ஏமாறுவதற்கு ஆள் இருந்தால் போதும் நம்மவர்கள். நல்லா தலையில் மிளகாய்ச் சட்னி, தக்காளிச் சட்னி எல்லாமும் அரைத்துவிடுகின்றனர். அதிலும் இந்தத் தொழில் நுட்ப வேலை தெரிந்தவர்கள் இருக்காங்களே! அவங்க தங்களுடைய பொருளை நமக்கு விற்பதெனில் கரெக்டா வருவாங்க! வியாபாரம் பேசுவாங்க! பொருளை நமக்காகச் சலுகை விலையில் கொடுப்பது போல் கொஞ்சம் பணம் குறைச்சுட்டுக் கொடுப்பாங்க! அதே நம்முடைய ஒரு பொருளை அவங்களிடம் விற்கக் கொடுத்தால் அது என்னமோ நம்ம ராசி போல, விற்கவே விற்காது. இதோ, இன்னிக்கு வித்துடும். , இதோ இன்னிக்கு வித்தாச்சு, பணத்தை எடுத்து உங்களிடம் கொடுக்கத் தான் கிளம்பினேன். நடுவில் வேலை வந்துவிட்டது என்பார்கள். அதுக்குள்ளாக அவங்களுக்கு அப்போத் தான் எக்கச் சக்க மீட்டிங் எல்லாம் ஏற்பாடு ஆகும். அல்லது வெளியூரில் போய் மாட்டிக் கொண்டிருப்பார்கள்! நாம் தொலைபேசியில் அழைத்தால் எட்டாத இடத்தில் இருப்பதாகச் செய்தி வரும்.
மீறி எடுத்துவிட்டால், அங்கே தான் வரப்போறேன், இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன் என்பார்கள். சரினு நாம கதவை எல்லாம் விரியத் திறந்து வைச்சுட்டு, கீழே பாதுகாவலரிடம் சொல்லிட்டுக் காத்திருப்போம். "காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி!" என்று நாம் பாடிக் கொண்டிருக்க வேண்டியது தான். வரவே மாட்டாங்க. சரினு மறுநாள் கூப்பிட்டுக் கேட்கலாம்னு தொலைபேசினால் மணி அடிக்கும்;அடிக்கும்;அடிக்கும்; அடித்துக் கொண்டே இருக்கும். மறுமுனையில் எவ்வித அசைவும் இருக்காது. இம்மாதிரி அலுத்துப் போன ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் நம் நண்பர், நாம் பெரிதும் நம்பிய தொழில் நுட்ப நிபுணர் தொலைபேசியின் உரிமையாளர், நாம் யாரை எதிர்பார்த்து அழைத்தோமோ அவர் தொலைபேசியை எடுக்க மாட்டார். வேறே யாரானும் எடுத்து ஏதோ பிசியான நேரத்தில் நாம் அழைத்துத் தொந்திரவு கொடுக்கிறோம் என்னும் எண்ணம் வரும்படியான குரலில் , "அவர் இப்போ ரொம்ப பிசி. முக்கியமான மீட்டிங்க்! இப்போப் பேச முடியாது!" என்று சொல்லுவார். நாமும் அலுத்துப் போய்த் தொலைபேசியில் எஸ் எம் எஸ் கொடுத்துப் பார்ப்போமேனு கொடுப்போம்.
இந்த எஸ் எம் எஸ் மட்டும் கரெக்டா நாம் அனுப்புவதற்குப் பைசாவைக் கழித்துக் கொண்டேன்னு செய்தியை அனுப்பி வைப்பாங்க. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அதைப் பார்த்தாரா இல்லையா என்பதற்கான அடையாளமே எதுவும் இருக்காது. வாட்ஸப்பில் அனுப்பலாம் எனில் அப்போப் பார்த்து அது போகாது! அன்னிக்குப் பொழுது இப்படியே போயிடும். மறுநாள் கூப்பிட்டால் ரொம்பக் கரெக்டா சம்பந்தப்பட்ட நபரே தொலைபேசியை எடுப்பார். அடடா! நீங்க இத்தனை முறை கூப்பிட்டீங்களா? மெசேஜ் அனுப்பினீங்களா? தெரியலையே மேடம், நான் பாருங்க இங்கே மதுரைக்கு வந்திருக்கேன். எங்களுக்குத் திருச்சி, ஸ்ரீரங்கம் மட்டுமில்லை. இங்கே சுத்துவட்டார ஊர்கள் எல்லாத்துக்கும் நாங்க தான் செர்வீஸ் செய்யறோமா! இங்கே அனுப்பிட்டாங்க! இன்னும் 2 நாள் பொறுங்க! நான் ஊருக்கு வந்ததும் நானே உங்களைக் கூப்பிட்டு எப்போ வரணும்னு கேட்டுட்டு பணத்தைக் கொடுத்து செட்டிலே செய்துடறேன். என்று ரொம்ப நம்பிக்கையாகத் தெரிவிப்பார். அவர் ஊரிலிருந்து வந்திருப்பார் என்று தோன்றும் நாள் நாம் அழைத்தால் அப்போதும் பொறுமையாய்த் தொலைபேசியை எடுத்து இன்னும் இரண்டே நாட்கள்! இருங்க இதோ வந்துடுவேன்! என்பார்.
இப்படிப் பல இரண்டு நாட்கள், பலமுறை வெளியூர் போய் வேலை செய்தல், பல முறை மீட்டிங் எல்லாம் ஆகிவிடும். ஒருவழியா இங்கே இருந்து ஒண்ணுமே பெயராதுனு நாம் அலுத்துப் போக ஆரம்பிச்சுடுவோம். பணம் போனால் போகட்டும்! எத்தனை பேர் ஏமாத்திட்டாங்க இந்த ஊரிலே! எலக்ட்ரீஷியன் ஆயிரக்கணக்கில் ஏமாத்தலையா? ப்ளம்பர் ஏமாத்தலையா? நாம நம்ம கணினியைச் சும்மாக் கொடுத்ததாக நினைச்சுப்போம் என்னும் எண்ணத்துக்கு இறங்கி வந்து விடுவோம். ஆனால் இதை எல்லாம் விடப் பெரிய பிரச்னை இனிமேல் நம்மிடம் இருக்கும் லாப்டாப்பிற்கு யார் வந்து ரிபேர் வேலைகள் செய்து தருவாங்க? பெரிதும் நம்பின இவரை இனிமேல் நம்மால் கூப்பிட முடியுமா? அப்படியே நாம் எல்லாவற்றையும் மறந்துட்டு இவரையே கூப்பிட்டாலும் இவர் வந்து செய்து தருவாரா? நாம பணத்தைப் பத்திப் பேசுவோம்னு வராமல் இருப்பாரா? இது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!

அடடே... அதே... அதே... அதே... அதேதான் நடக்குது இங்கயும்...
ReplyDelete@ஸ்ரீராம், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல! :(
Deleteநானும் நினைச்சுப்பேன்.. இதே நம் நிலையில் இவர்களும், இவர்கள் நிலையில் நாமும் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று...
ReplyDeleteநிச்சயமா நாம பணத்தைக் கொடுத்துட்டே மறுவேலை பார்ப்போம்!
Deleteகீதாக்கா என் சோகக் கதையையும் சொல்ல வந்தா இங்க நிறைய சோகக் கதைகள் எனக்கு உங்கப் பதிவை வாசித்ததும் முதலில் நினைவுக்கு வந்தவர் நம்ம ஸ்ரீராம் தான்.
Deleteஎங்களுக்கும் இதே கதைதான். நிறைய ஏமாந்திருக்கிறோம் முன்பு வெளியூரில் இருந்தவரை. இப்ப சென்னையில் என்று ஆன பிறகு என் மைத்துனரே கணினி வேலை எல்லாம் பார்த்துத் தந்துவிடுவார். அவருக்கு பார்ட்ஸ் வாங்குவது போன்றவற்றிற்கு ரூபாய் கொடுத்துடுவோம். பக்காவாக இருக்கும் எல்லாம். அதுவரை வெளியூரில் நிறையவே ஏமாந்திருக்கோம். இத்தனைக்கும் வீட்டவர் கணினித் துறைதான் ஹிஹிஹிஹி...
கீதா
கணினி என்றில்லை வேறு சில விஷயங்களிலும் கூட ஏமாற்றப்பட்டிருக்கிறோம். இப்படித்தான் கூப்பிடகூப்பிட பிடியே கொடுக்க மாட்டாங்க. நாம் ரூபாய் தர வேண்டியிருந்தால் உடனே வந்துவிடுவார்கள் ஆனால் அவர்கள் தர வேண்டும் என்றால் மட்டும் நடக்கவே நடக்காது.
Deleteஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் நினைத்துக் கொள்வதுண்டு. நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் என்று. உடனே ரூபாய் கொடுத்துவிட்டுத்தானே மறு வேலை...
கீதா
எங்க வீட்டிலும் கணினி நிபுணர்கள் இருந்தாலும் யாரும் நம் வசம் இல்லை! நமக்குனு வந்தால் வெளி ஆட்கள் உதவியைத் தான் நாடணும்! அதில் தான் ஏமாந்து போகிறோம். பையர் நாங்க ஏமாற்றப்படுகிறோம் என்பதில் கோபம் அடைவார்! ஆனாலும் என்ன செய்ய முடியும்! :(
Deleteஶ்ரீராமுக்கு விரைவில் பிரச்னைகள் சரியாகணும்னு பிரார்த்திக்கிறோம். கடவுள் கண் திறக்கணும்!
Deleteயாராவது ஒருவர் ஆசியாவது பலித்து நல்லது நடந்து விடும் என்று நானும் எதிர்பார்க்கிறேன். என் ராசி என்று ஒன்றும் இருக்கிறதே.. ராசி என்பதைவிட கர்மா... நன்றி கீதா அக்கா.
Deleteஇந்த விஷயத்தில் மனிதர்களை விட intuition என்ன சொல்கிறது என்று பாருங்கள். மனம் தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும். கிடைக்காது என நினைக்காமல் கிடைக்கும் என்றே நம்புங்கள். உங்கள் உணர்வுகள், மனோநிலை எல்லாமும் எனக்கு/எங்களுக்கு நன்றாகப் புரிகிறது. நடுஇரவில் எல்லாம் தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்! இது பரவாயில்லையா? அப்படிச் செய்திருக்கலாமோ? இவரைப் போய்ப் பார்த்தால் நடக்குமா? அவரிடம் சொன்னால் கேட்பாங்களா என்றெல்லாம் பேசிப் பேசிப் பேசிப் பேசி! சுமார் ஆறு மாதங்கள்! :( அதன் பின்னரே 2016 டிசம்பர் 5 ஆம் தேதி அன்றுதான் விடிவு கிடைத்தது! பத்தாம் தேதிக்கு அம்பேரிக்கா பயணம்!
Deleteஅந்த விஷயத்தில் நான் பாகிய சாலி என்றே நினைக்கிறேன் பொதுவாக வயது அடிகமானால் எங்கும் நம்மால் போக முடியாம போனால் நமக்கு என்று சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் கணினி ரிபேர் முதல் மாமரத்தில் மாங்காய் பறிப்பதுவரை பிறர் உதவி நாட வேண்டிய நிலயில் அம்மா அப்பா என்னும் உறவு கூறி பலரும் உதவுகிறார்கள்வாழ்க அவர்கள்
ReplyDeleteஐயா, அதெல்லாம், அம்மா, அப்பா, அக்கா, மாமா என்றெல்லாம் கூறிக்கொண்டு செய்பவர்கள் இங்கேயும் இருக்காங்க தான்! ஆனால் நான் சொல்லுவது கணினி, ஏசி, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பொருட்களை ரிப்பேர் பார்க்கும் தொழில்நுட்ப நிபுணர்கள் பத்தி! இதிலே கணினி மெகானிக் ரொம்பவே கம்பீரமா கௌரவமாத் தான் நடந்துப்பார்; பேசுவார்! ஆனால் பணம் அவர் கொடுக்கணும்னு வரச்சே நீங்க என்ன கூப்பிட்டாலும் அசைந்து கொடுக்க மாட்டார்.
Deleteஎன்ன சங்கடம்மா இது. இப்படி ஒரு பஞ்சம் வருமா.
ReplyDeleteவேறு யாரையாவது பார்க்கச் சொல்லலாமே.
அதெல்லாம் பஞ்சம் ஏதும் இல்லை ரேவதி! வேறே யாரைக் கூப்பிடுவது என்பது தான் இங்கே பிரச்னையே! இவர் டெல் கம்பெனியின் அங்கீகாரம் பெற்ற நபர்! தேர்ந்தெடுத்துக் கூப்பிட்டேன்! இனி? அதான் புரியலை!
Deleteஇப்பொழுது எல்லா ஊர்களிலுமே எல்லா வேலையும் இப்படித்தான் நடக்கிறது.
ReplyDeleteதமிழகத்தில் மட்டும்னு வேணா சொல்லிக்கலாமா கில்லர்ஜி? :)
Deleteநமக்கு லட்சியம்... அவங்களுக்கு அலட்சியம்...
ReplyDeleteவாங்க டிடி. ரொம்பநாட்களாக் காணோம்! நீங்க சொல்வது சரியே!
Deleteஇதுக்கு அலுத்துக்கிறீங்களே... நான் ஒரு விஷயமாக ஒருத்தரியம் 25,000 டிரான்ச்ஃபர் பண்ணிவிட்டு, அவரிடமிருந்து பணத்தைத் திருப்பி வாங்க 6 மாதமா கஷ்டப்படறேன். போன் பண்ணினால் எடுக்க மாட்டாங்க. அபூர்வமா எடுத்தால் இதோ இன்றைக்கு 11 மணிக்கு கூப்படறேன் என்பார்கள். இதோ 9ம் தேதிக்குள்ள டிரான்ச்ஃபர் பண்ணறேன் என்பார்கள்....
ReplyDeleteதமிழகமே கயவாளிகளால் நிறைந்துவிட்டது என்பதுபோல எனக்கு ஒரு பிரமை..
//இதுக்கு அலுத்துக்கிறீங்களே..// இந்த ஒரு விஷயம் மட்டும் இல்லை நெல்லை! பல வருஷங்களாக நாங்க இதில் பழம் தின்னு கொட்டை போட்டு மரமாக முளைச்சும் விட்டது! நீங்களாவது 25,000/- கொடுத்துட்டு வாங்க முடியாமல் தவிக்கிறீங்க! நாங்க 2016 ஆம் ஆண்டு இங்கே ஒரு பில்டரிடம் 15 லட்சம் கொடுத்துட்டுத் திரும்பி வாங்கத் தவித்திருக்கோம். அப்போப் பார்த்து நவம்பரில் டிமானிடைசேஷன்! அந்த பில்டர் எல்லாம் 500 ரூ 1000 ரூ நோட்டாகக் காஷாகக் கொடுப்பேன்னு பயமுறுத்தல்! ஆண்டவன் செயல்! தப்பிச்சோம். செக் தவிர்த்து வேறே வாங்க மாட்டோம்னு வற்புறுத்திச் சொல்லிட்டோம். டிசம்பரில் அம்பேரிக்கா போக டிக்கெட் வேறே வாங்கியாச்சு! அப்போப் பார்த்து ஜெயலலிதா இறப்பு! இங்கே புயல் அறிவிப்பு! எப்படியோ எல்லாம் முடிஞ்சு நாங்க அம்பேரிக்கா போய்ச் சேர்ந்தோம். இங்கே புயலால் சென்னை விமான நிலையம் மூடினாங்க!
Deleteஏமாற்றுவதும் ஏமாறுவதும் கலைகள் தான். தெரிந்தே ஏமாறுவது தவிர்க்கமுடியாதது. நான் எத்தனையோ பேருக்கு வாராக் கடன்கள் கொடுத்திருக்கிறேன். அதே போன்று பிளம்பர் போன்ற தொழில் நிபுணர்களிடமும். தற்போது கூட பிரிட்ஜ் மெக்கானிக்கிடம். பிரிட்ஜ் பேன் ஓடவில்லை, சும்மா கன்டென்சர் மாற்றினால் போதும். ஆனால் பேன் மோட்டார், டைமர் அது இது
ReplyDeleteமாற்றினேன் என்று 2400 பில். சரி மாற்றிய பொருட்களை நம்மிடம் தருகிறார்களா?
இல்லை. அதை வேறு ஒருவர் தலையில் கட்டிவிடுவார்கள்.
வாங்க ஜேகே அண்ணா! நாமெல்லாம் வாராக்கடன்கள் கொடுக்கலைனாத் தான் அதிசயம்! ஆனால் இந்தத் தொழில் நுட்ப நிபுணர்கள் ஏமாற்றுவது தான் சகிக்க முடியலை! போன வருஷம் ஓர் எலக்ட்ரீஷியன் கம்பெனி கொடுத்த பில்லிலேயே கையால் திருத்தி எழுதி நாலாயிரம் கூட வாங்க முயற்சித்தார்! நாங்க கம்பெனிக்கே தொலைபேசினதும் என்னென்னவோ சால்ஜாப்பு சொல்லிட்டு பில்லை மாற்றிப் பழையபடி கம்பெனியோட அங்கீகார விலை போட்டு வாங்கி வந்தார்!
Deleteஇப்படியும் சிலர் - இல்லை இல்லை பலர் இங்கே! பலரும் சுலபமாக சம்பாதிக்கும் வழிகளையே கையாள்கிறார்கள். எப்படியாவது சீக்கிரமாக பணக்காரர் ஆகும் ஆசை பலருக்கும் இருக்கிறது!
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்!
இந்த ஏமாற்று வேலைகள் உலகம் முழுவதும் இருக்கோனு தோன்றுகிறது. இப்போல்லாம் ஏமாற்றுபவர்கள் பெருகிவிட்டார்கள் என நினைக்கிறேன். அவங்களே ஏமாந்தால் தான் இதுக்கு விமோசனம்!
Deleteநாங்கள் ஏமாந்த கதை சொன்னால் !
ReplyDeleteஎல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.
உங்கள் தொலைபேசி உரையாடல் எல்லாம் அப்படியே எங்களை ஏமாற்றியவர் சொன்ன வசனங்களே!
என்ன சொல்வது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
நாம் அனைவருமே ஏமாளிகள் தான் போல! :(
Deleteஏமாந்த அனுபவங்கள் என்று எபியில் முன்புகொஞ்சம் எழுதி இருக்கிறேன்!!!
Deleteநானும் சில,பல பதிவுகள் எழுதி இருக்கேன் ஶ்ரீராம்.
Deleteஎங்களிடமிருந்து உங்களுக்கு தேவை படாது எங்களுக்கு உதவும்.என்று சொல்லி காசு கொடுக்காமல் வாங்கி போனார்கள் கணினி, போன் எல்லாம். வீடு கட்டியவர் வரேன் வரேன் என்று பாதியில் போட்டது போட்டபடி பணத்தை வாங்கி கொண்டு கம்பி நீட்டினார். போன் செய்தால் அங்கு இருக்கிறேன் இங்கு இருக்கிறேன் வருவேன் என்பார் வரமாட்டார். காத்திருந்து காத்து இருந்து காலங்கள் போனதுதான் மிச்சம்.
ReplyDeleteஇருபது ரூபாய் மருந்து பாக்கெட்டை 50 ரூபாய்க்கு விற்ற மருத்துவரிடமும் ஏமாந்திருக்கோம். இதெல்லாம் முன் ஜன்மத்துக் கடன், இப்போக் கொடுத்து அடைக்கிறோம்னு மனசைத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான்!
Delete30, 35 வருடங்கள் முன்னர் வீடு கட்டும்போது தச்சர் ஏமாற்றிவிட்டுப் போனார். எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தோம். அப்படியும் சொல்லாமல், கொள்ளாமல் போய்விட்டார்! வீட்டுக்கெல்லாம் போய்ப் பார்த்தோம். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டிலே மேஸ்திரி ஒருத்தர் மாடியில் வெதரிங் செய்யறேன்னு எல்லாத்தையும் கொத்திப் போட்டுவிட்டுப் போய் நல்ல மழைக்காலத்திலே வீடு முழுவதும் தாரையாகக் கொட்டி பின்னர் இன்னொருத்தரைப் பிடித்து அவசரம் அவசரமாக மறுபடி 30000 செலவு செய்து வெதரிங் செய்தோம். :(
Deleteஇங்கும் கேரளத்திலும் ஏமாற்றுபவர்கள் உண்டுதான். நானும் மனைவியும் இருவருமே ஆசிரியர்கள் என்ற ஒரு அடையாளம் இருப்பதாலோ என்னவோ இந்த ஏரியாவில் எங்களிடம் பயின்றவர்கள் அல்லது அவர்களது பெற்றோரில் யாரேனும் எலக்ட்ரிக், ப்ளம்பிங்க் என்று அல்லது வேறு யாரேனுமானாலும் சரி, பிரச்சனைகள் இல்லாமல் செல்கிறது. சிறிய ஊர்.
ReplyDeleteஉங்கள் அனுபவங்கள் போலும் இங்கும் நடக்கிறதுதான். கஷ்டம்தான்.
துளசிதரன்
ஏமாறும் முகம்னு நம்ம முகத்திலே எழுதி ஒட்டி இருக்கையில் ஏமாற்றாமல் இருப்பாங்களா! சின்ன ஊர்களில் எங்களுக்கும் பிரச்னை வந்ததில்லை. அதிலும் ராணுவக் கணக்குத் துறை என்பதால் வரும் தொழில் நுட்ப நிபுணர்கள் எல்லோரும் "சாப்! சாப்!" என்று கூப்பிட்டுக்கொண்டு வந்து இலவசமாகவே செய்து கொடுப்பார்கள். அதோடு மிலிடரி இஞ்சினிரிங் பராமரிப்பு என்பதால் ஆறு மாசத்துக்கு ஒரு முறை பராமரிப்பு வேலையும் கரெக்டா நடந்துடும். இங்கே ஊர் நடுவில் குடி வந்ததும் தான் பிரச்னைகள்!
Deleteஇப்போதெல்லாம் சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால் App தான். ( தமிழில் ஆப்புதான் என்று எழுதினால் பொருளே மாறி விடுகிறது.) அர்பன் கிளாப் என்னும் ஆப்பில் பப் பண்ணினால் ஆட்கள் வருகிறார்கள். திருச்சியில் இந்த வசதி இல்லையா?
ReplyDeleteAppமூலம் அழைத்தால் பணமும் மொபைல் ஆப் மூலமே கட்டணும். நான் மொபைலில் எந்தவிதமான பணப் பரிமாற்றங்களும் செய்வது இல்லை. ஓலா, உபேர் ஆப்கள் மொபைல் வாங்குகையிலேயே இணைந்து வந்துவிட்டதால் ஒண்ணும் பண்ண முடியலை! ஆனால் ஓலா ஆட்டோவில் போனோம் எனில் நாங்க பணமாகத் தான் கொடுக்கிறோம். மொபைல் மூலம் கொடுப்பதில்லை. அதை ஒரு தொலைபேசியாகத் தான் வைச்சிருக்கோம். வாட்சப், மெசேஜ்கள் மட்டும் வரும்/ நாங்களும் கொடுப்போம்.
ReplyDelete