எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 05, 2007

203. வாமனன் பூஜித்த சிவனார்-3

கோவிலினுள் நுழையும்போதே காற்றுச் சில்லென வீசியது. ரொம்பவே
அமைதியான சூழ்நிலை. பிரகாரம் சுற்றி வந்து கர்ப்பக் கிரஹத்தினுள்
நுழையும்போது கர்ப்பக்கிரஹத்தின் வலது பக்கத்தில் சில கருங்கல் சிற்பங்கள் வடிக்கப் பட்டிருக்கின்றன. அப்போது தான் குருக்கள் வந்து மேற்கூறிய கதையைச் சொல்லிவிட்டுப்பின் அந்தச் சிற்பங்கள்
பற்றியும் கூறினார். அவை முறையே மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வந்து மஹாபலியிடம் பிட்சை கேட்பது, பின் சுக்ராச்சாரியார் கருடனுடன் போரிடுவது, வாமன அவதாரம் திருவிக்கிரம அவதாரம் எடுத்து
மஹாபலிக்கு மோட்சம் கொடுப்பது, பின் திரும்பக் குறளனாகி சிவ பூஜை செய்வது என்ற சிற்பங்கள் எழும்பி எத்தனை காலம் எனத் தெரியவில்லை. கர்ப்பக் கிரஹச் சுவரில் அவை எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்றும் பார்த்தால் தான் புரியும். எவ்விதமான வசதிகளும் இல்லாத காலத்தில் இம்மாதிரிச் சிற்பங்கள் எழுப்ப எத்தனை காலம் ஆகி இருக்கும், விளக்கொளி இரவில் இப்போது மாதிரிப் பிரகாசமாய் இருந்திருக்குமா? யார் பண
உதவி செய்திருப்பார்கள்? எந்த ராஜாவிற்கு இம்மாதிரிச் செய்ய யோசனை தோன்றியது என்பதை எல்லாம் எண்ணிப் பார்த்தால் எப்படிப் பட்ட கலைச் சிற்பங்கள் என்ற பொக்கிஷங்களை பக்தி என்னும் எண்ணங்கள் மூலம் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். நம் வருங்காலச் சந்ததியினர் இவற்றை எப்படிப் பாதுகாப்பார்கள்? என்றெல்லாம் யோசனை தோன்றியது.

கர்ப்பக்கிரஹத்தில் நுழைந்ததும் உள்ளே போட்டிருந்த நீல வண்ணத் திரையில் குபேர பீம ருத்திர சங்கரர் காட்சி அளித்தார். அவருக்கு தீப ஆராதனை காட்டிவிட்டுப்பின் திரையைச் சற்று விலக்கி உள்ளே தரிசனம் செய்து வைத்தார். சற்றுக் கூடுதல் நேரம் தரிசனம் செய்து வைத்தார்
என்றே சொல்ல வேண்டும். மிக அழகிய லிங்க ரூபத்தில் அம்பாளும் ஐக்கியம் என்றும், இந்த ஸ்வரூபத்தை எப்போதும் மஹாவிஷ்ணு பூஜித்து வருகிறார் என்றும் அந்தப் பூஜையை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி நமக்கு இல்லை என்பதாலும் சன்னதி எப்போதும் திறந்து வைப்பதில்லை. மேலும்
இது ஆதி சிதம்பரம் என்று சொல்வதாலும், இந்தக் கோயிலிலும் இது ரகசியம் என்று ஐதீகமாய்க் கொண்டு திரையை விலக்கித் தரிசனம் செய்து வைக்கிறார்கள். இந்தக் கோவிலுக்குக் கிழக்கே மலையில் தீபம் ஏற்றுவதால் அது இறைவனின் நெற்றிக்கண்ணாகப் போற்றப் படுகிறது. இந்த தீபம் ஏற்றும் இடம் அம்மன் சன்னதியில் இருந்து நன்றாகத் தெரிகிறது. சன்னதிக்கு நுழையும்போது சற்றே திரும்பி எதிரே பார்த்தால் ஒரு கல் தூண்
இருக்கிறது. அதில் தான் தீபம் ஏற்றுவார்களாம். அம்பாளின் பெயர்
அம்புஜாக்ஷி அம்மாள். திருஞானசம்மந்தர் இக்கோவிலைப் பற்றிப் பாடி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். கடல் சூழ்ந்த உலகில் தர்மத்தை நிலைநாட்டத் தோன்றியதால் இவ்வூரைத் தேவனாம்பட்டினம் என்றும்
கூறுவார்கள். மாசி மகத்தில் இங்குக் கடல் நீராடுவது விசேஷமாய்க் கூறுகிறார்கள். இங்குள்ள மலைக்கு ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஒளஷதகிரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. தற்காலத்தில் "கேப்பர் க்வாரி" என்று அழைக்கப் படுகிறது.

4 comments:

  1. ஆஹா, ரொம்பவே நல்லா இருக்கு, திங்கள் இரவு கொடுக்கிறேன். ஞாயிறுன்னு சொல்லுது. அதுவும் பிடிவாதமாய் 201-ம் நம்பர் போஸ்டை முன்னால் தள்ளிடுதே? என்ன ஆச்சரியமான ப்ளாக்கர்?

    ReplyDelete
  2. அந்த பதிவுல ஏதோ மர்மம் இருக்கு, எல்லாத்துலயும் முதலா இருக்கணும்னு நெனைக்குதோ என்னவோ :)

    ReplyDelete
  3. தலைவியின் டெக்னிகல் அட்வைசர் குழு என்ன செய்கிறது?....

    ReplyDelete
  4. ராத்திரி எல்லாம் தூங்காமலே வேலை செய்துட்டு இருக்கிறதாலே (தலைவியின் சேவையில், ஒரு வேளை தேங்காய்ச் சேவையோ), இப்போ ஆஃபீஸில் தூங்கிக் கொண்டு இருக்கிறது. :D

    ReplyDelete