2011 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போயிருந்தப்போ சுற்றிப் பார்த்த இடங்களில் இந்தப் பறவைகள் சரணாலயமும் ஒன்று. கீழே காண்பது சான் அன்டானியோ என்னும் இடத்தில் உள்ள ரிவர் வாக் சென்று தங்கி இருந்தப்போ அங்கே இருந்த "ஸீ வேர்ல்ட்" என்னும் பிரம்மாண்டமான பூங்காவின் ஒரு சிறு காட்சி! நிறையப் படங்கள் இருந்தாலும் தேர்ந்தெடுத்தே போட்டிருக்கேன். இவற்றை முன்னாடியே பார்த்திருக்கலாம்.
"ஸீ வேர்ல்ட்"நுழைவாயில் கீழே! அப்போது கிறிஸ்துமஸ் காலம் என்பதால் எங்கும் வண்ணமயமான அலங்காரங்கள்!
அங்கு காணப்பட்ட வித விதமான கிறிஸ்துமஸ் மரங்கள்!
இது ஒரு தீம் பார்க் மாதிரி! பல்வேறு விதமான விளையாட்டுக்களும் உண்டு! நாங்க குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டுமே போனோம். இவை எல்லாம் காமிராவில் எடுத்தவை. காமிராவை வெளியே எடுத்து சார்ஜ் செய்து வைச்சுக்கணும்! மொபைலில் பல சமயங்களிலும் சரியா வரதில்லை. எல்லாம் நொ.கு.ச.சா. ஆகி விடுகிறது.
Puli dhan!!
ReplyDeleteஹாஹாஹா, நன்றி மிகிமா.
Deleteபடங்கள் எல்லாமே அழகு, விவரமும்apt.
ReplyDeleteநன்றி அபயா அருணா!
Deleteஓ... உலகப் புகைப்பட தினத்தை ஒட்டின பதிவா? அதான் நிறைய படங்கள் இருக்குமல்லவா? அதில் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாமே. முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDelete(உங்களுக்காக ஒரு ரகசியம். டிஜிட்டல் கேமரா வந்தபிறகு, படம் எடுப்பவரின் திறமை என்பது ரொம்பக் கொஞ்சமாகிவிட்டது. 10 படங்கள் எடுத்தால் அதில் ஒன்று, இரண்டுதான் அழகாக வரும். அதனால் நீங்கள் ஒன்றும் குறைபட்டுக்கொள்ள வேண்டாம்) பொதுவா படம் எடுக்கும்போது கைகள் ஆடாம இருந்தால் போதும். ஒரே படத்தை உடனுக்குடன் இரண்டு தடவை எடுத்தால், ஒன்று நிச்சயமா நன்றாக வந்திருக்கும்.
வாங்க நெ.த. நீங்க சொல்றதெல்லாம் சரி. பத்து வருஷமா டிஜிடல் காமிரா தான்! இப்போத் தான் ஒரு வருஷமா அலைபேசி! என்றாலும் அது இன்னும் சரியா வரலை! குறை எல்லாம் பட்டுக்கலை. அநேகமா ஒரே படத்தை நான்கு முறையாவது எடுத்திருப்பேன்! இந்த 2011 ஆம் ஆண்டு சுற்றுலாப் படங்களே சுமார் 500 இருக்கும்! :) பதிவுகள் எழுதறச்சே ஏற்கெனவே பகிர்ந்திருக்கேன்.
Deleteநன்று. முதல் படம் அழகு.
ReplyDeleteநன்றி வெங்கட். வ.வா.பி.ரி.
Deleteயார் புலி யார் பூனை அம்பேரிக்காவில் இன்னும் பல இடங்களுக்குப் போய் இருக்கணுமே எழுதலாம்
ReplyDeleteநல்லாப் படம் எடுக்கறவங்க எல்லாம் புலிகள். நான் பூனை. அம்பேரிக்காவில் 2011 ஆம் ஆண்டு போனது தான்! இம்முறை எங்கும் போகவில்லை!
Deleteபடங்கள் நன்றாக இருக்கின்றன. நொ கு ச சா என்னவென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நொ நொந்து ஓகே... மிச்ச வார்த்தைகளைத் துழாவிக்கொண்டிருக்கிறேன். ஓ... நொண்டிக்குதிரைக்கு சறுக்கி விழுந்தது சாக்கு!!!!
ReplyDeleteநொ.கு.ச.சா. ஏற்கெனவே நெ.த. சொல்லி இருந்தார். அதோடு நான் பல வருஷங்களாகப் போடறேனே. உங்களுக்குத் தான் கு.வி.மீ.ம.ஒ ஆச்சே! :)
Deleteகு.வி.மீ.ம.ஒ - குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலை
Deleteவ.வா.பி.ரி.- கடவுளுக்குத்தான் வெளிச்சம். கண்டுபிடிக்கமுடிந்தால் சொல்கிறேன்.
ஹாஹாஹா, வ.வா.பி.ரி. ரொம்பவே எளிமை! அதோட உங்களுக்குப் புரியலைனா "புதசெவி" அப்படினு சொல்லணும்! அப்போத் தான் நான் சொல்லுவேன்! இதெல்லாம் இணையத்திலே ஆரம்பப் பாடங்கள்! படிச்சுப் பனிரண்டு வருஷங்கள் ஆகியும் மறக்கலை பாருங்க! :) வ.வா.பி.ரி. எல்லாம் நானாகச் சொல்றது. அதே தான் கு.வி.மீ.ம.ஒ. வும். நொ.கு.ச.சா. இதெல்லாம் நம்மளோட ஷ்டைல்!
Deleteஅக்கா படங்கள் எல்லாம அழகா வந்துருக்கு அக்கா...நானும் கேமரா தான் அதுவும் ரொம்ப அட்வான்ஸ்ட் டிஜிட்டல் கேமரா எல்லாம் இல்லை....ஆனால் எல்லோரும் சொல்லுகிறார்கள் இப்போதெல்லாம் மொபைலில் நல்ல கேமரா ஃபெசிலிட்டிஸுடன் வந்துருக்கு என்று...உண்மைதான் நிறைய மொபைல்களில் நன்றாக வருகின்றன ஏனென்றால் HDR - High Dynamic Range உடன்...எனவே நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் படங்களும் அழகாக இருக்கிறது...கொக்குகள் படம் சூப்பர் அக்கா...
கீதா
வாங்க கீதா, என்னிடம் சோனி சைபர் ஷாட் இருக்கு! கடந்த பத்து வருடங்களாய்ப் பயன்படுத்தினேன். இப்போ என்னமோ தெரியலை பாட்டரி சார்ஜ் பண்ணியும் பார்த்துட்டேன். புது பாட்டரியும் போட்டுப் பார்த்தாச்சு! திறக்கவே இல்லை! மேலே உள்ள படங்கள் எல்லாம் அதில் எடுத்தது தான்!
Deleteபடங்கள் இவ்வளவுதானா... ???
ReplyDeleteஇருக்கு! எல்லாத்தையும் போடலை! :)
Deleteஅழகான படங்கள்...
ReplyDeleteநன்றி, நன்றி. அனுராதா ப்ரேம்குமார்.
Deleteபுலிங்கிறீங்க பூனை என்கிறீங்க. தலைப்புக்கும் படத்துக்கும் ஒன்னும் பொருத்தம் இல்லையே! பூனையும் புலியும் எந்த போட்டோவில் ஒளிந்திருக்கிறது?
ReplyDelete--
Jayakumar
ஃபோட்டோகிராஃபியில் புலிகள் போடும் படத்துக்கும் ஒண்ணுமே தெரியாத பூனையான நான் போடும் படத்தையும் சொல்லி இருக்கேன். மற்றபடி பூனை படம் எல்லாம் வேறொரு பதிவில். :)
Deleteபடங்கள் எல்லாம் நல்லா இருக்கிறது.
ReplyDeleteநெல்லைத் தமிழன் சொன்னது போல் செய்தால் போதும் அருமையான குறிப்பு.
நன்றி கோமதி அரசு. எப்போதுமே அப்படித் தான் செய்து வருகிறேன். :)
Deleteபுகைப்பட தின வாழ்த்துகள்.
ReplyDelete