எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 31, 2015

"சும்மா" வில் சும்மாப் போட்டாங்க!

விரதங்கள், பூஜைகள், வழிபாடுகள் குறித்து
தேனம்மை லக்ஷ்மணன் ஒவ்வொரு வாரம் ஒரு பெண் பதிவரிடம் கேள்விகள் கேட்டு பதில்கள் வாங்கி அவரின் பதிவில் சனிக்கிழமையன்று வெளியிட்டு வருகிறார். அந்தப் பதிவர்களின் சிறப்புக்கள் எல்லாம் அளப்பரியவை.  என்னிடம் எதைக் கண்டாரோ தெரியலை! :) அது போல என்னையும் கடந்த 2,3 மாதங்களாகக் கேட்டு வந்தார். நாங்கள் ஆகஸ்டிலிருந்து தொடர் ஓட்டத்தில் இருந்ததால் எனக்கு நேரம் இல்லை.  மேலும் மேற்சொன்ன பதிவர்களைப் போல் என்னிடம் எந்தச் சிறப்பான தகுதியும் இல்லை.  கடைசியில் எனக்குத் தெரிந்த விஷயத்தையே அவர் கேட்டிருந்தாரோ, பிழைத்தேன்.  போன சனியன்று அது அவரின் பதிவில் வெளியிடப் பட்டிருந்தது.  சுட்டி மேலே!  படித்தவர்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்.  படிக்காதவர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.

பொதுவாகவே மனித வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓட வேண்டி இருக்கிறது. அதிலும் சாமானியர்களுக்கு  ஏதேனும் பற்றுக் கோல் ஒன்று வேண்டும்.  பல்வேறு மனித சுபாவங்களுக்கு ஏற்பவே கடவுளரும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். என்ன செய்யறதுனு தெரியாமத் திகைத்துத் தடுமாறும் கணங்களில் அவரவர் மனோபாவத்துக்கு ஏற்பப் பிள்ளையாரையோ, அம்பிகையையோ, முருகனையோ, சிவனையோ, திருமாலையோ, அல்லது நாட்டார் தெய்வங்களையோ சரண் அடைகின்றனர். அப்போது நமக்கு வாய்விட்டு நம் குறையை மட்டும் சொன்னால் போதுமானதாக இல்லை.

கடவுளரை வாழ்த்திப் பாடவும் முயல்கிறோம்.  அப்படி வாழ்த்திப் பாடும் பாடல்கள் தமிழிலும் உள்ளன.  வடமொழியிலும் விஷ்ணு சஹஸ்ரநாமம், சிவ சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், லக்ஷ்மி சஹஸ்ரநாமம் எனப் பல உள்ளன. எல்லாவற்றிற்கும் பொதுவான பலன்தான் என்றாலும் அதிகம் சொல்லப்படுவது விஷ்ணு சஹஸ்ரநாமமும், லலிதா சஹஸ்ரநாமமும் தான்.  இதுக்குத் தனிப்படக் காரணம்னு எதுவும் இருக்கானு தெரியாட்டியும் என்னைப் பொறுத்தவரை விஷ்ணு காக்கும் கடவுள் என்பதாலும், அம்பிகை எளிதில் அணுகக் கூடியவள் என்பதாலுமே இவர்களின் சஹஸ்ரநாமங்கள் விரைவில் பரவி இருக்கலாம்.

அதோடு அம்பிகையும், விஷ்ணுவும் ஒரே சக்தியின் மாறுபட்ட வடிவங்களாகவும் சொல்கிறோம். அதைத் தான் பாமர ஜனங்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அண்ணன், தங்கை எனச் சொல்லப்படுகிறது.  நம்மைப் போல் எல்லாம் பரம்பொருளுக்குப் பிறப்போ, இறப்போ இல்லை.  உடல் உறவெல்லாம் இல்லை.  ஒரு சில புராணங்களில் வந்திருந்தாலும் அவை எல்லாம் எளிமைப்படுத்தி எளிமையான மக்களுக்கும் புரிவதற்காகவே அன்றி வேறு காரணம் இல்லை.

எல்லோராலும் தத்துவ ரீதியான விளக்கங்களைப் புரிந்து கொள்ள இயலாது.  ஆகவே தான் விரதங்கள், பூஜைகள், வழிபாடுகள் என ஏற்படுத்தி இருக்கின்றனர்.


விரதம் என்பது உடலையும், மனதையும் தூய்மைப் படுத்தவென்றே ஏற்படுத்தப்பட்டது. தற்போது மருத்துவர்கள் குறைவாக உண்ணச் சொல்லுகின்றனர்.  இதை அந்தக் காலங்களிலேயே நம் சநாதன தர்மம் வற்புறுத்தி உள்ளது.  அதோடு மாதத்தில் குறைந்தது இரு நாட்கள் விரதம் இருக்கவும் சொல்லும்.  வெறும் உணவு உண்ணாமல் மட்டும் இருப்பது விரதம் என்று ஆகாது. அலையும் மனதை அடக்கி ஈசன் பால் திருப்பி விரத நாள் அன்று முழுவதும் இறைவனையே ஒருமுகமாக நினைத்திருக்க வேண்டும். நம் போன்ற பாமரமக்களுக்கு அப்படி நினைப்பது கடினம் என்பதால் தான் அன்று ஈசன் நாமாவைச் சொல்லும்படியும், கோயில்களுக்குச் செல்லும்படியும், பூஜை, வழிபாடு என்றும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

பொதுவாக வெறும் நீர் அருந்தி விரதம் இருப்பது மேன்மையான ஒன்றாக இருந்தாலும் தவிர்க்க முடியாதவர்கள் பால், பழம் எடுத்துக் கொள்ளலாம்.  வடமொழியில் ஃபல் என்றால் பழம்.  ஃபல் ஆஹார் என்பதே ஃபலாஹார் என்று ஆகித் தமிழில் பலகாரமாகி நான் விரதத்தன்று இட்லி, தோசை, அடை, சேவை என்று வெளுத்துக் கட்டுகிறோம். பழங்களை மட்டுமே உணவாகக் கொள்வதே ஃபலாஹார் எனப்படும் பலகாரம் ஆகும். விரதம் இருப்பதால் உடலின் வளர்சிதைமாற்றங்கள் ஒழுங்காக நடைபெறுகின்றன. இவை புதுப்பிக்கப்படுகின்றன.  நம் வயிற்றுக்கும் ஓய்வு கொடுப்பதால் புத்துணர்வு பெற்று உடல் இயக்கம், ரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கும். கடும்நோயால் அவதிப் படுபவர்களும், வயதானவர்களையும் தவிர அனைவரும் விரதம் இருக்கலாம்.  ஒரு சிலர் விரதம் அன்று உணவு உண்ணாமல் காஃபி, டீ, ஹார்லிக்ஸ் என்று குடித்துக் கொண்டு இருப்பது தான் நல்லது என்னும் எண்ணத்திலும் இருக்கின்றனர். அதுவும் தவறு.  விரதத்தன்று காலை எழுந்து குளித்துக் கடவுளின் நினைவிலேயே இருந்து கொண்டு கடவுள் நாமத்தைச் சொல்லிக் கொண்டு பால், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

முதல்நாள் விரதம் முடிந்து விட்டது என மறுநாள் வெளுத்துக் கட்டவும் கூடாது.  மறுநாளும் காலையில் குளித்துவிட்டு இறை வழிபாடு செய்து  வெறும் வயிற்றில் துளசி தீர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் ரொம்ப சோர்வாக உணர்ந்தால் காஃபி அல்லது தேநீர் அருந்தி விட்டு இறை வழிபாடு செய்து துளசி தீர்த்தம் அருந்திய பின்னரே மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.  அன்றும், வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.  விரதம் இருந்ததால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் சூடு தணியும் வண்ணம் குளிர்ச்சி தரும் பொருட்களை உண்ணலாம்.  வெந்தயம் கலந்த தோசை, இட்லி, சேவை அல்லது சூடான பருப்பு சாதம், சுண்டை வத்தல் குழம்பு, நெல்லிப் பச்சடி போன்"றவை பலன் தரும். இனி ஒவ்வொரு கிழமைக்கும் உரிய விரத பலன்களைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் சூரியனின் அருள் கிட்டுமென்றும் நீடித்த நோயில் இருந்து காக்கப்படுவோம் என்றும் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை விரதம் சிவனுக்கு உகந்தது.  சோமவார விரதம் மஹாராஷ்ட்ராவில் சிறு குழந்தைகள் கூட இருப்பார்கள்.  அரிசி, கோதுமை தானியங்கள் சேர்க்காமல் ஜவ்வரிசியில் உப்புமா செய்து ஒரே வேளை சாப்பிடுவார்கள். பல ஹோட்டல்களிலும் அன்று அதுதான் கிடைக்கும்.  சிவனை வழிபடுவதன் மூலம் கணவனுக்கு தேக ஆரோக்கியமும் அவன் அன்பும் கிட்டும் என்று ஐதீகம்.

செவ்வாய்க் கிழமை முருகனுக்கு உகந்த நாள்.  அன்று விரதம் இருப்பது கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு முருகனுக்கு இருக்கும் விரதம் உப்பில்லாமல் இருப்பார்கள். அப்படி இருந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும். செவ்வாய் கிரஹத்தின் பாதிப்பு இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும்.

புதன் கிழமை விரதம் இருப்பதால் மஹாவிஷ்ணுவின் அருளைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நோய்கள் தீரும் என்பதோடு செல்வ வளத்துடனும் இருப்பார்கள்.

வியாழக்கிழமை குரு கிரஹத்துக்கும், தக்ஷிணாமூர்த்திக்கும் உகந்த நாள். படிப்பு, குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்கு உகந்தது.

வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு உகந்த நாள்.  அம்பிகையை ராகு வழிபட்ட ராகு காலத்தில் துர்கையை வழிபடுவது திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமண பாக்கியம் ஏற்படும் என்பதோடு நினைத்த காரியமும் கை கூடும். திருமணம் ஆனவர்களுக்குக் கணவனின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருக்கலாம்..

சனிக்கிழமை மறுபடியும் பெருமாளுக்கு உகந்தது.  அனுமனுக்கும் உகந்தது. சனி கிரஹத்தின் பாதிப்பு இருப்பவர்கள் பெருமாளையும், அனுமனையும் பிரார்த்தித்து விரதம் இருந்தால் பாதிப்பு குறையும். எடுத்த காரியம் வெற்றியடையும். செல்வம் பெருகும்.

பொதுவாக் விரதம் இருக்கும் முறையையும் அதன் பலன்களையும் மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.  குறிப்பிட்ட சில முக்கிய விரதங்கள் குறித்துச் சொல்வதெனில் மிகவும் பெரிதாக ஆகிவிடும். 

15 comments:

  1. கொஞ்சம் திசை மாற்றி விட்டு, திரும்பி வரலாமோ?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்??? புரியலை "இ" சார்! :)

      Delete
  2. . வடமொழியில் ஃபல் என்றால் பழம். ஃபல் ஆஹார் என்பதே ஃபலாஹார் என்று ஆகித் தமிழில் பலகாரமாகி நான் விரதத்தன்று இட்லி, தோசை, அடை, சேவை என்று வெளுத்துக் கட்டுகிறோம்.

    ~ உங்களுக்கு அசாத்திய தகரியம். மொழி ஆராய்ச்சியாளர்கள் உங்களை வெளுத்துக்கட்டப்போகிறார்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. இல்லையா பின்னே? நம்ம ஆத்து வாத்தியார் கூட இதை ஆமோதித்தார். வடமொழி, தமிழில் புலமை பெற்ற ஒரு நண்பரும் இதை உறுதி செய்தார். வெளுத்துக்கட்டறவங்க கட்டட்டும்! பார்த்துக்கலாம். :))))

      Delete
  3. அங்கேயும் படித்து ரசித்தேன். இங்கேயும்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு அசாத்தியப் பொறுமை, சகிப்புத் தன்மை ஶ்ரீராம்! :)

      Delete
  4. அவர் கேட்டகேள்விகள் என்னவென்று சொல்லவில்லையே. பல விஷயங்கள் பலருக்குத் தெரிந்திருந்தாலும் அவை அனுஷ்டானத்தில் இல்லை என்பதே கண்கூடு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் கேட்கக் கேள்விகள் ஏது? சும்மா விரதங்கள் குறித்தும், பூஜைகள் குறித்தும் சொல்லச் சொன்னாங்க. எல்லாம் எழுதினால் ரொம்பப் பெரிசாயிடும்னு விரதத்தை மட்டும் எடுத்துக் கொண்டேன். :)))) விரதம் இருப்பவங்க இப்போவும் கடுமையாக விரதம் இருக்கத் தான் செய்யறாங்க. :)

      Delete
  5. எதற்கும் உங்களையே bench mark ஆக எடுத்துக் கொள்கிறீர்களோ. என்னும் சந்தேகம் எழுகிறது.

    ReplyDelete
    Replies
    1. எதுக்குச் சொன்னீங்கனு தெரியலை. ஆனால் எப்போவுமே அவங்க அவங்க அனுபவம் தான் முதலில் தோன்றும். பிறரின் அனுபவமும், அந்த உணர்வுகளும் நமக்கு இருக்காது. ஆனால் இங்கே விரதம் குறித்துச் சொல்கிறீர்கள் என்றால் இப்போது கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக நான் விரதமே மேற்கொள்ளவில்லை. செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம், சங்கட சதுர்த்தி விரதம் என்றெல்லாம் இருந்திருக்கேன். இப்போ மருத்துவர் அறிவுரைப்படி விரதம் என்று இருப்பதில்லை. :))))) மற்றபடி உங்கள் கருத்து குறித்து நான் என்ன சொல்ல முடியும்? அவரவர் கருத்து அவரவருக்கு! இல்லையா? :))))))))) மற்றபடி என்னோட திறமையை வைத்து மற்றவர்களை எப்படி எடைபோடமுடியும்? நேற்றைய "சும்மா" பதிவிலே வந்திருக்கும் பெண்மணி பத்மாவைப் போல் சாதனைகள் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட என்னால் செய்ய முடியாது. இதெல்லாம் பிறவியிலேயே வரவேண்டும். :))))

      Delete
    2. http://honeylaksh.blogspot.in/2015/01/blog-post_31.html// திருமதி பத்மா குறித்தும் அவர் சாதனைகள் குறித்தும் படிக்க இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள்.

      Delete
  6. வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete

  7. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

    ReplyDelete
  8. சும்மாவிலும் படித்தேன். என்னைக் கேட்டால் மனதில் சுத்தமும் பக்தியும் இருந்தால் போதும். முன்று தடவை விரதம் ஆரம்பித்துப் பயன் படவில்லை. அதற்குப் பதில் பாகவத பாராயணம், ராமாயணம் என்று படித்து ஆத்மா பலம் பெறலாம்.

    ReplyDelete
  9. அங்கேயே படித்தேன்......

    ReplyDelete