எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 22, 2007

ஹிந்தியில் இருந்து - மொழி பெயர்ப்பு முயற்சி

எனது ஆருயிரே, என் ஜீவனே!, உன்னுடைய உணர்ச்சி மிகுந்த தொடுகையால், என்னுடைய அங்கங்கள் எல்லாம் பூரித்துப் போகிறது. நான் என்னுடைய இந்த உடலை மிகவும் புனிதமான ஒன்றாய் வைத்திருக்க எப்போதும் முயற்சி செய்கிறேன்.

என்னுள்ளே ஒரு அணையா விளக்குப் போல் பிரகாசிக்கும் அந்த விவேகம் என்னும் சுடரானது, நீ ஏற்றி வைத்தது தானே! என் கெடுமதியால் விளையும் எண்ணங்களை அந்த ஒளியின் உதவியால் நான் தூரவே வைத்திருக்க எப்போதும் முயல்கிறேன்.

என்னுடைய இருதயத்தின் அந்தரங்கமான இடத்தில் உள்ள மேடையில் நீ அரியணை போட்டு அமர்ந்துள்ளாய். நான் என்னுடைய இருதயத்தின் அழுக்குகளைப் பூராவும் களைய முயல்கிறேன். உன்னில் இருந்து வரும் பிரகாசமான ஒளிச்சுடரின் நளினமான கிரணங்களால் என் ஆன்மாவும், இதயமும் புனிதம் அடையச் செய்ய எப்போதும் முயல்கிறேன்.

உன்னில் இருந்து கிளர்ந்து எழும் அற்புத எண்ணங்களால் நான் சக்தி உள்ளவன் ஆகிறேன். மேலும் என்னுடைய எண்ணங்களிலும், செயல்களிலும் உன்னை முன்னிலைப் படுத்தி, உன்னில் என்னைக் காண நான் எப்போதும் முயல்கிறேன்.

ஒரு கணம், ஒரே ஒரு கணம், உன்னருகில் என்னை அமர விடு! என் தேவனே! அனைத்தையும் நான் பெற்றவன் ஆகிறேன்.

உன் அருகாமையில் இருந்து நான் விலகிப் போனதும் என் இதயமும், ஆன்மாவும் துக்கத்திலும், வியாகூலத்திலும் ஆழ்ந்து விடுகிறது. அதற்குப் பின் நான் மேற்கொள்ளும் எந்த வேலையும், என்ன சொல்வேன், என் நாதனே! கடினமாகி விடுவதை உணருகிறேன்.

இன்று, இந்தக் கணம், வசந்தமானது தனது தென்றலை அனுப்பி என் சாளரக் கதவைத் தட்டுவதோடு அல்லாமல் மெல்ல ராகத்துடன் முணுமுணுக்கவும் செய்கிறது. என் முற்றத்தில் உள்ள செடி,கொடிகளில் உள்ள மலர்ந்த புஷ்பங்களையும், பூங்கொத்துக்களையும் வண்டுகள் ரீங்காரமிடும் தொனி கேட்கிறது.

இப்போது, இந்தச் சமயம் தான் உன் அருகாமையில் தங்கி இருந்து என் ஆத்மாவைச் சமர்ப்பணம் செய்யவும், என் ஆன்மா இசைக்கும் கீதத்தை உன்னைக் கேட்கச் செய்யவும் தகுந்த சாந்திமயமான நேரம் வந்துள்ளது.

5 comments:

  1. தலைவி..எப்படி தான் உங்களால் இப்படி எல்லாம் முடிகிறது! அருமை :)

    ஆனால் தலைப்பு களை பார்த்தல் தான்........பதிவு போல உள்ளது :)

    தலைப்பிலேயே தாகூரின் கவிதைகள் என்று வையுங்களேன்.

    ReplyDelete
  2. உங்க டெக்னிகல் கேள்விக்கு பதில்:

    என்கிட்ட ஒரு HTM file உள்ளது. அதில் தங்க்ளீஷில் அடித்தால் தமிழில் மாற்றி குடுத்து விடும். அதை ஒரு வேர்டு(MS-word) பைலில் பத்ரமா (save)வெச்சு எப்போ பதிவு போடனுமோ அப்ப ஜி3 பண்ணிடுவேன். இந்த பதில் கூட அதே டெக்னிக் தான். :)

    இதே HTML file தான் எஸ்கேஎம், சென்னை மாமி என எல்லோருக்கும் வினியோகம் செய்தேன். :)

    Do U want that...? if so, mail me, provided you should have Winzip installed in your system(laptop) which is free download. :)

    ReplyDelete
  3. maami/paati...
    eppadi koopidarthunu theriyala.. ungaloda postsum namma unionla varuthu parunga.. seriya ellam naanum g3 edutha muyarchiyin vilaivu....

    ReplyDelete
  4. இன்று, இந்தக் கணம், வசந்தமானது தனது தென்றலை அனுப்பி என் சாளரக் கதவைத் தட்டுவதோடு அல்லாமல் மெல்ல ராகத்துடன் முணுமுணுக்கவும் செய்கிறது.


    arumaiyaana mozipeyarpu
    .moolaththin suvai kuntraamal irukku.Good

    ReplyDelete
  5. ம்ம்ம்., கோபிநாத், தலைப்பை மாற்றணும்கிறீங்க? சரி, பார்க்கிறேன், கொஞ்சம் கவிதைத் தனமான தலைப்பா இருந்தாப் பரவாயில்லையோன்னு நினைச்சேன். அது சரியா வராதுன்னு விட்டுட்டேன். சும்மா கீதாஞ்சலின்னே போடறேன்.

    @அம்மாஞ்சி அம்பி, நிஜமாவே நீங்க அம்மாஞ்சி தான். நான் இப்போ எழுதறது"" இதிலே தான். இதானே நீங்க தரேன்னு சொல்றதும்? உண்மையில் உங்களுக்கு என்னோட பிரச்னை என்னனு சரியாப் புரியலை. இப்போ இந்தப் பின்னூட்டங்களுக்கு நான் போடற பதிலைப் போட்டதும், பதிவு எழுத ஆரம்பிச்சாலோ, அல்லது வேறு யாருக்கும் பின்னூட்டம் கொடுத்தாலோ சில சமயம் கடைசியில் போட்டதே ஒட்டிட்டு வந்து சம்மந்தமில்லாமல் என்னைப் போல் பேந்தப் பேந்த முழிக்குது. அதை எப்படி விரட்டறதுன்னு தான் என் பிரச்னை! மத்தபடி நானும் ஜி3 தான் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்லிட்டேனே! :P

    டிடி, இது அநியாயம், இது முறையா, இது தகுமா? இது தருமம் தானா? நான் பாட்டியா உங்களுக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.,
    ஹிஹிஹி, டாங்ஸு, டாங்ஸு, யூனியன் வாய்ஸிலே என்னோட குரலையும் ஒலிக்க வச்சதுக்கு!

    தி.ரா.ச.சார், ரொம்ப ரொம்ப நன்றி. அப்போ நீங்க மூலத்தைப் படிச்சிருக்கீங்க, நான் இன்னும் அதிக கவனத்தோடு எழுதணும்.

    ReplyDelete