோட அம்சம் ஆன மாரியம்மனைப் பார்த்தால் அங்கேயும் சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் கிடைச்சது.
பின்னர் சற்குணேஸ்வரரையும், சர்வாங்கத்தையும் வந்து பார்த்து விட்டு அவங்க கிட்டே விடைபெற்றுக் கொண்டு கர்ப்பரக்ஷகியைப் பார்க்கணும்னு நினைச்சால் வழியிலேயே ஶ்ரீநிவாசப் பெருமாள் என்னை வந்து பார்னு சொல்ல, கல் கருடன் மாதிரி கனத்திருந்த என்னோட உடலைத் தூக்கிக் கொண்டு மேலே ஏறுவது முடியாதுனு தோண, வழியிலேயே வீதி உலா வந்து பெருமாள் அருள் பாலித்தார். மதியச் சாப்பாட்டைத் தியாகம் செய்துட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு கரு காத்த நாயகியைப் போய்ப் பார்த்தால் கூட்டமோ கூட்டம்!
எப்படியோ சமாளிச்சுட்டு உள்ளே போய்ப் பார்த்துட்டு ஒருவழியா நேத்து சாயந்திரம் ஏழரை மணி அளவில் ஶ்ரீரங்கம் வந்தால் அம்மாமண்டபம் ரோடிலேயே விடமாட்டேன்னுட்டாங்க. வழியை எல்லாம் மாத்தி, எப்படியோ அலைய வைச்சு, சுத்திக் கொண்டு தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு ஒரு வழியா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் நம்ம ரங்குவைப் போய்ப் பார்க்கலை. இப்போப் போக முடியுமானும் தெரியலை! பார்ப்போம். ரங்குவுக்கு மனசு இருந்தா கூப்பிடுவார். இல்லைனா இல்லை தான்.
இந்தப் படங்கள் கொடுத்தது வழக்கம்போல் கூகிளாண்டவர் தான். நாம எடுத்திருக்கும் படங்கள் பின்னால் வரும். எப்போனு தெரியாது! :)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteவாங்க டிடி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!சகோதரி!
ReplyDeleteஅன்புடனும், நட்புடனும்
துளசிதரன், கீதா
வாங்க துளசிதரன், உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
DeleteVery happy you could make a successful trip Geetha..Everything good and best ill come your way. please take care of your health.
ReplyDeletepuththandu nal vaazththukaL.
வாங்க வல்லி, எல்லாம் உங்களைப் போன்ற நன்மனம் படைத்த பெரியோர்களின் ஆசிகளே காரணம். எனக்கு இருமல் தானாக நின்றால் தான் உண்டு! :( ஒரு மாசமாக அவஸ்தை தான். யாரோடயும் பேச முடியலை! :(
Delete1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete2. எங்கே ஆளையே காணோம்னு பார்த்தேன். எங்கள் பக்கம் காணோம், எந்தப் பக்கமும் காணோம் , பதிவுகள் மட்டும் வருதேன்னு பார்த்தேன்!!
3. குடந்தை ஜோதிடரா? குந்தவை, வந்தியத்தேவன் வந்து போனாங்களாமா?
:)))))
வாங்க ஶ்ரீராம், உங்க கமென்ட் ஒளிஞ்சுட்டு இருந்தது. பின்னூட்டப் பெட்டியை உலுக்கிக் கண்டெடுத்தேன் :))))) குடந்தை ஜோதிடர் அகப்படவே இல்லை. பதிவுகள் எல்லாம் ஷெட்யூல் பண்ணிட்டேன். அதான் வந்துட்டு இருந்தது. உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
Deleteபுத்தாண்டில் சாமி தரிசனம் செய்துவிட்டு பதிவு எழுத விஷயம் தேத்திவிட்டீர்கள்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteபதிவு எழுத விஷயம் தேத்தணும்னே இல்லை சுரேஷ்! :)))) நானாகத் தான் சில நாட்கள் பதிவுகள் போடாமல் விலகி இருப்பேன். :))))) உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteசுத்தி சுத்தி வந்துட்டீங்க.
ReplyDeleteநாம எடுத்திருக்கும் படங்கள் பின்னால் வரும்// போங்க நான் பின்னால்னு சொன்ன உடனே திரும்பி பார்த்து ஏமாந்துட்டேன்.
வாங்க விச்சு, ஹிஹிஹி. படங்களை இன்னும் கணினியில் ஏத்தலை. :)
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதா! புது வருடத்தில் நிறைய கோவில்கள் போய்விட்டு வந்திருக்கிறீர்கள் போலிருக்கு. உங்கள் பதிவுகளை படித்தால் எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் வரும். ஊருக்குப் போய்விட்டு வந்ததில் அலுப்பாக இருக்கும். முடிந்தபோது எழுதுங்கள்.
ReplyDeleteபதிவுகளை ஷெட்யூல் செய்தால் அதுவே பப்ளிஷ் ஆகுமா? நல்ல ஐடியா வா இருக்கே. வேர்ட்ப்ரஸ்-இல் உண்டா என்று தெரியவில்லை. இங்கு நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் தான் அங்கு உண்டா பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது! முயற்சி செய்து பார்க்கிறேன்.
வாங்க ரஞ்சனி, உங்கள் கருத்தை இப்போது தான் கவனிக்கிறேன். ப்ளாகரில் பதிவுகளை ஷெட்யூல் செய்து தேதி, நேரம் போட்டு விட்டால் தானே பப்ளிஷ் ஆகிவிடும். ஜி+ இல் சேர்ப்பதென்றால் நாம் தான் சேர்க்க வேண்டி இருக்கிறது.
Deleteஇம்மாதிரித் தொடர்பதிவுகளை எங்கானும் ஊருக்குச் செல்ல நேரும்போது ஷெட்யூல் பண்ணி வைத்துவிடுவேன். :)))))
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதாம்மா!.. திருத்தல தரிசனங்கள் செய்து வந்திருக்கிறீர்கள்!.. பணிவான நமஸ்காரங்கள்!.. என் டாஷ்போர்டில் தாமதமாகவே புதுப் பதிவுகள் காமிக்குது!.. என்னா பண்றதுன்னு புரியல!..
ReplyDeleteவாங்க பார்வதி, பதிவுகள் இதுக்கப்புறமும் நிறையவே வந்தாச்சு! :)))) ஷெட்யூல் செய்துவிடுவதால் தானே வந்து விடும்.
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.... பார்த்த இடங்கள் பற்றிய பதிவுகள் வருமா வராதா!
ReplyDeleteவாங்க வெங்கட், பார்க்கவே முடியறதில்லை. அவ்வப்போது நினைவில் இருப்பதை எழுதுவேன். :))))
Delete