என்னடா, நாம தான் எல்லோருடைய பின்னூட்டங்களையும் வெளியிட்டுத் தானே வரோம்னு நினைச்சால், அப்பாதுரை, அவர்கள் உண்மைகள், பானுமதி வெங்கடேஸ்வரன் இன்னும் சிலர் அவ்வப்போது எங்களோட கருத்து எங்கேனு கேட்டுட்டு இருந்தாங்க! காக்காவும் வரதில்லை! அப்புறமா எங்கே போயிருக்கும்? நான் எப்போதுமே பின்னூட்டங்களை மெயில் மூலமாகவே வெளியிடுகிறேன். பதிவின் பின்னூட்டப் பக்கத்துக்குப் போவதில்லை! இன்னிக்குப் பாருங்க ஶ்ரீராம் கொடுத்திருந்த இம்பொசிஷனிலே ஒண்ணு எங்கேயோ போய் ஒளிஞ்சுக்க அதைத் தேடப் போய் எதையோ தட்டிக் குலுக்கவந்தது பாருங்க கமென்ட் மழை! அசந்துட்டேன்! எல்லாத்தையும் வெளியிட்டாச்சு! இனிமே யாரானும் கமென்ட் காணோம்னா நான் பொறுப்பில்லை! ஏன்னா இப்போ என்ன பண்ணினேன்னு கேட்டா எனக்கே சொல்லத் தெரியாது! தினம் தினம் கமென்ட் மாடரேஷன் பக்கத்திலும், ஸ்பாமிலும் தேடினப்போ வராதது இன்னிக்கு எங்கேருந்தோ வந்து குதிச்சிருக்குங்க! அதனால் திரும்பக் கமென்ட் காணோம்னா இந்த மாதிரி ஏதேனும் நடந்தால் தான்! :)
இங்கே காவேரி புஷ்கரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டமான கூட்டம். நடைபாதைக்கடைகள் சுறுசுறுவென இயங்குகின்றன. மற்ற கடைகளுக்கும் நல்ல வியாபாரம். காய்கள் விலை கொஞ்சம் அதிகம் தான். அதிலும் கோயம்பேடு சந்தையில் காய்கள் விலை மலிவென்று பார்த்தப்போ இங்கே விலை அதிகம் எனக் கோபம் வருது! அவ்வளவு வித்தியாசம் இல்லை. என்றாலும் விலை அதிகம் தான்! சின்ன வெங்காயம் கிலோ 80 ரூபாய் விக்குது! உருளைக்கிழங்கு விலை 25 ரூபாய். சென்னையில் மலிவாக இருக்கும்னு நினைக்கிறேன். எல்லோரும் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க பலத்த எதிர்ப்புக்கு இடையேயும் காவிரியில் தண்ணீர் பத்தாயிரம் கன அடி விட்டு அது வியாழனன்று வந்து சேர்ந்தது. அன்னிக்குத் தான் நம்ம வீட்டுக்கு விருந்தினர்களும் வந்திருந்தாங்க. அவங்கல்லாம் வெள்ளியன்று கிளம்பிப் போனாலும் உடனே படம் எடுத்துப் போட முடியலை. காமிராவில் எடுக்கணும்னு இருந்தேன். காமிரா என்னவோ திறக்கவே இல்லை. அப்புறமா நேத்திக்கு விடாப்பிடியா சோனி சேவை மையம் போய் அதைச் சரி பண்ணிண்டு வந்தாச்சு! ரிப்பேர் செலவுக்குக் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது எடுத்து வைக்கணும்னு முனகிண்டே வந்த ரங்க்ஸுக்கு ஒரு பைசா செலவில்லை! ஆனால் ஆட்டோவுக்குக் கொடுக்கும்படி ஆயிடுச்சு! :)
இன்னிக்குக் காலம்பரப் போய்ப் படம் எடுத்தேன். முதல்லே திறக்கலை! அப்புறமாத் திறந்து எடுத்தேன். டிஸ்ப்ளே சரியில்லையோனு ஒரு எண்ணம். ஆனால் நேத்திக்குக் காமிராவைப் பார்த்த நபர் எல்லாம் சரியா இருக்குனு சொல்லிட்டார். காமிராவில் தேதி, நேரம் இந்திய நேரப்படி வைக்கச் சொன்னா, அவர் அதைச் சரி செய்யவே இல்லை. இன்னிக்குக் காலம்பரப் படம் எடுத்திருக்கேன். அது யு.எஸ். நேரம் காட்டுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)
அஹோபில மடம் ஜீயர் வந்திருக்கிறார். அவர் தலைமையில் யாகங்கள், யக்ஞங்கள் நடைபெறுகின்றன. அவருடன் கூட ஆந்திர மக்களும் நிறைய வந்திருக்காங்க! அதைத் தவிரவும் சாரி சாரியாக மக்கள் கூட்டம். போதாதுக்குப் போன வாரம் தான் இங்கே உறியடி உற்சவம் நடந்தது. அதுக்கு வேறே கூட்டம்! முடிஞ்சா மக்கள் கூட்டத்தையும் படம் எடுக்கணும்! பார்ப்போம்!
இங்கே காவேரி புஷ்கரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டமான கூட்டம். நடைபாதைக்கடைகள் சுறுசுறுவென இயங்குகின்றன. மற்ற கடைகளுக்கும் நல்ல வியாபாரம். காய்கள் விலை கொஞ்சம் அதிகம் தான். அதிலும் கோயம்பேடு சந்தையில் காய்கள் விலை மலிவென்று பார்த்தப்போ இங்கே விலை அதிகம் எனக் கோபம் வருது! அவ்வளவு வித்தியாசம் இல்லை. என்றாலும் விலை அதிகம் தான்! சின்ன வெங்காயம் கிலோ 80 ரூபாய் விக்குது! உருளைக்கிழங்கு விலை 25 ரூபாய். சென்னையில் மலிவாக இருக்கும்னு நினைக்கிறேன். எல்லோரும் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க பலத்த எதிர்ப்புக்கு இடையேயும் காவிரியில் தண்ணீர் பத்தாயிரம் கன அடி விட்டு அது வியாழனன்று வந்து சேர்ந்தது. அன்னிக்குத் தான் நம்ம வீட்டுக்கு விருந்தினர்களும் வந்திருந்தாங்க. அவங்கல்லாம் வெள்ளியன்று கிளம்பிப் போனாலும் உடனே படம் எடுத்துப் போட முடியலை. காமிராவில் எடுக்கணும்னு இருந்தேன். காமிரா என்னவோ திறக்கவே இல்லை. அப்புறமா நேத்திக்கு விடாப்பிடியா சோனி சேவை மையம் போய் அதைச் சரி பண்ணிண்டு வந்தாச்சு! ரிப்பேர் செலவுக்குக் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது எடுத்து வைக்கணும்னு முனகிண்டே வந்த ரங்க்ஸுக்கு ஒரு பைசா செலவில்லை! ஆனால் ஆட்டோவுக்குக் கொடுக்கும்படி ஆயிடுச்சு! :)
இன்னிக்குக் காலம்பரப் போய்ப் படம் எடுத்தேன். முதல்லே திறக்கலை! அப்புறமாத் திறந்து எடுத்தேன். டிஸ்ப்ளே சரியில்லையோனு ஒரு எண்ணம். ஆனால் நேத்திக்குக் காமிராவைப் பார்த்த நபர் எல்லாம் சரியா இருக்குனு சொல்லிட்டார். காமிராவில் தேதி, நேரம் இந்திய நேரப்படி வைக்கச் சொன்னா, அவர் அதைச் சரி செய்யவே இல்லை. இன்னிக்குக் காலம்பரப் படம் எடுத்திருக்கேன். அது யு.எஸ். நேரம் காட்டுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)
இது ஒரு கோணம்
இன்னொரு கோணம்
உ.பி.கோயில். ஜூம் செய்ய நினைச்சு மறந்து விட்டேன்.
தெற்கு கோபுரம்! இதுவும் ஜூம் செய்யாமல் எடுத்தது தான்! அப்போப் பார்த்துப் பேச்சுக்கு ஒருத்தர் வந்துட்டாங்க! நொ.கு.ச.சா. வேறே என்ன!
எல்லாத்தையும் எடுத்துட்டு நம்ம ராமரை எடுக்காமல் முடியுமா? விளக்கை அணைச்சால் படம் தெரியலை. விளக்கைப் போட்டால் இம்மாதிரிப் பிரதிபலிப்பு வலப்பக்கம் அல்லது இடப்பக்கம்! :( இரண்டு விளக்கையும் போட்டால் படம் சரியா வரலை!
கீழ்த்தட்டு விக்ரஹங்கள்!
படங்கள் எல்லாமே அருமையாக வந்துருக்கு.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteரொம்ப சந்தோஷம்.பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி மிகிமா!
Deleteமனுஷங்களுக்குத் தான் ஜெட் லேக்னா, கேமராவுக்குமா?
ReplyDeleteபடங்கள் நல்லாவே வந்திருக்கு. அதுவும் காவிரியில் வெள்ளம் (அதாவது தேங்கியிருந்த வெங்காயச் செடிகள் மிதந்து போவது) பார்க்கவே பரவசமா இருக்கு. நீங்க zoom செய்யாததுனால, மலைக்கோட்டையே தண்ணீர் சூழ இருப்பதுபோல் இருக்கிறது. தாயுமானவர் கோவிலையும் தரிசனம் செய்துகொண்டேன். அரங்கன் கோவிலைச் சுற்றி இன்னும் சோலைகள் இருப்பதுபோல் தெரிகிறதே.
நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால், இப்போதைக்கு ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் தரிசனம் சுலபமல்ல என்று தோன்றுகிறது.
வாங்க நெ.த. நமக்கு எல்லாம் அதிசயமா நடக்கும்! உங்களுக்குத் தெரியலை! படங்களைப் பாராட்டியதுக்கு நன்னிஹை! இன்னும் இங்கே சோலைகள் இருக்கின்றன. எங்க வீட்டிலே கணினி அறைக்கு வெளி ஜன்னலில் பார்த்தால் கிளிக்கூட்டம், மைனாக்கூட்டம், அணில்கள் கூச்சல்னு கேட்டுட்டு இருக்கும். நடு நடுவே செம்போத்து குரல் கொடுக்கும்! குயில்கள் கூவும். அக்காக்குருவிகள் அக்காவைக் கூப்பிடும்!
Deleteசாதாரணமாகவே ஶ்ரீரங்கத்தில் பெரிய ரங்குவைப் பார்ப்பது கஷ்டம்! இப்போக் கூட்டம் அள்ளுது! தெருவில் நடக்க முடியலை! :) பேருந்துகளை நிறுத்திட்டாங்க. இந்த வழியாப் போவதில்லை.
Deleteபடங்கள் நன்றாய் வந்திருக்கின்றன. கேமிரா ரெடியாகி விட்டதா? இனி தூள் பண்ணலாம்! என்ன செய்து கமென்டமழை கொட்டியது? என் மெயில் பாக்சிலும் கமெண்ட் மழை! எங்கே ஒளிந்திருந்தன என்று அறிய ஆவல்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், (அப்பாடா, பெயரைச் சொல்லிட்டேனா!) என்ன செய்து கமென்ட் மழைனு கேட்டால் சொல்லத் தெரியாது! எங்கே இருந்ததுன்னே தெரியலை! செட்டிங்க்ஸில் போய் எதையோ க்ளிக்கினேன். திரும்ப வந்து பார்த்தால் ஒரே கருத்து மழை! :)
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஶ்ரீராம், காமிரா இப்போத் தான் ரெடியா இருக்கு. அதுக்குள்ளே எப்படித் தூள் பண்ணறதாம்? :P:P:P:P:P:P ஹிஹிஹி, இது எப்பூடி இருக்கு?
Delete
ReplyDeleteகீதா மாமி பகவான் காவிரியில் தண்ணிரை விட்டது போல உங்கள் வலைதளத்திலும் கருத்துக்களை திறந்து விட்டு இருக்கிறார் போல....அப்பாடி இனிமே கருத்துக்கள் என் வரவில்லை என்று உங்களின் இன்பாக்ஸை தட்ட வேண்டியது இல்லை
வாங்க அவர்கள் உண்மைகள்! ஆனால் இன்னிக்கும் எங்கேயோ ஒளிஞ்சுட்டு இருந்ததைக் கண்டு பிடிச்சு இப்போத் தான் வெளியிட்டிருக்கேன்! :) நல்லவேளையா ஸ்பாமில் எதுவும் இல்லை! :) இன் பாக்ஸைத் தட்டினாலும் நான் திறப்பேனே! :)
Deleteதொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு நாள் இல்லாவிட்டால் மறுநாள் பார்க்கலாம்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஐயா!
Deleteஅது மணல் வெளியாக இருந்தாலும் சரி, நீரோட்டம் மிகுந்திருந்தாலும் சரி.. வீட்டிலிருந்தே பார்க்கிற மாதிரி காவேரி கண்ணுக்குத் தெரிவதே கொடுப்பினை தான்.
ReplyDeleteஆமாம், எங்க குடியிருப்பு வளாகத்தில் நாங்கள் இருக்கும் தளத்தில் மின் தூக்கியில் ஏறக் காத்திருக்கையில் வெளியே பார்த்தால் காவிரி தெரிவாள்! அந்தப் படமும் எடுத்து ஒரு முறை போட்டிருக்கேன். ஶ்ரீராம் இங்கே வந்தப்போவும் அந்தக் கோணத்திலும் எடுத்திருந்தார்.
Deleteகாவிரி புஷ்கரத்தில் கலந்து கொண்டீர்களா
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, காவிரி புஷ்கரம் கடந்த பத்து நாட்களாகக் கோலாகலமாக நடந்து வருகிறது. எங்க வீட்டுப் பக்கம் இருக்கும் யாகசாலை நிகழ்வுகள் அனைத்துமே எங்களால் கேட்க முடியும்! எனக்குக் கூட்டம் ஒத்துக்காது என்பதால் நான் போகலை! அவர் மட்டும் போய்க் குளித்துவிட்டு வந்தார். ஆனால் இங்கே வீட்டுக்கு அருகே குளிக்க முடியாமல் இன்னும் மேற்கே போக வேண்டி இருந்தது.
Deleteபடங்கள் அழகாக இருக்கிறது. தண்ணீர் நிறைந்திருப்பதே அழகுதான்....
ReplyDeleteநன்றி துளசிதரன்.
Deleteநிஜமாவே தண்ணி தானா? அது யாரது இரண்டாவது படம் ஓரத்துல.. தெர்மகோல் ஷீட்டோட ஓடுற மாதிரி இருக்குதே?
ReplyDeleteவாங்க அப்பாதுரை, ஓடறது நம்ம செல்லூராராகத் தான் இருக்கும்! :)
Deleteவந்தாய் வாழி காவேரி.
ReplyDelete