மஞ்சள் ஊறுகாய்ப் படம் மேலே. பதிவு மஞ்சளில் ஒரு ஊறுகாய் இங்கே. ஊறுகாய்ப் படத்தையும் அங்கேயே போடலாம்னு தான் இருந்தேன். ஆனால் அங்கே பதிவு போடுவது ரொம்பப் பேருக்குத் தெரியறதில்லை. பலரும் இங்கே மட்டுமே வராங்க. அநியாயமா இல்லையோ? நம்மளை மாதிரி ச.க.வ. க்கு ஒரே ஒரு பதிவா இருக்கும்? போகட்டும். படம் எடுக்கறச்சே இதிலே மாங்காய் இஞ்சியையும் வாங்கி நறுக்கி வதக்கிச் சேர்த்துட்டேன். ஊறுகாய் ஊறிச் சாப்பிடவும் ஆரம்பிச்சாச்சு. ஆலு பராத்தா, மூலி பராத்தா, தேப்லா, மற்றும் மசாலா பூரி போன்றவற்றோடு நல்ல துணையாக இருக்கும்.
மிளகாய்த் தூளும், பச்சை மிளகாயும் அவரவர் காரத்துக்கு ஏற்பக் கூட்டியோ, குறைத்தோ போட்டுக் கொள்ளுங்கள். மாங்காய் இஞ்சியில் தொக்குப் பண்ணலாம். அது பற்றி பண்ணிட்டுப் படத்தோடு விரைவில்.
படம் சூப்பர்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நன்றி.
Deleteபதிவும் படிச்சு பாலோயர் ஆகிட்டு வந்துட்டேன்! நன்றி!
ReplyDeleteவாங்க சுரேஷ், பின் தொடர்வதற்கு நன்றிப்பா.
Deleteரொம்ப காரம்! எனக்கு வேணாம்!
ReplyDeleteவா.தி. ஒண்ணு, ரெண்டு ப.மி. மட்டும் போட்டுச் சாப்பிட்டுப் பாருங்க! :)
Deleteஇணைப்பில் தளத்தின் முகவரி (http://geetha-sambasivam.blogspot.in/)<--இப்படி கொடுக்காமல், இப்படி -->(http://geetha-sambasivam.blogspot.in/2015/01/blog-post.html) கொடுத்து விடுங்கள் அம்மா...
ReplyDeleteபுரியுது டிடி. இனிமேல் கவனமாக இருக்கிறேன். நன்றி. :)
Deleteபார்க்க நல்லாத் தான் இருக்கு :) சாப்பிட்டும் பார்க்கணும்!
ReplyDeleteவாங்க வெங்கட், நல்லாத் தான் இருக்கு சாப்பிடவும். :)
Delete