எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 25, 2015

"எங்கள்" சந்திப்பு!

பத்து நாட்கள் முன்னரே கௌதமன் திருச்சி வரப்போவதாயும் பார்க்கவேண்டிய இடங்கள் குறித்தும் கேட்க, நம்ம வீட்டை அந்த லிஸ்ட்லே சேர்க்க வேண்டும் எனச்  சொல்லி இருந்தேன்.  அதுக்கப்புறமாத் தான் ஶ்ரீராமும் வரப் போவது தெரிந்தது.  கடைசியில் பார்த்தால் (ஆரம்பத்திலிருந்தே அவங்க திட்டம் அதான்) எங்கள் "ஆ"சிரி"யர் குழு மொத்தமும் வரப் போவதாய்ச் சொன்னாங்க.


சாப்பிட என்ன கொடுத்து பயமுறுத்தலாம்னு நானும், ரங்க்ஸும் திட்டம் போட்டால் ஶ்ரீராம், ஒரு கல்யாணத்துக்கு வரப் போவதாயும், கல்யாணச் சாப்பாடை விடப் போறதில்லைனு சங்கல்பம் செய்திருக்கிறதாயும் சொல்லிட்டார்.  நானும் என் பங்குக்கு நாங்க தஞ்சாவூரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு மோர் சாதம் சாப்பிட்ட கதையை எல்லாம் சொல்லி பயமுறுத்திப் பார்த்தேன்.  ஶ்ரீராம் முன்.ஜா. மு.அண்ணாவாக என் தம்பியை எல்லாம் எடுத்து வைக்கச் சொல்லிட்டேன்னு சொல்லி நழுவிட்டார்.

சே, சரியான பரிசோதனை எலிகள் போச்சேனு வருத்தத்தில் இருந்தேன்.  நேத்துப் பூராக் கைவலி வேறே அதை ஜாஸ்தியாக்கி விட்டது. இன்னிக்குக் காலங்கார்த்தாலே வேலை செய்கையில் அலைபேசி அழைப்பு.  ஶ்ரீராம் முஹூர்த்தம் முடிஞ்சதும் வரதாச் சொன்னார்.  அவருடன் கூட எங்கள் ஆசிரியர் குழுவும் வரதாகவும் சொன்னார்.  காலை ஆகாரம் முடிச்சுட்டுக் கீரை நறுக்கிட்டுக் கல்சட்டியில் முள்ளங்கி சாம்பாருக்கு வேகப் போட்டிருந்தேன். அழைப்பு மணி ஒலித்தது.

கௌதமன், திருமதி கௌதமன், கௌதமனின் அண்ணாவும், எங்கள் ஆசிரியர்களில் ஒருவருமான கேஜி, ஶ்ரீராம், கௌதமன் மனைவியின் அண்ணா ஆகியோர் வந்தனர்.  இன்னொருவர் இங்கே வரதை விட ரங்கனைப் பார்ப்பது மேல்னு அங்கே போயிட்டாராம்.  வெங்கட் தற்சமயம் ஶ்ரீரங்கத்தில் இருப்பதால் அவரும் அவரின் மனைவியும்  வர முடியுமானு கேட்டதில் பயணத்தில் இருப்பதாகச் சொன்னார்.  கடைசியில் ஆசிரியர் குழு மொத்தமும் வர முடியலையாம்.  கேஜிஜேக்குச் சொந்த வேலை.  இன்னொருத்தருக்கும் வேலை ஏதோ, ஆகையால் வரலை.  வந்தது, எங்கள் ஆசிரியர் குழுவின் மூன்று ஆசிரியர்கள்.  காசு சோபனா வெளிநாட்டு வாசியாம்.

கௌதமன் உள்ளே நுழையும்போதே கொஞ்சம் பயத்துடன் காணப்பட்டார்.  என்னவோ, ஏதோனு நினைச்சால், "அந்த அரிசிமா உப்புமா, நானாக எழுதலை.  இதோ இவங்க சொல்லித் தான் எழுதினேனாக்கும்!" அப்படினு மனைவி பக்கம் கையைக் காட்டிவிட்டு அதுக்கு அப்புறம் வாயே திறக்காமல் மௌனமாகி விட்டார்.  அவருக்கு நேர் எதிரிடையாக கௌதமன் மனைவி, பொரிந்து தள்ளினார்.  உப்புமா நான் சொல்லலையாக்கும்.  என் மாமியார் சொல்லிக் கொடுத்ததை அவருக்குச் சொன்னேன். என்று கௌதமன் மனைவி சொல்ல கௌதமனுக்கு மேலும் வாயைத் திறக்க பயம்.  பேசாமலே இருந்தவர் அப்புறமாக் காஃபிக்குத் தான் வாயைத் திறந்தார். :P :P


ஶ்ரீராம் அவரோட  பாஸ் இல்லாமல் வந்ததாலோ என்னமோ ரொம்பவே சோகமாக உட்கார்ந்திருந்தார்.  இல்லைனா சமையலுக்கு அவர் துணை இல்லாமல் பாஸ் தனியாச் சமைக்கணுமேனு கவலைப் பட்டாரோ என்னமோ, தெரியலை! அல்லது கல்யாணத்தில் காலை டிஃபன் பந்தியில் ஸ்வீட் அவருக்கு மட்டும் கொடுக்கலையோ?  தெரியலை. கௌதமனின் மைத்துனரும், அவர் அண்ணாவும் திறந்த வாயை மூடவில்லை.  கௌதமனின் அண்ணா கேஜி அவர்கள் பகிர்ந்து கொண்ட பல விஷயங்களும் சுவாரசியமாக இருந்தன.  என்னனு கேட்டுடாதீங்க! கௌதமனின் மைத்துனர் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி மாணவர் என்பதால் என் அப்பாவைத் தெரியுமானு கேட்டேன்.  ம்ஹூம், அந்தப்பள்ளியிலேயே பிரபலமான அப்பாவுடைய குழுவையே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் மாணவர்கள் அப்பாவுக்குச் சூட்டிய செல்லப் பெயரைக் கூடச் சொல்லிப் பார்த்தேன். புரிஞ்சுக்கவே இல்லை.  மற்ற மதுரை பற்றிய மலரும் நினைவுகளில் இருவரும் மூழ்கினோம்.

கௌதமனின் அண்ணா அரவங்காட்டில் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள நாங்களும் எங்கள் பங்குக்கு அறுத்துத் தள்ளினோம். பின்னர் வீடு, மாடி எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மேலும் சில பதிவர்களைச் சந்திக்க வேண்டிக் கிளம்பிச் சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சிரிப்பும் கொண்டாட்டமுமாக இனிமையாகக் கழிந்தது. மறக்க முடியாக் காலை! எங்க இரண்டு பேருக்குமே இந்தச் சந்திப்பு  ஏதோ ரொம்ப நாள் கழித்துச் சந்தித்த உறவினர் சந்திப்பாக இருந்ததோடு அல்லாமல் புதுசாப் பார்க்கிறாப்போல் எல்லாம் தோணவே இல்லை. 

29 comments:

  1. ஆஹா.... பதிவாவே எழுதிட்டீங்களா....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம். :)

      Delete
  2. நீங்கள் சொல்லியிருப்பது சரி.... புதுசா பார்க்கறா மாதிரியே இல்லைதான்.

    வாழ்க ப்ளாக் நட்பு!

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். (நன்றி தேனம்மை)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஏதோ பல வருடங்கள் பழகின உணர்வு! :)

      Delete
  3. இனிய உபசரிப்புக்கும் சுவாரஸ்யமான உரையாடல்களுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நாங்க தான் சொல்லணும், நன்றியெல்லாம்.

      Delete
  4. நன்றி நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நீங்க பயந்ததுக்கு உண்மைக்காரணம் சொல்லலை! சரியா? :)))))

      Delete
    2. நான் பயப்படவே இல்லை!

      Delete
    3. ஹை, நம்பிட்டோமுல்ல! :))))) உங்க தங்க்ஸ் நீங்க தான் காஃபி போட்டுத் தரீங்கனு சொல்றவரைக்கும் கொஞ்சம் உள்ளூறக் கவலையாவே இருந்தது இல்லையா? அது!!!!!!!!!!!!!!!!! அந்த பயம் இருக்கட்டும்! :))))))))

      Delete
  5. புகைப்படங்கள் ஏதும் போட வேண்டாம் என்று சொன்னார்களா...?

    தலைவர்களே... எப்போது எங்க ஊருக்கு வர்றீங்க...?

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் சொல்லலை. ஆனால் பேச்சு மும்முரத்தில் படம் எடுக்கணும்னே எனக்குத் தோணலை! எடுத்திருந்தாலும் ஶ்ரீராம் படம் போடுவதை விரும்ப மாட்டார். விரைவில் உங்க ஊருக்கும் வரச் சொல்லுங்க. மதுரை போற வழிதானே! :)

      Delete
  6. மகிழ்ச்சி. ஸ்ரீராமும், கெளதமன் சாரும் அமைதியான சுபாவம் என்பதைதான் நம்ப முடியவில்லை:).

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ரா.ல. உண்மையில் நல்லாத் தான் பேசினாங்க. நம்ம சுபாவப்படி கொஞ்சம் வம்பு வளர்த்திருக்கேன். அம்புடுதேன்! :))

      Delete
  7. ஆஹா, இன்றைய சந்திப்புக்கு சுடச்சுட இன்றைக்கே ஓர் பதிவா !

    பேஷ், பேஷ், ரொம்ப நல்லா இருந்திருக்கும் ..... அவங்களுக்கு நீங்க கொடுத்ததாகச் சொன்ன காஃபியைக் கற்பனை செய்து பார்த்துச் சொன்னேன்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் உங்க மனைவியோடு ஒரு நாள் எங்க வீட்டுக் காஃபி குடிக்க வாங்க சார். நாங்களும் ஒரு நாள் உங்க வீட்டுக்கு அடை சாப்பிட வரணும்! பண்ணும்போது சொல்லுங்க! வரோம். :)

      Delete
  8. ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ ஐப் பார்க்கணும்ன்னு எனக்குக்கூட ரொம்ப ஆசையாகத்தான் இருந்தது. :)

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீங்க போலிருக்கே! :))))

      Delete
  9. உங்கள் கைவலி தேவலாமா?

    ReplyDelete
    Replies
    1. அது வரும், போகும். கொஞ்சம் ஓய்வு எடுத்துண்டால் சரியாப் போயிட்டாப்போல் பாவ்லா காட்டும். :(

      Delete
  10. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி காசிராஜலிங்கம். உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      Delete
  11. காப்பி எல்லாம் பக்கத்து கடையிலிருந்தா? 😃

    ReplyDelete
    Replies
    1. அம்பி, உங்களைப் போலவே எல்லோரையும் நினைச்சா எப்பூடி?? குடிச்சவங்களைக் கேட்டுப் பாருங்க! :P :P :P :P

      Delete
  12. எங்களால் “எங்களை” பார்க்க வர முடியவில்லை! :(

    விரைவில் சந்திப்போம்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், சென்னையிலிருந்து வந்தாச்சா? இந்த வாரம் விருந்தினர் வா ஆ ஆ ஆ ஆ ஆ ரம் போலிருக்கு. இப்போத்தான் வேறு சில இணைய நண்பர்கள் வரதாத் தகவல் வந்தது. :) சாப்பிட வருவாங்களோனு நினைக்கிறேன். :)

      Delete
    2. நேற்று இரவு தான் வந்தோம். விருந்தினர் வாஆஆஆஅரம்.... எஞ்சாய்!

      Delete
    3. ஆமாம், நேற்று விருந்தினர் வந்துட்டுச் சீக்கிரமாவே போயிட்டாங்க! வந்தவரை நாங்க மானசீகமா குருவாக ஏத்துண்டிருக்கோம். சாதாரணமாக இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் சத்சங்கம் நடக்கும். நேத்து அவங்களுக்கு அவசர வேலை! கிளம்பிட்டாங்க! :(

      Delete