பாடல் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
யானையைக் குறிப்பிட்டிருப்பதால் யானைக் கோலம் போடலாம். செந்தாமரைக் கைகளைக் குறிப்பிட்டிருப்பதால் செந்தாமரைக் கோலமும் போடலாம். குயில், கோழி போன்ற பறவைகளைக் குறித்துச் சொல்லி இருப்பதால் பறவைகளையும் கோலத்தில் வரையலாம்.
இறைவனை ஒரு கோரிக்கைக்கு அழைத்தால் முதலில் அவன் சக்தியைத் துதிக்க வேண்டும். அந்த சக்தி தான் இங்கே உந்து மத களிற்றனாகவும், ஓடாத தோள்வலியனாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. நம் புராணங்களின்படி இறைவனின் சக்தியைப் பெண்ணாக உருவகம் செய்திருப்பதால் இங்கே நாராயணனின் சக்தியைத் தாயாராக நினைத்துக் கொண்டு முதலில் தாயாரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். நம் வீட்டில் அப்பாவிடம் நேரடியாகச் சொல்ல பயந்தால் அம்மா மூலமாக நிறைவேற்றிக் கொள்வது உண்டல்லவா? அது போலத் தான் இங்கேயும். தாயாரிடம் போனால் அவள் கடைக்கண் பார்வையின் மூலம் எவ்விதமான கஷ்டமான காரியங்களும் சிரமமின்றி நிறைவேறும். ஆகவே இங்கே கண்ணனின் அருளை வேண்டித் துதிக்கும் ஆண்டாள் அதற்கு முதலில் கண்ணனின் மனைவியான நப்பின்னையை வேண்டுகிறாள். நப்பின்னை திருப்பாவையில் மட்டுமே குறிப்பிடப் படுகிறாள் என எண்ணுகிறேன்.
பாடல் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
குத்துவிளக்குக் கோலமும், பூக்களால் ஆன கோலமும் போடலாம்.
அன்னத் தூரிகை குறித்து ஒரு திரைப்படப் பாடலில் கூடக் கேட்டிருக்கோம். அத்தகைய அன்னத்தின் தூரிகை, நல்ல சுத்தமான இலவம்பஞ்சு, மயில் தூரிகை, பூக்கள், கோரை நார் ஆகியவற்றால் ஆன மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் நப்பின்னையுடன் வெகு அந்தரங்கமாக உறங்கிக் கொண்டிருந்த கண்ணனுக்கு கோபியரின் அழைப்புக் கேட்கிறது. ஆனால் நப்பின்னை அவனை விட வேண்டுமே. ஆகவே வாய் திறக்கவே இல்லையாம். ஆகையால் நேரடியாக நப்பின்னையையே அந்தப் பெண்கள் வேண்டுவதாக ஆண்டாள் சொல்கிறாள். மணாளனைப் பிரிய மனமில்லாமல் இருக்கும் நப்பின்னையைக் கண்ணனிடம் தாங்கள் வந்திருப்பதை எடுத்துச் சொல்லித் தங்களுக்கு அவன் அருட்பார்வை கிட்டுமாறு செய்ய வேண்டுகிறாள்.
நம் மனோபலத்தை ஒருமுகப்படுத்தி இறைவன் அருளை வேண்டுகையில் இல்வாழ்க்கையின் சுகங்கள் அவற்றிற்கு முட்டுக்கட்டை போடும். அவற்றைத் தாண்டிக் கொண்டு அத்தகைய எண்ணங்களை நம் மனதிலிருந்து மெல்ல மெல்ல அகற்றி அனைத்தும் நாராயணன் செயலே என நினைத்து ஒருமுகமாக அவனையே நினைக்க வேண்டும். அதற்கு அருள்பவளே பெருமானின் பத்தினியான சக்தி. சக்தியை நல்ல முறையில் பிரயோகம் செய்ய வேண்டும்.

Creative aesthetics at its best. கலை மட்டுமல்ல, நுட்மான கலையுணர்வு, அது மட்டுமல்ல. பக்தியின் ஆர்வம். அதற்கும் மேலாக கை வண்ணம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இத்தகைய பாராட்டுக்கு நான் தகுதி உள்ளவளாக மாற வேண்டும். நன்றி ஐயா.
Deleteபூக்களால் உள்ள கோலம் அருமை. திருப்பாவைக்கோலங்கள் மூலம் நிறைய தகவல்களையும் சொல்கிறீர்கள். அருமை.
ReplyDeleteவாங்க விச்சு, ரொம்ப நன்றி.
Deleteஅருமையான கருத்துக்கள்... விளக்கங்களுக்கு நன்றி அம்மா....
ReplyDeleteநன்றி டிடி.
Deleteபாடலுக்கேற்ற கோலங்கள் தேர்வும் கோலங்களும் அருமை. வாழ்த்துக்கள். என் பதிவுகளில்பின்னூட்டங்களில் உங்களைக் காணோமே.
ReplyDeleteஉங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட்ட நினைவு. பார்க்கிறேன். வாழ்த்துகளுக்கு நன்றி.
Deleteஇன்னம்புரான் அவர்களை வழிமொழிகிறேன்.
ReplyDelete:)))
ஸ்ரீராம், ஹையோ, ஹையோ! :))))
Deleteகுத்துவிளக்கெரிய பாசுரம் அமிர்த மயம். அதற்கு நல்ல விளக்கமும் கொடுத்து அழகு கோலங்களும் பதித்து மார்கழியை இங்கே வரவழைத்துவிட்டீர்கள் கீதா.
Deleteவாங்க வல்லி, குளிர் எப்படி இருக்கு? உங்கள் பாராட்டுக்கு நன்றி. :)
Deleteஅழகான கோலங்கள்! பாவை விளக்கம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteவாங்க சுரேஷ், பாராட்டுக்கும் ரசனைக்கும் நன்றிப்பா.
Delete