எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 02, 2007

குடிசையில் சிவனார்

கடலூருக்கு நான் இதுவரை போனது இல்லை. அந்த வழியாக நிறைய முறை கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் ஊருக்குள் போனது இல்லை. ஒருவேளை சொந்தம் யாரும் இல்லாததாலோ என்னமோ தெரியலை. ஒரு ஆறு மாசமாக திரு நடேசன் எங்க வீட்டுக்கு வரேன், வரேன்னே சொல்லிட்டிருக்கார். ஆனால் அவரால் வர முடியலை. நாங்க

பார்த்தோம். இம்முறை சிதம்பரத்தில் இருந்து வரும்போதோ அல்லது போகும்போதோ அவரைப் பயமுறுத்திடலாம்னு நினைச்சோம். அவருக்குத் தகவலும் சொல்லியாச்சு.

நாங்க கடலூர் வந்து சேர்ந்த தகவலும் சொல்லி அவர் வீட்டுக்கும் போயாச்சு.

உண்மையில் ஊர் இத்தனை அழகாய் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை.

வெண்ணாறும், வெட்டாறும் எங்கேயோ பக்கத்தில் ஓடுகிறதுன்னு தெரியும். கெடில

நதியும் இங்கே தான் ஓடுகிறது. ஆனால் இவ்வளவு அழகான குன்றுகள் சூழ்ந்த

ஊர்ன்னும், சீதோஷ்ணம் இத்தனை அருமையாக இருக்கும்னும், அமைதியான ஊர்னும் தெரியாமல் போச்சு. சற்றே பெரிய கிராமம்னு சொல்லலாம். பச்சையைப் பார்க்க முடியாதுன்னு நினைச்ச எனக்கு மரங்கள் அழியாமல் பாதுகாக்கப் படுவது சந்தோஷத்தைத் தந்தது. வயல்களில் அறுவடை நேரம் என்பதால் அங்கங்கே இயந்திரம் வந்து அறுவடை செய்து கொண்டிருந்தது. நடேசன் வீட்டுக்குப் போய்க் காலை ஆகாரம் முடித்ததும்,

நாங்கள் முதலில் திருவஹிந்திபுரம் கோவில் பார்க்கப் போனோம். நடேசன் மனைவியின்

விருந்தோம்பல் பற்றி ஏற்கெனவே சொல்லிட்டேன். அவங்க ரொம்ப அருமையான காலை ஆகாரமும், நல்ல காஃபியும் கொடுத்தாங்க. (அம்பி, குறிச்சுக்கோங்க, காஃபி பத்தி
எழுதிட்டேன்.)

திருவஹிந்திபுரம் கோவிலைப் பத்தி எழுதும் முன்னால் நடேசன் கூட்டிப் போன 2 சிவன்

கோவில்கள் பற்றி எழுதிடறேன். முதலில் நாங்கள் போனது வயல்வெளிகளிடையே போன ஒரு சாலையில் சற்றுக் குன்றுகளால் (கிழக்குத் தொடர்ச்சி மலைக்குன்றுகள்?) சூழப்பட்ட

ஒரு இடத்திற்குச் சற்று ஏறிப் போனோம். அங்கே போவதற்கு முன்னால் நடேசன்

"பூனையாருக்கு" பிஸ்கட் வாங்கிக் கொண்டார். எங்களைப் பார்க்க வருவாரா

மாட்டாரா என்ற விவாதத்திற்கு இடமே வைக்காமல் வரவேற்புக்கே வந்து விட்டார்.

நடேசனை அடையாளம் கண்டு கொண்ட பூனையார், எங்களைப் பார்த்ததும் சற்று

மிரண்டார். நாங்கள் சமாதானம் செய்தோம். அப்படியும் அவர் நாங்கள் கொடுத்த பிஸ்கட்டைச் சாப்பிட வில்லை. பிடிக்கவில்லையோ என்னவோ? அங்கே குன்றுகளுக்கு இடையே வயல் சூழ்ந்த அற்புதமான இடத்தில் சற்று வெட்டவெளி இருந்திருக்கிறது. அங்கே ஒரு சிவலிங்கம், (நூறாண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப் பட்டதாம்.) காணப்பட்டது. சுற்றிலும் சிறிய கட்டிடங்களில் அம்மன்,. பிள்ளையார், சுப்பிரமணியர் காட்சி அளித்தனர். அவங்க எல்லாரும் கட்டிடத்தில் இருக்கும்போது சிவனார் மட்டும் கூரைக்குக் கீழ்

குடியிருக்கிறார். மனைவி, குழந்தைகளுக்குத் தீபாவளிக்குத் துணி எடுத்துக் கொடுத்துவிட்டு அவங்களைப் பார்த்து சந்தோஷப்படும் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத் தலைவர் மாதிரி

போல் இருக்கிறார் இந்தச் சிவனார் என்று நினைத்துக் கொண்டேன். இங்கே சிவலிங்கத்தில் ஒரு விசேஷம். எல்லாக் கோவில்களிலும் சிவலிங்கத்தின் இடதுபுறம் காணப்படும் ஆவுடையார், இங்கே வலதுபக்கமாய் உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை சன்னதியை மாற்றிக் கட்டி இருப்பாங்களோன்னு. இல்லைன்னு சொல்றாங்க. ஒரு சிவனடியார் வந்து பூஜைகள் செய்வாராம். அவர் இல்லாத நேரம் ஒரு தாத்தாவும், பாட்டியும் அந்த வயலுக்கு நடுவே, கோவிலுக்கு அருகே குடிசை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவங்க பார்த்துக் கொள்கிறார்கள். அந்தத் தாத்தா தனக்குத் தெரிந்த மந்திரங்களைத் தனக்குத் தெரிந்த உச்சரிப்புடன் மிகவும் ஆத்மார்த்தமாய்ப் பூஜை செய்து தீப

ஆராதனை காட்டி எங்களுக்குத் தரிசனம் செய்து வைத்தார். காற்று பிய்த்துக் கொண்டு போகிறது. சுற்றிலும் வயல்வெளி. அங்கங்கே அறுவடை நடக்கும் சப்தம் தவிர வேறு சப்தமே இல்லை. நிம்மதியாக ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு படுத்துவிடலாம் போல் இடம். ஒருபக்கமாய்ப் பார்த்தால் சிறிய குன்றுகளும் அதில் கோவிலுக்கு வரும் பாதையும் தெரிகிறது. பின்னால் பார்த்தால் வயல்வெளி எங்கும் பரந்து இருக்கிறது. அதற்கு அப்பால் சாலையும், போக்குவரத்தும் கொஞ்சமாய்த் தெரிகிறது. வயலில் வேலை செய்பவரையும், அந்தக் கோவிலில் இருக்கும் தாத்தா, பாட்டியையும் தவிர வேறு நடமாட்டமே இல்லை. சற்று நேரம் அங்கே உட்கார்ந்து விட்டுப் பின் மனமில்லாமல் அங்கே இருந்து கிளம்பினோம்.

பி.கு: லலிதாம்பாள் சரித்திரம் வந்துட்டே இருக்கு.கடலூருக்கும், சிதம்பரத்துக்கும் போய்ட்டு வந்து 4 நாள் ஆகியும் எழுதாமல் இருக்கக் கூடாதுன்னு இன்னிக்கு எழுதி இருக்கேன். தொடர் விட்டுப் போகாது. எழுதிடுவேன். அதிலும் சிதம்பரம் பத்தி நிறையத் தகவல்கள் ஆராய்ச்சி செய்து இருக்காங்க. அதைத் தெரிந்து கொண்டு வந்திருக்கேன். அந்தச் "சிதம்பர ரகசியம்" பத்தியும் எழுதவேண்டும். எல்லாம் அந்த ஆடலரசன் துணை வேண்டும்.

18 comments:

  1. சப்தமே இல்லை. நிம்மதியாக ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு படுத்துவிடலாம் போல் இடம்

    வேண்டாம் அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்.அப்பறம் மொக்கை அனாதையாகிவிடும் என்கிறான் அம்பி.

    நாங்கள் கூட போனவாரம் பாண்டி,கடலூர் சிதம்பரம் வைதீஸ்வரன் கோவில் எல்லாம் பையன் மருமகளுடன்போய்விட்டு வந்தோம். நானும் சிதம்பரத்தைப் பற்றி நிறைய குறித்துக்கொண்டு வந்துள்ளேன்.பார்க்கலாம் உங்கள் பதிவில் வருகிறதா என்று.பக்கத்தில் திரூப்பாதிரிப்புலியூர் போகவில்லையா?

    ReplyDelete
  2. நமசிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க....

    தி.ரா.ச சாருக்கும் முன்னாடி வந்துட்டேனா?

    ReplyDelete
  3. ஹிஹிஹி, மதுரையம்பதி, ஒரு போட்டி வைக்கலாம்னு நினைக்கிறேன், யார் முதலில் வராங்கன்னு, பார்க்கலாமா? ஆனால் நான் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரம் போடறேன் இப்போ, முன்னே எல்லாம் சரியா மத்தியானம் 2 மணிக்குப் போட்டுடுவேன். இப்போ முடியலை.

    @தி.ரா.ச. சார், சிதம்பரக் குறிப்புக்கள் என் கிட்டே இருக்கிறது உங்க கிட்டே இருக்காதுன்னு நம்பறேன். பார்க்கலாம். ஆனால் எனக்கு இன்னும் சில கமிட்மெண்ட் முடிச்சுட்டுத் தான் எழுதணும். அதுக்குள்ளே நீங்க ஆரம்பிச்சுடுவீங்களோ? :) என்ன செய்யறது?

    ReplyDelete
  4. ஆமாம், போட்டி வைக்கலாம் போலதான் தெரிகிறது....ஆமாம், நான் இன்னுமொரு பின்னூட்டம் இட்டிருந்தேனே, பார்த்தீர்களா?...பதிலளிப்பீர்களா?

    ReplyDelete
  5. அப்படியா மேடம் நான் காத்திருக்கிறேன்.இப்போது போடவில்லை.ஆடலரசனின் தங்கவிமனத்தை பார்த்திருப்பீர்களே அதில் எத்தனை ஆணிகள் பதித்திருக்கிறார்கள் அதனுடைய தாதபர்யம் என்ன?அப்பாடா அம்பி மதுரை கார்த்தி ச்யாம் எல்லோருக்கும் முன்னாலே வந்தாச்சு.

    ReplyDelete
  6. புதிய விஷயங்கள்.. குமுதம் ஆனந்த விகடனில் வரும் ஆன்மீகத் தொடர் போல் அடுத்தடுத்து இத்தனை ஆன்மீகமா

    ReplyDelete
  7. அவ்வப்போது மற்ற விஷயங்களை பற்றியும் எழுதுங்கள் மேடம்.. ஆன்மீகம் கொஞ்சம் ஒவர் டோஸா இருக்கப் போகுது.. அது தான் நாட்டமை இந்தப் பக்கமே வர மாட்டேங்கிறார் போல.. நான் சினிமான்னா நீங்க ஆண்மீகமா, தலைவியே

    ஆனால் இதெல்லாம் புதுப் புது அரிய விஷயங்கள்.. அதன் நான் ஒத்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  8. //அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்.அப்பறம் மொக்கை அனாதையாகிவிடும் என்கிறான் அம்பி.//

    ha haaa :-) sabaash! itha thaan naanum nenachen! :p

    //சிதம்பரக் குறிப்புக்கள் என் கிட்டே இருக்கிறது உங்க கிட்டே இருக்காதுன்னு நம்பறேன். பார்க்கலாம். //

    @Geetha madam, ukkum, intha build-upku onnum korachal illai! :p

    @TRC sir, Guruve! rendula onnu pathuduvoom! post pottu thaakunga!

    ReplyDelete
  9. ஆஜர்!

    ReplyDelete
  10. Geetha Madam
    Naan innum intha postu padikala...but the previous one was very good. btw...naan bangalore illai....but i amazed about courageous opinion from Ambi(i jus know him thro blog world)...so I thought of juz joking (hope u dont take it seriously)Anyhow....neenga eluthura bhakthi margam romba nalla irukku...aana neenga innum neriya thangaval(details i mean)thantha romba nalla irukkum...

    Naan ippo than blogkku comment poda start panni irukken...so pls forgive my tanglish....

    Westender(california)

    ReplyDelete
  11. //பச்சையைப் பார்க்க முடியாதுன்னு நினைச்ச எனக்கு மரங்கள் அழியாமல் பாதுகாக்கப் படுவது சந்தோஷத்தைத் தந்தது. வயல்களில் அறுவடை நேரம் என்பதால் அங்கங்கே இயந்திரம் வந்து அறுவடை செய்து கொண்டிருந்தது//

    பம்பு செட் மோட்டார் எல்லாம் பார்த்தீங்களா ...

    இந்த இயற்கை தரும் மன அமைதி
    வேறு எங்கும் ,எதனை கொண்டும் பெற முடியாது..

    அப்படியே தென்னையிலிருந்து ஒரு இளநி சாப்பிட்டு வந்து இருந்து இருக்கலாம்.. மிஸ் பன்னிட்டீங்களே...

    //அந்தத் தாத்தா தனக்குத் தெரிந்த மந்திரங்களைத் தனக்குத் தெரிந்த உச்சரிப்புடன் மிகவும் ஆத்மார்த்தமாய்ப் பூஜை செய்து தீப

    ஆராதனை காட்டி எங்களுக்குத் தரிசனம் செய்து வைத்தார்.//

    இதை படித்ததும் வேதா அவர்களின் கவிதை நியாபகத்திற்கு வந்தது..

    இது தான் கிராமங்களின் கோயில்...

    பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  12. wonderful!I felt asthough Iam also travelling along with you to That yekandhamana payanam.kovil vilakam superb.India vandha piragu Indha idathirkellam poi varanum.

    ReplyDelete
  13. மதுரையம்பதி,
    பதில் வந்ததா?

    @தி.ரா.ச. சார், நீங்களும் எழுதுங்க, அம்பி சொல்ற மாதிரி இது ஒரு போட்டியாவே வச்சுக்கலாம். என் கிட்டே அம்பி சவால் விட்டா நான் பின் வாங்கிடுவேன்னு நினைக்கிறார் போல் இருக்கு! ம்ஹும், சவாலே, சமாளி, ஆனால் எனக்கு இன்னும் ஆரம்பிச்ச நிறையப் பதிவுகள், ஒத்துக் கொண்ட பதிவுகள் முடிக்கணும். பின்னால் தான். ஆகவே நீங்க முந்திக்கலாம். ஆட்சேபணை இல்லை. இதை ஒரு பதிவாவே போட்டிருக்கலாமோ?

    ReplyDelete
  14. கார்த்திக், அதான் 4 பதிவுக்கு ஒரு முறை உங்க எல்லாருக்கும் "ஆப்பு" வைக்கிறேனே, பத்தலையா? ஹையா, ஜாலி, நம்ம ஆப்பைக் கூட எதிர்பார்க்கிறவங்க இருக்காங்களே?
    அப்புறமா இதை ரொம்பவே ஆன்மீகமாவும் பார்க்காமல் சரித்திரக் கண்ணோட்டத்தில் பார்க்கவும் முயற்சி செய்யுங்க, தன்னாலே இதில் ஒரு விருப்பம் வரும். இது ஒரு கருத்துத் தான். முயன்று பாருங்க.

    ReplyDelete
  15. @கார்த்திக், மேலும் ச்யாம் எங்கே போய் "கடலை" (அமெரிக்காவில் என்ன சொல்லுவீங்க?) போட்டுட்டு இருக்காரோ? அவரோட தங்கமணிக்கு ஒரு மெயில் கொடுக்கணும்.

    @அம்பி, "அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!" என்று பாரதியார் எழுதினது எனக்குத் தான்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொன்னாலும் சரி, "உச்சி மீது வானிடிந்து வீழ்ந்த போதிலும் அச்சமென்பதில்லையே!" நானாவது, இதுக்கெல்லாம் அசைந்து கொடுக்கிறதாவது?

    @போர்க்கொடி, வாங்கம்மா மின்னலு, அந்த மின்னல் ஜோக்கைப் பார்க்கும்போதெல்லாம் உங்க நினைப்பு வராப்பலே பண்ணிட்டீங்க.

    @hotcat, இது என்ன பேரு, சூடான பூனைன்னு? hotdog-க்கு எதிரியா?
    அதெல்லாம் அம்பியோ, தம்பியோ அல்லது நீங்களோ என்ன கலாய்த்தாலும் (சரியா, அம்பி?) நான் அசைந்து கொடுக்கவே மாட்டேன். அதனால் கோபமும் வராது, தப்பாயும் எடுத்துக்க மாட்டேன்.
    ஹிஹிஹி, அம்பிக்குத் தைரியம்னு சொல்றீங்களேன்னு சிரிப்பா வருது! ஹிஹிஹிஹி, அம்பிகிட்டே தங்கமணின்னு சொல்லிப்பாருங்களேன், நடுங்குவார், இப்பவே! :D

    ReplyDelete
  16. மணிப்ரகாஷ்,
    பம்ப்செட், மோட்டார் எல்லாமும் பார்த்தேன். எல்லா இடத்திலும் நதிப்பாசனம் ஏது? :D
    கோவில்களில் உண்மையிலேயே கிராமத்துக் கோவில்கள் தான் அமைதியும் சாந்தமும் நிலவுகிறது. ஆத்மார்த்தமானப் பூஜையும் நடைபெறுகிறது.

    ReplyDelete
  17. கோவிலின் பெயரும், அமைவிடமும், செல்வதற்கான வழித்தடமும் சொன்னீர்கள் என்றால் அடுத்த முறை கடலூர் பக்கம் போனால் சிவனை பார்த்துவிட்டு வர வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  18. நாங்களும் கடலூர் தாண்டிப் போனோம். கடலூரில்தான் என் மூத்த சகோதரி பிறந்தார்!

    ReplyDelete