முன்னர் கடலிலேயே பிரதக்ஷிணம் செய்யுமாறு இருந்த அமைப்பிலே இப்போது சுவர் எழுப்பி இம்மாதிரிப் பாதை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
முன்பக்கம் இறங்குமாறு வசதி. ஆனால் குதிக்கத் தான் வேண்டும். அதே போல் எதிர்ப்பக்கம் கடலில் இறங்குமாறு வசதி இருக்கிறது. நாங்கள் அப்படியே சுற்றி வந்து விட்டோம். கீழே இறங்கவில்லை. தண்ணீர் சுத்தமாக இல்லை என்பதோடு மேடை உயரமாக இருக்கிறது. நவகிரஹ விக்ரஹங்கள் இருக்கும் நீர்த்தேக்கம் அதிலிருந்து ஆழத்தில் இருக்கிறது.
கீழே இறங்கிச் சுற்றி வரும் நபர்களைப் பார்க்கலாம். நாங்கள் இறங்கவில்லை.
ஶ்ரீராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த இடத்தில் ஒன்பது கற்கள் இருந்த இடத்தில் இப்போது காணப்படுவது ஐந்து அல்லது ஆறுதான். மற்றவை தண்ணீருக்குள்ளே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் இருந்தது. ஶ்ரீராமனின் சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலமாகவும் சொல்லப்படுகிறது.
புராணம் சொல்வது என்னவெனில் மஹிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் மூலம் தேவர்களைத் துன்புறுத்துகிறான். தேவர்கள் எவராலும் அவனை எதிர்க்க இயலாமல் ஆதி பராசக்தியிடம் தஞ்சம் புகுந்தனர். ஆதிபராசக்தி மஹிஷாசுரனை வதம் செய்ய வர, அசுரன் இங்குள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்ள, தேவி சக்ர தீர்த்தத்தை வற்ற வைத்து அசுரனை சம்ஹாரம் செய்வதாகச் சொல்கிறது. தேவர்கள் மகிழ்ந்து அமிர்த தாரை பொழியச் செய்கின்றனர். அன்று முதல் இது தேவியின் பெயரால் தேவி பட்டினமாக அழைக்கப்படுகிறது. ராவண வதத்துக்காகத் தென் திசை நோக்கி வந்த ஶ்ரீராமர் கடல் கடந்து சென்று யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் ராமநாதபுரத்திலுள்ள உப்பூரில் விநாயக வழிபாடு செய்கின்றார். உப்பூரிலுள்ள வெயிலுகந்த விநாயகர் ஶ்ரீராமர் வழிபட்டதாக வரலாறு. அதன் பின்னர் தேவி பட்டினம் வந்து கடலில் நவகிரஹப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கின்றனர். இங்கே நாமே அபிஷேஹம், அர்ச்சனைகள் போன்றவை செய்து கொள்ளலாம் என்றே இருந்து வந்தது. இப்போது புரோகிதர்கள் வந்து செய்கின்றனர்.
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
மிக்க நன்றி புதுவை வேலு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
Deleteப்ரோகிதர்களும் உள்ளே இறங்கி பூஜை செய்வார்களா? இடம் பார்க்க நன்றாய் இருக்கிறது.
ReplyDeleteஇனிய பொங்கல் நல வாழ்த்துகள்.
உள்ளே இறங்கலாம் ஶ்ரீராம். புரோகிதர் என்று தான் பெயரே தவிர அவர் உண்மையாகப் புரோகிதம் செய்பவரா என்பது சந்தேகமே. பழக்க தோஷத்தினால் ஏதேதோ சொல்லிக் காசு சம்பாதிக்கிறார் என்றே தெரிகிறது. :(
Deleteஉங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
Deleteபுராண வரலாறு அறிந்தேன் அம்மா...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
வாங்க டிடி, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
Deleteநல்ல தகவல்....... தொடர்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
வாங்க வெங்கட், பொங்கல் வாழ்த்துகள்.
Deleteஅருமையான பயண இலக்கியம்.
ReplyDeleteநன்றி 'இ' சார்.
Deleteதை பிறந்தாச்சு
ReplyDeleteஉலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
வாங்க காசிராஜலிங்கம். நல்வரவு. பொங்கல் வாழ்த்துகள்.
Deleteஇது தேவிப்பட்டினத்திலா?.. ராமேஸ்வரம் இரு முறை சென்றிருந்தும் தே.ப., தனுஷ்கோடி எல்லாம் போய்ப் பார்த்ததில்லை.
ReplyDeleteஊர் பேரை நினைத்தாலே இப்போலாம் அந்த ஊர் தொடர்பாய் யாராவது எழுத்தாளர் இருந்தால் அவர் பெயர் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. தனுஷ்கோடி ராமசாமி.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.. ஆ.வி.யில் கொடிகட்டிப் பறந்தவர்.
ராமேஸ்வரத்தில் வசதியான சத்திரங்கள் உண்டே?..
'பயணங்கள் தொடர்கதை' என்று தலைப்பு இருந்திருக்கலாம்.
வாங்க ஜீவி சார். ஒவ்வொரு முறை ராமேஸ்வரம் போறச்சேயும் தேவிப் பட்டினம் போயிருக்கோம். அப்போ இருந்த அழகு இப்போ இல்லை. அதுவும் தனுஷ்கோடி மௌனமாக சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்தது. இப்போது வறட்டுக் குரலில் வியாபாரம் செய்து வருகிறது. :( அதிர்ச்சியாக இருந்தது பார்க்கவே! ராமேஸ்வரத்தின் சத்திரங்களில் , ஹோட்டல்களில் எங்கும் இடம் இல்லை. நாங்க போனது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை சமயம். ஐயப்ப பக்தர்கள் கூட்டம் வேறே. வாரக் கடைசி நாட்களான சனி, ஞாயிறு எல்லாம் சேர்ந்து கொண்டது.
Deleteதேவி பட்டினம் இப்போது மாறி உள்ளது நாங்கள் படகில் போய் இறங்கி பார்த்தோம். இப்போது கீழே இறங்காமல் சுற்றி வந்து வணங்கினால் போதும் , நடைபாதை அமைத்து இருக்கிறார்களே!
ReplyDeleteஆமாம், சுற்றிலும் வளைவாகப் பாதை போட்டிருக்கின்றனர். நல்லவேளையா இன்னும் நுழைவுக் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கவில்லை. விரைவில் அதுவும் ஆரம்பிக்கலாம்! :)
Deleteபகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க சுரேஷ், நன்றிப்பா.
Delete