முதல்லே "திங்க"ற கிழமைக்கு ஶ்ரீராமுக்கு அனுப்பறதாத் தான் இருந்தேன். அதான் முகநூலில் கூடப் பகிரவில்லை. அப்புறம் யோசிச்சா! நான் போட்டால் அங்கே போணி ஆவறதில்லை! இங்கே கொஞ்சமானும் ஆகும்! அதோடு நெ.த. சும்மா ஜுஜுபி இட்லி மி.பொடி போட்டிருக்கார்! அதோட போட்டி போடணுமானு யோசனை தான்! ஆனாலும் பரவாயில்லைனு போடறேன்.
தினம் தினம் சமையல் செய்வது வர வரக் கொஞ்சம் இல்லை நிறையவே அலுப்புத் தருகிறது! குழந்தைங்க இருந்தப்போ அவங்க விருப்பத்திற்கேற்பச் சமைப்பேன். இப்போ ரங்க்ஸ் திரும்பிப் பார்த்தால் முருங்கைக்காய்க் குழம்பு, அரைக்கீரை, சிறுகீரை, இல்லைனா முளைக்கீரைனு சொல்லிடறார். பார்த்தேன். இன்னிக்குக் கொஞ்சம் வித்தியாசமாச் சமைக்கலாம்னு யோசனை. அதற்கேற்றாற்போல் ரங்க்ஸும் இன்னிக்கு காய்கறிச் சந்தையிலிருந்து பிரண்டை வாங்கி வந்திருந்தார். பிரண்டைத் துவையல், கண்டந்திப்பிலி ரசம், டாங்கர் பச்சடி, முட்டைக்கோஸ் கறி என மெனு தீர்மானிக்கப்பட்டு ஏகமனதாக ஒப்புதலையும் பெற்றது!
அரைத்த துவையல் சாப்பிடத் தயார் நிலையில்!
அடுத்துக் கண்டந்திப்பிலி ரசம்! ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொண்டு ஈயச் செம்பில் ஊற்றவும். உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், கருகப்பிலை சேர்த்துக் கொதிக்க விடவும்.
ஒரு வாணலியில் மி.வத்தல் 1 அல்லது 2, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் ஜீரகம், ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த எண்ணெயிலேயே கண்டந்திப்பிலியையும், அரிசித் திப்பிலியையும் போட்டு வறுத்து எடுக்கவும்.
தினம் தினம் சமையல் செய்வது வர வரக் கொஞ்சம் இல்லை நிறையவே அலுப்புத் தருகிறது! குழந்தைங்க இருந்தப்போ அவங்க விருப்பத்திற்கேற்பச் சமைப்பேன். இப்போ ரங்க்ஸ் திரும்பிப் பார்த்தால் முருங்கைக்காய்க் குழம்பு, அரைக்கீரை, சிறுகீரை, இல்லைனா முளைக்கீரைனு சொல்லிடறார். பார்த்தேன். இன்னிக்குக் கொஞ்சம் வித்தியாசமாச் சமைக்கலாம்னு யோசனை. அதற்கேற்றாற்போல் ரங்க்ஸும் இன்னிக்கு காய்கறிச் சந்தையிலிருந்து பிரண்டை வாங்கி வந்திருந்தார். பிரண்டைத் துவையல், கண்டந்திப்பிலி ரசம், டாங்கர் பச்சடி, முட்டைக்கோஸ் கறி என மெனு தீர்மானிக்கப்பட்டு ஏகமனதாக ஒப்புதலையும் பெற்றது!
பிரண்டையை நன்கு அலம்பிக் கணுக்களை நீக்கிவிட்டுத்துண்டங்களாக நறுக்கி வைத்திருக்கிறேன். சாறு கையில் படாமல் நறுக்கணும்! நறுக்குபவர்களின் சாமர்த்தியம்! :)
மிளகாய் வற்றல், பெருங்காயம் எண்ணெயில் வறுத்துக்கொண்டு அதிலேயே புளியையும் சேர்த்து வைத்திருக்கேன். பக்கத்தில் சின்னத் தட்டில் தாளிதம் கடுகு, உளுத்தம்பருப்பு. துவையல் அரைச்சு முடிக்கையில் தாளிதத்தைச் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்ற வேண்டும்.
நறுக்கிய பிரண்டையை மி.வத்தல், கடுகு, உபருப்பு வறுத்த அதே சட்டியில் இன்னும் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு நிறம் மாறிச் சுருங்கும்வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் மி.வத்தல், புளி, உப்பு, பெருங்காயம் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வதக்கி ஆற வைத்த பிரண்டையைப் போட்டு அரைக்க வேண்டும். பிரண்டை நன்கு அரைபட்ட பின்னர் தாளிதம் செய்து வைத்திருக்கும் கடுகு, உபருப்புப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்க வேண்டும். பிரண்டைத் துவையல் தயார். பிரண்டையை எவ்வளவு நன்றாக வதக்குகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. இல்லை எனில் தொண்டை எல்லாம் அரிக்க ஆரம்பிக்கும்! :)
அடுத்துக் கண்டந்திப்பிலி ரசம்! ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொண்டு ஈயச் செம்பில் ஊற்றவும். உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், கருகப்பிலை சேர்த்துக் கொதிக்க விடவும்.
ஒரு வாணலியில் மி.வத்தல் 1 அல்லது 2, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் ஜீரகம், ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த எண்ணெயிலேயே கண்டந்திப்பிலியையும், அரிசித் திப்பிலியையும் போட்டு வறுத்து எடுக்கவும்.
ரசத்துக்கு என வறுத்து வைத்த சாமான்கள்
கண்டந்திப்பிலி குச்சி போல் இருப்பது! அரிசித் திப்பிலி சின்னதாகக் கறுப்பாக இருப்பது.
ரசம் கொதிக்கையில் எடுத்த படம்
டாங்கர் பச்சடி! வறுத்து அரைத்த உளுத்தமாவு கைவசம் எப்போவுமே இருக்கும். அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு உப்புச் சேர்த்து ஒரு கிண்ணம் கெட்டி மோரில் கரைக்கவும். ஜீரகம் பச்சையாகவே கையால் கசக்கிச் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்து டாங்கரில் கொட்டவும். கொத்துமல்லியும் பிடித்தால் சேர்க்கலாம். துவையல் சாதம், வத்தல் குழம்பு போன்றவற்றுக்கு இது நல்ல துணை!
என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க. 'எங்கள் பிளாக்'குக்குப் போட்டி அப்படீன்னுதானே சொல்லியிருக்கணும். நான் சௌசௌவை வைத்து இதே தொகையலைச் செய்ததை மோப்பம் பிடித்து என்னை எழுதவிடாமல், நீங்கள் பிரண்டைத் தொகையலை எழுதிவிட்டீர்கள்.
ReplyDeleteஏன் ஒரே இடுகைல, ரெண்டைச் சேர்க்கிறீர்கள்? (கண்டதிப்பிலி ரசம், பிரண்டைத் தொகையல், இதுல டாங்கர் பச்சிடி வேற).
என் ஹஸ்பண்ட், எனக்கு முதலில் செய்தது (திருமணமான புதிதில், துபாயில்) உப்புச்சார். மறுநாள், கண்டதிப்பிலி ரசம் + பருப்புத் துகையல். அவள் வழில எல்லாம் செய்யவிடாமல், என் மூக்கை நுழைத்துவிட்டேன். அப்போ ஆரம்பித்தது, இங்கிருந்து செல்லும்வரை, நான்தான் தினப்படி மெனு சொல்வது. பரவாயில்லை, அந்த உரிமையை இன்னும் உங்கள் வீட்டுக்காரர் விட்டுக்கொடுக்கவில்லை. நீங்களும் அவருடைய ஒப்புதலைப் பெற்றிருக்கிறீர்கள்.
வாங்க, வாங்க, இப்போதைக்கு சமையலில் கலக்குவது நீங்க தான்! உங்களோடு போட்டி போடாமல் பின்னே யாரோட போட்டி போட முடியும்? ஹிஹிஹி, சௌசௌ துவையல் என் அம்மா வீட்டில் அடிக்கடி உண்டு. இங்கே அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. சேனைக்கிழங்கு, முட்டைக்கோஸில் கூடத் துவையல் அரைக்கலாம்!
Deleteஒரே இடுகையில் இரண்டைச் சேர்க்கலை! இன்னிக்கு சமையல் என்னவோ அதை முழுசாத் தந்திருக்கேன்! :)
Deleteஅட! நம்மரங்க்ஸ் என்ன சமையல்னு கேட்கிறாப்போலயே வைச்சுக்காமல் காய்களை வாங்கி இருப்பார். ஆகவே முருங்கைக்காய்க் குழம்பும், கீரையும் ஒரு நாள் விட்டு ஒருநாள் கட்டாயமாய் வந்துடும்! :) எனக்குத் தான் அலுத்து விட்டது!
Delete"இன்னிக்குக் கொஞ்சம் வித்தியாசமாச் சமைக்கலாம்னு யோசனை. அதற்கேற்றாற்போல் ரங்க்ஸும் இன்னிக்கு காய்கறிச் சந்தையிலிருந்து பிரண்டை வாங்கி வந்திருந்தார். " - இப்போ உங்களுக்கு இன்னொரு பிரச்சனை வந்துடும். அடுத்த ஞாயிறு/திங்கள் இதே காய்கறிகளை அவர் வாங்கிவந்துடக்கூடாது. அப்புறம் போட்டோ புடிச்சு இடுகை போடமுடியாது.
Deleteஅவரும் எப்பவாவது இந்தத் தளத்தைப் பார்த்தால், 'மனுஷனுக்கு பசி வந்து ரொம்ப நேரம் ஆச்சு. போட்டோ பிடிக்கற சாக்குல ரொம்ப நேரமாகுதே' என்று சொல்லப்போகிறார்.
//அடுத்த ஞாயிறு/திங்கள் இதே காய்கறிகளை அவர் வாங்கிவந்துடக்கூடாது. அப்புறம் போட்டோ புடிச்சு இடுகை போடமுடியாது.//
Deleteஉங்க வாய் முஹூர்த்தம், திரும்பத் திரும்பக் கத்திரி, வெண்டை, கொத்தவரை, அவரை தான்! :)))) :P :P :P :P
இந்தப் பெண்களே இப்படித்தான் முதலிலேயே தீர்மானம்செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று கேட்பார்கள்
ReplyDeleteதீர்மானமெல்லாம் முதலிலேயே செய்யவில்லை. வித்தியாசமான சமையல்னு ஒரு எண்ணம் இருந்தது. அதற்குத் தோதாகக் காய்கள் வாங்கி வந்தார்! ஆகவே என் கணவரின் யோசனைப்படியே பிரண்டைத் துவையல், டாங்கர் பச்சடி, முட்டைக்கோஸ் கறி என முடிவாயிற்று. ரசம் மட்டும் கண்டந்திப்பிலி என என்னோட விருப்பம்.
Deleteஅதே
Delete//அதோடு நெ.த. சும்மா ஜுஜுபி இட்லி மி.பொடி போட்டிருக்கார்! அதோட போட்டி போடணுமானு யோசனை தான்! ஆனாலும் பரவாயில்லைனு போடறேன்.//
ReplyDeleteஏதோ முடிவோடதான் நீங்களும் இப்போ களமிறங்கியிருக்கிறீங்க.. இருப்பினும் உண்மையைச் சொல்லியே ஆகணும்.. இட்லிப்பொடி ஜூஊஊஊஊப்பர்ர்:)..
ஹா ஹா ஹா.
பிரண்டை கேள்விப்பட்டதுண்டு தொட்டதில்லை இதுவரை.. கிடைத்தால் செய்து பார்க்கலாம் கிடைக்காதே நமக்கு.
வாங்க அதிரா, பிரண்டை அங்கே கிடைக்குமானு தெரியலை! கிடைத்தாலும் நறுக்கும்போது சாறு கையில் படாமல் பார்த்துக்குங்க! அரிக்கும்! நன்கு வதக்கலைன்னா துவையல் சாப்பிடும்போது தொண்டையையும் அரிக்கும்! :)
Deleteஅதிரா... சின்ன வயசுல எங்க வீட்டில் பிரண்டைத் தொகையல் பண்ணினா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம் வெளிநாடு வந்தபின்பு, பிரண்டைக்கு வழியில்லை. இப்போவும் எங்க அம்மாவைப் பார்க்கப்போகும்போது, அங்கு பிரண்டைக் கொடி இருந்தால் எடுத்துவருவேன் (இந்த ஊருக்கு இல்லை. எங்க வீட்டுக்கு). பிரண்டையின் முக்கிய குணம், வாயுப் பிடிப்பைத் தவிர்க்கும்.
Deleteமுதலில் என் மனதில் பீர்க்கங்காய் என்றே நினைத்துப் படித்துக்கொண்டுவந்தேன் (அதிலும் துவையல் நல்லா இருக்கும்). அப்புறம்தான் பிரண்டை என்பது ரெஜிஸ்டர் ஆச்சு.)
பீர்க்கங்காய், பச்சைப் பறங்கிக்காய், சௌசௌ, முட்டைக்கோஸ், சேனைக்கிழங்கு ஆகியவற்றிலும் துவையல் அரைப்பது உண்டு. ஒரு சிலர் உருண்டைக் கருணைக்கிழங்கிலும் செய்கிறார்கள். ஆனால் அது என்னமோ அரிப்புப் போவதில்லை. இப்போக் கொஞ்ச நாட்களாப் பிரண்டைத் துவையல் சாப்பிட்டால் அப்புறமா எனக்கு நெஞ்செரிச்சல் வந்துடறது! :( ஆகையால் பயம்! :)
Deleteஇந்தப்பதிவைப் படித்தீர்களா/http://gmbat1649.blogspot.com/2012/06/blog-post_27.html
ReplyDeleteபார்த்தேன், நன்றி. எங்க வீட்டில் விருந்தாளி வரப்போவது தெரிந்த உடனேயே அதற்கேற்றாற்போல் ஏற்பாடுகள் செய்துடுவோம். ஆகவே இந்தப் பிரச்னை இல்லை! :) அடை பண்ணணும்னாக் கூட திடீர்னு பண்ண முடியாது! ஆகவே திடீர் விருந்தாளின்னா சாப்பிட வந்தாலோ சாப்பாடு அல்லது டிஃபன் எனில் சப்பாத்தி, பூரி போன்றவை தான் செய்யறாப்போல் இருக்கும்!
Delete"ஆகவே திடீர் விருந்தாளின்னா சாப்பிட வந்தாலோ" - நல்லவேளை.. இப்போதே சொன்னதற்கு நன்றி. அப்புறம், நெட் சரியில்லை, வாட்ஸப் பார்க்கலைன்னு சாக்கெல்லாம் சொல்லவேண்டாம்.
Deleteஇது பொதுவான பெண்களின் குணங்களை கூறுவது யாரையும் குறிப்பிடுவது அல்ல
Deleteநெ.த. திடீர்னு யாரும் சாப்பிட வந்தால் சாதம், ரசம் இருந்தால் கூடவே பூரி அல்லது சப்பாத்தி செய்து உ.கி.யோட பண்ணிப் போட்டுடலாம். அரை மணியில் ஆகி விடும். உ.கி. நான் வெங்காயம், மசாலா சேர்க்காமல் பண்ணுவதே சப்பாத்தி, பூரிக்கு நல்ல துணையாக இருக்கும். கூடவே அப்பளம் பொரித்தால் ஆயிற்று!
Deleteசபாஷ் சரியான போட்டி பதிவர்களுக்கு கொண்டாட்டம்தானே...
ReplyDeleteஹாஹா, நன்றி கில்லர்ஜி!
Deleteஆகா சூப்பர். முதலிரண்டும் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. டாங்கர் ரொம்ப நாளாக செய்து பார்க்க ஆசை. ரெசிபிக்கு நன்றி.
ReplyDeleteரிசிப்பி போடுறதுல மட்டும் போட்டி இருக்க கூடாது அதை நான் சுவைத்து சாப்பிட அதை உடனே விமானத்தில் இங்கே அனுப்பி வைக்கனுமாக்கும்......
ReplyDelete//நான் போட்டால் அங்கே போணி ஆவறதில்லை!//
ReplyDeleteநல்லாப் பாருங்க... கடைசி முப்பது நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட இடுகை வரிசையில் உங்கள் பதிவு முதல், மற்றும் கடைசி...
ம்ம்ம்ம் பார்த்தேன், இங்கேயும் அதிகம் பார்க்கிறாங்கனு பார்வையாளர்கள் கணக்குச் சொன்னாலும் கருத்து என்று பார்க்கும்போது 10 அல்லது 15 தாண்டுவதில்லை! :)
Deleteபிரண்டை நாங்கள் உபயோகிப்பது கொஞ்சம்... கொஞ்சம் என்ன நிறையவே அபூர்வம்!
ReplyDeleteடாங்கர் பச்சடியின் ரசிகன் நான்!
பிரண்டை வயிற்றுக்கு நல்லது. வாரம் ஒரு முறை சேர்க்கலாம். முதலில் கொஞ்சம் பிரண்டையோடு தேங்காய் சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டுப் பார்க்கவும், ஒத்துக் கொண்டால் பிரண்டை மட்டும் போட்டுத் துவையல் செய்யலாம்.
Deleteகண்ட திப்பிலியையும் போட்டு ரசமா! சாப்பிட்டதேயில்லை!
ReplyDeleteஹாஹா, கண்டந்திப்பிலியை மதுரைப்பக்கம் "தேசாவரம்" என்போம். பலருக்கும் இது புரியாதென்பதால் கண்டந்திப்பிலி என்றே எழுதினேன். அரிசித் திப்பிலியைத் தான் நாங்க திப்பிலி என்போம்.
Deleteகீதாக்கா சூப்பர்!!! நெல்லைக்கு சவால் ஹிஹிஹிஹி
ReplyDeleteஎங்கள் வீட்டில் திவசத்தின் போதுகண்டிப்பாகப் பிரண்டைத் தொகையல் செய்வார்கள். அவர்கள் உ பருப்பு வறுத்துக் கொண்டு பெருங்காயமும் வறுத்து, பச்சை மிளகாய் சேர்த்து, பிரண்டையை நன்றாக வதக்கிக் கொண்டு, புளி உப்பு வறுத்த உ பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலையும், கொஞ்சம் இஞ்சியும் தேங்காயும் வைத்து அரைப்பார்கள். சாதாரண நாட்களில் தேங்காய் வைக்காமல், நீங்கள் செய்துள்ளது போல்தான் ஆனால் உ பருப்பும் சேர்த்து அரைத்துவிட்டு தாளித்துவிடுவார்கள். இந்த இரண்டு முறையையும் நான் வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு. வீட்டில் பிரண்டையும் வளர்க்கிறேன். பதிவர் அபயா அருணா எனக்குக் கொடுத்தார்கள் மண் சட்டியில் வளர்ர்த்ததை இப்போது அது நன்றாக வளர்கிறது என் வீட்டு பால்கனி பசுமை விடியலில் ஹிஹிஹிஹி!!
கண்டன் திப்பிலி ரசம் என் அம்மா நினைவுக்கு வருகிறார். நான் மாசமாக இருக்கும் போது 8 ஆம் மாதம் இறுதியில், 9 ஆம் மாதம் என்று எண்ணை தேய்த்துக் குளிக்க வைத்து கண்டந்திப்பிலி ரசம் செய்து சாப்பிடக் க கொடுத்தார் மூன்று முறை..நன்றாகத் தூங்கினேன்..கண்டந்திப்பிலி ரசம் களைப்பு நீங்கும் என்று....அதன் பின் நானும் வீட்டில் நீங்கள் செய்யும் இதே முறையில் டிட்டோ...நான் செய்வதுண்டு.
டாங்கர் பச்சடி என் மாமியாரிடம் கற்றுக் கொண்டது. வீட்டில் ரெடியாக உளுத்தம்பருப்பு வறுத்து அரைத்த பொடி இருக்கும்...நீங்கள் செயது போலவும் செய்வேன். சில சமயம் கொஞ்சம் தேங்காயுடன் ப மிளகாய் வைத்து அரைத்துவிட்டுக் கலந்து மீதமெல்லாம் இதே முறையில் செய்வதுண்டு...
நாக்கில் நீர் ஊறிவிட்டது. இந்த வாரத்தில் இந்த மெனு போட்டாச்சு. இப்படித்தான் என்ன செய்ய என்று மனம் ரொம்பவே தடுமாறும் சமயம் இபப்டிப் பதிவுகள் வரும் போது உடனே அதனைச் செய்வது வழக்கமாகிவிட்டது!! ஹாஅஹாஹாஹா... அதுக்காகவேனூம் போடுங்கப்பா எல்லாரும் ஹிஹிஹி
கீதா
நீங்க சொல்லி இருக்கிறாப்போல் பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை வைத்து அரைத்தும் பார்க்கிறேன். கருகப்பிலைத் துவையல் தான் எங்க வீட்டில் இஞ்சி, புளி வைத்து அரைப்போம். பிரண்டைக்கு வைத்ததில்லை. ஒரு முறை பார்க்கலாம். டாங்கர் பச்சடி தஞ்சை ஜில்லா சிறப்புனு சொல்றாங்க. ஆனால் எங்க பிறந்த வீட்டுப்பக்கம் துவையல் அரைத்தால் கட்டாயம் டாங்கர் பச்சடி உண்டு. வாரம் ஒரு முறையாவது துவையல் அரைப்பாங்க. நானும் இங்கே அடிக்கடி துவையல் அரைப்பது உண்டு. பறங்கிக் கொட்டை பிஞ்சாகக் கிடைக்கையில் வாங்கித் தோல் சீவாமல் துருவிக் கொண்டு துவையல் அரைப்பேன். அருமையா இருக்கும். அதையே பல்லுப் பல்லாகக் கீறிப் போட்டு அடை வார்த்தால் தேங்காய் போட்டாற்போல் இருக்கும். ரசமும் மாற்றி மாற்றித் தான் பண்ணுவேன்.
Deleteஆஹா அக்கா அந்தத் தொகையலில் புளி சொல்ல மறந்துவிட்டேன். புளியும் உண்டு!!!
Deleteஹை அக்கா நானும் பரங்க்கி கொட்டை துவையல்....பரங்கிக்காயில் அந்த உள் பக்கம் இருக்கிறதே அதை மட்டும் எடுத்துக் கூடத் துவையல் அரைப்பதுண்டு. காயை கூட்டு அல்லது நீங்கள் சொல்லியிருப்பது போல் அடையில் சேர்ட்து... யெஸ் அக்கா ரொம்ப நல்லாருக்கும். அப்புறம் சௌ சௌ அதான் பங்களூர் கத்தரிககய் அதன் தோல் இளசாக இருந்தால் அதையும் துவையல் அரைப்பதுண்டு. கறிவேப்பிலையும் இதே போல்தான் ஆனால் பிரண்டை இலலமல் துவையல் செய்வதுண்டு...டாங்கர் பச்சடியில் ஜீரகம் என் மாமியார் சேர்த்தது இல்லை...சேர்த்துப் பார்த்துவிடுகிறேன்...அக்கா இன்று எங்கள் வீட்டில் கண்டந்திப்பிலி ரசம்..பருப்புத் துவையல்.(தேசாவரம் நீங்கள் சொல்லியிருப்பது போல் சொல்லுவார்கள். அரிசித் திப்பிலி திப்பிலி. ஆனால் இங்கு சென்னையில் கடைகளில் நான் கண்டந்திப்பிலி என்று சொல்லி அரிசித் திப்பிலி என்று சொல்லித்தான் வாங்குகிறேன்க்கா...
கீதா
பறங்கிக் கொட்டையைத் துருவும்போதே உள்ளே உள்ள குடல்(நாங்க குடல் என்போம்) சேர்த்தே எடுத்துப்பேன். விதைகளை மட்டும் நீக்குவேன். பீர்க்கங்காய்த் தோலில் கூடச் சீவிக் கொண்டு தேங்காய் அரைத்துத் துவையல் செய்வார்கள்.
Deleteஅடடே... படங்கள் எல்லாம் சமர்த்ததாகச் சேர்த்திருக்கிறீர்களே...
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம், படங்கள் மெயிலில் அனுப்பினால் தான் சரியாப் போகிறதில்லை. மற்றபடி என் வலைப்பக்கம் சேர்ப்பதில் பிரச்னை இல்லை. காமிராவை விரைவில் சரி செய்யணும். அதிலே இருக்காப்போல் அலைபேசியில் வரவில்லை!
Deletevithyaasa samaiyal, super!
ReplyDeleteநன்றி மிகிமா.
Delete...
ReplyDeleteஅட...சுவையான மெனு ...
ReplyDeleteடாங்கர் பச்சடி சூப்பர்....புதுசு எனக்கு...செஞ்சுப் பார்க்கிறேன்\...
ஹை, என்னோட கருத்து போயிடுச்சே. அனுராதா ப்ரேம்குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deletehihihi என்னோட வலைப்பக்கத்திலேயே எனக்குக் கருத்துச் சொல்ல முடியலை! ஹையா! ஜாலி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இது போகுதானு பார்க்கிறேன்.
ReplyDeleteமாயவரத்தில் என் வீட்டு தோட்டத்தில் பிரண்டை இருந்தது வாரா வாரம் பிரண்டை துவையல் உண்டு.கையில் எண்ணெய் தடவிகொண்டு செய்தால் அரிக்காது.
ReplyDeleteஅருமையான படங்களுடன் நீங்கள் சமையல் குறிப்பு கொடுத்தது மகிழ்ச்சி.
எங்க வீட்டில் திவசத்தின் போதுதான்செய்வார்கள். அக்கா! கண்டத்திப்பிலி ரசம் எனக்குப் பிடிக்கும். திருச்சி வரும்போது முன்னாடியே சொல்லி விடுகிறேன்.டாங்கர் இப்போ தான் ஞாபகத்துக்கே வருது. நானும் ரிசிப்பியெல்லாம் எழுதவா?
ReplyDelete