எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 15, 2017

எல்லோருக்கும் சுதந்திர தின, ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்!

முதல்லே ஜன்மாஷ்டமி வாழ்த்துகள். நேத்திக்கு ஜன்மாஷ்டமி பெரும்பாலானவர்களால் கொண்டாடப் பட்டது. வைணவர்களுக்கு அடுத்த மாதம் வருகிறது. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலிலும் அடுத்த மாதம் தான்! இந்த வருஷம் நம்ம வீட்டில் பண்டிகை இல்லை! அதனால் கிருஷ்ணன் பிறப்பைக் கொண்டாடாமல் இருக்க முடியுமோ? பக்ஷணம் தான் பண்ணக் கூடாது! கோலம் போட்டுக் கிருஷ்ணன் பாதங்களைப் பதிக்க முடியாது! எனக்கு இதான் ரொம்பவே வருத்தம். கிருஷ்ணன் பாதங்கள் சின்னச் சின்னப் பாதங்கள் போடுவதில் சின்ன வயசிலிருந்தே ரொம்ப ஆசை!

நம்ம ராமர், படங்களில் ஒரே பிரதிபலிப்பு அதிகம். விளக்கை அணைச்சுட்டு எடுத்தாலும் சரியா வரலை! கொஞ்சம் புகை மூட்டம் போலத் தெரியுது! தெளிவா இல்லை! :( காமிராவை எடுத்துச் சரி பண்ணி வைச்சுக்கணும். அலைபேசியில் எனக்குச் சரியா வரலை! (யாருங்க அங்கே, காமிராவில் என்ன வாழ்ந்ததுனு கேட்டு ஸ்கையை வாங்கறது?) 

மேலாவணி மூல வீதி வீட்டில்,மதுரையில் இருந்தப்போ அந்த நீளமான வீடு முழுக்க என் கைவண்ணத்தில் தான் கோலம் மிளிரும். கிருஷ்ணர் பாதங்களும் நான் போடுபவை தான். அந்த வீட்டில் நாலு குடித்தனம் இருந்தது. எல்லோருமே என்னுடைய கோலத்தை அங்கீகரிச்சிருக்காங்க. ம்ம்ம்ம். இந்த வருஷம் போட முடியலை! :( ஆனால் குழந்தை பிறப்பைக் கொண்டாட வேண்டாமோ! எப்படியும் தினம் தினம் காலையிலும் மாலையிலும் பால் நிவேதனம் செய்யறேன். மத்தியானம் சாதம்! ஆகவே நிவேதனம் செய்யறதை யாரும் தப்புனு சொல்ல முடியாதே!



மல்லிகைப்பூக்களால் கிருஷ்ணர் முகம் மறைந்துள்ளது.

உடனடியாகத் தீர்மானம் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முந்தாநாளே ரங்க்ஸ் பூக்கடைக்குப் போய்த் துளசி, உதிரி மல்லிகைப் பூ, கதம்பம் போன்றவற்றோடு பழங்களும் வாங்கி வந்துட்டார். பூவைத் தொடுத்து வைச்சுட்டேன். நேற்று மாலை விளக்கேற்றினதும் அப்போத் தான் வாங்கிய பால், காலை உறை ஊற்றி வைத்திருந்த தயிர், வெண்ணெய், அவல், வெல்லம், பழங்கள் எல்லாவற்றையும் கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்தேன். எல்லா வீட்டிலேயும் முறுக்கும், தட்டையும் சீடையும் சாப்பிட்டக் கிருஷ்ணருக்குக் கொஞ்சமானும் ஜீரணம் ஆகவேண்டாமோ! குழந்தை ஆச்சே! அதனால் எளிமையான நிவேதனம்! அவலைக் கூட மஹாராஷ்டிர முறைப்படித் தயிரில் போட்டு வைக்கலாமானு யோசிச்சேன். ரங்க்ஸுக்குப் பிடிக்கணும். அதோடு காலை வடிச்ச சாதம் வேறே மிச்சம் இருந்தது. அவலைத் தயிரில் போட்டால் சாதம் செலவாகாது. மறுநாள் பழைய சாதம் சாப்பிட முடியாது! ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.


கீழ்த்தட்டில் உள்ள விக்ரஹங்கள்!  நடுவில் பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக! குடும்பப் பரம்பரை விக்ரஹங்கள். இந்த விக்ரஹங்கள் பத்தித் தான் நம்ம தம்பி மோகனின் "அங்கிங்கெனாதபடி" கதையில் குறிப்பிட்டேன். மேலே பார்க்கும் கிருஷ்ணரும் இவங்களோடு சேர்ந்தவரே!


 நான் செய்த நிவேதனம், பால், தயிர், வெண்ணெய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, அவல், வெல்லம்.

தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டிச் செய்யவில்லை. வழக்கமான ஸ்லோகங்கள் தான்! எப்படியோ கிருஷ்ணர் எங்க வீட்டுக்கும் நேத்து வந்துட்டாரே!


தேசியக் கொடி க்கான பட முடிவு

தேசியக் கொடி! படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினமலர்!

இந்த எழுபதாவது சுதந்திர தினத்தில் நாடு முன்னேற அரசோடு சேர்ந்து நாமும் ஒத்துழைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். எல்லாத் துறைகளிலும் நாடு தன்னிறைவு பெற்று முன்னேறப் பிரார்த்திப்போம்.

வந்தேமாதரம்!

ஜெய்ஹிந்த்!

21 comments:

  1. என்ன தான் அவன் கன்று மேய்த்தாலும் கன்னியர் நெஞ்சங்களைக் கவர்ந்தாலும் கலங்கிய பார்த்தனுக்கு கை கொடுத்தாலும் -

    குறும்பின் வண்ணமாய் கோகுலக் கண்ணன்.. அவனே மிகவும் இஷ்டம்!..

    ஆனாலும் திருப்பாவையைக் கையில் எடுத்து விட்டால் -
    ஓடி வந்து ஆரத் தழுவிக் கொள்ள மாட்டானா!.. - என்றிருக்கின்றது..

    பசுக்களாகிய நமக்கு அவன் தானே பாதுகாப்பு!..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! குழந்தையே அழகு! அதுவும் கண்ணன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதுமா?

      Delete
  2. நாம் எப்படி வழிபட்டாலும் இறைவன் நம்முடன் எப்போதும் இருப்பார்!!

    ஜன்மாஷ்டமி மற்றும் சுதந்திர தின வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தில்லையகத்து/கீதா, துளசிதரன்.

      Delete
  3. தங்களுக்கும் ஜன்மாஷ்டமி வாழ்த்துகள் மற்றும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. ளிமையான நிவேதனம் என்றாலும் மனமுவந்து செய்யும்போது அது தானே மிக உயர்ந்த நிவேதனம்? அதனால் உங்கள் இல்லத்திற்குத்தான் கிருஷ்ணர் முதலில் வந்திருப்பார்!

    சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ சாமிநாதன்.

      Delete
  5. தங்களுக்கும் ஸ்ரீஜெயந்தி தின வாழ்த்துக்கள். என்ன.. சீடை, அதிரசம், முறுக்கு, சீயன் படங்கள் இல்லாததுதான் குறை. எனக்கும் சிறிய வயதில் கண்ணன் கழல்களை கோலமாக வரைந்தது நினைவுக்கு வந்தது. அப்போல்லாம், இனிப்புகளை நினைத்து உறங்கச் செல்வோம். நடு ராத்திரி எங்களை எழுப்பி (பூஜை எல்லாம் முடிந்ததும்) இலையில் பட்சணங்கள் கொடுப்பார்கள். இப்போவும் ஸ்ரீஜெயந்தின்னாலே வெல்லச்சீடையும், உப்புச் சீடையும் மனதில் வந்துபோகின்றன.

    உங்கள் எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். (தொலைக்காட்சி முன்னால் நாள் முழுவதும் கழியாமல் இருக்கவேண்டும் எல்லோருக்கும் என்றும் நினைத்துக்கொள்கிறேன்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. போன வருஷம், முந்திய வருஷங்கள் எல்லாம் போட்டிருக்கேன்னு நினைக்கிறேன். போன வருஷம் தான் முறுக்குச் சுத்தும்போது கை தகராறு! இப்போக் கொஞ்ச நாட்கள் முன்னர் சுத்திப் பார்த்ததில் நல்லாவே வந்தது. ஆனால் கைவலி, வீக்கம் நினைச்சால் யோசனை! தொலைக்காட்சியில் எப்போதுமே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தான் பார்ப்போம். இந்தப் பட்டிமன்றம்னு ஒண்ணு நடக்குதே அதை இன்று வரை பார்த்ததே இல்லை!

      Delete
    2. http://sivamgss.blogspot.in/2015/09/blog-post_5.html

      http://sivamgss.blogspot.in/2014/08/blog-post_17.html

      http://sivamgss.blogspot.in/2012/08/blog-post_9.html

      http://sivamgss.blogspot.in/2010/09/blog-post.html

      http://sivamgss.blogspot.in/2015/09/blog-post_6.html

      http://sivamgss.blogspot.in/2015/09/blog-post_56.html

      http://sivamgss.blogspot.in/2016/08/blog-post_25.html

      http://gsambasivam.blogspot.in/2011/08/blog-post_21.html இது அம்பத்தூர் வீட்டில் கடைசியாக் கொண்டாடின கிருஷ்ண ஜயந்திப் படம்! :(

      Delete
    3. எல்லாவற்றையும் பார்த்தேன்.பாதி இடுகையில் படம் சரியா வரலை என்பதையும் பார்த்தேன்.

      Delete
    4. எந்தப் பதிவில்? இன்னிக்குப் போட்டிருப்பதா? இதிலேயும் சரியா வரலை! :(

      Delete
    5. அப்படி மோசமாகச் சொல்லவில்லை. சில சமயம், வெளிச்சம் எதிர்ப்புறம் இருந்தாலும் படம் நல்லா வராது. அடுப்புல வச்சுட்டு, புகைப்படம் எடுக்கும்போது அவசரத்துல படம் சரியா வராது. பழைய பதிவில் தட்டை, சிவந்த நிறத்தில் அழகாக வரவில்லை, இதன் காரணம் வெளிச்சம் ரொம்ப அதிகம். இதுபோலத்தான் மற்ற சில படங்களிலும். 'ருசி'யைப் பற்றி எனக்குத் தெரியாது. ஏன்னா, கொஞ்சம்கூட சாம்பிள் நீங்க கொடுக்கலை.

      Delete
  6. கிருஷ்ணனின் பிறந்ததினம் கூட பலவாறு கொண்டாடப்படுகிறதே

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, அதைப் பற்றி இங்கே ஏதும் சொல்லலையே! :)

      Delete
  7. சிற்சில காரணங்களால் எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி செப்டெம்பர் 13 தான். எங்கள் வீட்டிலும் இளமையில் சின்னப்பாதங்கள் வரைந்து சீடர்கள், முறுக்குகளுடன் கொண்டாடிய நினைவு வருகிறது. சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்? என்ன ஆச்சு? ஓகே, அப்போ செப்டெம்பெரி, சீடை முறுக்குக் கிடைக்கும்! :)

      Delete
  8. தினம் கண்ணனை அழைக்காலாம் தான். இப்போதும் வணங்கி செம்டெம்பர் 13ம் அழைத்தால் ஆச்சு.
    பதிவு அருமை.
    எளிமையாக அவல் ,துளசி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார். அன்பும், பக்தியும் தான் முக்கியம் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு! நீங்க சொல்வது சரியே! கண்ணன் எப்போதும் நம்முடன் தானே இருக்கான்!

      Delete
  9. குழந்தை கண்ணன் மனதை நிறைத்து நிற்கின்றார்.

    ReplyDelete