வெள்ளிக்கிழமை அன்று கூப்பிட்டதில் அந்தத் தொழில் நுட்ப நிபுணர் தான் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாகவும், அவரே என்னைக் கூப்பிடுவதாகவும் சொல்லி எஸ் எம் எஸ் அனுப்பி இருந்தார். ம்ஹூம்! நானும் எத்தனை எத்தனை எஸ் எம் எஸ் அனுப்பி இருக்கேன். திடீர்னு இப்படி ஒரு செய்தி வரவும் அப்பாவியான நம்ம ரங்க்ஸ் மனம் குளிர்ந்து போய், "நான் தான் சொன்னேனே! அவர் கொடுத்துடுவார் பார்!" என்று மகிழ்ந்து போனார்! :( நிச்சயம் வராது என நான் எப்போவோ முடிவு கட்டி விட்டேன். இத்தனைக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு சாமானை எடுத்துச் செல்லுங்க என்றே சொல்லி இருந்தேன். நம்ம தாராளப் பிரபு தான் 2,3 நாட்களில் கொடுத்துடறதாச் சொல்லி இருக்காரே, நம்ம எத்தனை தரம் சாமான்கள் வாங்க அவரிடம் பணம் கொடுத்திருக்கோம். இப்போக் கூட எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்க 5000 ரூ வரை கொடுத்தோமே! அதுக்கெல்லாம் கவலைப்படாமல் இப்போக் கவலைப்படலாமா என்றெல்லாம் எனக்கு எடுத்துச் சொன்னார்.
ஆனால் எல்லாத்துக்கும் மேல் ஓர் உள்ளுணர்வு அதாவது intuition அது என்னை ரொம்பத் தொந்திரவு செய்தது. அது எப்போதுமே சரியாக இருந்தும் தொலைக்கும்! ஆனால் நம்மவருக்கு அதிலே நம்பிக்கை கிடையாது! உனக்கு எல்லாத்திலேயும் சந்தேகம்! எதுக்கும் சந்தேகம் என்பார்! ஆனால் அந்த சந்தேகம் பலித்தால் சொல்லுவது என்னன்னா! நீ ஆரம்பத்திலே இருந்தே சந்தேகப்பட்டதால் தான் இப்படி ஆச்சு என்று சொல்லுவார்! என்னமோ போங்க! என் உள்ளுணர்வு பணம் வராது/ கொடுக்க மாட்டார்/ சால்ஜாப்புச் சொல்லுவார் என்றே சொன்னது/சொல்கிறது/இனிமேலும் சொல்லுமோ? ரொம்பக் கோபத்துடன் நேத்திக்கு,"இன்னிக்கு வரை காத்திருந்தாச்சு. கிட்டத்தட்ட ஒரு மாசமா நீங்க இன்னிக்கு, இதோ, வந்தாச்சு, கொடுத்துடறேன் இன்னும் 2 நாள், ஊரிலே இல்லைனு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு சால்ஜாப்புக் கொடுக்கிறீங்க. ஆகவே இனிமேல் நான் கேட்கப் போவதில்லை. உங்க மனசாட்சி(அப்படி ஒண்ணு இருந்தால்) உறுத்தினால் கொண்டு வந்து கொடுங்கனு சொல்லிட்டு விட்டுட்டேன். இன்னிக்கு நம்ம ரங்க்ஸ் அவருக்குத் தொலைபேசிப் பார்னு சொன்னார். மாட்டேன்னு சொல்லிட்டேன்.
எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்! நல்லவர்கள் என நாம் நினைக்கிறவங்க கூடப் பண விஷயம்னு வரும்போது மாறுகிறார்கள் என்பதை இதோடு லக்ஷத்துப் பத்தாம் முறையாகப் புரிஞ்சுக்கறேன். ஆனாலும் இன்னமும் ஏமாறுவேன். ஏமாற்றுவாங்க! அதுக்காகத் தானே நாங்க இருக்கோம்! :(
மெய்ஞ்ஞான புலம்பலாக இருந்தாலும் karma theory ஆகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது என் கருத்து தவறாகவும் இருக்கலாம்
ReplyDeleteவிஸ்வநாதன்
இருக்கலாம், விச்வா! என்னமோ நேத்திக்குத் தோன்றியது. இனிமேல் இதை நினைக்கக் கூடாது என்று! என்னிடம் இது ஒரு கெட்ட பழக்கம். முடிஞ்சவரை மோதிப் பார்ப்பேன். இல்லைனா, "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!" னு விட்டுடுவேன். அப்புறமா நினைக்க மாட்டேன்.
Deleteஎதைக் கொடுத்து என்ன வரவில்லை. மடிக்கணினி கேடா? பழையதானால் ரிப்பேர் செய்வது கடினம். பழைய டெஸ்க்டாப், மற்றும் மானிட்டர் (இரண்டும் கேடானவை) 200ரூபாய்க்கு பழைய பொருள் வாங்குபவர் எடுத்துக் கொண்டார். என்னுடைய டெல் மடிக்கணினி பலரிடம் ரிப்பேருக்கு கொடுத்து ரிப்பேர் செய்ய முடியாமல் கடைசியாக ஒருவர் 3000 வாங்கிக்கொண்டு ரிப்பேர் செய்து கொடுத்தார். ஆனால் என்ன பிரயோசனம்.ஒரு வாரம் தான். மீண்டும் மீட்க முடியாத ரிப்பேர்.
ReplyDeleteதற்போது வரும் மடிக்கணினிகள் போன்றவை சில வருடங்களில் செயலிழக்கும் வகையில் ராம் ப்ரோகிராம் செய்யப்பட்டு வருகின்றன என்று கேள்வி.
ஆக அமெரிக்கா போன்று வேண்டாத பொருட்களை எடுத்துச் செல்ல காசு கொடுக்கும் நிலை வந்து விட்டது எனலாம்.
வாங்க ஜேகே அண்ணா. 3,000 ரூபாய் கொடுப்பதாக வாக்குக் கொடுத்து எடுத்துச் சென்ற டெஸ்க்டாப், மானிடர் (ஸ்லிம், எல்ஜி)தான்! ஆனால் இப்போதைய கவலை என்னன்னா, மடிக்கணினிக்கு ஏதேனும் நேர்ந்தால் அதைச் சரிபார்க்க ஆள் இல்லையே என்பது தான்! :(
Deleteஎன்னால் அப்படி விடமுடியாதே...
ReplyDeleteஇது என்ன புயுக்கதை இங்க ஓடுது? ஸ்ரீராம் இதைப்பற்றி எங்காவது எழுதியிருக்கிறாரா?
Deleteஉங்க விஷயமே வேறே! இது வேறே! நான் இலவசமாக் கொடுத்ததாகக் கூட நினைச்சுக்கலாம்
Delete//நீ ஆரம்பத்திலே இருந்தே சந்தேகப்பட்டதால் தான் இப்படி ஆச்சு என்று சொல்லுவார்! என்னமோ போங்க!//
ReplyDeleteநம் எண்ணங்களே காரணம் என்று சார் மட்டும் அல்ல, ஞானிகளும் சொல்கிறார்கள்.
நம் எண்ண அலைகளே அவர்களை அவ்வாறு செய்ய வைத்து விடும் என்று.
அவர் ஏமாற்ற மாட்டார் வந்து கொடுத்து விடுவார் இத்தனை மணிக்கு என்று எண்ணத்துக்கு வலு கொடுக்க வேண்டும், அதையே திரும்ப திரும்ப நினைக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
நம் மனது முன் ஏமாந்த மனநிலையில் இருப்பதால் அதிலிருந்து வெளிவர முடிவது இல்லை.
சார் சொல்வது போல் நம்பிதான் பாருங்களேன். அவர்களை வாழ்த்தி கொண்டே இருங்கள் , வந்து கொடுத்து விடுவார்கள் என்று சொல்லிக் கொண்டு இருங்கள் கொடுத்தால் லாபம்.
இல்லையென்றால் போன ஜென்மத்தில் அவருக்கு கொடுக்கவேண்டிய பணம் கொடுத்து விட்டோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
வாங்க கோமதி! ஆனால் என்னோட இந்த எச்சரிக்கை உணர்வையும் பாராட்டினவங்க, பாராட்டுகிறவங்க இருக்காங்க! சிலர் அம்மாதிரி எச்சரிக்கைக்குப் பின்னரும் ஏமாந்தீங்களானும் கேட்டிருக்காங்க! முன் கூட்டியே சுதாரித்துக் கொள்ள வேண்டாமா என்றும் கேட்கிறாங்க! ஆனால் இப்போ என்னைப் பொறுத்தவரை அதை நினைப்பதில்லை என்று முடிவு எடுத்தாச்சு! வந்தால் வரட்டும், வராட்டி இல்லை தான்! கடைசியா அனுப்பிய செய்தியில் கூட அவருக்கு ஆசிகளும், வாழ்த்துகளும் சொல்லித் தான் அனுப்பி இருக்கேன்.
Delete//இன்னிக்கு வரை காத்திருந்தாச்சு. கிட்டத்தட்ட ஒரு மாசமா நீங்க இன்னிக்கு, இதோ, வந்தாச்சு, கொடுத்துடறேன் இன்னும் 2 நாள், ஊரிலே இல்லைனு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு சால்ஜாப்புக் கொடுக்கிறீங்க. ஆகவே இனிமேல் நான் கேட்கப் போவதில்லை. உங்க மனசாட்சி(அப்படி ஒண்ணு இருந்தால்) உறுத்தினால் கொண்டு வந்து கொடுங்கனு சொல்லிட்டு விட்டுட்டேன். //
ReplyDeleteநீங்கள் இப்படி வேறு மனசாட்சி பற்றி பேசி இருக்கிறீர்கள் அதனால் கொடுத்து விடுவார் என்று நம்புகிறேன்.
மனசாட்சி இருந்திருந்தால் இந்த ஒரு மாதத்தில் ஒருமுறையாவது அவராகத் தொடர்பு கொண்டு இந்தக் காரணத்தினால் தாமதம் என விளக்கி இருப்பார்! அல்லவா?
Deleteசீச்சீ ....இந்தப் பழம் புளிக்கும் மொமெண்டோ?
ReplyDeleteஉங்க கருத்தைப் பார்க்கலை. ஆனால் அதான் சொல்லி இருக்கேனே மேலேயும்!
Deleteநானும் இதுல நல்ல அனுபவப்பட்டிருக்கேன். எங்க அப்பா சின்ன வயசுலேர்ந்தே சொல்லுவார்...யாருக்கும் கடன் கொடுக்காதே. வேற வழியில்லைனா 2 ரூபாய் கொடு. நிச்சயம் திருப்பித் தரமாட்டான். அத்தோட கடன் கொடுக்கறத விட்டுடுன்னார்.
ReplyDeleteநான் என் மனைவி சொல்வதைக் கேட்காமல் சிலருக்கு கடன் கொடுத்து கஷ்டப்பட்டிருக்கேன். இப்பக்கூட ஒருத்தர் நிறைய பணம் தரணும். இந்த வாரம் தர்றேன், அடுத்த வாரம் தந்துடறேன் என்று டபாய்ச்சுக்கிட்டே இருக்கார். இப்போ, 'என் மேலதான் மிஸ்டேக். என்னை மன்னிச்சுக்குங்க. அடுத்த வாரம் கண்டிப்பா தந்துடறேன்' என்று சொல்லியிருக்கார்...
தப்பித் தவறி 50 பைசா கூட என்கிட்ட கைமாத்து யாரும் கேட்டுடவேண்டாம். ஹா ஹா
வாங்க நெல்லைத்தமிழரே! இதுவே அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பு நிலையம் என்றால் நேரே டெல் கம்பெனிக்கே போயிருப்பேன். இங்கே இவங்க ஃப்ரான்சைஸ் னு நினைக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்து பலரும் இதில் ஏமாந்திருக்காங்க. வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை! நான் சொல்லிடறேன். :))))))
Deleteஇரக்கம் என்பது தவறான பேரை வாங்கி கொடுக்கிறது.
ReplyDeleteநீங்க சொல்லுவது சரிதான் கில்லர்ஜி!
Deleteஅன்பு கீதா, வேறு வழி இல்லையா, பணத்தை திரும்பிப் பெற.
ReplyDeleteமிக மிக வருத்தமாக இருக்கிறது.
தட்டிக் கேட்க ஆளில்லாமல் போச்சே.
பணத்தை விடுங்கள்... விட முடியாது. ofcourse.
எவ்வளவு மன வருத்தம். அங்கு consumer cell இருக்கிறதா.
வேறு யாரிடமாவது ஏஆர் ஆர், ரிஷபன் ஜி ஆகியோரிடம்
உதவி கேட்க முடியுமா.
தயவுசெய்து,
மனம் வருந்தி உடலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
வாங்க வல்லி, உண்மையில் சுமார் பதினைந்து நாட்களுக்குப் பின்னர் இன்னிக்குத் தான் சாப்பாடின் ருசியே எனக்குத் தெரிந்தது. உடம்பை எல்லாம் கெடுத்துக்கலை! மனம் காயப்பட்டால் உடல் தானாகக் கீழே படுத்துவிடுகிறது! அதையும் மீறித்தானே எழுந்துக்கறோம்! மற்றபடி வேறு யாரிடம் போனாலும் அவ்வளவு நன்றாக இருக்காது! அந்த மெகானிக்கிற்குக் கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கும். அவ்வளவெல்லாம் போக வேண்டாம். என்னளவில் நான் மனதில் இருந்து நீக்கி விட்டேன்.
Deleteநல்லதே நடக்கும்...
ReplyDeleteவாங்க டிடி. நன்மையே விளையட்டும். நன்றிப்பா.
Deleteகீதாக்கா எங்களுக்கும் இது போன்ற அனுபவம் நிறைய உண்டு. விவரமாக எழுத முடியலை.
ReplyDeleteஆனால் ஒன்றே ஒன்றுதான் உண்மையாக இல்லாமல் ஏமாற்றப்பட்டது. மற்றற்றில் சில இப்படி போனால் போகட்டும் என்று விட்டது. இனிக் கேட்டுப் பயனில்லை என்று.
சிலது கடைசிவரை இப்படி நம்மை போக்குக் காட்டினாலும் கடைசியில் வந்து கிடைத்ததும் உண்டு.
எனவே உங்களுக்கும் நல்லது நடக்கும் கீதாக்கா. கிடைக்கும்.
சிலருக்கு எப்படி இப்படிக் கொடுக்காமல் இருப்பதில் மனம் உடன்படுகிறது என்று தெரியவில்லை. நாம் செய்வது தவறு என்று எப்படித் தெரியாமல் போகும் என்பதும் அதுவும் இதெல்லாம் தெரிந்தே செய்யும் தவறு அல்லவா..
என்னவோ போங்க
கீதா
வாங்க தி/கீதா, உங்களை அதிகம் பார்க்க முடியலை. வேலைக்கு வேறே போறதாச் சொல்லிட்டு இருக்கீங்க! ஆகவே ரொம்பவே பிசி போல! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அவர் அப்புறமாத் தொடர்பு கொள்ளவில்லை. பணம் பற்றி மறந்துட்டேன். ஆனால் மனம் என்னவோ ஒரு பதிலானும் எதிர்பார்க்கத் தான் செய்தது. இப்போ அதுவும் விட்டுட்டேன்! எப்படி வேணா நடக்கட்டும்!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇரண்டு பதிவுகளையும் படித்தேன். மிகவும் மன உளைச்சல் பட்டு இப்பதிவுகளை எழுதியுள்ளீர்கள். ஏமாற்றுபவனை ஒருநாள் தெய்வம் பார்த்துக் கொள்ளும். ஆனால் நம்முடைய மனவருத்தம் நம்முடன்தான். அந்த "ஒருநாளை" நாம் எப்போது பார்ப்பது?
கடினந்தான்..
நீங்கள் கொடுத்த பொருட்கள் உங்களிடம் வரும் நேரம், வரும் சமயம் வந்து சேர்ந்து விடும்.. இப்படித்தான் எதுவும் நமக்கில்லை என்ற எண்ணத்தை வரவழைத்துக் கொள்ள நானும் முயற்சிக்கிறேன். ஆனால், வருவதுதான் சற்று சிரமமாக உள்ளது.
இங்கு எங்களுக்கும் வீட்டில் ப்ரிஜ் ரிப்பேர் என ஒருவரை அழைத்து சரியாக செய்யாமல் மூவாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு நாமத்தை போட்டு விட்டார். மறுபடி,மறுபடி ஃபோன் செய்தும் பலனில்லை. ஏமாற்றமும், மன உளைச்சலுந்தான் மிஞ்சியது. நீங்கள் கூறுவது போல் போன ஜென்மத்து கடன் என விட்டோம். வேறுவழி.!இப்படியான நிறைய ஏமாற்றுதலை பலமுறைகள் கண்டு ஜீரணித்தும், சமயத்தில் முதலில் வரும் அஜீரணம் வலிகளை தருகிறது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா,நம்ம பணம், என்பதால் நமக்கு எப்படியானும் வந்துவிடும் என்பது தான் என் நம்பிக்கையும். ஆனால் இப்படி ஏமாந்தது நிறைய! ஆகவே அதோடு இதுவும் ஒன்று என மனதைத் தேற்றிக் கொண்டு விட்டோம்.
Delete