"மோகமுள்" விமரிசனம்(ஹிஹிஹி அப்படினு நான் தான் சொல்லிக்கணும்) எழுதினப்போ வந்த பார்வையாளர்களை விட இப்போக் "கடுகு" சாரைப் பத்தி எழுதினதுக்கு இன்னும் அதிகமாக வந்திருந்தாங்க. ஆனால் கருத்துச் சொன்னது என்னமோ வழக்கமான நண்பர்களே! ஆனால் நான் பதிவு போட்டவுடன் கடுகு சாருக்கு நிறையக் "கடிதங்கள்" வருவதாகச் சொல்லி அதுக்காக எனக்கு நன்றியும் சொல்லி இருக்கார். எனக்குத் தோன்றியது என்னன்னா
"ஹை, என் எழுத்தையும் படிச்சு ரசிக்கிறவங்க இருக்காங்களே!" என்பது தான். உண்மையிலேயே இது எனக்கு ஓர் ஊக்கத்தைக் கொடுக்கிறது. எழுதி வைச்சும் சில நாட்களாகப் போடாமல் வைத்திருந்த இந்தப் பதிவைப் போடும் தெம்பைக் கொடுத்திருக்கு. எப்படியோ கடுகு சாரின் பாராட்டும் கிடைத்து விட்டது. உலகக் கோப்பையையே வாங்கினாப்போல் இருக்கு!
தினமுமே பொதுவா எட்டரையிலிருந்து ஒன்பதுக்குள்ளே படுத்துடுவேன். ஆனால் சென்ற வாரம் சனிக்கிழமை எங்க வீட்டுக் குட்டிக் குஞ்சுலு வரதுக்கு நேரம் ஆயிடுத்து! ஹிஹிஹி, குட்டிப் பேத்தி துர்கா தான். தூங்கிட்டிருந்தா! முழிச்சுண்டு "ங்கா" குடிச்சுட்டு டிரஸ் மாத்திண்டு வர ஒன்பது மணி போல ஆச்சு. அப்போ அவங்களுக்குக் காலம்பர பதினோரு மணி! குழந்தை வரதுக்குள்ளே தொலைக்காட்சியிலே ஏதோ நெடுந்தொடர் ஓடிட்டிருக்கே என்னனு பார்க்கலாம்னு பார்த்தால் பல வருஷங்களாக ஓடிக் கொண்டிருக்கும் "வம்சம்" தொடர் தான். ஆரம்பத்திலோ, நடுவிலோ என்ன ஆச்சுன்னு எல்லாம் தெரியாது! தெரிஞ்சுக்கவும் விருப்பம் இல்லை. ஆனால் நான் சொல்ல விரும்புவது என்னன்னா அன்னிக்கு நான் பார்த்தப்போ நான்கைந்து முரடர்கள் (நடிகர்கள் தான், அடியாட்களாக நடிக்கிறாங்கனு நினைக்கிறேன்.) ஒரு பெண்ணை, அந்தப் பெண் தான் கதாநாயகினு நினைக்கிறேன். கதைப்படி பூமிகானு பெயர்!

இந்தத் தொடரில் அந்தப் பெண் சிரிச்சதாகத் தெரியவே இல்லை. தொடர் முழுக்க ஒரே அழுகை தான். ஆரம்பத்தில் பார்த்தது! அதோட இல்லாம இந்தப் பெண்ணின் குழந்தை வேறே அடிக்கடி தானே வீட்டை விட்டுப் போகும்! வரும்! சர்வ சகஜமாக நடக்கும்! அது தான் ஆச்சரியம்னா தொடரில் புதிதாக வரும் பெண்கள் அனைவரும் இந்தப் பெண்ணின் கணவனையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவாங்க. ஒவ்வொண்ணா மீண்டு வந்திருப்பானு நினைச்சால் ம்ஹூம்! தொடர் முடியவே இல்லை! முந்தாநாள் அந்தப் பெண் பூமிகாவா நடிச்ச பெண்ணின் கணவனையும் காணோம். குழந்தையையும் (வழக்கம் போல் காணோம்) அந்தப் பெண்ணை மட்டும் முரடர்கள் தலையில் ஒரு கருப்புத் துணியைப் போட்டுக் கழுத்து வரை கட்டி விட்டுக் கைகளையும் பின்னால் சேர்த்துக் கட்டி இருந்தார்கள்.
இதுவே வன்முறைன்னா அடுத்து அவங்க செய்தது இன்னமும் கோரம், மோசம். அந்தப் பெண்ணை அப்படியே தட்டாமாலை சுத்தறாப்போல் சுத்தி விட்டுட்டு இருந்தாங்க. அதை ரசிச்சுக் கை தட்டிச் சிரிப்பு வேறே. அந்தப் பெண்ணுக்குக் கண்ணும் தெரிய வாய்ப்பில்லை. கைகளைக் கட்டி இருப்பதால் கழுத்து வரை மூடி இருக்கும் துணியையும் அகற்ற முடியாது. இந்த நிலையில் அந்தப் பெண் எங்கேயானும் போய் முட்டிக்கலாம். ஏதேனும் ஆபத்து நேரலாம். தட்டாமாலை சுற்றுவதில் தலை சுற்றிக் கீழே விழுந்து துணி தொண்டையை நெரித்து மூச்சு விட முடியாமல் உயிரும் போகலாம். இம்மாதிரி எல்லாம் கொடுமை செய்வாங்க என்பதே அன்னிக்குத் தொலைக்காட்சி பார்க்கிறச்சே தான் தெரியும். தெரியாதவங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாங்க போல!
ஏற்கெனவே போலீஸ் அடினு எல்லா சீரியலிலும் காட்டிட்டு இருக்காங்க! போலீஸ் அடி எப்படி இருக்கும் தெரியுமானு கேட்டுட்டு அடிக்கிறதைக் காட்டறாங்க! அதுவே ரொம்பவே மோசம்! இன்னொரு தொடரில் கதாநாயகியை நிறை மாத கர்ப்பமாக இருக்கையில் காரின் டிக்கிக்குள் வைத்து அடைக்கிறாள் இன்னொரு பெண்!இவங்க எடுக்கும் தொடர்களில் இவங்களுக்கெல்லாம் வேறே வேலையே இருக்காதா என்றெல்லாம் நினைப்பு வரும். நமக்கெல்லாம் கோபம் வந்தால் அதிக பட்சம் அரை மணி நேரம் இருக்கும்! அப்புறமா நாமே சமாதானம் ஆகி விடுவோம். ஆனால் இந்தத் தொடர்களில் முழு மூச்சாக இதே வேலையா இருக்காங்க!
இதெல்லாம் பார்த்துத் தான் நம் மக்கள் வன்முறையின் உச்சிக்கே போய் விடறாங்க. ஆனால் இதுக்குக் கெட்ட பெயர் வாங்கிப்பதோ மத்திய அரசு தான். மத்திய அரசின் தூண்டுதலால் தான் மக்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும் கொலை, கொள்ளை செய்வதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே என்ன கெடுதல் நடந்தாலும் அதற்குக் காரணம் என மத்திய அரசைச் சுட்டிக்காட்டுவது கடந்த மூன்று வருடங்களாகப் பழக்கமாகி விட்டது. இதற்கு முன்னர் வன்முறைகளே நடந்தது இல்லையா என்ன? எல்லாரும் விரும்பிப் பார்க்கும் தொடர்களில் ஆர்வத்தைக் கூட்டுவதற்காகப் பழி வாங்குதல், கொலை செய்தல், தவறான உறவு முறைனு காட்டிடறாங்க. நம் மக்கள் சினிமாவைப் பார்த்தே அந்தக் கதாநாயகன் மாதிரி நடந்துக்க நினைப்பாங்க! இப்போக் கேட்கணுமா?
தொடர்களில் வரும் அல்லது சொல்லிக் கொடுக்கும் அத்தனை முறைகேடான விஷயங்களையும் பரிட்சை செய்து பார்க்கிறாங்க! என்னத்தைச் சொல்றது! இந்தத் தொடர்கள் எல்லாம் எப்போவோ முடிஞ்சு போச்சு! அல்லது முடிஞ்சதாக் காட்டி இருக்கணும்! ஆனாலும் புதுப் புதுப் பாத்திரங்களைக் கொண்டு வந்து அதற்கு ஒரு flash back கொண்டு வந்து தொடரை நீட்டிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து "தெய்வமகள்" ஐந்து வருடங்களாக வருகிறதோனு நினைக்கிறேன். ஒரு தொடர் ஒரு மாதத்துக்கு மேல் வரக் கூடாது! அதிலும் படிப்பினைகள் நிறைந்ததாகக் காட்டணும். வன்முறை இருக்கக் கூடாது! தவறான உறவுமுறையைக் காட்டக் கூடாது. வட மாநிலம் ஒன்றில் இந்தத் தவறான உறவு முறையால் அவங்க சொந்தங்களாலேயே எப்போதோ கொல்லப்பட்ட இரண்டு பேரையும் மத்திய அரசின் கொள்கையால் கொன்றுவிட்டார்கள் என இப்போது தான் ஒரு குழுமத்தில் எழுதி இருந்ததைப் படித்தேன். அதில் இறந்தவர்கள் "தலித்" என்று வேறே போட்டுட்டாங்க! ஆனால் அந்தச் செய்தியும் பொய்யான செய்தி என அதே குழுமத்தின் இன்னொரு நபர் சுட்டிக்காட்டி இருக்கார். இருந்தாலும் அதை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசு தான் கொன்று விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நொ.கு.ச.சா. :(
"நீட்" தேர்வுக்குத் தமிழ்நாட்டுக்கு விலக்குக் கேட்டுப் போராடறாங்க! ஏன் மாணவர்களின் தரத்தை உயர்த்தப் போராடவில்லைனு புரியலை! ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் விலக்குக் கூடாதுனு சொல்றாங்க! இந்தப் படிப்பு விஷயத்தில் அரசியல்வாதிகள் தலையிடாமல் இருக்கலாம். சலுகைகள் மூலம் இடம் பெற்றுவிடலாம். சரிதான். ஆனால் கிட்டத்தட்ட ஆறு வருஷம் படிக்க வேண்டுமே! மருத்துவம் போன்ற படிப்புக்குத் தரமான மாணவர்கள் தேர்வு அவசியம் இல்லையா? விலக்குக் கோரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்த பின்னர் அவர்களால் தொடர முடியுமா? அந்த அளவுக்கு அவர்கள் படிப்பின் தரம் இருக்குமா? எல்லாவற்றுக்கும் சலுகை அல்லது இலவசமே இப்போதைய தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு! மக்கள் இதற்கே பழகி விட்டார்கள்.
கதிராமங்கலம், நெடுவாசல் திட்டங்களுக்காகப் போராடும் மக்களிடம் உங்களுக்குப் பெட்ரோல், எரிவாயு, டீசல் போன்றவை வேண்டாமா என்று கேட்டு ஒரு சர்வே எடுக்கலாம். அவங்க என்னமோ பிஜேபி அரசு வந்து தான் புதுசா எண்ணெய் எடுக்கிறாப்போல் பேசறாங்க. கச்சா எண்ணெயில் நெருப்புப் பற்றாது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் பல ஆயிரம் அடி கீழே இருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கும் நிலத்தடி நீருக்கும் சம்பந்தமும் இல்லைனு பூகோள ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர். அதோடு இல்லாமல் இத்தனை வருடங்களாகப் பேசாமல் தான் இருந்தார்கள் எல்லோருமே! திடீர்னு இப்போப் போராட்டம்னு ஆரம்பிச்சிருக்காங்க! காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி புரிந்தபோது இந்தத் திட்டத்துக்கு ஆதரவு கொடுத்தவங்களே இப்போ எதிராக மாறிப் போய் விட்டார்கள்! அப்போவே ஏன் எதிர்க்கலை?
"பிரதிலிபி"யில் ஈரோடு கார்த்திக் என்பவர் எழுதிய ஒரு கதை! சுட்டி இங்கே!
ஈரோடு கார்த்திக்
இந்தக் கதையில் நண்பர் வங்கியில் கொள்ளை அடித்துவிட்டுப் பின்னர் அந்தப் பணத்திலிருந்து குறைந்த பட்சமான தொகையை எப்படித் திருடுவது என்பதை விலாவரியாகச் சொல்லிக் கொடுக்கிறார். இது பிரதிலிபி போன்ற தளத்தில் வருவதே நெருடல்! ஈரோடு கார்த்திக் எழுதியது என்பது இன்னமும் நெருடல்!
முன்னெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு எடுப்பார்கள். அவசர உதவி, முதலுதவி செய்தல், தெருக்களைச் சுத்தமாக வைப்பது, பள்ளியைச் சுத்தம் செய்வதில் உதவுதல், தோட்டம் போடுதல், பராமரித்தல் என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். இப்போதோ கதைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் எப்படித் திருடுவது, எப்படிக் கொள்ளை அடிப்பது, எப்படி ஏமாற்றுவது என்றே சொல்லிக் கொடுக்கிறார்களே!

உறவினர் வீட்டுக்கு போயிருந்தேன் நான்கு நாட்கள் வம்சம் தொடர் பார்க்க வேண்டிய சூழல் மனம் வெறுத்து விட்டேன் எப்படித்தான் பெண்கன் சீரியலுக்கு அடிமையாகின்றார்கள் ?
ReplyDeleteவம்சம் சீரியல் எடுத்தவன் மட்டும் என் கண்ணுல சிக்கினான் அவனை கொலை பண்ணிட்டு தமிழ் நாட்டு மக்களுக்காக ஜெயிலில் இருப்பேன்.
ஒரு வரைமுறை வேண்டாமா ? பார்க்கிறவன் அனைவரையும் வருசக்கணக்கா முட்டாள் ஆக்கி வச்சு இருக்காங்கே....
வாங்க கில்லர்ஜி! எல்லா சீரியல்களுமே மோசம் தான்! :( அதிலும் வம்சம் படு மோசம். இந்தத் தொடரை எடுப்பது ரம்யா கிருஷ்ணன் என்று கேள்விப் பட்டேன்.
Deleteஎதுக்குங்க கிலலர்ஜி? இது வெறும் வியாபாரம். பார்ப்பதற்கு ஆட்கள் இருப்பதால் தானே அவர்களும் ஒளிபரப்புகிறார்கள்?
Deleteநல்லவேளை எந்தத் தொலைக்காட்சி தொடர்களையும் பார்ப்பதில்லை. (ஹிஹி.. ஹஸ்பண்ட் என்கிட்ட சொன்னதுல ஸ்டிரிக்டா கடைபிடிப்பதில் இதுவும் ஒண்ணு). அதைப் பார்ப்பதில் பைத்தியமாக இருக்கும், இருந்த பலரை எனக்குத் தெரியும். பிக் பாஸ் மாத்திரம் சில வாரங்கள் அப்போ அப்போ பார்த்தேன். அப்புறம் அதையும் நிறுத்திட்டேன். தொலைக்காட்சி கேவலமான தொடர்கள், டாஸ்மாக், குட்கா என்று எல்லோரும் போட்டிபோட்டுக்கொண்டு தரம் தாழ்கிறார்கள். இதில் ஒருசாரார் இன்னொரு சாராரைக் குற்றம் சுமத்துகிறார்கள்.
ReplyDeleteமற்ற செய்திகளும் வருத்தப்பட வைப்பவைதான். இனி, மார்க் பற்றி கண்டுகொள்ளாமல், லாட்டரி மூலமாக எல்லா மாணவர்களையும் எல்லாப் படிப்புக்கும் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற போராட்டம் வரும் காலம் தூரத்தில் இல்லை.
பரவாயில்லை! ஹஸ்பன்ட் சொன்னதைக் கேட்கும் வைஃபா நீங்க? :) தொலைக்காட்சி பார்ப்பது ரொம்பவே அலுப்பான விஷயம்!
Deleteஎத்தனை பேர் நொ-ண்டிக் கு-திரைக்குச் ச-றுக்குனது சா-க்கு என்பதைப் புரிந்துகொள்வார்களோ
ReplyDeleteம்ம்ம்ம், என்னோடப் பத்து வருஷமாப் பழகறவங்க புரிஞ்சுப்பாங்க. நான் அதிகம் சுருக்குவேன் முன்னெல்லாம்! சிலர் தலையைப் பிச்சுப்பாங்க! அருஞ்சொற்பொருள் விளக்கம் போட வேண்டி இருக்கும். :)
Deleteரியல் வன்முறைகளுக்குக் கேட்கவும் வேண்டுமா? சரியாக விளக்கு வைக்கும் நேரத்தில் அழுகை ஒலிக்கும்! எல்லோருமே கெட்டவர்களாகவே இருப்பார்கள். நல்லவர்களாக இருப்பவர்களுக்கு எப்போதுமே சோதனை மேல் சோதனை மேல் சோதனை மேல் சோதனை சோதனைதான்! இப்போது போதாத காலத்துக்கு பிக் பாஸ் வேற!!!
ReplyDeleteஹவ் ஐஸ் துர்க்கா மேடம்? உங்களைத் தேடறாங்களா?
துர்க்கா மேடம் எங்களை அடையாளம் தெரிஞ்சுக்கறா! ஆனால் நாங்க வரமாட்டோம், தூக்கமாட்டோம்னு தெரிஞ்சா கோவம் வருது! :(
Deleteஉங்கள் ஆதங்கம் சரி தான்! இப்போது பாசிடிவாக வரும் சீரியல்கள் கிட்டத்தட்ட இல்லை! டிஸ்கவரி, ஹிஸ்டரி, நியூஸ் சானல்கள் (விவாத/கத்தல் மேடைகள் தவிர்த்து) பக்கம் ஓடி விடுவதே என் வீட்டினர் கடைப்பிடிக்கும் வழி!
ReplyDeleteஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னர் போராட்ட ஜுரம் வந்து விட்டது! பேய்ப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து பேய்ப்படங்களாகவே வருவது போல்!
நீங்கள் சொல்லியிருக்கும் கடைசி விஷயம் மிகச் சரி! சில பள்ளிகளில் மட்டும் தோட்ட வேலை போன்று நடக்கிறது. மாரல் ஸ்டடீஸ் பாடம் மிக அவசியம்.
இங்கே நியூஸ் சானல்கள் பார்ப்போம். அதுவும் ஒழுங்கில்லை! :( பள்ளிகளில் முன்னெல்லாம் சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கூட நாடகமாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் பாடம் சொல்லிக் கொடுப்பதே ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கே! :(
Delete//எங்கே என்ன கெடுதல் நடந்தாலும் அதற்குக் காரணம் என மத்திய அரசைச் சுட்டிக்காட்டுவது கடந்த மூன்று வருடங்களாகப் பழக்கமாகி விட்டது. //
ReplyDeleteஇந்தியாவை ஆள்பவர் கடவுள் ஆகும்போது நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் கடவுளைத்தானே காரணம் காட்ட முடியும்.
--
Jayakumar
வாஸ்தவம் தான். மனிதர்களுக்கு அதுவே பழக்கம். தாங்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் கடவுளைத் தான் காரணம் காட்டுவார்கள்! ஆனால் எந்தக் கடவுளும் யாரையும் கொடூரமாக நடந்து கொள்ளும்படி சொன்னதாகவும் தெரியவில்லை. அவர்களாகவே செய்யும் தவறுகளுக்கெல்லாம் கடவுளைக் காரணம் காட்டினால் எப்படி?
Deleteஆனால் அந்த தவறுகள் தடுக்கப்படலாம் அல்லவா? திரைப்படங்களுக்கு ஒரு சென்சார் இருப்பது போன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் ஒரு கட்டுப்பாடு வைக்கலாம் அல்லவா? தற்போது உள்ள கவுன்சில் பல் பிடுங்கிய பாம்பாக இருக்கிறது. ஒளிபரப்பிற்கு பின் தான் புகார் செய்ய முடியும். புகார் செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
Delete--
Jayakumar
கட்டுப்பாடுகள் கொண்டு வந்த உடனே நம்மக்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்களே! அவ்வளவு நல்ல மக்கள்! பல் பிடுங்கிய பாம்புனு சொல்லும்போதே ஊடகங்கள் ஊடகத்தை அரசு அமுக்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! இன்னும் முன் கூட்டியே கட்டுப்பாடுகள் கொண்டு வந்துட்டால் சுதந்திரம் போச்சு, பேச்சுரிமை இல்லை, கருத்துரிமை இல்லைனு கூப்பாடு போடுவாங்களே! பரவாயில்லையா?
Deleteசீரியலா...? ஐயோ....!
ReplyDeleteவாங்க டிடி, ஹிஹிஹி! நல்ல வேளை! பிழைச்சீங்க!
Deleteசீரியல் பார்க்கும் பழக்கமே இல்லை....என் மனைவி பார்ப்பார். நான் சினிமாதான் பார்ப்பேன். பார்த்தாலும்...
ReplyDeleteகீதா: சீரியல் நோ ஐடியா!...வீட்டுல டிவி பெட்டி மட்டுமே கனெக்ஷன் இல்லை... அதுவும் என் மாமியார் வீட்டுக்குப் போய்விட்டு இப்பதான் வந்துருக்கு....அங்க இருக்கற கனெக்ஷன அப்படியே இந்த ஏரியாவுக்கு மாத்தலாமானு யோசிச்சுட்டுருக்காங்க...ஏன்னா அவங்க அங்க ஒரு வருடத்துக்குக் கட்டிருக்காங்க...
உங்கள் பேத்தி எப்படி இருக்கிறாள் தேடுவாளே!!உங்கள் குரல் கேட்டால்..
பேத்திக்கு ஆரம்பத்தில் சந்தோஷமா இருந்தது. நாங்க கணினிக்குள்ளே இருந்து வெளியே வருவோம்னு நினைச்சுச் சுத்திச் சுத்தித் தேடுவா! இப்போ வரமாட்டாங்கனு புரிஞ்சு போச்சு! :( தொலைக்காட்சியே பார்க்கறதில்லையா? ரொம்ப நல்லது!
Deleteசில வாக்கியம் விடுபட்டுப் போயிருக்கு! தேநீர் போட எழுந்து போனேன். அப்போச் சரியாக் கவனிக்காம பப்ளிஷ் பண்ணி இருக்கேன்.
Deleteபேத்திக்கு இப்போ வரமாட்டாங்கனு புரிஞ்சு போச்சு! அதனால் கோபம்வருது! அழறா! "சங்குச் சக்கர சாமி"யும், கோவிந்தாவும் பாடினால் கொஞ்சம் கவனிக்கிறா. ஆனால் அவளைத் தூக்கலை,கொஞ்சலைனு புரியுது! :(
எ.சு.ர.சே. என்பது போல எந்த டொபிக் எழுதினாலும் மோடி அரசுக்கு வாய்தா வாங்கி விடும் உங்கள் திறமையை மெச்சுகிறேன். (நான் மோடி அரசுக்கு எதிரி கிடையாது).
ReplyDelete// "நீட்" தேர்வுக்குத் தமிழ்நாட்டுக்கு விலக்குக் கேட்டுப் போராடறாங்க! ஏன் மாணவர்களின் தரத்தை உயர்த்தப் போராடவில்லைனு புரியலை!// -அதுதானே..! ஏன் செய்யக் கூடாது?
//ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் விலக்குக் கூடாதுனு சொல்றாங்க!// - அப்படியா? இது உண்மையில் மாணவர்கள் முடிவு எடுக்க வேண்டிய விஷயம்தான்.
அது சரி, உங்கள் பதிவுகளில் இருக்கும் உற்சாகம் மிஸ் ஆவது போல தோன்றுகிறதே.., அல்லது எனக்கு மட்டுமா?
வாங்க பானுமதி, ரொம்ப நாட்கள் கழிச்சு வரீங்க! முன்னே ஒரு கமென்ட் கொடுத்ததாச் சொல்லி இருந்தீங்க! அது போன இடம் தெரியலை! :(
Deleteபோகட்டும்! நான் வாய்தா எல்லாம் வாங்கலை! இதிலே திறமைனு தனியா எதுவும் இல்லை. நமக்குக் காலம்பர காலைக்கடன்களை முடிக்கமுடியலைனாக் கூட மோதியைக் குற்றம் சொல்லுவதே வழக்கமாக இருக்கிறது. அவருக்கு ஒரு பிரதமராக வேறே வேலைகளே இல்லையா? இம்மாதிரிச் சில்லுண்டி விஷயங்களிலா தலையிடுவார்? யோசிக்க வேண்டாமா?
உற்சாகம் மிஸ் ஆகிறதா? தெரியலை! ஆனால் ஶ்ரீராம், ஜீவி சார் போன்றோர் மாற்றம் தெரிவதாகச் சொன்னார்கள். எனக்குத் தெரியலை! முன்னை விட இப்போது உடல் சோர்வு அதிகம் ஆகி இருக்கு. அதையும் மீறிக் கொண்டு தான் இணையத்துக்கு வரேன். :)
Deleteதொலைக் காட்சி சீரியல்கள் ஒரு வேளை இப்போது இருக்கும் நம்வீட்டுப் பெண்மணிகளின் கலாச்சாரதைக் காட்டுகிறதோ சீரியல்கள் பார்ப்பதில்லை என்று கூறியே அக்கு வேறு ஆணிவேறாக அலசுகிறார்கள் நான் பொதுவாக வலை உலகப் பிரகிருதிகளைக் கூறு கிறேன் எனக்குப் பொழுது போக்கே சில சீரியல்கள் தான் சீரியசாக எதையும் எடுத்துக் கொள்வதில்லை
ReplyDeleteநான் எல்லா சீரியல்களையும் பார்ப்பதில்லை ஐயா. ஏழரையிலிருந்து எட்டரை வரை! பல முறை இதைச் சொல்லி இருக்கேன். சீரியசா நாம பார்ப்பதில்லை என்பது என்னமோ உண்மை! ஆனால் எல்லோரும் அப்படி எடுத்துக்கிறதில்லை என்பதும் அதை விட உண்மை! :(
Deleteஇது போன்ற தொடர்களுக்கு விளம்பரம் கொடுத்து உதவும் பொருட்களை வாங்கக் கூடாது என்று யாராவது முகநூல் வாட்சப்பில் செய்தி கிளப்பட்டும்.. பிறகு பாருங்கள் நிலை மாற்றத்தை. (நம்புவோம் :-)
ReplyDeleteஇத்தனை பெண்கள் முன்னேற்றக் குழுக்கள் இருந்தும் paravalaaka இதைத் தட்டிக்கேட்க சுட்டிக்காட்டக் காணோமே?
தமிழ் நாட்டில் எதெற்கெடுத்தாலும் போராட்டம் தான்.. எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவதைக் கண்டித்து ஒரு போராட்டம் தொடங்கலாமா?
ReplyDelete//ஆனால் எந்தக் கடவுளும் யாரையும் கொடூரமாக நடந்து கொள்ளும்படி சொன்னதாகவும் தெரியவில்லை.
ReplyDeleteஹிஹி.. எல்லாம் அறிஞ்ச நீங்களே இப்படி அநியாயத்துக்கு வக்காலத்து வாங்கலாமா? சில்லறை விசயத்துக்கெல்லாம் கைய காலை வெட்டிக் குதறி அல்லது மினிமம் சாபம் கொடுத்த சாமி கதைகள் ஏராளம்.. இதையெல்லாம் படித்து கேட்டுத்தான் வன்முறையே தொடங்கியது என்பேன். அதுவும் பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியப் புராணங்களில் வேராகியுள்ளது. விடுங்க.. புராணம் கடவுள் கிடையாதுன்னுடுவீங்க.. :-)
பொதுவாகவே டி.வி. பார்ப்பதில்லை. அப்படி பார்த்தாலும் சீரியல் நிச்சயம் பார்ப்பதில்லை! :)
ReplyDeleteகொடுத்து வைச்சவர் தான் நீங்க! :)
Delete