எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 22, 2015

ஏமாறச் சொன்னதும் யாரோ?

சமீப காலமாக ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதோ எனத் தோன்றுகிறது.  சில சமயங்களில் இந்த விஷயத்தில் சென்னை பரவாயில்லை என்னும்படியாக இங்கே திருச்சியில், ஶ்ரீரங்கத்தில் ஏமாற்றுகின்றனர்.  அதிலும் முக்கியமாக இங்கே இருக்கும் எலக்ட்ரீஷியன்கள் அதிகச் சம்பளம் மட்டும் வாங்குவதில்லை. சாமான்கள் வாங்குவதிலும் ஏமாற்றுகின்றனர்.   இங்கே வந்த புதிதில் ஏ.சி. மெகானிக் ஏ.சியை மாட்டுவதற்குக் கிட்டத்தட்ட 3,000 ரூபாய் வாங்கினார். அதுதான் போச்சுன்னா படங்கள் மாட்ட ஆணி அடித்துத் தரச் சொன்னால் அதுக்கு எலக்ட்ரீஷியன் ஒரு ஆணி அடிச்சதுக்கு நூறு ரூபாய் வீதம் கேட்டார். மயக்கமே வந்து விட்டது.

அதன் பின்னர் சொந்தக்காரங்க மூலமா வேறொரு எலக்ட்ரீஷியனைப் பிடிச்சு சில, பல வேலைகளுக்குக் கூப்பிட்டால் சம்பளம் ரொம்பக் குறைவாக இருந்தது.  ஆனால் கீசரில் தில்லுமுல்லு செய்திருக்கிறார். அதை தற்செயலாக வீட்டுக்கு வந்த வேறொரு எலக்ட்ரீஷியன் கண்டு பிடித்தார்.  அதோடு இல்லாமல் சில பொருட்களை (வேண்டாதவைகள் தாம்)வித்துத் தரேன்னு சொன்ன அந்த 2 ஆவது எலக்ட்ரீஷியன் அதை விற்றபின்னர் பணத்தைத் தரவே இல்லை.  ஆரம்பத்தில் தொலைபேசி அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தவர் பின்னால் அழைப்பை ஏற்கவே இல்லை.  ஒண்ணு சிம் கார்டை மாத்தி இருக்கணும்.  இல்லைனா அலைபேசி எண்ணையோ, அல்லது அலைபேசியையோ மாத்தி இருக்கணும். சொந்தக்காரங்க மூலமா அந்த எலக்ட்ரீஷியன் வீட்டுக்கே போயும் பார்த்தாச்சு.  ம்ஹூம்! :(

3 ஆவது எலக்ட்ரீஷியன், முந்தின எலக்ட்ரீஷியன் ஏமாத்தினதைக் கண்டு பிடிச்சதாலே நியாயமா இருப்பார்னு நினைச்சால் அவரும்  ஏமாத்திட்டார். சரி, அதான் போச்சுன்னா, மளிகைப் பொருட்கள் வாங்கற கடையிலே ஹார்ப்பிக் வாங்குகையில் ஒரு தரம் எதுக்கோ இலவசமாக் கொடுத்த ஹார்ப்பிக் பாட்டிலைக் கொடுத்து அதுக்குப் பணம் வாங்கி இருக்கார்.  கடையிலே போய்க் கேட்டால் நான் கொடுக்கலை அப்படி, நீங்க எங்கே வாங்கினீங்களோனு சொல்லிட்டார்.  பில்லைக் காட்டி எங்க கிட்டே வேறே ஹார்ப்பிக் இல்லைனு சொல்லியும் ஒத்துக்கலை.  அப்புறமா அந்தக் கடையை விட்டாச்சு.  வேறொரு கடையில் வாங்கினால் அவங்க 1,500/-க்குக் குறையாமல் சாமான்கள் வாங்கினால் தான் வீட்டுக்கு எடுத்து வந்து தருவோம்னு சொல்லிட்டாங்க.

சரினு வேறொரு கடையிலே சாமான் வாங்க ஆரம்பிச்சோம்.  இந்த மாத லிஸ்ட்லே  அவர் கிட்டே எம்.டி.ஆர். சேமியா போட்டிருந்தேன்.  இரண்டு கால் கிலோ சேமியா பாக்கெட்டைக் கொடுத்திருந்தார்.  சரி பரவாயில்லைனு வாங்கிட்டுப் பார்த்தால் அதுக்கு எம்.டி.ஆர். சாம்பார்ப் பொடி ஐம்பது கிராம் இலவசம்னு போட்டிருந்தது கொடுக்கவே இல்லை.  கடையிலே போய்க் கேட்டால் அதெல்லாம் இலவசம் இல்லை. விலைக்குத் தான். ஐம்பது கிராம் சாம்பார்ப் பொடி பாக்கெட்டை 25 ரூ கொடுத்து வாங்கிக்குங்கனு சொல்லிட்டாங்க. சேமியா பாக்கெட்டில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறதைக் காட்டிக் கேட்டும் ஒத்துக்கலை.  சாம்பார்ப் பொடிக்கு சேமியா இலவசம்னு சொல்றாங்க.  அப்புறமா சேமியாவுக்கு ஏன் விலை போட்டிருக்கீங்கனு கேட்டதுக்கு பதில் இல்லை.  வேணும்னா வாங்கு, இல்லைனா போ! இதான் பதில்!

என்னோட மண்டையைக் குடையும் கேள்வி!  எங்களுக்கு மட்டுமா இப்படி? எல்லோருக்குமா?  அப்போ எல்லோரும் வாயை மூடிக் கொண்டு நடக்கிறது நடக்கட்டும்னு இருக்காங்களா????????????????? நாங்க தான் சண்டைக்காரங்களோ????????????????????????? அல்லது நான் தான் உண்மையை உள்ளபடி ஒத்துக்கிறேனோ? :))))))  இல்லாட்டி நம்ம இலவசம் பண்ணற வேலையா?

இலவசம் வாங்க! :)

27 comments:

  1. எலெக்ட்ரிஷியன்கள் எல்லா இடங்களிலுமே அப்படித்தானே? ஆனாலும் ஒரு ஆணிக்கு 100 ரூபாயா? என்ன அநியாயம்!

    அடுத்தடுத்த ஏமாற்றுதல் எல்லாம் ரொம்ப அநியாயமா இருக்கு. நீங்க புன்னகை மன்னி என்று புரிந்து கொண்டார்களோ.... :))))))))))))))))))))))))))

    நான் வரும்போது என்ன ஏமாற்றலாம் என்று இப்போதே யோசித்து வைக்கணும்!

    :)))))))

    ReplyDelete
    Replies
    1. புன்னகை மன்னி? நான்? நேரிலே பார்த்தால் ஏமாந்து போகப் போறீங்க? சிரிப்பேன் தான். அதுக்காகப் புன்னகை மன்னி எல்லாம் இல்லை. :))

      Delete
    2. என்னாது? நீங்க ஏமாத்தப் போறீங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  2. அட கஷ்டமே ! இங்கு யார் வேண்டுமானாலும் வந்து ஏமாற்றலாம் ன்னு போர்டு போட்டிருக்கேளோ ? எலக்ட்ரீஷியன் எல்லா இடத்திலும் வெகு காலமாக அப்பிடித்தான் இருக்காங்க , ஆனால் பொதுவாக மளிகைக்கடைகள் இப்படி செய்தால் வெகு நாட்கள் நிலைக்க முடியாதே ! போட்டி நிறைய இருப்பதால் எல்லாரும் , விலை முன்னே பின்னே இருந்தாலும், சர்விஸ் நன்றாகவே இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, போர்டெல்லாம் போடலை. எங்க நெத்திலே எழுதி ஒட்டிருக்குனு நினைக்கிறேன். :))))) மளிகைக்கடைகள் விஷயத்தில் இங்கே இப்படித் தான் இருக்கு! பொதுவாக மனிதர்கள் நல்லவர்களாக இருந்தாலும் வியாபாரம் என்னும்போது இப்படி மாறிடுவாங்களோ? என்னவோ தெரியலை!

      Delete
  3. ஏமாற்றுவது ஒரு கலை. தடபுடலாக வந்த டாக்ஸி ட்ரைவர் ஒரு நாள் வந்து ஒரு குரல் அழுது அடுத்த வாரம் தருகிறேன் என்று வாங்கிய கைமாற்றை (பெரிய தொகை) எடுத்துக்கொண்டு ஓடி விட்டார். நம்மை ஏமாற்ற காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளையா வாடகைக் கார் ஓட்டிகளிடம் ஏமாந்தது இல்லை. ஒருமுறை ஆட்டோக்காரர் ஒருத்தரை ஆடுதுறையிலிருந்து எங்க கிராமத்துக்குப் போகவரப் பேசிக் கொண்டோம். 750 ரூ கேட்டார். பேரம் பேசி 600 ரூபாய்க்கு வந்தார். வழியில் எரிபொருளுக்காக 300 ரூபாய் வாங்கிக் கொண்டார். திரும்ப வந்ததும் கணக்கு முடிக்கையில் எரிபொருள் செலவு தனி. அதுக்குத் தனியாக் கொடுக்கணும். வாடகை 600 ரூபாய் என ஆரம்பித்து விட்டார். பேசாமல் 300 ரூபாயை ஆட்டோவிலே வைச்சுட்டு நடையைக் கட்டினோம். :)

      Delete
  4. முன்னே வேலை செய்தவங்க மேலே பழியை போடறது பழைய டெக்னிக்! நல்ல பேர் வாங்க அப்படி செய்வாங்க. நமக்கு விஷயம் தெரிஞ்சு இருக்கணும்; வேலை வாங்கணும்.

    ReplyDelete
    Replies
    1. தெரியும் வா.தி. இருந்தாலும் உண்மையிலேயே கீசரில் புதிய கம்பிகள் போடாமல் ஏமாத்தி இருந்தார். ஆகவே கொஞ்சம் நம்பிட்டோம். ஆனாலும் உடனடியாக சுதாரித்துக் கொண்டோம். என்றாலும் அவரும் 1000 ரூபாய் வரை ஏமாற்றி விட்டார். ஒரு போர்டு 3 ப்ளக் பின்களோடு புதிதாகப் போடவும் சீலிங் ஃபேன் மாட்டவும் அவரைக் கேட்டிருந்தோம். புதிய போர்டுக்கு வயர் இழுத்ததோடு சரி. ஆயிரம் ரூபாயை அட்வான்சாக் கொடுங்க வீட்டில் செலவு இருக்குனு வாங்கிக் கொண்டார். சரி, இங்கேயே வேலை செய்பவர் தானேனு கொடுத்தோம். ஆனால் அப்புறம் கூப்பிடக் கூப்பிட வரவே இல்லை. வேலை எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிந்து கொண்டு ஒரு நாள் வந்தார். ஆயிரம் ரூபாயில் வயர் இழுத்ததுக்குப் போக மீதம் கொடுனு கேட்டதுக்கு வயர் இழுத்ததுக்கும் ஆயிரம் ரூபாய்க்கும் சரியாப் போச்சுனுட்டார். போகட்டும். போன ஜன்மத்துக் கடன்! :(

      Delete
  5. எல்லா இடங்களிலும் வேலைக்கு வரும் ஆட்கள் கொஞ்சம் ஏமாற்றத் தான் செய்கிறார்கள். ஆனால் ஒரு ஆணிக்கு நூறு ரூபாயா ? ஒரு ஆணியும் அடிக்க வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
    இலவசம் என்றுப் போட்டிருந்தால் நாம் தான் பார்த்து வாங்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் போனது போனது தான்.
    ஆனால் பதிவு சுவாரஸ்யம் கீதா மேடம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி, ட்ரில்லிங்க் செய்து ஆணி அடிக்கணும் இல்லையா? அதுக்காகக் கேட்டிருப்பதாய்ச் சொல்கிறார். என்னனு சொல்வது! முதல் முதல் வாங்கிய கணினியைச் சரி செய்ய வந்த ஒரு கணினி மெகானிக் சென்னையில் ஏமாற்றியதை வைத்து ஒரு கதையே எழுதலாம். :) அதுக்கப்புறமா நெருங்கிய நண்பர் ஒருத்தரை அறிமுகம் செய்து வைத்தார். சென்னையை விட்டு வரும் வரை அவர் தான் என் கணினிக்கு மருத்துவர். அநாவசியமாக ஒரு பைசா வாங்கவில்லை. :)

      Delete
  6. உங்களுக்கு எதுக்கு இலவச சாம்பார் பொடி? புன்னகை மன்னி என்பதை நான் வேறுவிதமா வாசிச்சேன். 😃

    ReplyDelete
    Replies
    1. புன்னகை மன்னியை என்னனு வாசிச்சீங்க அம்பி? சாம்பார்ப் பொடி எனக்குத் தேவையில்லை தான். ஆனால் அதுக்காக அவங்க கொடுப்பதை வாங்காமல் இருக்கக் கூடாது. இம்மாதிரியான புரட்டுகளைத் தவிர்க்க வேண்டியே ரேஷனில் கூட நாங்களே சாமான்களை வாங்கிட்டு மத்தவங்களுக்குக் கொடுப்போம். அது மாதிரி இந்த சாம்பார்ப் பொடியையும் வாங்கிட்டு நானே இன்னொருத்தருக்குக் கொடுத்திருந்தால் அது தனி! கடைக்காரர் கொடுக்க மாட்டேன்னு சொன்னதோடு இல்லாமல் அதை அதிக விலைக்கு விற்பதையும் பொறுத்துக்க முடியலை! :(

      Delete
  7. இதுக்கு பேர்தான் ஷாக் டிரீட்மெண்ட்!
    ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
    ஆனால் காரியம் ஆக வேண்டுமே?
    இக்கரைக்கு அக்கரை பச்சை!

    இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், யாதவன் நம்பி. அக்கரைக்கு இக்கரை பச்சை தான்.
      :) கட்டாயமாய் உங்கள் பதிவுக்கு வரேன்.

      Delete
  8. எல்லா ஊரிலும் இதே கதை தானா?
    சென்னை எவ்வளவோ மேல்.

    ReplyDelete
    Replies
    1. சில விஷயங்களில் சென்னை மேல். ஆனால் ஆட்டோ விஷயத்தில்??? ஹிஹிஹி, சமீபத்தில் யு.எஸ்ஸில் இருந்து வந்திருந்த நண்பர் ஒருத்தர் சென்னை ஆட்டோக்காரரிடம் வெறுத்தே போயிட்டார். :)

      Delete

  9. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    ReplyDelete
    Replies
    1. சரியாக எடுத்துக் கொண்டதுக்கு நன்றி யாழ்பாவாணன். இந்தியா வருகைக்கும் வாழ்த்துகள்.

      Delete
  10. இதெல்லாம் ரொம்பவே அநியாயம்...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்யறது டிடி? அநியாயம் தான்.

      Delete
  11. தொழில் என்று வரும்போது அனைவருக்குமே அதீத ஆசை தான் இருக்கிறது. ஏமாற்றுவதை குறிக்கோளாகவே வைத்திருப்பவர்கள் தான் அதிகம். ப்ளம்பர்களை கூப்பிட்டுப் பாருங்கள் - அவர்களும் இப்படியே! ஒரு Tap மாற்ற 150 ரூபாய் வாங்குபவர்கள் உண்டு. சின்னச் சின்னதாய் இருக்கும் வேலைகளை நாமே செய்து கொள்வது நல்லது! :)

    ReplyDelete
    Replies
    1. சிலவற்றிற்கு ஆட்கள் தான் வர வேண்டி இருக்கு வெங்கட். இந்த வீட்டில் முன்னால் இருந்த வீட்டுக்காரர் ஏசியைக் கூட அவரே கழற்றி மாட்டுவார். நமக்கு அவ்வளவெல்லாம் முடியாது. எங்க வீட்டிற்கு வரும் எலக்ட்ரீஷியன்கள் அனைவருமே அவர்களே ப்ளம்பிங் வேலையும் பார்ப்பார்கள். இன்னொருத்தர் துபாயில் வேலை செய்திருக்கேன்னு சொல்லிக் கொண்டு வந்தார். அவரும் தேவையில்லாமல் 500 ரூபாய்க்கு வயர்ச்சுருள் வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அதன் பயன் என்ன என்றே தெரியவில்லை. கடை பில்லைக் கொடுங்க, நாங்களே திரும்பக் கொடுத்துட்டு வேறே ஏதானும் வாங்கிக்கறோம்னு கேட்டுப் பார்த்தாச்சு. பில் இன்னமும் வரப் போகிறது. வயர்ச்சுருள் இங்கேயே இருக்கிறது. :)

      Delete
  12. எல்லாவிடத்திலும் இப்படித்தான்! 'யார் ஸார் வந்து ஸ்விட்ச் மாற்றியது? இவ்வளவு கேவலமாகச் செய்திருக்கிறாரே!' என்று திட்டாதே எலெக்ட்ரீஷியன்களே கிடையாது. நாமும் ஒவ்வொருவரிடமும் ஏமாறுவோம். காலண்டர்கள், படங்கள் மாட்டாமலிருப்பது நல்லது! சில வேலைகளை நாமே செய்துகொள்வது ரொம்பவும் உத்தமம். ஏமாற இடம் கொடுக்காமலிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி, உண்மை தான். புதுசா வரவங்க முன்னால் வேலை செய்தவங்களைக் குறை கூறுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அது தெரிந்தே தான் ஏமாறுகிறோம். காலன்டர்கள், படங்கள் மாட்டுவது இல்லைனாலும் சாமி அலமாரிக்குத் தான் ஆணி அடிக்கச் சொன்னோம். அதிலும் ஓரிரு படங்களுக்கு மட்டுமே. :) மத்தபடி தினசரி, மாதாந்திரக் காலன்டர்களை ஃபெவி ஸ்டிக் வைச்சு ஒட்டின வளையத்தில் மாட்டிட்டோம். அதுவும் இங்கே அடிக்கும் காத்தில் தினம் ஒருமுறை கீழே விழும்! :)

      Delete
  13. நாங்கள் நிறைய ஏமாந்து போய் இருக்கிறோம். வீடு கட்டும்போது, சின்ன சின்ன வேலைகளுக்கு ஆட்களை கூப்பிடும் போது என்று. எதை சொல்வது?. வாட்ச்மேன், அயர்ன் செய்து தருபவர், பூ கொடுப்பவர் எல்லாம் உடனே அவசரம் பணம் வேண்டும் இரண்டு நாலில் கொடுத்து விடுகிறோம் என்பார்கள் நாம் நம்பி கொடுத்து விட்டு ஏமாந்து நிற்பது வழக்கமாய் போனது.
    நம்மை போல் ஏமாறும் ஆட்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, ஏமாறாதவர்களே இல்லை எனலாம். நாமெல்லாம் ஒத்துக்கறோம். ஆனால் ஒண்ணு அயர்ன்காரரோ, பூக்காரரோ கேட்டால் பணம் கொடுப்பதில்லை. வாட்ச்மேனுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கேட்டால் ஐநூறு கொடுத்துட்டு வராக்கடனில் வைச்சுடுவோம். திரும்பக் கொஞ்ச மாதங்களுக்குக் கேட்க மாட்டாரே! :))) பால்காரருக்கு மட்டும் அவ்வப்போது கொடுப்போம். பால் ஊற்றுவதால் கழிந்து விடும். நல்லவேளையாகப் பண விஷயத்தில் கொடுக்கல், வாங்கல் அதிகம் வைச்சுக்கலை. ஏமாற்றுபவர்கள் எனக்குத் தெரிந்து அதிகம் எலக்ட்ரீஷியன்களே!

      Delete