பதிவுகளை ஜி+இல் இணைத்தாலும் அதைக் காட்டுவதில்லை. சமீப காலமாக அப்படி நேர்கிறது. அதோடு என்னோட அன்ட்ராய்ட் ஃபோனில் திடீரென ஃபேஸ்புக் பதிவுகளுக்கு பதிலளிக்க ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று விருப்பத்தேர்வுகளைக் காட்டுகிறது! ஆனால் வாட்ஸப்பில் வருவதில்லை! இணையப் பிரச்னை இன்னும் சரியாகவில்லை. புதுசா மோடம் வாங்கலாம்னா பையர் இணையச் சேவையில் தான் குறைபாடு எனச் சொல்லுகிறார். யோசிக்கிறேன். :( வீட்டில் அடுத்தடுத்து ஏ.சி., ஃப்ளஷ் செய்யும் தொட்டி, தண்ணீர்க் குழாய்கள் என வேலை செய்து கொண்டிருக்கோம். அதிலும் இந்தக் குழாய்களை ஜாக்வர் கம்பெனியோட ப்ரான்டில் வாங்கிப் போட்டிருக்காங்க. அதைச் சாதாரண ப்ளம்பர்களால் சரி செய்ய முடிவதில்லை. அவங்க கம்பெனியில் கிடைக்கும் உதிரி பாகங்களை வைத்தே தான் சரி செய்ய வேண்டி இருக்கு.
அவங்களைக் கூப்பிட்டால் நமக்கு வரிசை எண் கொடுத்துடறாங்க. வரதுக்கு 2,3 நாட்கள் அதுக்கும் மேல் ஆகி விடுகிறது! சாதாரணக் குழாயே போட்டிருக்கலாம் போல! அம்பேரிக்காவில் எல்லாம் பையரே பார்த்துடுவார்! ரொம்ப வீணாகி விட்டதெனில் மாற்ற வேண்டியது தான்! ஒரு சில குழாய் இணைப்புக்கள் மட்டும் வெளி ஆட்கள் வந்து பார்க்க வேண்டியதாக இருக்கும். அங்கே ஒரு முறை வந்தால் குறைந்த பக்ஷமாக 100 டாலர் வாங்கறாங்க. இங்கேயும் வந்தால் என்ன குறைபாடு என்பதைக் கண்டு சொன்னால் 250 ரூபாய் வரை வாங்கறாங்க. பணத்தின் மதிப்புத் தான் வேறே! மற்றபடி மனிதர் ஒரே மாதிரித் தான்! ஒவ்வொன்றாகச் செய்து கொண்டு வருகிறோம். இதிலே நாளைக்கு விருந்தினர் வேறே வராங்க! அநேகமா நாளைக்கும், நாளன்னிக்கும் இணையம் வருவதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம். அல்லது கொஞ்ச நேரமே வந்துட்டுப் போகலாம். எல்லோரும் ஜோரா ஒரு தரம் கை தட்டுங்கப்பா! ஆடுங்க, பாடுங்க, கொண்டாடுங்க!
இங்கே ஶ்ரீரங்கத்தில் காவிரி புஷ்கரத்திற்காக யாகங்கள், யக்ஞங்கள் நடைபெற்று வருகின்றன. இன்னும் போய்ப் பார்க்கவில்லை. காவிரியில் குளித்துப் புண்ணியம் தேடிக்கொள்வதற்காகச் சில நண்பர்கள் வருகின்றனர். அவங்களைக் கவனித்து அனுப்பின பின்னரே யாகமோ, யக்ஞமோ போய்ப் பார்க்க முடியும். எங்க தெருவே கூட்டமான கூட்டம். நேத்திக்கு மொட்டை மாடியில் போய்க் காவிரியில் தண்ணீர் வந்திருக்கானு பார்த்தால், தேங்கி இருக்கும் தண்ணீரில் சில, பல மனிதர்கள் குளிச்சுட்டு இருந்தாங்க. கணிசமான கூட்டம். ஆனால் நான் போய்ப் பார்த்தப்போ கிட்டத்தட்டப் பத்து மணி என்பதால் நல்ல வெயில். படம் எடுத்திருக்கேன். எப்படி வந்திருக்குனு இனிமேத் தான் பார்க்கணும். :) அதோட காவிரியில் தண்ணீர் விடும்படி கேட்டுக் கொண்ட வேண்டுகோள் ஏற்கப்பட்டு நேற்றிலிருந்து தான் சுமார் பத்தாயிரம் கன அடி தண்ணீர் விடச் சம்மதிச்சிருக்காங்க. அது வந்து சேர எப்படியும் நாளை ஆகிடும்.
எல்லாம் கிடக்க நீட் தேர்வு குறித்த போராட்டங்கள் ஓயவில்லை எனத் தொலைக்காட்சியில் சொல்றாங்க. எத்தனை நாட்களுக்குப் போராடப் போறாங்கனு தெரியலை! போன வருஷமே விலக்கு அளித்து அடுத்த வருஷம் தேர்வு உண்டுனு சொல்லியும் யாரும் அதுக்குத் தயார் ஆகலை! வருத்தமளிக்கும் செய்தி! போராடுபவர்களில் மாணவர்களை விட வயதானவர்களே அதிகம் இருக்கிறார்கள். ஒரு சில மாணவிகள் போராடுவதையும் பார்க்க முடிந்தது. நான் பள்ளியில் படிக்கும்போது வந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இப்படித் தான் பள்ளிக்குள் நுழையவே விட மாட்டாங்க போராட்டக்காரங்க. அவங்களை ஏமாத்திட்டுப் பின் வாசல் வழியா போவோம். அதைக் கண்டு பிடிச்சு அங்கேயும் வந்துட்டாங்க. ஆனால் நாங்க ஐந்தாறு பேர் ஒரே ஓட்டம்! வகுப்பறைக்குப் போய்த் தான் ஓட்டத்தை நிறுத்தினோம். சுமார் மூன்று கிலோ மீட்டர் ஓடி இருப்போம். அதுவும் புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு!
என்னமோ இப்போதைய மத்திய அரசு தான் இந்த "நீட்" தேர்வு முறையைக் கொண்டு வந்தாப்போலச் சொல்றாங்க. இது 2010 ஆம் ஆண்டிலேயே அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம். திட்டம் வெற்றி எனில் அவங்க எங்களால் தான், நாங்க கொண்டு வந்தோம்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே திட்டத்துக்கு எதிர்ப்பு என்பதால் இப்போக் காங்கிரஸும் சேர்ந்து எதிர்க்கிறாங்க! அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நடந்துக்கிறாங்க. என்றாலும் இந்த வருஷ மாணவர் சேர்க்கை பின் தங்கிய மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகிறது. அவங்க எல்லாம் அரசுப் பள்ளி இல்லைனு ஒரு புள்ளி விபரம்! பின் தங்கிய மாவட்டங்களில் கூட சிபிஎஸ்சி பள்ளிகள் தரத்தோடு செயல்பட முடியும் எனில் ஏன் நவோதயா பள்ளிகள் செயல்படக் கூடாது? நவோதயா பள்ளிகளை உடனே தமிழகத்தில் கொண்டு வரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதற்கும் எதிர்ப்பு! ஹிந்தி இருக்குமாம். படிக்க மாட்டோம்னு சொல்றாங்க. சொல்றவங்க எல்லாம் படிப்பை முடிச்சு வேலை பார்க்கிறவங்க. இவங்க பலரின் குழந்தைகளும் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஹிந்தியும் சேர்த்துத் தான் படிக்கிறாங்க. ஆனால் மத்தவங்களைப் படிக்கக் கூடாதுனு சொல்றாங்க. அரசுப் பள்ளியில் ஹிந்தி சொல்லிக் கொடுத்தால் அது ஹிந்தி திணிப்பாம். தனியார் பள்ளியில் சொல்லிக் கொடுத்தால் திணிப்பு இல்லையாம்! என்னவோ நியாயம் போங்க! தமிழ்நாட்டுக்கே தனி நியாயமாத் தான் இருக்கு! :( இத்தனைக்கும் இங்கே தான் ஒவ்வொரு வருஷமும் ஹிந்தி பிரசார சபா மூலம் ஹிந்தி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம்!
பக்கத்து மாநிலங்களில் எல்லாம் "நீட்" தேர்வுக்கும் எதிர்ப்பு இல்லை. நவோதயா பள்ளிகளுக்கும் எதிர்ப்பு இல்லை! தமிழ்நாட்டில் திறமைசாலிகள், கெட்டிக்காரங்க என்று சொல்லிக் கொண்டு இந்தத் தேர்வுக்கு ஏன் அஞ்ச வேண்டும் என்பதே புரியவில்லை! வேடிக்கை என்னன்னா இங்கே எதிர்க்கும் கட்சிகள் பலவும் மற்ற மாநிலங்களில் எதிர்க்கவே இல்லை! அதுவும் ஏன்னு புரியலை! :)

மக்கள் கூட்டம் தூர இருக்கும் செக் அணைக்கட்டு அருகே தெரியும். அது இங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கலாம். ஜூம் பண்ணி எடுத்தாலும் வெயிலில் படம் சரியா இருக்கானு காமிராவில் பார்க்க முடியலை! வந்தவரை போதும்னு எடுத்திருக்கேன்.
இது கொஞ்சம் கிட்டே இருக்கும் இடம்! இங்கேயும் கூட்டம் ஓரளவுக்கு இருந்தது.
எல்லாம் கிடக்க நீட் தேர்வு குறித்த போராட்டங்கள் ஓயவில்லை எனத் தொலைக்காட்சியில் சொல்றாங்க. எத்தனை நாட்களுக்குப் போராடப் போறாங்கனு தெரியலை! போன வருஷமே விலக்கு அளித்து அடுத்த வருஷம் தேர்வு உண்டுனு சொல்லியும் யாரும் அதுக்குத் தயார் ஆகலை! வருத்தமளிக்கும் செய்தி! போராடுபவர்களில் மாணவர்களை விட வயதானவர்களே அதிகம் இருக்கிறார்கள். ஒரு சில மாணவிகள் போராடுவதையும் பார்க்க முடிந்தது. நான் பள்ளியில் படிக்கும்போது வந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இப்படித் தான் பள்ளிக்குள் நுழையவே விட மாட்டாங்க போராட்டக்காரங்க. அவங்களை ஏமாத்திட்டுப் பின் வாசல் வழியா போவோம். அதைக் கண்டு பிடிச்சு அங்கேயும் வந்துட்டாங்க. ஆனால் நாங்க ஐந்தாறு பேர் ஒரே ஓட்டம்! வகுப்பறைக்குப் போய்த் தான் ஓட்டத்தை நிறுத்தினோம். சுமார் மூன்று கிலோ மீட்டர் ஓடி இருப்போம். அதுவும் புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு!
என்னமோ இப்போதைய மத்திய அரசு தான் இந்த "நீட்" தேர்வு முறையைக் கொண்டு வந்தாப்போலச் சொல்றாங்க. இது 2010 ஆம் ஆண்டிலேயே அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம். திட்டம் வெற்றி எனில் அவங்க எங்களால் தான், நாங்க கொண்டு வந்தோம்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே திட்டத்துக்கு எதிர்ப்பு என்பதால் இப்போக் காங்கிரஸும் சேர்ந்து எதிர்க்கிறாங்க! அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நடந்துக்கிறாங்க. என்றாலும் இந்த வருஷ மாணவர் சேர்க்கை பின் தங்கிய மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகிறது. அவங்க எல்லாம் அரசுப் பள்ளி இல்லைனு ஒரு புள்ளி விபரம்! பின் தங்கிய மாவட்டங்களில் கூட சிபிஎஸ்சி பள்ளிகள் தரத்தோடு செயல்பட முடியும் எனில் ஏன் நவோதயா பள்ளிகள் செயல்படக் கூடாது? நவோதயா பள்ளிகளை உடனே தமிழகத்தில் கொண்டு வரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதற்கும் எதிர்ப்பு! ஹிந்தி இருக்குமாம். படிக்க மாட்டோம்னு சொல்றாங்க. சொல்றவங்க எல்லாம் படிப்பை முடிச்சு வேலை பார்க்கிறவங்க. இவங்க பலரின் குழந்தைகளும் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஹிந்தியும் சேர்த்துத் தான் படிக்கிறாங்க. ஆனால் மத்தவங்களைப் படிக்கக் கூடாதுனு சொல்றாங்க. அரசுப் பள்ளியில் ஹிந்தி சொல்லிக் கொடுத்தால் அது ஹிந்தி திணிப்பாம். தனியார் பள்ளியில் சொல்லிக் கொடுத்தால் திணிப்பு இல்லையாம்! என்னவோ நியாயம் போங்க! தமிழ்நாட்டுக்கே தனி நியாயமாத் தான் இருக்கு! :( இத்தனைக்கும் இங்கே தான் ஒவ்வொரு வருஷமும் ஹிந்தி பிரசார சபா மூலம் ஹிந்தி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம்!
பக்கத்து மாநிலங்களில் எல்லாம் "நீட்" தேர்வுக்கும் எதிர்ப்பு இல்லை. நவோதயா பள்ளிகளுக்கும் எதிர்ப்பு இல்லை! தமிழ்நாட்டில் திறமைசாலிகள், கெட்டிக்காரங்க என்று சொல்லிக் கொண்டு இந்தத் தேர்வுக்கு ஏன் அஞ்ச வேண்டும் என்பதே புரியவில்லை! வேடிக்கை என்னன்னா இங்கே எதிர்க்கும் கட்சிகள் பலவும் மற்ற மாநிலங்களில் எதிர்க்கவே இல்லை! அதுவும் ஏன்னு புரியலை! :)
மக்களுக்கு இது சரி, இது சரியில்லை என்ற முடிவை எடுக்கத் தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ReplyDeleteஅரசியல்வாதிகளின் பின்னால் சென்று மக்கள் போராடுவது தவறானது அவர்கள் என்றுமே சந்தர்ப்பவாதிகளே...
அனிதா விவகாரத்திலேயே தெரிந்து கொள்ளலாம் யாருக்கும் பாசமில்லை ஓட்டுக்காக போடும் வேஷம்.
இனியொரு அனிதா இறந்து விடாமல் இருக்கணும் இதுவே எமது அவா!
ம்ம்ம்ம், நீங்க சொல்வதும் உண்மைதான். எல்லோருமே சந்தர்ப்பவாதிகளாக இதயமில்லாதவர்களாக இருக்கின்றனர்! :(
Deleteஒரு விஷயம் பிடித்து விட்டா லோ பிடிக்காவிட்டாலோ அது பற்றிய அ பிப்பிராயம் மாறுவதில் சிரமம் இருக்கும் எனக்கு இந்த நீட் பற்றிய முழு புரிதல் இல்லை என்பதே சரி கல்வியிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது அதுவே பல புரிதல்களையும் மழுங்கடிக்கிறது
ReplyDeleteநீட் தேர்வு முறையே ஆரம்பத்தில் இருந்தே உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது, மெடிகல் கவுன்சில் அதற்கான பாடத் திட்டத்தைத் தயாரித்து தேர்வுக்கு ஒரு வருஷம் முன்னால் இருந்தே வெளியிடுகிறது. இப்போதெல்லாம் இணையதளத்திலேயே பார்க்க முடியும். அப்படி இருந்தும் இந்த மாணவி தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளாதது சோகம் தான்! :(
Delete//பதிவுகளை ஜி+இல் இணைத்தாலும் அதைக் காட்டுவதில்லை.///
ReplyDeleteநான் எனக்கு மட்டும்தான் அந்த பிரச்சனை என்று நினைத்து இருந்தேன் ஆனால் நீங்களும் சொல்வதை பார்த்தால் இது கூகுல் செய்த மாற்றம் என நினைக்கிறேன்
///என்னோட அன்ட்ராய்ட் ஃபோனில் திடீரென ஃபேஸ்புக் பதிவுகளுக்கு பதிலளிக்க ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று விருப்பத்தேர்வுகளைக் காட்டுகிறது///
ஒருவேளை செட்டிங்கில் நீங்கள் ஆங்கிலம் என்று செலக்ட் பண்ணும் போது இந்திய ஆங்கிலம் என்று செலக்ட் செய்து இருப்பீர்கள் அப்படி செலக்ட் செய்தவுடன் இந்திய மொழிகளும் தோன்றும் அப்படி வேண்டாம் என்றால் ஆங்கிலம் என்பதை மட்டும் தெரிவு செய்து கொள்ளுங்கள்
காங்கிரஸ் ஆட்சி பிடிக்கவில்லை என்பதால்தானே மக்கள் இந்த அரசை தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களி தேர்வு செய்தனர்.காங்கிரஸை இன்னும்மக்கள் வெறுக்க அவர்களின் திட்டமும் செயல்பாடும்தானே காரணம் அப்படி இருக்க அதே திட்டங்களை இப்போதையை அரசு செயல்படுத்துவது தவ்றுதானே
காங்கிரஸ் ஆட்சி பிடிக்கவில்லை என்பதால் தானே மக்கள் இந்த அரசை தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் தேர்வு செய்தனர். காங்கிரஸை இன்னும் மக்கள் வெறுக்க அவர்களின் திட்டமும் செயல்பாடும் தானே காரணம். அப்படி இருக்க அதே திட்டங்களை இப்போதைய அரசு செயல்படுத்துவது தவறு தானே! இன்றைய பதிவுக்கு நான் சொன்ன கருத்துக்கள் இது!
ReplyDeleteமேலே உள்ளவை அவர்கள் உண்மைகள் எனக்கு முகநூலில் மெசஞ்சர் மூலம் அனுப்பி இருக்கார். காபி, பேஸ்ட் செய்ய முடியலை! ஏன்னு புரியலை. ஆகவே அதைப் பார்த்து அப்படியே தட்டச்சி இருக்கேன். சரியா இருக்கானு அவர் தான் பார்த்துச் சொல்லணும். ஃபாலோ அப் இல்லாததால் அவருக்குப் போகாது! :(
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் காங்கிரஸ் அரசு குறுக்கிட்டபோது ஏற்பட்ட வழக்கில் இம்மாதிரித் தேர்வுகளை மெடிகல் கவுன்சில் மூலமாகப் பொதுத் தேர்வாக நடத்தும்படி உச்சநீதிமன்ற உத்தரவு. 2010 ஆம் ஆண்டே வந்து விட்டது. ஜெயலலிதா ஆட்சேபித்துக் கொண்டிருந்ததால் சென்ற வருடம் வரை விலக்குக் கொடுக்கப்பட்டுச் சென்ற வருடமே உச்சநீதி மன்றத்தால் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு அடுத்தவருடம் விலக்கில்லை என்பதும் சொல்லப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் அரசியல்வாதிகள் மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வந்தார்கள். இங்கே எதிர்க்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளாவிலோ, கர்நாடகத்திலோ அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மற்றவற்றிலோ எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன. அதனால் மாநிலத்தின் உரிமைகள் பறிபோனதாக எந்தக் கட்சியும், மாநிலமும் கூறவில்லை! :( நமக்கு எல்லாத்திலேயும் இலவசம், தள்ளுபடி, சலுகை வேண்டும். ஆகவே இதற்கும் எதிர்பார்க்கிறோம்.
Deleteபதிவுகளை ஜி ப்ளஸ்ஸில் இணைத்தால் எங்கு காட்டுவதில்லை? பிளாக்கர் கணக்கில் எனக்கும் காட்டுவதில்லை. அதைத்தான் சொல்கிறீர்களா?
ReplyDeleteஇன்றைய செய்தித்தாளில் ஹிந்தி எதிர்ப்பு என்று போராட்டங்கள் நடந்தாலும், தமிழ்நாட்டில் ஹிந்தி படிப்போர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்று செய்தி பார்த்தேன்.
ஜி+ இல் சேர்க்கக் க்ளிக் செய்தால் சேராமல் ! ஆச்சரியக்குறியுடன் நின்று விடும். அப்புறமாக் காப்பி, பேஸ்ட் பண்ண வேண்டி இருக்கும். பல சமயங்களிலும் இப்படி ஆகிறது. இப்போது நீங்கள் சொல்வது போல் ப்ளாகர் கணக்கிலும் காட்டுவதில்லை! தமிழ்நாட்டில் ஹிந்தி தின்பண்ட்ங்கள் சமோசா, சாட், பானிபூரி, பேல் பூரி, பராட்டா, வட இந்தியரைப் போன்ற உடை, அலங்காரம் ஆகிய எதற்கும் தடை இல்லை. திருமணங்களில் கூட வட இந்தியரைப் போல் மெஹந்தி திருவிழா நடத்துவார்கள். ஆடுவார்கள், பாடுவார்கள். ஆனால் ஹிந்தி மட்டும் வேண்டாம்.
Deleteம்ம்ம்ம். பல விஷயங்களையும் அலசி இருக்கீங்க!
ReplyDeleteவீட்டில் விருந்தாளி! எஞ்சாய்....
வந்தவங்க போயாச்சு! காவிரி புஷ்கரத்திற்கு வந்தாங்க. முகம் தெரியாத விருந்தினர். வந்த பின்னரே ஒருவரை ஒருவர் அறிந்தோம்.
Deleteபடிச்சுட்டேன். நீட்டான விவரிப்பு.
ReplyDeleteநன்றி.
Deleteபடங்கள் நல்லாத்தான் இருக்கு...நீட் எங்கள் மாநிலத்தில் எல்லாம் பெரிய எதிர்ப்பு இல்லை...இனி அனிதா போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருந்தால் சரி.
ReplyDeleteகீதா: உயிரின் மதிப்பு பலருக்கும் தெரிவதில்லை. தற்கொலை என்பதை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. அவள் தன் பெற்றோரை நினைத்துப் பார்த்திருந்தால்? எல்லாம் ஷண நேர முடிவு...
அக்கா திருநாவுக்கரசு அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் நீட் தேர்வை வரவேற்கிறது என்று செய்தி பார்த்ததாக நினைவு...
நீட் என்பதையும் தாண்டி நம் கல்வி முறை மாற வேண்டும் என்பதே நம் கருத்து...கிராமத்துக் குழந்தைகளும் நல்ல கல்வி பெற இந்த அரசு வழிவகுக்காததான் காரணம் என்ன? அரசியலன்றி வேறு என்ன?
படங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்ததற்கு நன்றி.
Deleteகீதா, திருநாவுக்கரசு சொல்வதை நான் கவனிக்கவில்லை. நீட் தேர்வு இருப்பதால் பெரிய அளவில் நஷ்டம் ஏதும் இல்லை. ஆனால் எப்படி இருந்தாலும் நவோதயா பள்ளிகளைக் கட்டாயமாய் வர விடவேண்டும். போராட்டம் என ஆரம்பிக்காமல் இருந்தால் சரி! :(
நீட் தேர்வில் அரசியலின் தாக்கம் சற்று அதிகமே.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா, நீங்கள் சொல்வது சரியே!
Delete//வேடிக்கை என்னன்னா இங்கே எதிர்க்கும் கட்சிகள் பலவும் மற்ற மாநிலங்களில் எதிர்க்கவே இல்லை! அதுவும் ஏன்னு புரியலை! :)//
ReplyDeleteதமிழ்நாட்டில் உள்ள எந்த கட்சி மற்ற மாநிலங்களில் உள்ளது, காங்கிரஸ் தவிர. காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் செத்த பாம்பாக இருக்கிறது. ராகுல் காந்தியை விட்டு வேறு யாராவது தலைமை ஏற்றால்தான் காங்கிரஸ் பிழைக்க முடியும்.
--
Jayakumar
காங்கிரஸ் எப்படியோ போகட்டும். ராகுல் காந்தியோ யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கட்டும். இங்கே எதிர்க்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்ற மாநிலங்களில் ஆதரிக்கின்றன. அதைத் தான் சொல்றேன். முக்கியமாய்க் கம்யூனிஸ்ட்!
Deleteநீட் தேர்வைத்தான் அதிகமா அலசியிருக்கீங்க. காவிரிக் கரைப் படங்கள் நல்லாத்தான் வந்திருக்கு.
ReplyDeleteபோராடற அரசியல்வாதிக்கு பள்ளி, கல்லூரி சொந்தமா இருக்கா, அப்படின்னா அதில் ஹிந்தி உண்டா? இல்லை, அது பொறியியற் அல்லது மருத்துவக் கல்லூரின்னா, ஏழைகளுக்கு ஓசில சீட் கொடுக்கறாங்களா? இல்லைனா, அவங்களை முதல்ல போராட்டக் களத்துலேர்ந்து விலகச் சொல்லணும். அப்படிச் செய்தாலே எல்லாக் கட்சிகளும் இந்தப் போராட்டங்களை நடத்த முடியாது.
நம் கல்வி முறை (தமிழக) நல்ல, மற்றவர்களோடு போட்டிபோடும் முறையில் இல்லை. அதனால் மற்ற மானிலத்தில் எல்லாம் கல்வி முறை அட்டஹாசமாக இருக்குன்னு அர்த்தம் இல்லை. தமிழகத்துல தேவைக்கு அதிகமாக ஏகப்பட்ட பள்ளிகளும் கல்லூரிகளும், அதிலும் தனியாரிடத்தில் இருப்பதால்தான் அதிக கல்வி பெற்ற மக்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள். மற்றபடி 'நீட்' தேர்விலும் ஃப்ராடு இருக்கின்றன, அதுமட்டுமல்ல, இந்திய அளவில் நடத்தப்படும் பல தேர்வுகளும் (சி.ஏ முதற்கொண்டு) ஃப்ராடுகள் இருக்கின்றன. இதை யாராவது ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வரும்.
வாங்க நெ.த. படங்களைப் பாராட்டினதுக்கு நன்றி. போராடுவோர் அனைவருக்கும் சொந்தமாகப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்றே சொல்கின்றனர். சிபிஎஸ்சி பள்ளிகள் தனியாரைச் சேர்ந்தவை அனைத்திலும் ஹிந்தி கட்டாயமாய் உண்டு. போராட்டக்களத்திலே இருந்து அவர்களை யார் விலகச் சொல்ல முடியும்? அவங்களா போராட்டத்தை நிறுத்தினாலோ விலகினாலோ தான் உண்டு. எல்லாவற்றிலும் கலப்படம் என்பது தான் நமக்குக் கைவந்த கலை ஆயிற்றே.
Delete