டெக்சாஸ் மாநிலம் சான் அன்டானியோ நகருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது அங்கே பார்த்த காவெர்ன் கேவ்ஸ் எனப்படும் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன கிட்டத்தட்ட 200 அடி ஆழத்திலுள்ள குகைப் பாதையில் இன்னமும் பச்சை இருப்பதைக் காணலாம். ஏற்கெனவே போட்டிருக்கேன்.
குகைக்குள் கீழிறங்கும் வழி!
இந்தக்குறுகலான வழியிலும் போக வேண்டும். நாம் எல்லோரும் வந்துட்டோமானு சோதிக்க உள்ளே உள்ள மைக்கில் வழிகாட்டி குரல் கொடுப்பார்.
குகைப்பாதை! முழுக்க முழுக்க குகைப் பாதையிலேயே செல்ல வேண்டும். டெனிசி மாநிலத்திலும் மெம்பிஸுக்கு அருகே இதே போன்ற ஓர் குகைப்பாதையில் சென்று தான் ரூபி ஃபால்ஸ் என்னும் பிரபலமான சுரங்கத்தில் இருக்கும் ஓர் அருவியைப் பார்த்தோம். அப்போல்லாம் காமிரா இல்லை!
சான் அன்டானியோ நகரில் நாங்கள் தங்கி இருந்த ஓட்டல் இருந்த தெரு. ஒரு பார்வை! இம்மாதிரி இரண்டு, மூன்று குதிரை வண்டிகள் இருக்கின்றன. விரும்பினால் அதில் நகரைச் சுற்றி வரலாம். நமக்குப் புதுசு இல்லை என்பதால் நாங்க போகலை!
// டெனிசி மாநிலத்திலும் மெம்பிஸுக்கு அருகே இதே போன்ற ஓர் குகைப்பாதையில் சென்று தான் ரூபி ஃபால்ஸ் என்னும் பிரபலமான சுரங்கத்தில் இருக்கும் ஓர் அருவியைப் பார்த்தோம். அப்போல்லாம் காமிரா இல்லை!//
ReplyDeleteநாங்களும் இங்கு சென்று பார்த்து அடிஆழத்தில் கொட்டும் கலர்க்கலர் ஒளிவெள்ளத்தில் மிளுறும் அருவியைக் கண்டு வியந்திருக்கிறோம். இந்த ரூபி பால்ஸை மனத்தில் வைத்துத் தான் சமீபத்துப் பின்னூட்டம் ஒன்றில் அமெரிக்காவில் தனியாருக்குச் சொந்தமான சுற்றுலா இடங்கள் என்று எழுதியிருந்தேன்.
ரூபி ஃபால்ஸ் பற்றி தனிப்பதிவு எழுதினால் புகைப்படங்கள் போடுவேன்.
வாங்க ஜீவி சார், உங்களை இங்கே பார்க்க ஆச்சரியம்! ரூபி ஃபால்ஸ் பத்தி எழுதுங்க! நாங்க பார்த்துக் கிட்டத்தட்ட 14 வருடங்கள் ஆகப் போகின்றன!
Deleteநானும் இப்போ நம்பிடறேன். நீங்க அம்பேரிக்காவில் வெறும்ன வீட்டிலயோ அல்லது கிச்சனிலேயோ அல்லது பக்கத்துல காலாற நடக்குற பூங்காவிலேயோ மட்டும் நேரத்தைப் போக்கலை. நிறைய இடங்களையும் பார்த்திருக்கீங்கன்னு.
ReplyDeleteஅம்பேரிக்காவுல பாருங்க... சின்ன விஷயத்தையும், நல்ல BOARDல எழுதி TOURISTSஐக் கவரும்படி வச்சிருக்காங்க.
படங்களும் நல்லாவே இருந்தது.
ஹாஹா, நெ.த. நம்பாட்டிப் போங்களேன்! இது இப்போப் போனப்போ எடுத்தது இல்லை. இப்போ சும்ம்ம்மா வீட்டிலேயும் கிச்சனிலேயும் பக்கத்துலே உள்ள பார்க்கிலேயும் தான் பொழுதைக் கழிச்சேன். :) அதுக்கு என்ன இப்போ! இது 2011 ஆம் ஆண்டு போனப்போ எடுத்தது.
Deleteபி.கு. எங்கே போவது என்றாலும் எங்களுக்கு சாப்பாடு ஒரு பிரச்னை! நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் எல்லாம் போய் ஓட்டலில் சாப்பிட்டால் ஒத்துக் கொள்வதில்லை! ஊர் விட்டு ஊர் போனாலே பிரச்னை என்னும் போது நாடு விட்டு நாடு போய் வயிற்றைக் கெடுத்துக்காம வந்தால் போதுமே!
கீ.சா மேடம் - உணவுப் பதிவுல நீங்க பதில் போட ரொம்ப நாள் எடுத்துக்கறதும், இங்க (இந்தத் தளத்தை சிவகாமி என்றே ஞாபகம் வைத்திருந்தேன் ரொம்ப நாளா. அப்புறம்தான் கண்டுபிடித்தேன்) உடனே பதில் எழுதறதும் -- கொஞ்சம் ஆச்சர்யம்தான்.
Deleteஎனக்கும் சாப்பாட்டுப் பிரச்சனை உண்டு. எனக்கு எங்கு போனாலும் சைவ உணவு (அதுவும் ரொம்ப ப்யூர். ரெண்டும் கிடைக்கும் இடங்களில் சாப்பிடமாட்டேன்) வேண்டும். வேற வழியில்லாமல் Compromise பண்ணிக்கறது, வேற வழியில்லாதபோது Bread மட்டும் எங்கனாலும் (அதுக்காக கண்ட கடையில் அல்ல. சூப்பர் மார்கெட்ல மாத்திரம்) வாங்கிப்பேன். அதுக்காக, ஜப்பான், சைனா Pure Veg கடைகள்லாம் சாப்பிடமாட்டேன். மாட்டிக்கொண்டால், வெஜ் பிஸ்ஸா இல்லைனா ஃப்ரெஷ் ஜூஸ் சாப்பிடுவேன். கம்பெனி மீட்டிங் ஹோட்டல்கள்ல நடக்கும்போது, எனக்கு மட்டும் சாதம், dhal சொல்லுவார்கள். பிடிக்கலைனா எடுத்த உடனேயே fruit section போய்விடுவேன். யாரோட வீட்டுலயும் சமைத்த உணவு சாப்பிடமாட்டேன். டீ, காபி கிடையாது. இப்படியே நான் பயணம் செய்து காலத்தை ஓட்டிவிட்டேன். இதைவைத்தே நான் பல இடுகைகள் எழுதும்படி என் அனுபவம் அமைந்துவிட்டது.
அது யாரு சிவகாமி? ஹிஹிஹி, புரியலை! நான் பெரும்பாலும் இந்த ஜிமெயில் அக்கவுன்டிலேயே வேலைகள் செய்வதால், (முக்கியமானவை எல்லாம் இந்த ஐடிக்கே வரும்!) பல மெயில்களுக்கு பதில் சொல்லணும்! அப்போ வலைப்பக்கத்தைத் திறந்து வைச்சிருப்பேன். கருத்து வந்தால் உடனே மெயிலுக்கும் வருமே! பதில் சொல்லிடுவேன். சாப்பிடலாம் வாங்க பக்கத்துக்கு முடிஞ்சப்போப் போவேன்.
Delete"அது யாரு சிவகாமி? ஹிஹிஹி, புரியலை!" - மனித மூளைக்கு ஒரு விசித்திரமான திறமை உண்டு. ஒரு வார்த்தையில் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் பார்த்து உடனே வார்த்தையைக் கொண்டுவரும் திறமை. இது 60% மக்களிடம் உண்டு எனவும் படித்திருக்கிறேன். Siva m gss - டக்கென்று என் மனதில் சிவகாமி என்று பதிந்துவிட்டது. பின்பு உங்களைப் பற்றித் தெரிந்ததும், g-கீதா s-சாம்ப s-சிவம் இதுக்கு முன்னால 'சிவம்' என்று போட்டிருக்கிறீர்கள் என்று புரிந்துகொண்டேன்.
Deleteஓஹோ, அப்படிங்கறீங்க? சரி! :)
Deleteஅடடே குதிரை வண்டி ஸூப்பராக இருக்குமே...
ReplyDeleteகுகை படங்களில் பிரமிப்பு இல்லையென்றாலும் நேரில் கண்டால் பயங்கரமாக இருக்குமோ...
வாங்க கில்லர்ஜி, பயங்கரமெல்லாம் இல்லை. பாதை குறுகல்! ஒரு வேளை நான் போட்ட படங்கள் பிரமிப்பைத் தரும்படி இல்லையோனு நினைக்கிறேன். :)
Deleteஇந்த மாதிரி குகைப் பாதைகளில் என்னால் போக முடியாது போலிருக்கே
ReplyDeleteஒண்ணும் பிரச்னை இல்லை போகலாம். நம்ம நாட்டில் தான் நாசிக் அருகே பஞ்சவடியில் சீதை, ராமன் இருந்த குகைக்குள் செல்ல எங்களுக்குத் தடா போட்டுவிட்டார்கள். அதுவும் ரொம்பக் குறுகலான பாதை! உள்ளே குகை பெரிதாக இருந்ததாம்! போய்ப் பார்த்தவங்க சொன்னாங்க. எனக்கு ரத்த அழுத்தம் என்பதாலும் அவருக்குக் கழுத்துப் பிரச்னை என்பதாலும் எங்களைத் தடுத்துவிட்டார் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்! :)
Deleteபிரமிப்பாக உள்ளது...!
ReplyDeleteம்ம்ம்ம் வாங்க டிடி. ஏற்கெனவே பார்த்திருக்கலாம்.
Deleteகுகைக்குள் பசுமை.... பிரமிப்பு.
ReplyDeleteபடங்கள் அழகு.
வாங்க வெங்கட், நன்றி
Deleteபிரமிப்பான படங்கள் அருமை
ReplyDeleteஇறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post_21.html
வாங்க கரையோரம் சிதறிய கவிதைகள்! ஓரிரு நாட்களில் வரேன். :)
Deleteபடங்கள் எல்லாம் செமையா இருக்கு. குதிரைவண்டி அழகா இருக்கு
ReplyDeleteகீதா: குகை பொக்காரோ கேவ்ஸ் நினைவுக்கு வருது! செமையா இருக்கு!! எல்லா படமுமே!
வாங்க துளசிதரன்/கீதா, சுருக்கமான கருத்து? ஓகே! :)
Deleteஅருமையான படங்களுடன் சிறந்த பதிவு
ReplyDeleteநகைச்சுவை எண்ணங்கள் சில...
http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html
வாங்க காசிராஜலிங்கம், கட்டாயமா வந்து சிரிக்கிறேன். நன்றி. :)
Deleteஅற்புதமான படங்கள். சமீபத்தில் வியட்நாம் குகைகள் பற்றி ஒரு காணொளி வந்தது. அது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ரொம்பவே வேலை மும்முரமோ? தாமதமாக வந்திருக்கீங்க! :) நீங்க சொல்லும் காணொளி பார்த்ததில்லை! ஹிஹிஹி கேஜிஜி கிட்டேச் சொல்லிடுங்க! :))))
Deleteகுடை படங்கள் முன்பு பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteமன்னிக்கவும் குகை.
ReplyDelete