எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 29, 2015

புதுவிதமான பட்டுராவும் ஓட்டம் பிடித்த ரங்க்ஸும்! :P

ஹாஹாஹா, இது என்ன வில்லி சிரிப்புனு பார்க்கிறீங்களா? கொஞ்ச நாட்களாகப் புதுசு புதுசா ஏதேனும் சமைக்கும் எண்ணம் வந்திருக்கா! நம்ம ரங்ஸுக்குத் தான் கஷ்டமா இருக்கு. பின்னே? சோதனை எலியே அவர் தானே! பயந்து நடுங்கிட்டு இருக்கார்னா பாருங்களேன்!   அந்த பயம் இருக்கணுமில்ல! :)))))


இன்னிக்குப் பாருங்க, அன்னிக்கு ஊற வைச்சேனே அந்தக் கொ.கடலையை எப்படியேனும் செலவழிக்கும் எண்ணத்தோடு நேத்து ராத்திரி  ஒரு கிண்ணம் ஊறி முளைகட்டிய கடலையை எடுத்துக் கழுவி மறுபடி நல்ல நீரில் ஊற வைத்தேன். அப்படியே ஒரு கரண்டி தயிர், அரை டீஸ்பூன் உப்பில் ஒரு கரண்டி மைதா மாவைக் கலந்து நன்கு ஸ்பூனால் அடித்துத் தனியாக வைத்தேன். இது சமீபத்தில் கண்டு பிடித்த ஒரு முறை.

                         
                              தயிர், உப்புக்கலந்து கலக்கிய மைதாமாவுக்கலவை

(சாதாரணமாக பட்டுராவை மைதாவிலேயே தான் பண்ணுவோம். இங்கே பாருங்க.  நான் முன்னர் செய்த பட்டூரா  வோட குறிப்பு. ஆனால் இணையத்திலே ஒரு நாள் தற்செயலாக இந்தத் தகவல் கிடைத்தது. ஆகவே பாராட்டறவங்க யாரானாலும் அவங்களைத் தான் பாராட்டணும்.  என்னைப் பாராட்ட வேண்டாம்.)

 இன்று காலை ஊறிய கொ.கடலையை குக்கரில் வேக வைத்து விட்டு கோதுமை மாவு இரண்டு கிண்ணம் எடுத்துக் கொண்டு தேவையான உப்புச் சேர்த்து வெண்ணெய் இரண்டு டீஸ்பூன் போட்டு ஐந்து நிமிடம் போலக்  கலந்து கொண்டேன்.
         
                           கோதுமை மாவில் மைதாக் கலவையைச் சேர்த்திருக்கேன்.

பின்னர் அந்தக் கலந்த மாவில் முதல் நாள் கலந்து வைத்த மைதாமாவுக் கலவையைச் சேர்த்தேன். அது நேற்றே கலந்து விட்டதால் இன்று நன்கு பொங்கிக் கொண்டு மேலே குமிழியிட்டிருந்தது.  அதை கோதுமை மாவில் போட்டுக் கலந்து கொண்டு தேவையான நீர் மட்டுமே விட்டுக் கொஞ்சம் கெட்டியாகவே பிசைந்து கொண்டேன்.


                               பிசைந்து வைத்திருக்கும் மாவு.

சனாவைத் தயார் செய்தேன். சனா செய்முறையும் மேலுள்ள சுட்டியில் காணலாம். பின்னர் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு பூரிகளைப் போட்டு எடுத்தேன் பூரி நன்கு உப்பிக் கொண்டும் மிருதுவாகவும் அதே சமயம் மொறமொறப்புக் குறையாமலும் வந்தது. ஆனால் அந்தச் சனா தான் ரங்க்ஸுக்குப் பிடிக்காது. அவருக்குப் பூரி என்றால் உ.கி. தான் பண்ணணும். ஆகவே சோகமாகவே சாப்பிட்டார்.  நீங்கல்லாமும் முயற்சி பண்ணுங்க. உங்க வீடுகளில் கலவரம் ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை. :))))) பூரி நல்லாவே வந்தது.



எண்ணெயில் பொரியும் பூரி






பொரித்து வைத்திருக்கும் பூரிகள்

25 comments:

  1. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல்... செய்து பார்க்கிறோம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன். சனாவில் சைட் டிஷ் பிடிக்கும் என்பவர்கள் தாராளமாகப் பண்ணலாம். நம்ம வீட்டில் சனா என்றால் சுண்டல் தான். அல்லது பிட்லை, கூட்டு போன்றவற்றிற்குப் போடலாம். :)

      Delete
  2. மைதா மாசவை ஸ்பூனால் அடிச்சதைப் படிச்சதும் தள்ளியிருக்கிற நானே பயந்துட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நான் அடிக்கும்போது பயத்தில் கத்தியது நீங்கதானா? ரொம்பநாளாச்சா/வருஷம்? உங்க குரல் அடையாளம் தெரியலை! :P :P :P

      Delete
  3. தலைப்புக்காகவே பதிவு சூப்பர் ஹிட் ஆகும்.

    எனக்கும் சனா பிடிக்காது, பூரி பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே ஶ்ரீராம், பதிவு சூப்பர் ஹிட் ஆகவா நாம எழுதறோம்! எல்லாம் கடமை! கடமை உணர்ச்சி! தமிழ்த்தாய்க்குச் செய்யும் சேவை! :))))

      Delete
  4. அவங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாதி நன்றி எவங்களுக்கு? உங்களுக்குப் பிடிச்சிருந்தால் தான் ஆச்சரியம்! :P :P :P :P :P

      Delete
  5. aaha நல்லாவே வந்திருக்கு. நல்ல முறை சொல்லிக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. கீதாமா.
    @ Durai ha ha.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பூரி நல்லாவே வந்தது வல்லி. அப்பாதுரைக்கு வேலை என்ன? என்னை வம்பிழுக்கணும்! :)

      Delete
  6. ஈஸ்ட் டுக்கு பதில் இந்த மைதாமாவு+தயிர்+உப்பு கலவையா?
    புதுசு புதுசா சமையல் முயற்சி பண்ணுகிற ஆர்வம் உள்ள உங்களை ரொம்பவும் பாராட்டணும்.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி, நீண்ட நாட்கள் கழிச்சு உங்களைப் பார்ப்பதில் சந்தோஷம். ஆமாம் ஈஸ்ட் எல்லாம் வேண்டாம். முதல்நாளே இப்படிக் கலந்து வைச்சுட்டா அது தானே புளிப்பு வந்துடும். எதிலும் இயற்கையான முறை இருக்கணுமில்ல! :))) அதான்!

      Delete
  7. சூப்பர்!.. முயற்சி பண்ணிட வேண்டியது தான்!..'முந்தின நாள் மைதா மாவு கலவை' நல்ல டிப்ஸ்!...

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க பார்வதி.

      Delete
  8. super. seythu paarkiren..

    ReplyDelete
    Replies
    1. முயற்சி பண்ணுங்க.

      Delete
  9. இன்றைக்கு செய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. டிடி, செய்தீங்களா? நல்லா இருந்ததா?

      Delete
  10. பூரி நன்றாகத்தானே வரவேண்டும் வாழ்க உங்கள் தமிழ்ப்பணி.

    ReplyDelete
    Replies
    1. பூரி உப்பிக் கொண்டு வருவது மாவைப் பிசைவதில் இருக்கு ஜிஎம்பி ஐயா. ஆகவே கொஞ்சம் யோசனையாத் தான் இருந்தது. :)

      Delete
  11. சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  12. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! உங்களுக்கும் உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

      Delete
  13. சன்னா பட்டூரா..... - இங்கே இது பிரபலம்! அதனால் வீட்டில் செய்வதே இல்லை :) எப்போதாவது வெளியே சாப்பிடுவதுண்டு!

    ReplyDelete