அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத்
தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து
நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற்
படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
அருமையான பாடல் பகிர்வு.
ReplyDeleteநன்றி கோமதி அரசு!
Deleteமகாகவிக்கு மகத்தான அஞ்சலியே...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteநினைவூட்டியதற்கு நன்றி.
ReplyDeleteநல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது
படிப்பு வளருது;பாவம் தொலையுது
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளி!
அப்படியாவது பாரதி பிறந்த தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் வரட்டும்.... வெரி ஆப்ட்...துரை சார்..
Delete..
கீதா
நன்றி அப்பாதுரை! இதைத் தான் பகிர நினைத்தேன். ஆனால் அப்புறமா என்னமோ இந்தப் பாடலைப் பகிர்ந்தேன்!
Deleteநன்றி துளசிதரன்.
Deleteகாலை எழுந்தவுடன் பாரதியையும் தொடர்ந்து உங்களையும் தான் நினைத்தேன் :-)))
ReplyDeleteநன்றி மிகிமா.
Deleteஎன்ன ரங்க்ஸ் காலையிலே காபி லேட்டாயிடுத்துன்னு கோவிச்சுண்டாரா? எத்தனையோ பாடல் இருக்க அச்சமில்லை பாட்டை பாடுகிறீர்கள்?
ReplyDeleteஅல்லது எந்த நீதிமன்றம் என்ன சொன்னால் என்ன, நீட்டுக்கு எதிராக போராடுவோம் என்பவர்களுக்கு சப்போர்ட் கொடுக்கிறீர்களா?
அல்லது நீதி மன்ற அவமதிப்பு வழக்கானாலும் சரி நாங்கள் ஸ்டிரைக் செய்வோம் என்று ஸ்டிரைக் செய்யும் அரசு ஊழியர்களுக்கு எழுச்சியூட்டுகிறீர்களா?
தெளிவு படுத்தினால் கொஞ்சம் நன்றாக இருக்கும்!!
--
Jayakumar
வாங்க ஜேகே அண்ணா, எங்க வீட்டில் காஃபியோ, டிஃபனோ, சாப்பாடோ தாமதம் ஆகும் என்பதற்கான வாய்ப்பே இல்லை! காஃபி குடிக்க வரவங்களோ, டிஃபன் சாப்பிட வரவங்களோ, சாப்பிட வரவங்களோ தாமதமாய் வந்தால் தான் உண்டு! மற்றபடி நான் நீட்டுக்கு எதிராகவோ அல்லது நீதிமன்ற அவமதிப்புக்கு ஆதரவாகவோ போராடும் வழக்கமோ எண்ணமோ இல்லை! :)
Deleteநல்ல பாடல்கள்...பகிர்வு...
ReplyDeleteநன்றி துளசிதரன்!
Deleteஅச்சமில்லை என்று பாடிய பாரதி பிரிட்டீஷாருக்கு அஞ்சித்தானே புதுவை சென்று ஒளிந்து கொண்டார் பாரதியின் நினைவுகளில் என்று நான் ஒரு பதிவு 2014 ல் எழுதி இருந்தேன்
ReplyDeleteநன்றி ஜிஎம்பி சார்.
Deleteபாரதியின் நினைவுகளில் நான் எழுதிய பதிவின் சுட்டி http://gmbat1649.blogspot.com/2014/09/blog-post_10.html
ReplyDeleteஉங்க பதிவைப் படிச்சிருக்கேன்!
Deleteமறுபடி மிஸ்ஸிங்!
ReplyDeleteஎன்னனு தெரியலையே! :( ஒரு சிலர் சொல்றாங்க! ஏன் மெயில் ஐடிக்கு அனுப்ப மாட்டேங்கறீங்க? :)
Deleteபாரதியைச் சந்தித்ததைப் பற்றி நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதியிருக்கிறார், அவரிடம் எவ்வளவு ஆவேசமாகவும் விரைவாகவும் கவி வரும் என்று. முடிந்தால் அதை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். பாரதி ஒரு யுக புருஷன். 'சாதி மத' வேறுபாடுகளைக் களையவேண்டும் என்று எண்ணியவன். அவன் பாடல்கள் பல்லாயிரக்கணக்கானவரிடம் விடுதலை வேட்கையை உண்டாக்கின. அவனை எப்போதும் நினைவுகூறுவதற்கு உங்களுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteயுக புருஷர்கள் எல்லோரும், தங்கள் அளவில் கடுமையாக கஷ்டப்பட்டவர்கள், தங்கள் திறமையைக் காசாக்கி தாங்கள் அனுபவிக்கத் தெரியாதவர்கள், பெரும்பாலும் சமூக ஆதரவை இழந்தவர்கள். இதற்கு விதிவிலக்காக ஓரிரண்டுபேர் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இறந்தபின்னும் இறவாப் பெருமை பெற்றவர்கள் அவர்கள்.
நாமக்கல் கவிஞரோட அந்தக் கட்டுரையைப் படிச்சிருக்கேன். அநேகமா பாரதி குறித்த அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கேன்! இருக்கும்வரை கஷ்டப்பட்டார். இறந்த பின்னர் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். அவரின் இளைய மகள் சகுந்தலா பாரதியை என் சித்தப்பா வீட்டில் பல முறை பார்த்திருக்கேன். என்னமோ பாவமாக இருக்கும்! :)
Deleteநல்லதோர் அஞ்சலி.....
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteபொருத்தமான நாளில் நினைவுகூர்ந்த விதம் அருமை.
ReplyDeleteநன்றி முனைவர் ஐயா!
Deleteஅருமை
ReplyDeleteநன்றி மொஹமது!
Delete