ரயில் பயணங்களில் மூன்று படுக்கைகள் கொண்ட பெட்டியில் பயணம் எல்லோருமே செய்திருப்போம். அப்போ நமக்குக் கீழ்ப்படுக்கை (லோயர் பர்த்) கிடைச்சிருக்கேனு சந்தோஷப்பட்டாலும் நடுவில் உள்ளவர் பல சமயங்களிலும் சீக்கிரம் படுக்கணும்னு அவரோட படுக்கையைப் போடச் சொல்லிப் போட்டுக் கொண்டு படுத்துடுவார். நமக்கு உட்கார்ந்து பார்த்துக் கொண்டு வரணும்னு ஆசை இருந்தாலும் உட்கார முடியாது! முதுகை வளைத்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டு ஒரு மாதிரி தலை குனிந்தாசனா நிலையில் அமர்ந்தே வரணும். இல்லைனா வேறே வழியில்லாமல் நாமளும் படுத்துடணும்! ஆனால் இப்போ அரசுச் சுற்றறிக்கை மூலம் இதுக்கு முன்னாடி இரவு ஒன்பது மணிக்கு அவரவர் படுக்கை இருக்கைக்குப் போய்ப் படுக்கலாம் என்று இருந்தது இப்போது பத்து மணி ஆக்கி இருக்காங்க. இதனால் நன்மையும் உண்டு! தீமையும் உண்டு. அதோடு இல்லாமல் காலை ஆறு மணிக்கு மேல் யாரும் படுக்கக் கூடாது என்றும் சொல்கின்றனர். எட்டு மணி வரைக்கும் கீழே இறங்காதவங்களை என்ன செய்யறது?
கீழ்ப்படுக்கையில் இருப்பவருக்குப் படுக்கணும்னு தோணிப் படுக்க நினைக்கலாம். ஆனால் அவர் படுக்க முடியாது! இன்னும் இருவர் உட்கார இடம் கொடுக்கணுமே! இந்தப் படுக்கை வசதி வருவதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னர், முன்னெல்லாம் நான்கு பேர் உட்கார முன்பதிவு செய்கையில் ஓரத்தில் உள்ள இடத்தில் அமர்பவர் மேலே உள்ள படுக்கை இருக்கையை முன்பதிவு செய்திருப்பார். அவர் மேலே படுக்கப் போனதும் கீழே காலி ஆகும் அந்த இருக்கையை அப்போதைய காத்திருப்புப் பட்டியலின் வரிசைப்படி யாருக்கானும் கொடுப்பாங்க! ஆக அமர்ந்திருக்கும் மற்ற மூவரும் படுக்க முடியாது. உட்கார்ந்து கொண்டே தான் வரணும். அது மாறி இப்போப் படுக்கை இருக்கை வசதி என்பது அனைவருக்கும் என்று வந்ததும் இரவு ஒன்பது மணிக்குப் படுக்கப் போகலாம் என்றிருந்தது இப்போ இரவு பத்து மணி ஆகி இருக்கிறது. நீண்ட தூரப் பிரயாணம் எனில் மத்தியானங்களில் கூடப் படுக்கை இருக்கையைப் போட்டுக் கொண்டு படுப்பவர்கள் பாடு என்ன ஆகும்? தெரியலை! மேல் படுக்கையைப் பதிவு செய்திருப்பவருக்கு மட்டும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் பாட்டுக்கு எப்போ வேணா மேலே போய்ப் படுக்கலாம். கீழே இறங்கி வரலாம். கீழ்ப்படுக்கைக்காரருக்கும், நடுப் படுக்கைக்காரருக்கும் தான் பிரச்னையே! கீழே உள்ளவர் படுக்கணும்னு நினைச்சால் படுக்க முடியாது! நடுவில் உள்ளவர் தன் படுக்கையைப் போட நினைச்சாப்போட முடியாது!
ஆனால் அந்த அளவுக்கெல்லாம் இந்தச் சட்டத்தைப் பின்பற்றுபவர்கள் உண்டானு தெரியலை! ஒரு முறை நாங்க ராஜஸ்தானிலிருந்து குஜராத் மாற்றலில் போகும்போது முதல் வகுப்பு எங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடத்தில் போட்டிருந்தது. அதில் ஒருத்தர் முழுக்க முழுக்கத் தன்னோட பெர்த்தில் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டிருந்தார். அதில் நானோ அல்லது எங்கள் பெண்ணோ அமரவேண்டும். எதிர் இருக்கைக்காரர் எழுந்து ஒருத்தருக்கு இடம் கொடுத்து விட்டார். இன்னொருத்தருக்கு இடம் கொடுக்காமல் படுத்திருந்தவர் அசையவே இல்லை! மணி காலை பத்தரை தான்! ஆனால் அவரோ இது என்னோட பெர்த்! இதுக்கும் சேர்த்துத் தான் நான் பணம் கட்டி இருக்கேன் என்று அவரோட வாதம்! அப்போ நாங்க என்ன செய்யறது? நீ எதிர்த்தாப்போல் இருக்கும் இடத்தில் உட்காரு! இல்லைனா எங்கேயானும் இடம் இருக்கானு போய்ப் பாரு! கொஞ்சமும் ஈரமில்லாமல் வந்தன வார்த்தைகள். அப்புறமா டிடிஆரைக் கூப்பிட்டோம். அவர் விஷயம் தெரிந்து கொண்டு தன்னுடன் கொண்டு வந்திருந்த ரயில்வே கைடில் உள்ள நிபந்தனைகளை அவருக்குப் படித்துக் காட்டிப் பகல் நேரத்தில் அதிலே மூவர் உட்காரலாம் என்றும் இரவில் இருவர் படுக்கலாம் என்றும் இருப்பதை எடுத்துக் காட்டி இப்போ எழுந்திருக்கலைனா அபராதம் போடுவேன் என நாசுக்காகச் சுட்டிக் காட்டினதும் எழுந்தார். எனக்கு இடம் கொடுத்தார். அப்படியும் சாமான்களை வைக்க விடவில்லை. நட்ட நடுவில் சாமான்களை வைத்து விட்டு உட்கார்ந்தேன்.
எல்லோரும் இப்போச் சொல்லி இருப்பது ஏற்கெனவே இருந்த சட்டம்தான் இப்போது ஒரு மணி நேரம் தான் பின்னுக்குத் தள்ளி இருக்காங்க என்கிறார்கள். என்றாலும் நம் மக்களை நினைத்தால் கவலையாகத் தான் இருக்கு! காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பாங்களா என்பதும் சந்தேகம். நமக்கு அந்த ஜந்தேகம் எல்லாம் இல்லை. நாலு மணிக்கே விபரீதத்துக்கு முழிப்பு வந்துடும். கோணாசனத்தில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் ரகம்! இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் பயணம் எனில் இது எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதும் போகப் போகத் தான் தெரியும். எங்களுக்கு சமீப காலங்களில் ரயில் பயணம் என்பது குறைந்து விட்டது. பெரும்பாலும் விமானப்பயணமோ அல்லது காரிலோ போயிடறோம். எல்லா நேரமும் அப்படிப் போக முடியாதே! நெடுந்தூர ரயில் பயணம் எனில் எப்படினு இனிமேத் தான் பார்க்கணும்! என்ன தொந்திரவு இருந்தாலும் ரயில் பயணத்தின் சுகம் மற்றப் பயணங்களில் வருமா!
படங்களுக்கு நன்றி கூகிளார்
நானும் இது கேள்விப்பட்டதுண்டு... இந்தியாவில்தான் இப்படி ரெயின்கள் இருக்குது போலும். இலங்கையில் இப்படி இல்லை.. புறிம்பான கொம்பார்ட்மென்களே உள்ளன.. படுக்கை வசதி தேவை எனில்.. அதுக்கு பேர்த்... எனும் கொம்பார்ட்மெண்ட் இருக்குது.. அங்கு மேலே - கீழே இரு கட்டில்கள் இருக்கும்.. அட்டாச் பாத்றூம் இருக்கும்... ஒரு செயார் இருக்கும்... மேலே புக் பண்ணியவர் கீழ் கட்டிலை உபயோகிப்பதில்லை.. வேணுமெண்டால் அந்த செயாரில் இருக்கலாம் மற்றும்படி மேலேயே படுத்திருக்க வேண்டியதுதான்.. இந்த கொம்பார்ட்மெண்ட் பூட்டிய ரெயின் இரவில் மட்டுமே ஓடும் என நினைக்கிறேன்..
ReplyDeleteஅடுத்து ஸ்லீப் ரெஸ்ட் என ஒரு கொம்பார்ட்மெண்ட்.. இது நல்ல வசதியாக சீட்டை சரித்துப் போட்டு படுத்திருக்கலாம் பிளேன் போல ஆனா அதைவிட நன்றாக இருக்கும்... அடுத்து மூன்றாம் வகுப்புப் பெட்டி.. இருந்து மட்டுமே பயணம் செய்ய முடியும்.
அதிரா, முதல் போணிக்கு நன்னி! ஸ்விஸ் ரயிலும் ஜெர்மன் ரயிலும் இதை விட மோசம்னு அடிக்கடி அதில் பயணிக்கும் நண்பர் ஒருத்தர் முகநூலில் சொல்லி இருக்கார்.
Delete//நா போனதரம் யுரோப்புக்கு போனபோது...... பாக்கணுமே..... அதுவும் Swiss rail இருக்கே ....." என்றெல்லாம் எவராவது சொன்னால் அவர் தலையிலேயே ”லொட்”டென்று ஒன்று போடுங்கள் அல்லது கமலஹாசனின் ட்வீட் ஒன்றிரண்டைப்படிக்க வையுங்கள்!//
இது அவருடைய முத்தாய்ப்பான பத்தி! எனக்கென்னமோ கமலஹாசன் ட்வீட்டைப் படிக்கும் தண்டனையை விட அவர் தலையிலே லொட்டுனு ஒரு போடு போட்டுடலாம்! :)
நீங்க சொல்வதைப் பார்த்தால் இலங்கையில் ரயில் பயணம் அதிசுகம் எனத் தோன்றுகிறது! பயணிக்க ஆசை தான்! எங்கே! :))))
Deleteவட இந்தியர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு ஆக்கிரமிப்பு செய்வதைப் பற்றி எந்த சட்டமும் இன்னமும் வரவில்லையே?
Deleteவாங்க ஜோதிஜி, முதல் வருகைக்கு நன்றி. வட இந்தியா முழுசும் இல்லைனாலும் பிஹாரில் நிறைய ஆக்கிரமிப்பைப் பார்க்கலாம். அடுத்து மேற்கு வங்கம், குஜராத்! மேற்கு வங்கத்தில் ரயில் பயணம் இல்லைனாலும் நீண்ட தூரப் பயணத்திலும் கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது! குஜராத்தில் பகல் நேர வண்டியில் முன்பதிவு செய்துட்டுப் போனாலும் நம் இருக்கை நமக்கு இல்லை! :( இப்போ எப்படினு தெரியலை!
Delete
Deleteசட்டம் இந்தியா முழுவதற்கும் ஒன்றேதான் ஆனால் என்ன வட இந்தியர்கள் ரயில்வே சட்டங்களை மதிப்பதே இல்லை அதுதான் பிரச்சனை ஜோதிஜி
சட்டங்களை எடுத்துச் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். முக்கியமாய் உ.பி., பிஹாரில்! அதுவும் லாலு ரயில்வே மந்திரியா இருந்தப்போ அந்தப் பக்கம் போயிருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும். யாரும் ரயிலில் பயணச்சீட்டே எடுத்திருக்க மாட்டாங்க! :(
Deleteஆமாம்... இந்த ஆணைகள் குழப்புகின்றன. யார் பின்பற்றுவர் என்றும் தெரியாது. எல்லோரும் லோயர் பெர்த் கேட்கும் காலம் போய் இனி எல்லோரும் அப்பர் பெர்த் கேட்கும் நிலை வரலாம்! இப்போது மேலே ஏறும் ஏணியை ஏதோ மேம்படுத்தி இருக்கிறார்களாமே... ஒரு மடக்கு ஸ்டூல் கொண்டு போனால் இது மாதிரி பிடிவாதக் காரர்கள் இருந்தால் அங்கு திரெதிர் இரண்டு இருக்கைகளுக்கு நடுவினில் நிமிர்த்திப் போட்டு உட்கார்ந்து கொள்ளலாம். அல்லது நீளமான மடக்குப் பலகை! இரண்டு இருக்கைக்கு பாலம் அமைத்து அதை ஒரு படுக்கை ஆக்கி விடலாம்!!!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், என்ன மேம்படுத்தி என்ன! எங்களால் மேலே ஏற முடியாது! மாமாவுக்குக் கழுத்துப் பிரச்னை! என்னால் ஏறவே முடியாது! ஆகவே கீழ்ப் படுக்கை என்பதால் கவலை தான்! :) இல்லைனா நீங்க சொல்றாப்போல் ஆஞ்சநேயர் மாதிரி இருக்கை அமைத்து உட்காரவோ படுக்கவோ செய்யணும்! :)
Deleteஎன்னெனவோ மாற்றங்கள் எதுக்குன்னே புரியலை
ReplyDeleteஎப்படியானும் சட்டதிட்டங்கள் மூலம் கட்டுப்பாடும் ஒழுங்கும் வருமானு பார்ப்பாங்க போல! :)
Deleteமும்பைக்காரர்களுடன் இரயிலில் பயணிப்பது கஷ்டமான காரியம்,
ReplyDeleteமும்பையில் முன்னொரு காலத்தில் (ஹிஹிஹி) தினசரி ரயில் போக்குவரத்தில் பயணம் செய்திருக்கேன். ஆனால் கூட்டம் இல்லாத நேரம்னு சொல்வாங்க! அப்போவே கூட்டம் இருக்கும். இப்போல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது!
Deleteசட்டம் என்ன வேண்டுமானலும் சொல்லட்டும் ஆனால் அருகில் பயணிப்பவர்களின் வயதை கருத்தில் கொண்டு அட்ஜஸ்ட் பண்ணி பயணம் செய்வதே பண்பாடு உள்ளவர்கள் செய்யும் செயல்...அப்படி இல்லாதவர்களுக்கு சட்டம் போட்டாலும் ஒன்றுதான்போடாவிட்டாலும் ஒன்றுதான்
ReplyDeleteவாஸ்தவம் தான்! அருகில் இருப்பவரின் வயதையும் கருத்தில் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் பல இளவயதுக்காரர்களும் தங்களுக்குக் கிடைத்த கீழ்ப்படுக்கை இருக்கையை வயதானவர்களுக்குக் கொடுக்க முன் வருவதில்லை! இது தமிழ்நாடாக இருந்தாலும் சரி, மற்ற மாநிலமானாலும் சரி! மிகச் சிலரே விட்டுத் தருவார்கள்.
Deleteஓ.ஸ்விஸ் ரயில் பற்றி யார் எழுதியது. இரவுப் பயணம் நான் செய்ததில்லை.
ReplyDeleteஇந்திய ரயில்களில் ,நீங்கள் சொல்வது போல கடினம் தான். அழகாகப் பதிந்திருக்கிறீர்கள்.
முகநூல் நண்பர் ஜெயராமன் ரகுநாதன் என்பவர் பதிந்திருந்தார்னு நினைக்கிறேன். நாங்க தொடர்ந்து 3 நாட்கள் கூட ரயிலில் பயணம் செய்திருக்கோம்! :)
Deleteமிக சரியா கணிச்சி இருக்கீங்க கஷ்டம் தான் வேண்டுமென்றே சட்டப்படி சண்டை போடுறவங்களும் வருவாங்க சட்டத்தை மதிக்காதவங்களும் சண்டை போடுவாங்க இதில் குழந்தைகள் நோயாளிகள் என்றால் என்ன செய்வது சொல்வது இதையே சாக்கவும் சொல்லுவாங்க சிலர்
ReplyDeleteஆமாம், குழந்தைகளைச் சாக்காக வைத்துக் கொண்டு கீழ்ப்படுக்கையைக் கேட்பவர்களும் உண்டு! ஆனால் ஏற முடியாதவங்க என்ன செய்ய முடியும்?
Deleteஇந்தச் சட்டம் போட்ட காரணமே எனக்குப் புரியலை. ஆந்திரா தாண்டினாலே, இரயில் பயணிகள் ஒழுங்குமுறை குறைந்துவிடும். நம்ம ஊர்லதான், சட்டத்தை மதிக்கும் எண்ணமே மக்களுக்கு இல்லை.
ReplyDeleteஇரயிலில் உட்கார்ந்துகொண்டு, ஆங்காங்கு ஸ்டேஷனில் கிடைக்கும் உணவைச் சாப்பிட்டுக்கொண்டு, எடுத்துப்போயிருக்கும் உணவையும் சாப்பிடும் சுகம் பஸ் பிரயாணத்தில் வருவதில்லை. இரயில் பயணமே தனிதான். அதிலும் பாசஞ்சர் வண்டினா, (தமிழ்நாட்டுக்குள்ள) இன்னும் சுகம்.