எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 25, 2017

பிள்ளையாரப்பா! நீ தான் துணை!


எல்லார் வீட்டிலேயும் பிள்ளையார் வந்திருப்பார். நம்ம வீட்டிலேயும் வந்தார்! ஆனால் வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல். நோ கொழுக்கட்டை, நோ வடை, நோ அதிரசம்! பாவம்! எல்லா வீடுகளிலேயும் சாப்பிடறாரா! அதான் நம்ம வீட்டிலே வேணாம்னு வைச்சாச்சு! இந்த வருஷம் பண்டிகை இல்லை தான். ஆனால் அதுக்காகப் பிள்ளையாரை வராதேனு சொல்ல முடியுமா? ஆகவே சும்மாப் பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு வைத்துப்  பிள்ளையாரை அழைத்தாச்சு! அதோட இன்னிக்கு எங்க ஆவணி அவிட்டம் வேறே! (சாம வேதம்) ஆவணி அவிட்டம் என்பதால் கொஞ்சம் போல் பாயசமும் வைச்சாச்சு. பாயசம், சாதம், பருப்புப் பிள்ளையாருக்கும் கொடுத்தாச்சு! 
பிள்ளையார் இன்னிக்கு நல்லாக் குளிச்சுட்டு ஜம்ம்னு வேஷ்டி கட்டிண்டு, அருகம்புல், மல்லிகை மாலை போட்டுக் கொண்டு இருக்கார்! நேத்திக்கு அதிசயமா உதிரி மல்லிகைப்பூ கிலோ 200 ரூபாய் தான் விற்றது. ஆகவே 100 கிராம் உதிரி மல்லி வாங்கி வீட்டிலேயே பூத் தொடுத்தாச்சு! பிள்ளையாருக்கும் போட்டாச்சு!  ஆவணி அவிட்டம் என்பதால் வழக்கமாகப் போடும் ஆவணி அவிட்ட மீள் பதிவும் கீழே! யஜுர் வேதக் காரர்களின் ஆவணி அவிட்டம் செப்டெம்பர் ஆறாம் தேதி! அப்போப் பார்த்து மஹாலயமும் ஆரம்பம்! என்ன செய்யப் போறாங்கனு தெரியலை! :) 

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??
ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.  அதர்வண வேதிகளுக்கு மறுபடியும் உபநயனம் செய்து கொண்டால் தான் வேதம் கற்கும் தகுதியே வரும் என்று சொல்லுகின்றனர். ஏற்கெனவே உபநயனம் முடிந்து வேதம் கற்க ஆரம்பித்தவர்களானாலும் அவர்கள் அதர்வண வேதம் கற்க வேண்டுமெனில் மீண்டும் உபநயனம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா. இதைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி:தெய்வத்தின் குரல்!

21 comments:

 1. வாழ்த்துகள். யாருமே கொழுக்கட்டை பதிவு போடலை. யஜுர் வேத உபாகர்மா எங்களுக்கு 7 ஆகஸ்டே முடிஞ்சாச்சு.

  ReplyDelete
  Replies
  1. அட! உங்களுக்குப் பதில் சொல்லிட்டு க்ளிக் செய்தால் கமென்டே காணோம்!!!!!!!!!!!!!!!!!!!!!

   Delete
  2. வாங்க நெ.த. முன்னாடி சொன்னதை அப்படியே ரிபீட் பண்ண முடியாது! மாறிடும். கொழுக்கட்டைப் பதிவுகள் முகநூலில் நிறைய வந்திருக்கு! எனக்கு எதிர்வீட்டுக் கொழுக்கட்டை தான் வந்திருக்கு! :) அம்பத்தூராக இருந்தால் 2,3 வீடுகளிலிருந்து வந்திருக்கும்! இங்கே இந்தியாவில் முக்கியமாய்த் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சந்திரகிரஹணம் என்பதால் அன்று ஆவணி அவிட்டம் செய்யக் கூடாதுனு சொல்லிட்டாங்க! ஆனால் அம்பேரிக்காவில் செய்ததாக என் பெண் சொன்னாள்.

   Delete
 2. கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தியா... நோ..... நான் எல்லோருக்கும் இனிய கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துக்கள்னுதான் சொல்லிக்கிட்டிருக்கேன்! ஓ........ சாம வேத உபாகர்மா ... ஓகே ஓகே...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துகள்.

   Delete
  2. ஹை ஸ்ரீராம் நானும் ஹேப்பி கொழுக்கட்டைத் தின வாழ்த்துகள்னுதான் சொல்லுவது வழக்கம்....!!

   கீதா

   Delete
  3. ஶ்ரீராம், கீதா ரங்கன் - கொழுக்கட்டை தின வாழ்த்துகள் என்று சொல்லிக்கொண்டே மற்றவர்களுக்கு கொழுக்கட்டைகளைக் கொடுப்பீர்களா அல்லது, "என்ன கொழுக்கட்டை இன்னும் தரலியே?" என்று நினைவுபடுத்தும் விதமாக 'கொழுக்கட்டை தின வாழ்த்துகள்' என்று வாழ்த்துவீர்களா?

   Delete
  4. ஹாஹா, ஒரு காலத்தில் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தோம். இப்போக் கொடுத்தாலும் வாங்க ஆள் இல்லை! யாரும் கொடுக்கிறதும் இல்லை! :)

   Delete
 3. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
  ஆவணி அவிட்டம் விளக்கம் அறிந்தேன்

  எனது அப்பா மறைவுக்குப்பிறகு பூணூல் இட்டுக்கொள்ளும் பழக்கம் படிப்படியாக சகோதரர்களுக்கு திருமணமாகி கூட்டுக்குடும்பம் பிரிய குறைந்து விட்டது வடை, பாயாசம் விருந்தோம்பல் உண்டு.

  நானும் வெளிநாடு சென்று விட்டதால் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது.

  இனியாவது தொடர வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, அம்பத்தூரில் எங்க பக்கத்து வீட்டுக்காரர் காரைக்குடியைச் சேர்ந்த லக்ஷ்மணப் பத்தர்(ஆச்சாரிதான்) அவர் குடும்பமும் எங்க குடும்பமும் ரொம்பவே நெருங்கிப் பழகினோம். அவர் ஒவ்வொரு ஆவணி அவிட்டத்தன்றும் அவர் வரைக்கும் பூணூல் மாற்றிக் கொண்டு அனுஷ்டானங்களைச் செய்வார். தினம் காலை ஐந்து மணிக்கெல்லாம் கிணற்றில் நீர் இறைத்துக் குளித்துத் திருநீறு இட்டுக் கொண்டு சிவ புராணம் படித்துப் பூஜை செய்வார். ஆனால் அவர் பிள்ளைகள் அப்படி இல்லை. ஒரு மாப்பிள்ளை, ஒரு சம்பந்தி கனடா, யு.எஸ்ஸில் கோயில் ஸ்தபதிகளாக இருக்கின்றனர். உங்களோட பேச்சு, எழுத்து நடை, உங்கள் ஜாடை எல்லாம் எனக்கு அவர்களை நினைவூட்டும்.

   Delete
 4. பிள்ளையாருக்கு சூட்டிய மல்லிகை அழகு.
  அருகம்புல்லும் பச்சையாக அழகு.நான் கொழுக்கட்டை படம் போட்டு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே பூ நன்றாகக் கிடைக்கும். ஆனால் தினம் பூக்கடைக்குப் போய்ப் பூக்களை வாங்க முடியறதில்லை! :( முன்னெல்லாம் கதம்பமே வீட்டில் தான் தொடுத்துப் போடுவேன். ஜவந்தி, மரு, பச்சை, அரளி, மரிக்கொழுந்து, பன்னீர்ப் பூ போன்றவை வாங்கி வருவார். ஒரு தரம் வாங்கினால் 3 நாட்கள் வைச்சுக்கலாம்.

   Delete
 5. சிரு வயதில் மற்றவர்கள் வீட்டில் இருந்து கொழுக்கட்டை வந்தாலும் எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி அன்று அம்மா கொழுக்கட்டை செய்வார்கள். எங்காத்து மாமி சுத்தமா அந்த பழக்கத்தை விட்டொழித்துவிட்டார். இப்ப நாங்க புதுசா வந்திருக்கும் குடியிருப்பில் யாரும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவதில்லை காரணம் எங்களை தவிர அனைவரும் சுத்த அமெரிக்கர்கள்... கொடுத்தால் உங்க பொண்ணுதான் எங்களுக்கு கொழுக்கட்டை கொடுத்தனப்பனும்


  எங்க வீட்டம்மா புள்ளையாருக்கு பூஜை பண்னி கொழுக்கட்டை பண்ணுவாரோ இல்லையோ ஆனால் எனக்கு பூஜை பண்ணி உடம்பெல்லாம் கொழுக்கட்டையாக வீங்க வைக்காமல் இருந்தால் சரி ஹும்ம்

  ReplyDelete
 6. விநாயகருக்குப் பாயசம்! ஏதோ ஒரு இனிப்பு கிடைத்தால் சரி அவருக்கு!

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, பண்டிகையைக் குறைக்கக் கூடாதுனு எங்க வீட்டிலே சொல்லுவாங்க! அந்தப் பழக்கமும் கூட!

   Delete
 7. பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை இல்லாவிட்டால் என்ன அவரு வந்துவிடுவார்!

  அதனால் விநாயகர் சதுர்த்தித் தின வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன்/கீதா, அவருக்கென்ன கூடவே தானே இருக்கார்!

   Delete
 8. மறுபடியும் ஒரு சேம் பின்ச்! நாங்களும் சாமவேதிகள்தான, எனவே இன்றுதன் உபாகர்மா.

  ReplyDelete
  Replies
  1. அட! அப்படியா!!!!!!!!

   Delete
 9. பெங்களூரில் வீடுகளில் விநாயகச் சதுர்த்தி கொண்டாடுவதைவிட கம்யூனிடி கொண்டாட்டமே அதிகம் ஆனால் அந்த நாளில் என்பதெல்லாம் கிடையாது அவரவர் சௌகரியம்போல் நடக்கிறது அந்தப் பெயரைச்சொல்லி கலெக்‌ஷனுக்கு வருவார்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார், இப்போனு இல்லை! எனக்குத் தெரிஞ்சு நான் சின்னப்பெண்ணா இருக்கையிலே இருந்தே தெருக்காரப் பையர்கள் ஒன்று கூடி விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி ஆகிய விழாக்களை நடத்தியது உண்டு! அப்போவே கலெக்‌ஷனும் உண்டு!

   Delete