இந்த வருஷம் சித்ரா பௌர்ணமிக்கு யு.எஸ்ஸில் சேச்சே, அம்பேரிக்காவில் இருந்ததால் நம்பெருமாள் காவிரிக்கரைக்கு வந்தப்போப் பார்க்க முடியலை! சரி, ஆடி மாதம் பார்த்துக்கலாம்னு இருந்தோம். நாங்க வரதுக்குள்ளே எல்லாத் திருவிழாவும் முடிஞ்சாச்சு! கோயிலுக்கு ஒரு வருஷத்துக்குப் போக முடியாது! ஆகம முறைப்படி கொடிமரமும் உள்ள கோயில்! ஆகவே கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது.
ஆனால் ஆடிப் பதினெட்டுக்கு நம்பெருமாள் வரலை! இரண்டு காரணம். ஒண்ணு காவிரியம்மாவுக்கு மனமும் வறண்டு போச்சோனு நினைக்கும் அளவுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை! இன்னும் கொஞ்ச வருஷம் போனால் மறைந்த நதிகள் வரிசையில் காவிரியும் இடம் பெறலாம்! :( என்னத்தைச் சொல்ல!
இரண்டாவது காரணம் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேஹம் என்னும் தைலக்காப்பும், திருமஞ்சனமும் ஆகி 45 நாட்கள் கூட ஆகவில்லையாம். அதற்குள்ளாக நம்பெருமாள் வெளியே வர மாட்டார்! வெயில் வேறேயே! ஆகவே ஆடி 28 ஆம் தேதி தான் பெருமாள் வரதாகச் சொன்னாங்க. எப்படியும் நீர் இருந்தாலும் இல்லைனாலும் காவிரிக்குச் சீர் கொடுக்கணுமே! ஆகவே பெருமாள் வந்தே ஆக வேண்டும்.
ஆனால் இன்று காலை எழுந்ததில் இருந்தே தூற்றலாகப் போட்டுக் கொண்டே இருந்தது. கொஞ்சம் காற்றடித்தாலோ, இடி இடித்தாலோ, மின்னல் மின்னினாலோ வெளியே வந்த பெருமாள் விருட்டென உள்ளே போய் விடுவார். கையிலே குடை என்ன, சுற்றி அவரைப் படுதாவால் மூடும் வேகம் என்ன என நாம் கவனிக்கிறதுக்குள்ளே பெருமாளைத் தூக்கிக் கொண்டு ஓடியே போயிடுவாங்க! ஆகவே இன்னிக்குப் பெருமாள் எங்கே வரப் போறார்னு நினைச்சேன். அதைச் சொல்லவும் செய்தேனா ரங்க்ஸுக்குக் கோபம். கீழே செக்யூரிடிக்குத் தொலைபேசி விசாரித்தார். அவரும் நான் சொன்னதையே உறுதி செய்தார்.
சரினு வழக்கமான வேலைகளைக் கவனிக்கையில் திடீர்னு அதிர்வேட்டுச் சப்தம். இங்கே அடிக்கடி வெடிச் சப்தம் கேட்டாலும் சுவாமி வரச்சே கேட்பது தனி! அது அதிர்வேட்டு என்று கண்டு பிடிக்கலாம். கூடவே நகராச் சப்தமும். ஆஹா, நம்பெருமாள் வரார்! உடனே கீழே விசாரித்தால் ஆமாம்னு சொன்னாங்க! சரினு அடுப்பில் வெந்து கொண்டிருந்த சாதத்தையும் புடலங்காய்க் கறியையும் அணைச்சுட்டுக் கீழே ஓடினேன். அங்கே பார்த்தால் எல்லோரும் நின்னுட்டு இருந்தாங்க. ஏற்கெனவே மழை பெய்து கொண்டிருந்ததால் உபயதாரர்களை எல்லாம் கோயில் கோபுர வாசலுக்கு வரச் சொல்லி மரியாதை பண்ணிட்டாங்களாம். அதனால் எங்க குடியிருப்பு வளாகத்துக்குப் பக்கத்து வீட்டுக்கு நம்பெருமாள் போகவே இல்லை. அங்கே மட்டும் இல்லை. வழியில் எங்கேயும் மண்டகப்படி போகலை! நேரே அம்மாமண்டபம் போயிட்டாராம்! உடனே போய்ப் பார்க்கலாம்னா திரை போட்டிருப்பாங்களாம். சரி சாப்பிட்டுப் போகலாம்னு நினைச்சேன்.
சாப்பிட்டுக் கூப்பிட்டால் ரங்க்ஸுக்கு அலுப்பு! உண்ட மயக்கம்! இத்தனைக்கும் எளிமையான சாப்பாடு! சரினு எனக்குக் கொஞ்சம் வேலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததைக் கவனிக்கப் போயிட்டேன். மூணரை மணிக்கு ரங்க்ஸ் வந்து போகலாமானார். தேநீர் குடிச்சுட்டு வேணாப்போகலாம்னு சொன்னார். வெயில் கடுமையா இருந்ததால் தேநீர் குடிச்சுட்டுப் போனால் வேர்க்கும் என வேண்டாம், போயிட்டு வந்து குடிக்கலாம்னு சொன்னேன். சரினு அம்மாமண்டபம் போனோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போவும் திரை போட்டிருக்காங்க! முக்கிய வாசல் மூடி இருந்தது. சுத்திட்டுப் படிகள் வழியே கஷ்டப்பட்டு ஏறி, இறங்கிப் போனோம். மெல்ல மெல்ல மெல்லத் திரைக்குக் கிட்டேயே போயிட்டோம். அதுக்குள்ளே ஒருத்தர் சக்கரநாற்காலியில் தன் மனநிலை சரியில்லாப் பெண்ணோடு வந்தவர் என் காலில் சக்கரநாற்காலியை ஏற்றினார். வேதனையுடன் கத்த, அப்போது அங்கே வந்த ஒருத்தர் வீடியோ காமிராவை எடுத்துக் கொண்டு எனக்கு முன்னால் மறைக்க, நான் "நகருங்க"னு சொல்ல, "திரையே எடுக்கலைம்மா!" என்று அவர் சிரிக்கக் கொஞ்சம் சமாதானம் ஆனேன்.
அதுக்குள்ளே வேத பாடங்கள் சுவாமிக்குச் சொல்லிக் காட்டும் வேத பண்டிதர்கள் வர அவர்கள் எல்லோரும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் கூறி பகவானை வாழ்த்தினார்கள். அதர்வண வேதம் சொன்னவர் பெரும்பாலாகப் பெருமாளை வாழ்த்தியே பாடினார். சாமவேதம் பாடினவருக்குக் குரலே எழும்பவில்லை! இருந்தாலும் பரவாயில்லை! அதன் பின்னர் மீண்டும் திரைக்குள்ளே போய் வாத்தியங்கள் முழங்க உள்ளே ஆராதனை முடிந்து திரையைத் திறந்தால், பின்னாலே இருந்து எங்களை முன்னே தள்ள, முன்னே உள்ளவர்கள் பின்னே தள்ள இதற்கு நடுவில், அங்கே ஜேசி வந்திருக்கார் என மாலை, மரியாதைகள், விஐபி உபசாரம் என ஆரம்பிக்க எல்லாக் காமிராக்களும் கைக்கு மேல் கோவிந்தா போட்டுத் தூக்கிக்க சுத்தம்!
எனக்கு எதுவுமே தெரியலை. உயரமான நம்ம ரங்க்ஸோ எந்தக் கவலையுமில்லாமல் நம்பெருமாளைப் பார்த்தார்.
இந்தப்படங்கள் 2015 ஆம் ஆண்டு மே மாதம் நாலாம் தேதி சித்ரா பௌர்ணமிக்கு நம்பெருமாள் எங்க குடியிருப்பு வளாகத்துக்குப் பக்கத்தில் உள்ள வீட்டுக்கு மண்டகப்படி வந்தப்போ எடுத்த படம்.

பெருமாளே... ஏன் இந்தச் சோதனை?
ReplyDeleteஆமாம்,சோதனை தான்! அதுவும் சுண்டு விரலை நசுக்கிட்டார்! :) ரொம்ப நேரத்துக்கு வலிச்சுட்டு இருந்தது. லேசா வீங்கி இருக்கு! போன வாரம் வலக்கைச் சுண்டு விரலுக்குக் கீழே வீக்கம். இந்த வாரம் வலக்கால் சுண்டுவிரல்! சுண்டு விரல் வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆரம்! :)
Deleteஅப்படீனாக்கா... சத்யராஜ் மாதிரி ஆளுங்களுக்குதான் பெருமாள் காட்சி தருவாரோ....
ReplyDeleteஅதெல்லாம் இல்லை. அவர் எல்லோருக்கும் தான் காட்சி தருவார்; தருகிறார். சுற்றி உள்ளவர்கள் படுத்தும் பாடு! அதோடு வரிசையில் வரச் சொல்லி ஏற்பாடுகள் செய்யணும்! அதைச் செய்வதே இல்லை. ஆனால் மத்தியானமா இரண்டு மணியிலிருந்து மூன்றுக்குள் வந்திருந்தால் கூட்டம் இருந்திருக்காது! அந்த நேரம் ரங்க்ஸ் வர முடியலை!:( தனியாப் போக யோசனை! முன்னெல்லாம் ஊருக்கு ஊர் தனியாவே சுத்தி இருக்கேன்! :)
Deleteகடைசியில பார்க்க முடியாமப் போச்சாக்கா? ம்ம்ம் நீங்கள் பார்க்க முடியலைனா என்ன? அவர் உங்களைப் பார்த்திருப்பாரே!!சரி உங்கள் கால் எப்படி உள்ளது இப்போ? கை சரியாகிவிட்டதா?
ReplyDeleteகீதா
அவர் என்னைப் பார்த்திருப்பார்! கால் கொஞ்சம் லேசாச் சுண்டு விரலில் வீக்கம். கை சரியாகிச் சரியாகிச் சரியாகி மறுபடி வருது. மறுபடி மருத்துவரிடம் போகணும்.
Delete2015 ஆம் ஆண்டு திவ்யமாய் தரிசனம் செய்த காட்சி மனகண்ணில் வந்து இருக்குமே!
ReplyDeleteநீங்கள் பார்க்கவில்லை என்றாலும், நம்பெருமாள் நீங்கள் வந்ததை பார்த்து விட்டார்.
அழகான படங்கள் தரிசனம் செய்து கொண்டேன், நன்றி.
நன்றி கோமதி அரசு! போன வருஷமும் பார்த்தோம். படங்கள் எடுத்தேனா இல்லையா நினைவில் இல்லை. அது வேறே மடிக்கணினி! :) இதில் கிடைக்கலை. பதிவில் தேடிப் பார்க்கணும்.
Deleteபெருமாளை சாலையில் பார்க்க முடியாவிட்டால்தான் என்ன மனக் கண்ணில் கண்டிருக்கலாமே
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், அந்த அளவுக்கு ஞானம் இருந்தால் நான் ஏன் கோயிலுக்கே போறேன்! இன்னும் அடிப்படையே புரியாமல் பக்தி செலுத்துகிறேன். அவ்வளவு தான்!
Deleteஎன்ன ஒரு டிவோஷன் பெருமாள் கூட இருக்கிறவர்களுக்கு. எப்படிப்பட்ட நம்பிக்கையும் வாத்சல்யமும். அவர்களை வணங்குகிறேன். இதைப் படித்தவுடன், ரஞ்சனி நாராயணன் மேடம் ஒரு சமயம் எழுதியிருந்தது (அவருடைய சகோதரியின் பக்தி, இந்தத் தெருவில் தரிசனம் செய்தவுடன் ஓடியோடி இன்னொரு தெருவிற்குச் சென்று மீண்டும் தரிசனம் செய்யும் ஆர்வம்.....) ஞாபகம் வந்தது.
ReplyDeleteகடைசியில் உங்களுக்கு தரிசனம் கிடைத்ததா?
வாங்க நெ.த. நன்றி. இன்னிக்கு முடிச்சுடறேன். ரஞ்சனி அக்காவைப் பத்தி எழுதி இருக்கிறாப்போல் நாங்க மதுரை மீனாக்ஷி சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் நாள், அதற்கு முதல் நாள் எதிர்சேவை என ஓடி ஓடிப் போய்ப் பார்த்திருக்கோம். இப்போவும் எங்க பக்கத்து வீட்டு மண்டகப்படிக்கு ரங்கநாதர் வந்துட்டுக் கிளம்பும்போது அவசரம் அவசரமாக எதிர் மண்டகப்படிக்குப் போகிறதும் உண்டு.
Deleteநாம் பாரக்கலை.... ஆனால் 'அவர்' பார்த்திருப்பார்தானே !!! அது போதுமுன்னு நினைச்சுக்கணும்.
ReplyDeleteகால் வலி தேவலையா? ரொம்ப பலமா சக்கரம் ஏறிடுத்தோ? ப்ச்..... கூட்டத்தில் என்னப்பா செய்யறது.......... :-(
வாங்க துளசி, இன்னிக்குத் தான் உங்களோட கருத்துக் கிடைச்சது. நம்பெருமாள் என்னைப் பார்த்திருப்பார் தான்! நானும் பார்த்தேன். கால் வலியெல்லாம் அவரைப் பார்த்த சந்தோஷத்தில் மறந்துடுமே! :)
Deleteகை,கால நல்லா பாத்துக்கோங்க...
ReplyDeleteநீங்க சொன்ன மாதிரி பெருமாள்
உங்கள பார்த்திருப்பார்...
ஆமாம், பெருமாள் என்னைப் பார்த்திருப்பார் தான்! :)
Delete