
காஃபி பத்தித் தான் எழுத ஆரம்பிச்சேன். ஆனால் திங்கள் அன்று நடந்த ஒரு விஷயம் இந்தப் பதிவை எழுத வச்சுட்டது. யு.எஸ். வந்ததில் இருந்தே நாங்க இரண்டு பேரும் ஏதானும் ஒண்ணு மாத்தி ஒண்ணு வம்பில் மாட்டிக்கிட்டே இருக்கோம். பொண்ணு வீடு தனி வீடுங்கறதாலே ஒரு மாதிரி, கவனிக்கவும், ஒரு மாதிரித் தான் சமாளிச்சுட்டோம். இங்கே அபார்ட்மென்ட். என்னதான் 2 படுக்கை அறைகள் கொண்ட பெரிய அபார்ட்மென்டாக இருந்தாலும் இவங்க சமையல் அறை இருக்கே, ஒருத்தர் போனால் தான் சரியா வரும். சமைக்கும்போது எனக்கு ஏதாவது சாமானை எடுக்க முடியாமல் திண்டாடுவதைப் பார்க்கும் என்னொட மறுபாதி எனக்கு உதவி செய்ய வந்து நிப்பார். இங்கே தான் நுழைஞ்சதுமே உள்ள பெரிய அறையை முடிஞ்சவரைச் சின்னச் சின்னதாத் தடுத்து வரவேற்பு அறை, சாப்பிடும் அறை, சமையல் அறை எனப் பாகம் பிரிக்கிறாங்களே! :P அதில் சமையல் அறை தனியாக எல்லாம் வராது. எல்லாமே வரவேற்பு அறையின் பகுதி தான். கவுன்டர் தான் பிரிக்கும். ஆகவே நான் சமைக்கும் போது சாமான்களை வைக்கவும், எடுக்கவும் இருக்கிற 1/2 அடி இடத்தில் திண்டாடறது நல்லாவே தெரியும்.
இவர் வந்து நிக்கிறது தெரியாமல் நான் ஏதாவது சூடாக எடுத்து அதைச் சமையல் அறை ஸிங்கில் வடிகட்டத் திரும்ப, அல்லது காய் நறுக்கின கத்தியுடன் திரும்ப, அல்லது தாளிதம் செய்த இரும்புக் கரண்டியுடன் திரும்ப, அதில் ஏதாவது ஒன்று அவர் மேல் பட்டுத் தொலைக்க,உடனே பாரத யுத்தம் ஆரம்பிக்கும்.
"என்னை ஏண்டி கத்தியாலே குத்தறே? அல்லது சுடறே?" என அவர் ஆரம்பிக்க, "உங்களை யாரு இங்கே கூப்பிட்டாங்க?" என நான் கத்த, "நல்லதுக்கே காலம் இல்லை"னு அவர் முணு முணுக்க அலுவலகம் போகும் அவசரத்திலும் பையன் நின்று ரசித்துவிட்டுப் போவான்.:P இது இவ்வாறிருக்க, திங்கள் அன்று "தொழிலாளர் தினம்" என விடுமுறை விட்டிருந்தார்களா? அன்று சாயந்திரம் ரொம்ப சாவகாசமாய்ச் சப்பாத்திக்கு மாவு பிசைந்து விட்டுக் கத்திரிக்காய்க் கூட்டும் செய்து வைத்து, (அம்பிக்கு அனுப்பி இருக்கலாமோ?) இந்திரா செளந்திர ராஜனின் மர்ம(?)த் தொடரான, "காற்று, காற்று, உயிர்" படிக்க உட்கார்ந்தேன். கதையில் ஏற்கெனவே பேய் கதாநாயகன் உடலில் புகுந்து கொண்டிருந்தது. அது பத்தாதுன்னு ஒரு மந்திரவாதியான குடுகுடுப்பை வேறே. ரொம்ப திரில்லிங்காப் படித்துக் கொண்டிருந்தேன்.
டிவிடியில் "பஞ்சவர்ணக் கிளி" படம் வேறே ஓடிக் கொண்டிருந்தது. அதில் வில்லனாக வரும் ஜெய்சங்கர் உள்ளே நுழைந்து வில்லத் தனம் பண்ணிக் கொண்டே "ஹா ஹா ஹா" எனச் சிரிக்கும் காட்சி. அப்போது பார்த்துத் திடீரென "செக்யூரிட்டி அலார்ம்" அலற ஆரம்பித்தது. ஒரு நிமிஷம் யாருக்கும் எதுவும் புரியவில்லை.
மணி படம் சும்ம்ம்ம்ம்மாஆ சிம்பாலிக்கா இருக்கட்டுமேன்னு போட்டேன். அம்புடுதேன்! :P இது வரவங்க எல்லாருக்கும். :P
ReplyDeleteஅட நீங்க கத்தி சண்டையெல்லாம் போடுவீங்களா?
ReplyDeleteஇவங்க சமையல் அறை இருக்கே, ஒருத்தர் போனால் தான் சரியா வரும். சமைக்கும்போது எனக்கு ஏதாவது சாமானை எடுக்க முடியாமல் திண்டாடுவதைப் பார்க்கும் என்னொட மறுபாதி எனக்கு உதவி செய்ய வந்து நிப்பார்
நம்பளே சரிபாதிதான் உள்ளே போகமுடியும் இதிலே மறுபாதிவேறயா
அம்பி எப்படி சஸ்பென்ஸ் பாத்தியா நீயும் எழுதறயே கத்துக்கோ
டைட்டிலுக்கும் பதிவிற்கும் சம்பந்தம் இல்லையோ? படத்துக்கும் பதிவிற்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்ன நீங்க, இதையும் சொல்லியிருக்கலாமே.
ReplyDelete:-))
கத்ரிகாய் சமைச்சா இப்படி தான் ஆகும். :)))
ReplyDeleteசரி, எதுக்கு இந்த விஷ பரீட்ச்சை? வழக்கம் போல சாம்பு மாமாவையே சமையல் பண்ண அனுமதிக்க வேண்டியது தானே? சென்னைல அது தானே தினமும் நடக்குது. புதுசா சமையல் பண்றேன்!னு கோதாவுல குதிச்சா இப்படி தான். :p
@trc sir, இதுக்கு பேரு தான் உள்குத்தா? :p