எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 06, 2017

ஒரு காணொளி (?) காட்சி!

சின்னப் பெண்ணின் நடனம்

லிங்க் வேலை செய்யுது. சோதனை செய்து பார்த்துட்டேன். இந்தப் பெண் ஆடுவது அசர அடித்தது. இந்தப் பெண் ஆடும் பாடல் சிருங்கேரி சங்கராசாரியார் பாரதி தீர்த்தர் எழுதிய பாடல் என அறிந்தேன்.

"கருட கமன தவ சரண கமல" என ஆரம்பிக்கும் பாடல். நண்பர் ஒருவர் ஒரு குழுமத்தில் பகிர்ந்திருந்தார். இதையே முகநூலிலும் பகிர்ந்திருந்தார்களோ என எண்ணுகிறேன். நன்றாக அர்த்தம் புரிந்து ஆடுகிறாள் குழந்தை! மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

வலது உள்ளங்கையிலே சுண்டு விரலுக்குக் கீழுள்ள பகுதி, மணிக்கட்டுக்கு அருகே வீங்கிக் கொண்டு வலிக்கிறது. ஏற்கெனவே அங்கே வலி அவ்வப்போது வரும், போகும். கண்டுக்கிறதில்லை. இன்னிக்கு ஜாஸ்தியா இருக்கிறதோடு வீக்கமும் இருக்கு. இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை என்பதால் மருத்துவர் இருக்க மாட்டார். நாளை வரை பார்க்கணும்! :)

அதுக்காகக் கடமையைச் செய்யாமல் இருப்போமா என்ன? வந்து கடமையை ஆத்தியாச்சு!

நாளை சந்திர கிரஹணம். இரவு பத்தே முக்காலுக்குப் பிடித்துப் பனிரண்டே முக்காலுக்கு விடுவதாகச் சொல்கிறார்கள். ஒரு சில பஞ்சாங்கங்களில் பனிரண்டு மணிக்கே கிரஹணம் விட்டு விடுவதாகப் போட்டிருக்கு. எப்படி ஆனாலும் நாளை ராத்திரி தூக்கம் இருக்காது! ஹிஹிஹி!

மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாம். இன்னிக்குத் தொலைக்காட்சிகளில் அதான் முக்கியச் செய்தி!  திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மனோநிலையை யோசித்து ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. பெற்றோர் கொஞ்சம் இல்லை நிறைய அவசரப்பட்டு விட்டார்கள்.

நகை திருடுபவர்கள் விமானத்தில் சென்னைக்கு வந்து நகை பறிப்புத் தொழிலை வெற்றிகரமாகப் பயன் படுத்தி விட்டுத் திரும்ப விமானத்திலேயே டெல்லி செல்கின்றனராம். இங்கே தங்குவதற்கு, மற்றும் மற்றப் பொருட்கள் வாங்குவதற்கு ஆதார், பான் கார்ட் பயனாகிறதாம்! இதை எங்கே போய்ச் சொல்ல!  ஹை டெக் திருடர்கள்! :)

23 comments:

  1. காணொளி பிறகு காண்பேன்
    ஐ..... ஹை டெக் திருடர்கள் ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, வருகைக்கு நன்றி.

      Delete
  2. அந்த வீடியோ இங்கேயே வரவேண்டுமே. இது நேர யூடியூப்புக்குனா போறது. இருந்தாலும் முதல் முயற்சி.. பாராட்டுக்கள்.

    பாடலும் fast beat குழந்தையும் நல்லா ஆடுகிறாள், டீச்சர் சாதாரண பேக்கிரவுண்ட் என்று நினைக்கிறேன் (வீட்டைப் பார்த்தால்). எத்தனை திறமைகள் எங்கெங்கோ ஒளிந்திருக்கின்றன.

    சந்திரகிரஹணம் பகல்ல வரப்படாதோ? இரவுனா எவ்வளவு வேலைகள்.

    பெற்றோர் அவசரப்பட்டுவிட்டார்கள். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது.

    ரயில்ல வருவதைவிட விமானப் பயணம் சீப். அதுவும் முதலிலேயே யார் ஊரில் இருப்பார்கள், யாரிடம் நகை இருக்கிறது என்றெல்லாம் சரியான தகவல்கள் முன்பே போய்விடுவதால், முதலிலேயே விமானப்பயணத்துக்கு ஏற்பாடு செய்ய சுலபமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நான் யூ ட்யூபுக்குத் தான் லிங்க் கொடுத்திருக்கேன். வீடியோ 2015 ஆம் ஆண்டிலோ என்னமோ காற்றடிக்கையில் மரம் அசைவதை எடுத்துப் போட்டிருந்தேன். என்றாலும் நான் ஃபோட்டோகிராஃபியில் அமெச்சூர் கூட இல்லை. திருடர்கள் விமானப் பயணம் செய்து வந்து திருடிட்டுப் போறாங்க! ஹூம்! இதிலே மக்களிடம் பணப் புழக்கம் குறைஞ்சிருக்குனு வேறே சொல்றாங்க. ஆன்லைனிலேயே புக் செய்யறாங்களோ என்னமோ! :)

      Delete
  3. காணொளி பார்க்கிறோம்....பார்த்துட்டு வருகிறோம்...

    இந்தக் காலத்திலுமா பெண் காதல் திருமணம் என்றதும் பெற்றோர் தற்கொலை ஆச்சரியம்....ரொம்பவே அவசரப்பட்டுவிட்டார்கள்!!

    ஹைடெக் திருடர்கள் ஹஹஹஹ்ஹ் !! இப்படியுமா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தில்லையகத்து/கீதா! திருடர்களை நினைத்து முதலில் சிரிப்பு வந்தாலும் பிறகு நாம் எப்படி ஏமாளிகளா இருக்கோம்னு கோபமா வருது! பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் இழந்த அந்தப் பெண் துடிக்கிறாள் என்று செய்தியில் சொன்னார்கள்! :(

      Delete
  4. கீதாக்கா இந்தக் குட்டிப் பெண்ணின் நடனம் எனக்கும் வாட்சப்பில் வந்திருந்தது. அருமைனா அருமை! ரொம்ப எக்ஸ்ப்ரெசிவ்....முத்திரைகள் எல்லாம் பெர்ஃபெக்ட்! ரொம்ப அழகு! நாம் மிகவும் ரசித்தேன்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், குட்டிப் பெண்ணின் நடன அசைவுகள் அருமை!

      Delete
  5. அக்கா உங்க கை பத்திரம்...கடமையாற்றினாலும்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நேற்றுக் கடமை ஆற்றிய அளவுக்கு இன்னிக்கு முடியலை. மருத்துவரிடம் போயிட்டு வந்திருக்கேன். தேர்வு வைச்சிருக்கார். பாஸா, ஃபெயிலானு சாயந்திரம் தெரியும். :)

      Delete
  6. அழகான அருமையான நடனம் குட்டிபெண் ஆடியது ,பகிர்வுக்கு நன்றி.
    நாளை மருத்துவரிடம் கையை காட்டி வரவும்.
    செய்திகளை கேட்கும் போது ஏன் இப்படி என்று இருக்கிறது !

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு! மருத்துவரிடம் போயிட்டு வந்தாச்சு! பார்ப்போம்! செய்திகள் எல்லாம் வேதனை தருபவையாகவே இருக்கின்றன.

      Delete
  7. குட்டிப்பெண் நடனம் எனக்கு WhatsApp-ல் வந்தது. அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், அநேகமா எல்லோரும் பார்த்திருக்காங்க! :)

      Delete
  8. குட்டிப் பெண்ணின் நடனம் அபாரம், குறிப்பாக பாவம்(bhavam). குச்சிப்புடியோ? திருட்டு எப்படி முன்னேறி விட்டது?ஹு..ம் ..!
    நிச்சயமாக அந்த பெண்ணின் பெற்றோர்கள் அவசரப்பட்டுத்தான் விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி! அந்தப் பெண்ணின் பெற்றோர் இவ்வளவு விரைவில் முடிவைத் தேடி இருக்க வேண்டாம். ஆனால் இன்று வேறே மாதிரித் திசை மாறி விட்டது! என்னவோ போங்க! :(

      Delete
  9. நானும் வாட்சப்பில் இந்தச் சுட்டிப் பெண்ணின் நடனம் பார்த்து ரசித்தேன். சில செய்திகளை படிக்கும்போது அதைவைத்து கதை எழுதலாமா என்றே தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், சில செய்திகளைப் பார்க்கையில் கதையைவிட பயங்கரமாக இருக்கிறது.

      Delete
  10. கை வலி.. செக் பண்ணிக்குங்க..

    ReplyDelete
  11. குடும்பமே தற்கொலை செய்தியைப் படித்தேன். மனது மிகவும் வேதனையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, வேதனை தரும் செய்தி தான்! :(

      Delete