இந்த வருஷம் நவராத்திரி கொலு வைக்க முடியாது. இன்று ஆரம்பிக்கும் நவராத்திரி அடுத்த வெள்ளியன்று சரஸ்வதி பூஜை, சனியன்று விஜயதசமியோடு முடிகிறது. சுண்டல் எல்லாம் பண்ண முடியாது என்பதால் நோ சுண்டல் படங்கள்! கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கு! என்றாலும் வேறு வழியில்லை. போன வருஷத்துப் பதிவுகளையே மீள் பதிவாகப் போட்டு வரப் போகிறேன். இன்று முதல்நாளைக்கான பதிவு.
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாக நினைத்து வழிபட வேண்டும். துர்கதியிலிருந்து நம்மை நற்கதிக்கு மாற்றும் வல்லமை கொண்டவள் துர்கை! இன்றைய தினம் 2 வயதுப் பெண் குழந்தையை பாலையாக நினைத்து வழிபட வேண்டும்.
பாலாம்பிகா க்கான பட முடிவு
ஒரு சிலர் குமாரியாகவும் வழிபடுவார்கள். இன்றைய தேவி சைலபுத்ரி ஆவாள். இவள் தான் மலைமகள் என அழைக்கப்படும் பார்வதி தேவி ஆவாள். பவானி, பர்வத குமாரி என்றெல்லாம் அழைக்கப்படுபவள் இவளே. வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஈசன் ஆடிய ஆனந்த தாண்டவத்தின் ரிஷிமண்டலத்தில் தோன்றியவள் இவள்.
சைலபுத்ரி க்கான பட முடிவு
நவராத்திரி முதல்நாளன்று அரிசி மாவினால் பொட்டுக் கோலம் போடவேண்டும். வில்வ மலர்கள் விசேஷம் என்றாலும் மல்லிகை, சிவப்பு அரளி போன்றவையும் உகந்ததே! இன்று காலை வழிபாட்டின்போது வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். மாலை பாசிப்பயறுச் சுண்டல் இனிப்பு, காரம் இரண்டும் செய்யலாம். அல்லது வெண் மொச்சைச் சுண்டல் செய்யலாம்.
வெண் பொங்கலுக்கு ஒரு கிண்ணம் பச்சரிசியும், கால் கிண்ணம் பாசிப்பருப்பையும் நன்கு வாசனை வர வறுக்கவும். குக்கரில் வைப்பதென்றால் களைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று கிண்ணம் நீர் ஊற்றிக் குழைய வேக வைக்கவும். நேரடியாகக் கிளறுவதானால் உருளி அல்லது வெண்கலப்பானை என்றால் நல்லது. முதலில் கொஞ்சம் நெய்யும், பாலுமாகச் சேர்த்துக் கொண்டு பால் 200 கிராம் தாராளமாக எடுத்துக்கலாம். அதில் பாசிப்பருப்பைக் களைந்து போட்டு வேக வைத்துக் கொண்டு பின்னர் பாசிப்பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அரிசியைக் களைந்து போட்டு தேவையான நீர், மற்றும் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கிளறவேண்டும். அரிசியும் பருப்பும் குழைந்து வந்ததும், பக்கத்தில் ஓர் வாணலியில் அரைக்கிண்ணம் நெய்யைக் காய வைத்து அதில் மிளகு, ஜீரகம் முழுதாகப் போட்டுக் கருகப்பிலை, இஞ்சி, மஞ்சள் தூள் (தேவையானால்) சேர்க்கவும். பின் அந்த நெய்யோடு பொங்கலில் கொட்டி, தேவையான உப்புச் சேர்த்துக் கிளறவும். நெய் தேவையானால் பார்த்துக் கொண்டு விடவும். இம்முறையில் வெண்பொங்கல் நல்ல மணமாக இருக்கும். வெண்பொங்கலுக்குப் பாலா என்பவர்கள் ஒரு முறை விட்டுத் தான் பாருங்களேன். அப்புறமாப் பால் விட்டே வெண்பொங்கல் செய்வீர்கள். முந்திரிப்பருப்பு தேவையானால் போடலாம்.
குக்கரில் என்றால் நன்கு குழைய வெந்ததும் வெளியே எடுத்துக் கடாயில் நெய்யையும் பாலையும் சேர்த்து ஊற்றிக் கொண்டு குழைந்த பொங்கலை அதில் சேர்த்து உப்புப் போட்டுக் கிளறவும். இன்னொரு கடாயில் கொஞ்சமாக நெய்யை ஊற்றிக் கொண்டு முந்திரிப்பருப்புச் சேர்த்தால் முதலில் அதை வறுத்து எடுத்துக் கொண்டு பின்னர் மேலே சொன்னமாதிரி மிளகு, ஜீரகம், கருகப்பிலை, இஞ்சி சேர்த்துக் கொள்ளவும். தாளிதத்தைப் பொங்கலில் சேர்க்கவும். குக்கரில் பொங்கல் செய்தால் நெய்யோ, பாலோ கூடச் சேர்க்க வேண்டி வரும். கொஞ்சம் காய்ந்தாற்போல் பொங்கல் இருக்கும். வறண்டு இருக்கும். ஆகையால் நெய்யும், பாலும் நிறையச் சேர்த்தால் தளதளவென்று வரும்.
மொச்சையை முதல் நாளே ஊறப் போடவும். மறுநாள் மாலை அதை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும். தாளிக்கக் கடுகு, மிவத்தல், பெருங்காயம், கருகப்பிலை, தேங்காய்த் துருவல் ஆகியவை தேவை.
வேக வைத்த மொச்சையை நீரை வடித்துக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்துக் கொள்ளவும், மி.வத்தல் ஒன்றிரண்டு போட்டுக் கொண்டு, கருகப்பிலை சேர்த்து வேக வைத்த மொச்சையைப் போட்டு வதக்கவும். பெருங்காயப் பவுடர் எனில் அதை எண்ணெயிலேயே போடலாம். பெருங்காயம் கட்டி எனில் நீரில் ஊற வைத்துக் கொண்டு ஜலத்தை வதக்கும்போது சேர்த்துக் கொண்டு தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கிளறவும். இதற்கு மி,வத்தல், கொத்துமல்லி விதையை வறுத்துப் பெருங்காயத்தோடு சேர்த்துப் பொடி செய்து வைத்துக் கொண்டும் போடலாம் ஆனால் ஒரு நாள் பண்ணியது மீதம் இருந்தால் மறுநாள் சுண்டலுக்கான நிவேதனத்தில் ஏற்கெனவே சாப்பிட்டதில் மீதத்தைப் பயன்படுத்த முடியாது. ஆகையால் நான் மி.வத்தலே போட்டு விடுவேன். அவரவர் வசதிப்படி செய்து கொள்ளவும்.'
நவராத்திரிக்கான பதிவே இல்லாமல் இருக்க வேண்டாம் என்று திடீரெனத் தோன்றிய எண்ணத்தினால் இந்தப் பதிவு கொஞ்சம் தாமதமாக வருது. நாளைய தினத்துக்கான பதிவு இன்று மாலையே வரும்.

Why no sundal nevidhyam? I thought only no proper kolu with kalasam.MIL blessed you with Durga now!! Is sami neveithyam and regular prayers forbidden for a year? Malaya paksham is -pithru vandhanam followed by Devi upasakam thane? I make whatever my MIL liked as a part of the prasadham thinking of her and offer on her behalf as she is our guarding angel as well.
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, சுண்டல் உங்களை இங்கே வர வைச்சிருக்கு பாருங்க! :) கொலு இல்லை, ஆகையால் வருகை குறைவாக இருக்கும். அவங்க வீட்டுக்கு அழைப்பவர்களே வருவார்கள்! நான் வருபவர்களுக்கு மட்டும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுக்க எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கேன். சுந்தர காண்டம் நவாஹ பாராயணம் பண்ணுவதால் தினம் ஒரு நிவேதனம் உண்டு. தினம் தினம் சுவாமிக்கு விளக்கேற்றிக் காலையில் பால், காஃபியிலே இருந்து மத்தியானம் சாதம், பருப்பு, நெய், சாயந்திரம் மறுபடி பால், பழம்னு சுவாமிக்குக் கொடுத்துட்டே தான் இருப்பேன். :) பண்டிகை நாட்களில் முறைப்படி எல்லாம் செய்யாட்டியும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நிவேதனம் உண்டு. :) இன்னிக்கு சுந்தரகாண்டம் முதல்நாளுக்குச் சர்க்கரைப் பொங்கல்! இப்போத் தான் சாப்பிட்டு வந்தேன். :)
Deleteசாமி நிவேதனமோ தினசரி ஸ்லோகங்கள் செய்வதோ, சிவபூஜை பழக்கம் இருந்தால் அதுவே எதுவும் ஒரு வருஷத்துக்குத் தடை இல்லை. குல தெய்வம் கோயிலுக்குப் போக, அபிஷேஹ ஆராதனைகள் செய்ய, மாவிளக்குப் போட, குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேற்றத் தடை! ஆகம ரீதியில் நடக்கும் கோயில்கள், கொடிமரம் உள்ள கோயில்களுக்குச் செல்லத் தடை! அது கூட என் மைத்துனர், ஓர்ப்படி போகின்றார்கள். நாங்கள் மூத்தவர்கள் என்பதாலும் முக்கியக் கர்த்தாக்கள் என்பதாலும் போவதில்லை! :)
Deleteதினசரி ஸ்லோகங்கள் சொல்வது, "செய்வது" என வந்திருக்கு! சிவபூஜை பழக்கம் இருந்தால் "அதுவும்" என்பது அதுவே என வந்திருக்கு! :)))) நம்ம ரங்க்ஸ் அன்றாட நித்ய கர்மானுஷ்டானங்களை விடவில்லை. தினம் ஜபம், சஹஸ்ர காயத்ரி எல்லாம் செய்கிறார். முதலில் ஒரு மாசம் வரை நிறுத்தி இருந்தோம்.
DeleteGood! Innikku dakshinamoorthynnu solli enakku pidichcha kondai kadalai (brown) sundal:)) Sappidalam thane?? Illai kattayam upavasam irukkanuma?? naan saptachchu ! fast pannanumonu oru thonal.Sari pappom.
Deleteaasamithan saamippa. saamikku ethu thadai avan kappaththippan theriyama senjakooda. Illaina gnanasambanthar veyuru tholi padi solliiruppaara? :))
Deleteநவராத்திரி விவரங்கள் நன்று தொடர்கிறேன்.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி! நன்றி.
Deleteநல்ல விவரங்கள்! நவராத்திரி விழா வாழ்த்துகள்!!! எல்லோருக்கும் நல்லது நடந்து இன்பம் பொங்கித் தழைக்கட்டும் அந்த அன்னையின் அருளால்! இங்கு சென்னையில் உலாவை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. வீட்டருகில் இருக்கும் அம்மன் கோயில்களில் எல்லாம் கொலு வைத்திருக்கிறார்கள். அழகாக இருக்கிறது.
ReplyDeleteகீதா
நன்றி கீதா. உங்க வீட்டில் கொலு வழக்கம் உண்டா? இங்கேயும் கோயில்களில் கொலு வைக்கிறார்கள். கொடிமரம் தாண்டின்னாப் போக முடியாது! ஏற்கெனவே காவிரி புஷ்கரக் கூட்டம் வேறே! இப்போக் கொலுவுக்கான கூட்டம் வேறே! :) காய்கறி விலையும் இப்போச் சென்னையை விட இங்கே அதிகம்!
Deleteவந்தேன், படித்தேன்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ஒண்ணும் சொல்லலையா? வருஷா வருஷம் படிச்சுப் படிச்சு அலுத்திருக்கும்! :)
Deleteமுந்தைய பதிவு படித்துவிட்டேன். இன்னும் கருத்து எழுதவில்லை. (பயணம்)
ReplyDeleteநீங்கள் படம் போடாததால், இதுவரை செய்திராத பாலில் வெண்பொங்கல் செய்முறை எங்கள்பிளாக்குக்கு செய்துபார்த்துவிட்டு நன்னாயிருந்தால் அனுப்புகிறேன். எங்கடா சுண்டலைக் காணோம் என்று பார்த்தால், இந்தவருடம் உங்களுக்கு நவராத்திரி கிடையாதோ?
வாங்க நெ.த. மதுரை, திருநெல்வேலிப் பக்கம் பொங்கல் என்றாலே பால் சேர்க்காமல் பண்ண மாட்டாங்களே! வெண் பொங்கல் நான் ஸ்கூல் படிக்கிறச்சே ஸ்கூலுக்கு எல்லாம் எடுத்துண்டு போயிருக்கேன். சுண்டல் தான் இல்லை! :) இந்த வருஷம் எல்லோரும் சுண்டல் தான் கேட்கிறாங்க! ஹிஹிஹிஹி! ஒரு நாளைக்குச் செய்துட்டுப் படம் போடறேன்.
Deleteகுக்கரில் பொங்கல் வைத்தால் பாலை அப்புறமாச் சேர்ப்பதே நன்று. சில சமயங்களில் குக்கருக்குள்ளேயே பொங்கி வழிந்து எல்லாம் வீணாகி விடும்! :)
DeleteI appreciate your sincerity in answering. குக்கரில் பாலோடு வைக்கமாட்டேன், சொன்னதற்கு நன்றி. பாசிப்பருப்பு தளிகைப் பண்ணும்போதெல்லாம் குக்கரில் பொங்கி வழிகிறதே, அதற்கு வழி இருக்கா?
Deleteபாசிப்பருப்பு ஒரு கிண்ணம் எனில் களைந்த பின்னர் விரற்கடை அளவு நீரில் இருக்குமாறு வையுங்க! தண்ணீர் அதிகமானால் பொங்கி வழிஞ்சிருக்கும். தண்ணீர் அதிகமாயும் இருந்து குக்கரின் அழுத்தமும் கூட இருந்தால் எல்லாமும் வழிஞ்சுடும். நான் பல வருடங்களாகக் குக்கரில் பருப்பெல்லாம் வேக வைப்பதில்லை. நேரடியாக் கற்சட்டியில் போட்டுடுவேன்! குழைந்து விடும்! சாதம் கூட இப்போக் குக்கரில் வைப்பதில்லை. குக்கர் அவ்வளவு ஆரோக்கியம் இல்லைனு எங்களுக்குப் பல வருஷங்களாக ஓர் எண்ணம். இப்போப் பலரும் சொல்லுகின்றனர்.
Deleteவிழாக்கால பதிவை ரசித்தேன் இந்த வருடம் பதிலாவதுவரும் சுண்டல் இல்லையோ
ReplyDelete