எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 25, 2017

நவராத்திரி ஆறாம் நாளைக்கான தகவல்கள்!

இன்றைய தேவியைக் காத்யாயினி என்றும் அழைப்பார்கள். மஹேஸ்வரி என்றும் சொல்கின்றனர். பாம்பாசனத்தில் வீற்றிருக்கும் சண்டிகாவாகவும், ரக்த பீஜனை வதம் செய்த அன்னையாகவும் பாவிப்பது உண்டு. உலகாளும் மஹேஸ்வரியும் இவளே. இன்றைய  தினம் ஏழு வயதுப் பெண் குழந்தையைச் "சண்டிகா"வாகப் பாவித்து வழிபடுதல் வேண்டும்.

காளிகா க்கான பட முடிவு
காளிகா க்கான பட முடிவு


செந்தாமரை மலர்கள், பவளமல்லி, செம்பருத்தி மலர்கள், ரோஜா ஆகிய மலர்களால் அம்பிகையை வழிபடலாம். தும்பை இலையும் மிகவும் சிலாக்கியம். சிலர் குமாரியின் பெயரை காளிகா என்றும் சொல்லி வழிபடுவார்கள்.

உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். இவளுக்கான தோத்திரம்

“காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ”

என்பதாகும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி. இவளை வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை ஆகும். நவராத்திரியில் புதன்கிழமை இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார். பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, ஈசன் ஆடிய ஆட்டம் முனி தாண்டவம். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவளே காத்யாயனி ஆவாள்.

இன்றைய கோலம் பாவைகள் அல்லது தேவியின் திருநாமத்தைப் பருப்பு வகைகளால் எழுதியோ மஞ்சள் பொடி கலந்த கடலைமாவினால் அன்னையின் திருநாமத்தை எழுதியோ வைக்கலாம். காலை நிவேதனமாகத் தேங்காய்ச் சாதம், தேங்காய்ப் பால்ப் பாயசம் செய்யலாம். மாலை பாசிப்பருப்புச் சுண்டல் செய்யலாம். பாசிப்பருப்பை நன்கு கழுவிக் கொண்டு இரண்டு, மூன்று மணி நேரம் ஊற விடவும். பின்னர் ஒரு வாணலியில் நீரை ஊற்றிக் கொண்டு நன்கு கொதிக்கவிடவும். ஊறிய பருப்பை நீரை வடிகட்டி அதில் போட்டு ஒரு கொதி விட்டு உடனே உப்பைச் சேர்த்துக் கிளறிவிட்டுத் தட்டைப் போட்டு மூடி விட்டு அடுப்பை அணைக்கவும். அந்தச் சூட்டோடு அரை மணி நேரம் வைக்கவும். பின்பு நீரை வடிகட்டவும். பாசிப்பருப்பு கையால் தொட்டால் நசுங்கும் பதம் வந்திருக்கும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கருகப்பிலை போட்டு வதக்கிப் பின்னர் வடிகட்டிய பாசிப்பருப்பை அதில் சேர்க்கவும். நன்கு கிளறி ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடியை எப்போதும் போல் சேர்க்கவும்.  நன்கு கிளறியதும் தேங்காய்த் துருவலும் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லி தூவவும். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழியலாம். வெள்ளரிக்காய், மாங்காய் கிடைத்தால் துருவியோ பொடியாக நறுக்கியோ சேர்க்கலாம்.  பின்னர் கீழே இறக்கி வைத்து விநியோகம் செய்யவும்.
சண்டிகா க்கான பட முடிவு


நமஸ்கார ஸ்லோகங்கள்

17. யா தேவீ ஸர்வ பூதேஷூ ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
ஸ்ம்ருதி என்றால் இந்த இடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி வேதங்களை நினைவு கூருதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல், நினைவு, சிந்தனை, யோசித்துப் பாகுபாடு அறிந்து புரிதல் என எடுத்துக் கொண்டால் நல்லது. அத்தகையதொரு நல்ல நினைவு நம்மிடம் தேவை அல்லவா?? தீயவற்றையே நினைத்தால் மனம் கெடுவதோடு மட்டுமல்லாமல், உடல் நலமும் கெட்டுப் போகுமே! ஆகவே நல்ல சிந்தனையை, நல்ல புத்தியை, நல்லவைகளையே நினைக்கும் மனதைக் கொடுப்பவள் தேவியே. இப்படி அனைவர் மனதிலும் சிந்தனை உருவில் , ஸ்ம்ருதியாக உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

18. யா தேவீ ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நம்ஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
தயை= கருணை, இரக்கம், பரிவு. இங்கே அனைத்துமே பொருந்தும். சகல ஜீவராசிகளிடத்திலும் கருணை காட்ட வேண்டும். பரிவு காட்ட வேண்டும். எளியோரிடம் இரக்கமும் பரிவும் இருக்க வேண்டும். இந்த தயை அனைவரிடத்திலும் இருந்தாலே நல்லது அல்லவா?? தயை உருவில் அனைவரிடத்திலும் உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

19. யா தேவீ ஸர்வ பூதேஷூ துஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
துஷ்டி=திருப்தி, சந்தோஷம். மனதில் போதுமென்ற எண்ணம் இருந்தாலே சந்தோஷம் வரும் அல்லவா?? இந்த உலகைப் படைத்த அன்னை உலகிலே மற்ற அனைத்து ஜீவராசிகளையும் மட்டுமல்லாமல், நாம் உண்ணக் கூடிய உணவாகக் காய், கனிகள் என அனைத்தையும் படைத்திருக்கின்றாள். ஒரு செடியில் இருந்து பூவைப் பறித்தால் மேலும், மேலும் பூக்க வேண்டும், பறிக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. காய்கள் பறித்தாலும், கனிகள் பறித்தாலும் அவ்வாறே. பசு மாடு பால் கொடுக்கின்றது. நாம் கொடுப்பதோ வைக்கோலும், தவிடுமே. மாடு அதிலேயே திருப்தி அடைகின்றது. கறந்த பாலைத் திரும்பக் கொடு என்னிடம் என்று மாடு கேட்க ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும்?? பறித்த காய், கனிகளைத் திரும்பக் கொடு என எந்தச் செடியாவது கேட்கின்றதா?? இல்லையே? நமக்கு எந்த விதமான மறுப்பும் இல்லாமல் நம் தேவைக்கு உதவும் இந்தச் செடி, கொடிகளையும், மிருகங்களையும், பறவைகளையும் பார்த்தாவது நமக்குப் போதுமென்ற மனம் வருகின்றதா என்றால் வரவில்லையே?? இந்தப் போதுமென்ற மனத்தைக் கொடுக்கும் தேவிக்கு, அந்த மனமாக உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இதாவது கொடுப்போம். ஆனால் போதுமென்று சொல்லாமல், மேலும் மேலும் அன்னைக்கு நமஸ்கரிப்போமே!

14 comments:

  1. ஆறாம்நாள் விபரங்கள் நன்று.
    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. தெரியாதன அறிந்துகொண்டேன். தேங்காய் சாதமும், தேங்காய் பால் பாயசமும், பாசிப்பருப்புச் சுண்டலும் யாரேனும் கொடுத்தால் ஆவலா வாங்கிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா, இங்கேயும் இந்த வருஷம் யாரானும் கொடுப்பாங்களானு தான்! ஆனால் நேத்திக்கும் கடலைப்பருப்புச் சுண்டல்! ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்! :) நல்லவேளையா ஆதி வெங்கட் வேர்க்கடலைச் சுண்டல் கொடுத்தாங்க! :)

      Delete
  3. சண்டிகா, காளிகா அறிந்தேன். அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா நன்றி.

      Delete
  4. இல்லைனா, நிறைய வீடுகளுக்கு மாலை 4.30லிருந்து விசிட் அடிக்கும் சிலர், எல்லா விசிட்டும் முடிந்தபின்பு, எங்கள் வீட்டுக்கு விசிட் அடித்து, கலெக்ஷனில் பாதியைத் தந்துவிட்டுச் செல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் இருந்திருந்தால் ஓரளவுக்கு அந்த மாதிரிப் போக வேண்டி இருக்கும். :) கலெக்‌ஷன் எல்லாம் வீட்டுக்கே வரும்! :)

      Delete
  5. மிக அருமையான தேவி சிலை

    ReplyDelete
  6. மனத்துக்கிசைந்த மணாளியை அடைய யாரை உபாஸிக்க வேண்டும்? காலம் மாறுகிறது!

    ReplyDelete
    Replies
    1. இருக்கு, இருக்கு, இருக்கேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! சங்கல்பம் செய்து கொண்டு தினம் ஜபிக்கணும்! ஆனால் உங்களுக்கு எதுக்கு? பாஸுக்குத் தொலைபேசிப் பேசவா?

      Delete
  7. மிக அருமை.. ஒவ்வொருநாளும் வரோணும் என எண்ணி.. இன்றுதான் வர முடிஞ்சுது.. அப்போ நீங்க வியாழன் ஆரம்பம் எனச் சொல்லிட்டு.. அதிராவோடு சேர்ந்து புதன் கிழமையே ஆரம்பிச்சிட்டீங்கபோல அதனாலதான்.. திங்கள் 6ம் நாள்... விஜயதசமி எப்போ? வெள்ளி என்கிறார்கள் சிலர்.. சனி என்கிறார்கள் சிலர்:).. பங்குபோல இருக்கு இம்முறை..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நான் வியாழனன்றைக்குத் தான் நவராத்திரிக் கணக்கு வைச்சுண்டிருக்கேன். இங்கே எல்லோரும் அப்படித் தான். பதிவுகள் முதல்நாளே வருகின்றன. அப்போத்தானே மறுநாளைக்கான வேலைகள், ஆராதிக்கும் விபரங்கள் தெரிஞ்சுக்க முடியும்! சனிக்கிழமை தான் விஜயதசமி! பங்கெல்லாம் இங்கே இல்லை! :)

      Delete